எதிர்காலத்துக்கு செல்லும் இயந்திரத்தை கண்டுபிடித்து விட்டேன்!!

சொன்ன நம்பனும், ரொம்ப நாளா எதுவும் எழுதாம இருக்கும் போதே தெரிய வேணாமா ஏதோ ஆராய்ச்சி நடக்குதுன்னு, இருந்தாலும் நம்பாதவங்களுக்கு புரிய வைக்கவேண்டியது என் கடமை,

ஓரளவுக்கு படித்தவர்களுக்கு ஐன்ஸ்டினை தெரியாமல் இருக்காது,
தனது சார்பியல் தத்துவத்தில் எதிர் காலத்துக்கு செல்ல முடியும் என்று நிருபித்தவர்,

ஒளி வேகத்தில் செல்ல கூடிய ஒரு வாகனத்தில் நாம் விண்வெளியை பத்து வருடம் சுற்றினால், திரும்ப வரும்பொழுது பூமியில் நூறு வருடம் ஆகிருக்கும்,

ஆனால் இதில் முக்கியமாக கவனிக்கவேண்டிய ஒன்று,
சினிமாவில் அதாவது back to the future, time machine, terminator படத்தில் வருவது போல் எந்த சூழ்நிலையிலும் உங்களால் இறந்த காலத்திற்கு செல்ல முடியாது, அப்படி யாரேனும் முடியும் என்று சொன்னால் அவர்களை மனநல மருத்துவமனையில் சேருங்கள்.

இறந்த காலத்திற்கு செல்லக்கூடிய ஒரே காரணி நமது சிந்தனை மட்டுமே,
நமது அறிவுக்கு சிந்தனையே காரணியாக இருக்கிறது, நமது சிந்தனைக்கு இறந்த காலமே மூலமாக இருக்கிறது, நம் முதல் சிந்தனைகள் ஞாபகத்திர்க்காக பயன்பட்டது,
நமது ஞாபகங்கள் இறந்தகாலத்தில் புதைந்துள்ளன, இறந்தகாலம் மட்டும் இல்லையெனில் நமக்கெல்லாம் அறிவே இருந்திருக்காது,
ஆனால் துர்தரிஷ்டம் நான் கண்டுபிடித்த இயந்திரத்தால் இறந்தகாலத்துக்கு செல்ல முடியாது,மக்களிடையே எதிர்காலத்துக்கு செல்வதைவிட இறந்தகாலத்திற்கு செல்வதற்க்கே விருப்பம் அதிகம், அவர்கள் நடந்து முடிந்தவற்றையே மாற்றி அமைக்க நினைக்கிறார்கள், எதிர்காலத்தை பற்றி அவர்களுக்கு கவலை இல்லை,
ஆனால் என்னால் முடிந்தது உங்களை எதிர்காலத்துக்கு அழைத்து செல்ல மட்டுமே,

எதிர்காலம் என்பது என்ன "நாளை",
என்னோடு "நாளைக்கு"
யார் யார் வருகிறீர்கள்,நான் அழைத்து செல்கிறேன்,
ஆனால் ஒரு நாள் காத்திருக்கவேண்டும்


"நாளை" வந்துவிடும்!

நாளை சந்திப்போமா!!!

தமிழ் மட்டும் தெரிந்தால் மட்டமா? மற்றும் கொஞ்சம் சுய புராணம்

நேற்று நடந்த இப்படிக்கு ரோஸ் நிகழ்ச்சியில் ஆங்கிலம் தெரியாததால் பொறியில் தேர்வில் தோல்வி அடைந்து தற்கொலை செய்து கொண்ட மாணவர் விது பற்றிய கலந்துரையாடல்.
ஞாநி, கற்றது தமிழ் இயக்குனர் ராம், வழக்கறிஞர் விஜயன் கலந்து கொண்டார்கள்.

