வாழ்த்தி வழியனுப்புகிறோம்!

கிராமபுரங்களில் இன்றும் சொல்லுவார்கள் மனிதன் பார்க்க சலிக்காதது யானையாம்! அத்துடன் இன்று விமானமும் சேர்ந்து விட்டது! என்ன வேலையில் இருந்தாலும் விமானத்தின் சத்தம் கேட்டால் எட்டி பார்க்கும் பழக்கம் இன்று வரை எனக்கு உண்டு! ஒருவேளை விமானத்தில் ஏறாமலேயே செத்து போய்விடுவேனோ என்று நேற்று தான் தோழி ரம்யாவிடம் புலம்பி கொண்டிருந்தேன்!

முதல் விமான பயணம் என்பது, முதன்முதல் பள்ளி செல்வது போலவும், வேலைக்கு செல்வது போலவும், பெண்பார்க்க செல்வது போலவும் ஆச்சர்யங்களும்,மகிழ்ச்சியும் கலந்த கலவையாக இருக்கும். அந்த அனுபவத்தை நாளை(01.04.09) அனுபவிக்க போவது நண்பர் ரெளத்ரன். முதம் முதலாக விமானத்தில் டெல்லி செல்கிறார். படத்தில் இருப்பது போல் உலகம் முழுதும் சுற்ற அவருக்கு வாழ்த்துக்கள்

மற்றொரு விசயம் விமானத்தில் போய் வந்தால் மட்டும் பத்தாது! அதை எப்படியாவது இந்த உலகிற்கு நாமே எடுத்து சொல்ல வேண்டும். அது எப்படி என்று சில டிப்ஸ்!

1.பெட்டியில் ஒட்ட வைத்திருக்கும் ”டேக்கு”களை குறைந்தது ஆறு மாததிற்கு கிழிக்க கூடாது!

2.விமான டிக்கெட் எப்போதும் பாக்கெட்டில் இருப்பது நலம். விசிட்டிங் கார்டு எடுக்கும் போது கூடவே எடுத்து டெல்லி சென்றேனே, அந்த டிக்கெட் என்று ப்ளீம் காட்ட உதவும்.

3.விமானத்தில் ஏறும் முன்னரே நண்பர்களுக்கு போன் செய்து டெல்லியில் யாராவது நண்பர்கள் இருக்கிறார்களா? அங்கே தான் செல்கிறேன் என்று போன் செய்ய வேண்டும்.
(யாரும் இல்லாத நண்பர்களாக அழைப்பது நலம், இல்லையென்றால் அங்கே போய் ஸ்வெட்டர் வாங்கிவர வேண்டியிருக்கும்)

4.சென்று இறங்கியவுடன் அழைப்பது இன்னும் நலம். மச்சான் ரூம் பூட்டினேனா இல்லையான்னு தெரியலை கொஞ்சம் போய் பாரேண்டா என்று அன்பு கட்டளை இடலாம்! அப்படியே தான் டெல்லியில் இருப்பதாகவும் ஞாயிறு 8 மணிக்கு ப்ளைட் என்ற பிட்டையும் சேர்த்து போடலாம்.
(நண்பர்களிடன் அவரே பகிர்ந்து கொள்வார்)

5.திரும்பி வந்த பிறகும் டெல்லி புராணம் பாடுவது மேலும் சிறப்பு
(அப்துல்லா சிங்கப்பூர் புராணம் பாடுறாரே அது மாதிரி). அங்கே குளிர் அப்படி. ரோடு பெருசு, பானிபூரி சிறுசுன்னு கண்ணுல பாக்குற எல்லாத்தையும் ஒப்பிடனும்.

6.நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் போது அவர்கள் எந்த சப்ஜெக்டை எடுத்தாலும் அப்படியே பிடிச்சி கொண்டு போகனும். இப்படி தாண்டா மச்சான் ப்ளைட்ல போகும் போது ஒரு பிகர் சரக்கு வேணுமான்னு கேட்டா நானும் இருக்குட்டுமேன்னு வாங்கிட்டேன், ”தேவாமிர்தமடா” என்று புகழ வேண்டும்.(முக்கியம்=நீங்கள் பினாயிலை குடித்திருந்தாலும் தேவாமிர்தம் என்று தான் சொல்லவேண்டும்)

7.சோகத்தில் இருக்கும் நண்பனிடம் தத்துவம் பேசும்போது கூட ”என்னடா உலகம்”, நான் ப்ளைட்ல போகும் போது பார்க்கிறேன் ”இந்தியாவே கைக்குள்ள அடிக்கிறுச்சு” என்று புருடா விடணும்.

8.யாருடனாவது பேசி கொண்டிருக்கும் போது வானத்தில் விமானம் பறந்தால், அது ஏர்டெக்கான், கிங் பிஷ்ஷர் என்று வாய்க்கு வந்த பெயரை எடுத்து விடலாம். செல்லும் திசையை வைத்து ஆஸ்திரேலியா போகுது