ஞானி இதை அரசியல் ஆக்கினார், விஜயன் அதை உளவியல் ஆக்கினார்,
எனக்கென்னவோ ராம் சொல்வது தான் சரியென்று பட்டது, மிக அதிக ஆங்கில வார்த்தைகளை ராம் பயன்படுத்தினாலும், தமிழ் வளர அவர் கூறிய யோசனைகளை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

உயர் கல்விகளை தமிழில் படிப்பதினால் தமிழிலுருந்து விஞ்ஞானம் வளரும் என்று அவர் கூறிய வாதம் சிறந்ததே, ஆனால் அவர் தமிழ் மற்றும் தமிழனுக்கு உலகில் மரியாதை இல்லை என்று சொன்னதை மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சுய புராணத்திற்கு வருவோம், தமிழில் வோம்,வேன், போல் முடியும் சொற்களை எத்தனை பட்டதாரிகள் சரியாக எழுதுகிறார்கள், எங்கு கால் வேண்டும் எங்கு தேவையில்லை என்ற அடிப்படை அறிவு மேல்படிப்பு வரை அவர்களுக்கு தெரிவதில்லை,

எனக்கும் கூட ஐந்தாவது படிக்கும் வரை உயிர்மெய் எழுத்துக்கள், தனி எழுத்துக்கள் என்று தான் நினைத்து கொண்டிருந்தேன் அவை உயிர் மற்றும் மெய் எழுத்துகளின் கூட்டு என்று எனது ஆசிரியரின் திறனான கற்பித்தல் சொல்லி கொடுத்தது, அப்பொழுதெல்லாம் ஆங்கிலத்தை நான் கண்டுகொள்வதே இல்லை.

நான் ஆறாவது படிக்க வரும் பொழுது ஆங்கிலத்துக்கு ஒரு பெரிய புத்தகம் கொடுக்க பட்டது, படிப்பது மிக பெரிய சுமை போல் அப்பொழுது தோன்றியது, வேலைக்கு சொல்லும் சிறுவர்களை பார்க்கும் பொழுது பொறாமையாக இருக்கும்.

ஆறாவதில் முதல் பாடத்தில் ஒரு கேள்வி
what is black coffee?

இதற்க்கு பதில்
black coffe is coffee without milk

இதை நான் எப்படி மனப்பாடம் செய்தேன் தெரியுமா?

black coffee
is coffee
without milk

லட்சம் தடவையாவது இதை படித்ததினால் என்றும் எனக்கு மறக்கவில்லை,
முட்டி மோதி ஆங்கிலத்தை தமிழில் எழுதி மனப்பாடம் செய்து ஒன்பதாவது வரை வந்துவிட்டேன் (இன்றுவரை அவ்வளவு தான் படித்திருக்கிறேன்) அங்கே எனக்கு காந்திருந்தது மிக பெரிய ஆப்பு

essey எனப்படும் கட்டுரை, ஒரு வரி, இரு வரிக்கே தாவு தீர்ந்து டவுசர் கிழியும்,
இவ்வளவு பெரிய கட்டுரையா,
it's happend when raju was fifteen, raju's father was a retired teacher , mother was a house wife
என்று ஆரம்பிக்கும் இந்த முதல் பாடத்தை வருடம் முழுவதும் படித்து கொண்டிருந்தேன், அப்படியும் கூட நான் தான் முதல் ரேங்க் எடுப்பேன் என்று சொன்னால் நம்புவர்களுக்கு இந்த வார நம்பிக்கை நட்சத்திரம் விருது.

இப்பொழுது நான் செய்து கொண்டிருக்கும் தொழிலில் கூட எனது வாடிக்கையாளர்கள் 90% சதவிகிதம் பேருக்கு ஆங்கிலம் தெரியாது, இதில் மூன்று பேர் வெளி மாநிலத்தார், அவர்களுக்கு தமிழில் அகரம் கூட தெரியாது, அவர்களிடம் ஆங்கிலம் தான் பேச வேண்டும்,

இருவருமே தப்பு தப்பாக பேசி கொண்டாலும் சரியாக புரிந்து கொள்வோம் என்பதே இங்கு முக்கியம், அவர்களுக்கு தேவை இங்கே வாங்கலாமா, விற்கலாமா
இதை சொல்வதற்கு பெரிய ஆங்கில படிப்பு தேவையில்லை இல்லையா

இன்று ஐந்து இலக்கம் சம்பாரிக்கிறேன் என்றால், அதற்கு ஆங்கிலமோ வேறு மொழிகளோ எனக்கு துணை செய்யவில்லை, "என் தமிழ்" போதும் இதை ஆறிலக்கமாக மாற்ற,

எனக்கு ஆங்கிலம் தெரியாததால் டோண்டு அவர்களின் பின்னூட்டத்தில் அவமானப்பட்ட போதும், வால்பையனுக்கு ஆங்கிலம் தேவையில்லை, அதை விட வேறொன்று கற்று வைத்திருக்கிறார் என்று எனக்காக மதிப்பு மிக்க வரிகளை கூறிய டோண்டு அவர்களுக்கும்,

முதல் முறை சந்தித்த போது உங்களிடம் ஆங்கில குறை இருப்பதாக தெரியவில்லை,
அடுத்தமுறை சந்திக்கும் போது உங்களுடைய வருமானம் இரடிப்பாக வேண்டும் என்று என்னை உற்சாகபடுத்திய தருமி அவர்களுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்

இருட்டுக்கு டார்ச் அடித்தல் அல்லது உங்கள் நம்பிக்கைக்கு ஆப்பு வைத்தல்.

அவனுக்கு முன்னால் ஒரு பத்து, பதினைந்து பேர் அமர்ந்திருந்தார்கள், அனைவர் கையிலும் ஒரு நோட்டும் பேனாவும் இருந்தது, சிலபேர் கையில் கேமரா, அவர்கள் அடையாள அட்டை அவர்கள் நிருபர்கள் என்று சொல்லியது.

பல கேமரா ப்ளாஷ்க்கு மத்தியில் அவர்கள் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்கள்,

அவர் போலி என்று உங்களுக்கு எப்படி தெரிந்தது?

எதையும் சந்தேக கண்ணோடு பார்ப்பது தான் எங்கள் வேலை.

அவரை கைது செய்ததால் பல அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளதே அதை பற்றி?

உண்மை எப்போதும் கசக்க தான் செய்யும்.

எல்லோரும் கோரஸாக "அவரை போலி என்று எப்படி நிரூபித்தீர்கள்".

சொல்கிறேன்.
வெகு சாமர்த்தியமாக எல்லோரையும் ஏமாற்றி வந்த கருப்பானந்தா என்ற சாமியார் ஒரு போலி என்று எங்களுக்கு ஆரம்ப்பதிலேயே புகார் வந்தது, ஆனால் சட்டத்தின் முன் சரியான ஆதாரம் இல்லாமல் யாரையும் நிறுத்த முடியாது.

அதனால் நானும் எங்களது டிபார்மென்டை சேர்ந்த சிலரும் பொதுமக்கள் போல் வேடமனித்து கருப்பானந்தாவின் பூசைகளுக்கு சென்று வந்தோம்.

மோதிரம் கொடுப்பது, லிங்கம் கொடுப்பது போன்ற வேலைகளை செய்து வந்த அகில உலக புகழ் சாய்பாபாவே டுபாக்கூர் என்று இங்கே நிருபித்ததால், அவன் அந்த வேலைகளையெல்லாம் விட்டு விட்டு வேறு ஒரு புது மாதிரியான மோசடி செய்தான்.
இதனால் மக்களுக்கு அவன் மேல் சந்தேகம் வரவில்லை.

அதாவது மக்களுடைய குறைகளை அவர்கள் கையாலேயே ஒரு துண்டு சீட்டில் எழுதி வாங்கி, அதை சுருட்டி அவன் முன் ஒரு குடுவையில் வைப்பார்கள்.
அதை ஒன்றை கையில் எடுக்கும் அவன், அதை பிரிக்காமலேயே எழுதியவரின் பெயர் மற்றும் அவர்களின் பிரச்சனைகளை சொல்லியதால் அவன் மேல் மக்களுக்கு அபார நம்பிக்கை ஏற்பட்டது.

வெகுநாட்கள் இதிலுள்ள சூட்சமம் தெரியாமல் நாங்களே விளித்து கொண்டிருந்தோம்.
தொடர்ச்சியாக சென்று கொண்டிருந்த நான் ஒரு நாள் கவனித்தேன், முதலில் எழுந்திரிக்கும் ஆளின் நடவடிக்கையில் ஒரு நாடக தன்மை தெரிந்தது.
பக்தியில்லாமல் ஒரு கடமைக்கு வேலை செய்வது போல் இருந்தது அவன் செயல்.
மேலும் அவன் நடந்து போகையில் கருப்பானந்தா அந்த சீட்டை பிரித்து படிப்பதையும் நான் பார்த்து விட்டேன்.

அப்போதுதான் எனக்குள் ஒரு பொறி தோன்றியது.
எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் பல மொழிகள் படித்து, மொழி மாற்றம் செய்து தரும் வேலை செய்துகொண்டிருந்தார், அவர் உதவியுடன் ஜெர்மன் மொழியில் சில வார்த்தைகளை கற்று, அதையே பொதுமக்கள் போல் துண்டு சீட்டில் எழுதி கொடுத்தேன், வரிசையாக படித்து கொண்டு வந்தவன் ஒரு சீட்டை எடுத்தவுடன் முகம் அதிர்ச்சியில் உறைந்தது என்னால் உணர முடிந்தது, அது கண்டிப்பாக என்னுடைய சீட்டு தான், ஆனால் அவன் உடல்நிலை சரியில்லாதது போல் நடித்து இன்றைய கூட்டம் முடிந்தது என்று அறிவித்தார்கள்.

அதன் பின் இந்திய மொழிகளை தவிர ஆங்கிலத்தில் மட்டுமே குறைகளை எழுத வேண்டும் என்ற புதிதாக ஒரு சட்டம் போட்டார்கள்.
அந்த நேரத்தில் தான் பெங்களூரில் இருக்கும் எனது நண்பர் ஒருவர் கைபேசிகளுக்கு உபயோக படுத்தும் infrared என்ற தொழில் நுட்பத்தை பற்றி கூறினார்.
அவருடைய திட்டத்தின் படி குறைகளை எழுதும் காகிதத்தின் பின்னே infrared கதிர்களை பிரதிபலிக்கும் ரசாயனத்தை தடவினேன், மேலும் infrared கதிர்களை உள்வாங்கும் கேமராக்களையும் பொருத்தி வைத்தோம்,

எங்கள் திட்டபடியே அவன் மாட்டி கொண்டான்.

அதையும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க சார்!

கருப்பானந்தா தொழில் ரீதியாக பல ஊர்களுக்கு திரிந்தவன், அதனால் இந்திய மொழியில் பல அவனுக்கு தெரிந்திருந்தது.
கருப்பானந்தாவின் ஏமாற்றுவேலை என்னவென்றால், மக்களின் குறைகளை எழுதி போடும் சீட்டில் முதல் சீட்டை எடுத்து பிரிக்காமல் அவன் படிக்கும் பொது எழுபவன் அவனுடைய ஆள்.

அதாவது நீண்ட நாள் வயிற்றுவலிக்காக வந்திருக்கும் கண்ணன் யார் என்று கேட்டால்
எழுந்திருப்பவன் அவனுடைய ஆள், அவனை அருகில் அழைத்து விபூதி கொடுக்கும் பொது அந்த சீட்டில் எழுதியிருப்பதை படித்து விடுவான் கருப்பானந்தா, அதையே அடுத்த சீட்டிற்கு வாசிப்பான், அப்படி தொடர்ச்சியாக வரும்போது மக்கள், சாமியார் அவருடைய சக்தியால் தான் இதை செய்கிறார் என்று நம்புகிறார்கள்.

அப்படியா கேட்பதற்கே பயங்கர சுவாரிஸ்யமாக இருக்கிறது. இப்போது எங்கே அந்த போலி சாமியார்,

விசாரணை நடக்கிறது, உங்களுக்கும் ஒரு வேண்டுகோள் இம்மாதிரியான போலிகளை ஆதரிக்காதிர்கள், விளைவுகள் உங்களுக்கும் பாதகமாக தான் இருக்கும்,
போலிகளுக்காக பிரச்சாரம் செய்யாதிர்கள்.

மக்களின் மூட நம்பிக்கைகளை ஒழிக்க ஒவ்வொரு மனிதனுக்கும் கடமை இருக்கிறது

வனத்துறைக்கும், சுகாதாரதுறைக்கும் ஒரு வேண்டுகோள்!!

இது தமிழ்நாட்டில் மட்டுமா அல்லது முழு இந்தியாவிலுமா என்று தெரியவில்லை,
வீட்டில் யாரும் சந்தன மரம் வளர்க்க கூடாது, அப்படியே வளர்த்தாலும் அதனை வெட்டும் உரிமை அரசாங்கத்திற்கு மட்டுமே உள்ளது.

சந்தனமரத்தை கஞ்சா செடிக்கு நிகராக வைத்திருக்கும் இந்த சட்டம் எனக்கு புரியவில்லை.
நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர்கள், தங்கள் குழந்தைகளின் மேற்படிப்பு மற்றும் திருமணத்திற்கு, கடுமையான போராட்டதிற்கிடையே சேமித்தும் அல்லது கடன் வாங்கியும் தான் தேவையை பூர்த்தி செய்ய வேண்டியிருக்கிறது.

வீட்டிற்கு முன் சிறு இடம் வைத்திருக்கும் நடுத்தர வர்க்கத்தினரை அரசாங்கமே ஊக்குவித்து இம்மாதிரியான மரங்கள் வளர்த்தால், அதன் பயன் கண்டிப்பாக அவர்களுக்கு பேருதவியாக இருக்கும்,

மனிதனுக்கு தேவையான பிராணவாயு அதிலிருந்து கிடைக்கும்.
நாட்டிற்கு அன்னிய செலவாணி அதிகரிக்கும்.
முக்கியமாக இன்னொரு வீரப்பன் உருவாகமாட்டான்

இந்த யோசனையை எனக்கு சொன்னது
முன்னால் ஊராட்சி மன்ற உறுப்பினரும்,
தற்போதைய உறுப்பினரின் கணவருமாகிய
திரு.ஜெகதீசன் அவர்கள்

**********************************************************************

இரவு நேரங்களில் பூட்டியிருக்கும் கடை வாசல்களில் சில சிறுவர்கள் சிகரெட் புகைத்து கொண்டும், மது போதையிலும் இருப்பதை கண்டேன். அவர்கள் அனைவரும் தெருவில் கிடக்கும் பழைய காகிதங்கள், கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் காகிதங்களை பொறுக்கி அதை விற்று பிழைப்பு நடத்தும் சிறுவர்கள்,

சிறுவர்கள் மட்டுமல்ல சேரி பகுதிகளில் வாழும் திருமணமானவர்கள் கூட இதை ஒரு தொழிலாக செய்கின்றனர், இன்றைய கால கட்டத்தில் முதல் இல்லாமல் செய்யக்கூடிய ஒரே தொழில் இது தான். அவருடைய ஒரு நாளைய வருமானம் இருநூறு ரூபாய்.
திருமணமானவர் ஒரு குவாட்டர் போட்டு விட்டு மீதியை வீட்டில் கொடுத்து விடுவார்.
ஆனால் சிறுவர்கள் போதை பழக்கத்திற்கு அடமையாகி வளர்ந்த பின் கத்தி காட்டி பணம் பறிக்கும் கும்பலாக மாறுகிறார்கள்,

சுகாதாரத்துறை அவர்களை தத்து எடுக்க வேண்டும்.
அவர்களுக்கு சீருடை வழங்கலாம்,
அவர்கள் எடுத்து வரும் பொருள்களுக்கு இவர்களே பணம் வழங்கலாம்.
அல்லது மட்கும் குப்பைகள் மறக்காத குட்பைகளை பிரிக்கும் வேலை குடுக்கலாம்.
ஒய்வு வேலைகளில் அவர்களுக்கு படிப்பு வழங்கலாம்.

எது எப்படியே வரும் இளைய தலைமுறையினரின் வாழ்க்கை அரசின் கையில் தான் இருக்கிறது என்பதை அரசு மறக்காமல் இருந்தால் சரி

சின்ன பெரியாரின் அனல் தெறித்த பேச்சு!!!

முதலில் இந்த உண்ணாவிரதம் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டதிர்காகவா?
அல்லது தமிழ் படம் ஓடிய திரையரங்குகள் தாக்கபட்டதற்க்கா?

இந்த சந்தேகம் நேரில் பார்த்த அனைவருக்கும் உண்டு.
அனைவர் பேசியதும் திரையரங்குகள் தாக்கப்பட்டதை குறித்தும் ஊறுகாய்க்கு தமிழர்கள் தாக்கப்பட்டதை குறித்தும் தான்.

விஜயகாந்த் பேச ஆரம்பித்தவுடன் அரசியல் ஆரம்பித்தது,
பின்னால் வந்த சந்திர சேகர் அதை இன்னும் கொஞ்சம் ஊதி விட்டார்.

விஜயகுமார் ரஜினி புகழ் பாடிவிட்டு போனார்

வாந்தார் பாருங்கள் நமது சின்ன பெரியார்!!ஆரம்பமே அனல் பறந்தது,

நான் பேச வந்திருப்பது என் சகோதரர்களின் கஷ்டத்திற்காக, இங்கு அரசியலை பற்றியோ சினிமாவை பற்றியோ பேச மாட்டேன்.

இங்கு எந்த நடிகர்கள் பெயர் சொன்னால் கைதட்டல் கிடைக்கும் என்று தெரியும்,
அது போல கைதட்டல் வாங்க இது ஒன்றும் சினிமாவின் நூறாவது நாள் விழா இல்லை.
அங்கே எனது சகோதரர்களை துன்புறுத்தி கொண்டிருக்கிறார்கள். இங்கே எனக்கு கைதட்டல் வேண்டுமா?

தமிழர்களை மனிதர்களாக அல்ல ஒரு மரமாக நினைத்துகொண்டிருக்கிறார்கள்,
போகும் வழியில் நாய் போல மூத்திரம் பெய்கிறார்கள். ஒருவன் அதையே வெட்டுகிறான், அதிலேயே நாற்காலி செய்து உட்கார்ந்து கொள்ளுவார்கள்.
(இதை சொல்லும் போது ரஜினி முகத்தில் ஈயாடவில்லை)

என் பொண்டாட்டி கூட நான் படுக்குறேன் உனக்கு ஏண்டா வலிக்குது.
உன் பொண்டாட்டி கூடவா படுகிறேன்.

குனியாதே உன்மேல் குதிரை ஏறுவார்கள்
உன்னை கேகூ என்பார்கள் என்று உணர்ச்சி மேலிட கத்தினார்.

இனிவரும் இளைய தலைமுறைக்கு இன்னொரு பெரியார் இருக்கிறார்
தமிழர்களே மனம் கலங்காதிர்கள்!!

60.54.58.134 இது தான் பொறம்போக்கு சங்க தலைவரின் ஐபி நம்பர்!!

விளம்பர பிரியர், (கெட்ட)வார்த்தை வித்தகர், சைகோ
என்று எல்லாராலும் அன்போடு அழைக்கப்படும், இந்த பாடு
ஆடினவன் கால் சும்மா இருக்காது, பாடினவன் வாய் சும்மா இருக்காது என்பது போல்
மீண்டும் அவன் வேலையை ஆரம்பித்து விட்டது.


அவரை வருக வருக என்று வம்போடு அழைக்கிறேன்.

ஏனென்றால் இந்த முறை வந்தால் திரும்ப முடியாது.

இன்ச்சுரன்ஸ் போட்டு கொண்டால் நல்லது, அவரது குடும்பத்தாருக்கு

சக வலைப்பதிவர் லிவிங் ஸ்மைல் வித்யா- விஜய் டிவீயில்!!

ஒரு சக வலைப்பதிவரை பார்க்க செல்லும் போது என்ன ஆர்வத்தில் இருப்பேனோ
அதே ஆர்வத்துடன் ஆணி பிடுங்கும் வேலைகளை ஒத்தி வைத்து விட்டு காத்திருந்தேன்
அந்த பத்து மணிக்காக!

நிகழ்ச்சி தொடங்கும் முன்னரே பார்வையாளர்களிடம் திருநங்கை பற்றிய கண்ணோட்டத்தை கேட்டறிந்தார் ரோஸ், கடைசியில் அவர்களின் எண்ணம் மாறபோவது தெரியாமல் அவர்களும் பதிலளித்தனர்.

"நான் வித்யா" புத்தக அறிமுகத்துடன் நமது லிவிங் ஸ்மைலின் அறிமுகம்.
வித்யா M.Sc computer science படித்திருக்கிறார். தான் ஒரு திருநங்கையாக அறியபட்டவுடன் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

அவற்றில் சில:
ரயில் பயணங்களில் எனக்கு கூட அந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. நான் கூட நினைப்பேன். இவர்கள் ஏன் பிட்சை எடுக்க வேண்டும் என்று.
ஆனால் அதற்கான வித்யாவின் விளக்கம் அருமையானது.
உங்களை போலவே பிறந்து,உங்களை போலவே வளர்ந்து,உங்களை போலவே படித்து,
உங்களை போலவே வாழ வேண்டிய என்னை ஒதிக்கி வைக்கும் நீங்கள் எனக்கு தரும் தண்ட பணம் என்று போட்டார் ஒரு போடு.
உண்மை தான் வித்யா போன்ற படித்த திருநங்கைகள் கண்டிப்பாக நாம் செய்யும் வேலையை செய்யமுடியும் தானே

அந்த காலகட்டத்தில் அவருக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம், கண்டிப்பாக பார்த்தவர் கண்களை நனைத்திருக்கும், உண்மையில் கண்ணீர் விட வேண்டியது திருநங்கைகளை சக மனிதர்களாக பார்க்காத மூட மிருகங்கள் தான்.

ஆனால் அதை கூட வித்யா, அவர்களை குறை சொல்ல முடியாது, நம் சமுகத்தில் புரிதல் இல்லை என்று பெருந்தன்மையுடன் சொன்னது, திருநங்கைகளை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் மனிதர்களுக்கு சவுக்கடி.

சக பேட்டியளரான ஹேமா உண்மையில் ஒரு இன்ப அதிர்ச்சி.
மனம் முடித்து ஒரு குழந்தையை தத்து எடுத்து தன் கணவருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இதை போலவே நமது சக பதிவர் வித்யாவும் திருமணம் செய்து கொண்டு நம்மை போலவே இந்த சமுதாயத்தில் வாழ வேண்டும். மற்றவர்கள் வாழ விடவேண்டும்
என்பது எனது ஆசை

இடையில் ரோஸ் சொன்னதை கடைசியில் சொல்கிறேன்.
திருமணம் முடிந்த ஹேமாவை you are blessed by god என்று சொல்லுவார்.
என்னை கேட்டால் ஹேமாவை திருமணம் செய்து கொண்ட கார்த்திக்கும், வித்யாவை திருமணம் செய்ய போகும் அவரது காதலரும் தான்

கடவுள்கள்லிவிங் ஸ்மைல் வித்யாவின் வலை

தமிழ்மணத்தில் தமிழச்சியின் பதிவை இன்று பார்த்தேன்.

அங்கே இருந்து கொஞ்சுண்டு எடுத்து இங்கே ஒட்டியிருக்கிறேன்
கோபித்துக்கொள்ள மாட்டார் என்ற நம்பிக்கையில்

//தமிழச்சி என்று புனைபெயர் வைத்திருக்கிறீர்களே என்ன காரணம்?

இந்தக் கேள்வியைத்தான் முதல் கேள்வியாகக் கேட்பீர்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் கடைசியில் கேட்டிருக்கிறீர்கள். பொதுவாக என்னைச் சந்திக்கிற எல்லாருமே இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கத் தவறுவதே இல்லை. சுமதி என்ற என் சொந்தப் பெயரிலேயே என் படைப்புகளை வெளியிடத்தான் எனக்கு விருப்பம். ஏற்கெனவே என் பெயரில் இன்னொரு சுமதி படைப் பாக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார் எனக் கேள்விப்படும்பொழுது, என்னை நான் எப்படி அடையாளப்படுத்திக் கொள்வது என யோசித்து, வேறொரு பெயரைத் தேடினேன்.

இந்த “அடையாளம்’ என்பது என்னைப் பிறரிடமிருந்து வித்தி யாசப்படுத்தியோ, வேறுபடுத்தியோ காட்ட வேண்டிய அவசியமில்லை. அது எந்தவிதமான மிகைத்தனங் களுமற்றுலி அதேசமயம் எனது வேர்களின் ஊடோடி இருந்தால் எனக்கு உவப்பானதாகவும், திருப்தி கரமாகவும் இருக்குமே என்பதால் தமிழ்க் கிராமத்திலிருந்து வருகின்ற ஒரு பெண் எனும் பொருள்படும் படியான ஒரு பெயரை யோசித்தேன்.//

மேலும் தகவல்களுக்கு இதை சுட்டவும்

பிரபல கவிஞரான இவர் சமிப காலமாக அரசியல் வட்டாரங்களிலும் பேசபடுகிறார்


கீழே அவர் புகைபடம்


தமிழ்மணம் மற்றும் மூத்த பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்!


நான் தமிழ்மணத்தில் இணைந்து பல மாதமாகிறது,
பலமான ஆணி பிடுங்கும் வேலைகளுக்கு மத்தியில் ஐம்பது பதிவுகளுக்கு மேல் எழுதியாகிவிட்டது.

பெயர் தெரியாத அனாநிகளிடம் சண்டையும் போட்டாயிற்று.

ஆனாலும் எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை, இது என் தவறா அல்லது நான் வேண்டுமென்றே நிராகரிக்க படுகிறேனா,ஏன் சொல்கிறேன்னேன்றால் மற்றவர்களுக்கு மட்டும் அந்த சலுகை ஏன்?

இல்லை அதற்காக எதாவது வயது தகுதி வேண்டுமா?

அப்படி பார்த்தால் என்னை விட வயதில் குறைந்தவர்களுக்கு எல்லாம் அந்த சலுகை கொடுக்க பட்டிருக்கிறது,

ஏன் எனக்கு மட்டுமில்லை, நான் செய்த தவறென்ன! அல்லது நான் செய்ய வேண்டியதென்ன? எதுவாகிருந்தாலும் சொல்லுங்கள், அனைத்தையும் நான் செய்ய தயார்.

ஆனால் முடிவு எனக்கு சாதகமாக தான் இருக்க வேண்டும்,
ஒரு சில மணி துளிகளில் என் பதிவுகள் மறைந்து போவதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை "அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்" என்ற தலைப்பின் கிழே என் பதிவுகள் வர வேண்டும், அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்


இப்படிக்கு
எதை எப்படி கேட்பது என்று கூட தெரியாத அப்பிராணி வால்பையன்

ஏணி பிடித்து ஏறும் சிந்தனையை கயிறு கட்டி இழுப்பது எப்படி ?

மனிதனின் அத்யாவிசைய தேவைகளான உணவு ,நீர் போலவே தூக்கமும் ஒரு முக்கியமான தேவை. பல நாட்களல்ல சில நாட்கள் தூங்காமல் இருந்தாலே மன நோயால் பாதிக்கப்பட்ட வாய்புண்டு என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

எனக்கு தொடர்ச்சியான தூக்கம் இல்லை, படுத்தவுடன் தூங்குபவர்களை பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கும், என்ன தான் காரணம் என்று பகலில் யோசிக்கும் போது தெரிந்தது, இரவில் தூங்க முடியாததற்கு காரணமும் இந்த யோசனைகள் தான் என்று.

எனது அந்த சுய சோதனை சிந்தனைகள் எனக்கு எதாவது ஒரு வகையில் பயனுள்ளதாக இருக்கிறதா என்று பார்த்தால், பதில் இல்லை என்பதே,என்னால் அதை எள்ளளவும் கட்டுபடுத்த முடியவில்லை,இரவு நேர சிந்தனைகள் மிக கொடுமையானது, நடு கடலில் மாட்டிகொண்ட படகு கூட எதாவது ஒரு திசையில் கரையை கண்டுபிடிக்கும், ஆனால் இந்த சிந்தனை கடல் அப்படியல்ல, பயணிக்க ஆரம்பித்தவுடன் நாலா திசையில் துடுப்பு வேலை செய்வது திகைப்பூட்டும், சில நேரங்களில் ஆரம்ப நிலைக்கே திரும்பி வந்து விடுவேன், சில நேரங்களில் ஆரம்ப நிலை மறந்தே போய்விடும், சில நேரங்களில் எங்கே இருக்கிறேன் என்பதே தெரியாது.

என் சிந்தனையை கட்டுபடுத்தி என் சோதனை சிந்தனைகளாக அதை மாற்ற நினைப்பேன், மறு நொடியே அது 360 பாகை கோணங்க்களாக பிரிந்து, அதில் எதாவது ஒரு கோணத்தில் பயணித்து கொண்டிருக்கும், என் ஆரம்ப நிலை சிந்தனையை மறுபடியும் நினைவூட்டுவதர்க்குள் எனக்கு தாவு தீர்ந்து விடும்,

ஒரு முறை ஒரு பேரை ஞாபக படுத்தவேண்டி ஒரு சிகரெட் பத்தவைதேன், ராஜாராம் என்ற பெயர், ராமராஜன் என்ற பெயரெல்லாம் வந்து போகிறது, அது மட்டும் வரவில்லை. ஐந்தாவது சிகரெட்டின் கடைசி இழுப்பில் அந்த பெயர் எனக்கு ஞாபகம் வந்தது, (அதற்காக ஐந்தாவது சிகரெட்டின் கடைசி இழுப்பில் எல்லா சிந்தனைக்கும் பதில் உண்டு என்று அர்த்தம் கொள்ளாதிர்கள்!)அந்த மாதிரியான பழைய மாடல் கம்யூட்டர் நான்,
எனது பிராசசர் அப்டேட் செய்யமுடியாத அரத பழசாக உள்ளது

எப்போதெல்லாம் நன்றாக தூங்க நான் முயற்சிக்கின்றேனோ அப்பொழுதெல்லாம்
சிந்தனை ஒரு பெரிய கத்தியுடன் என்னிடம் சண்டைக்கு வருகிறது, அதனிடம் சண்டையிட்டு களைப்பில் எப்போது தூங்கினேன் என்று ஞாபகம் இல்லை!!


உதவி வேண்டி:நல்ல தூக்கத்திற்கு பதிவர்களின் ஆலோசனைகள் வரவேற்க்கபடுகிறது.

!

Blog Widget by LinkWithin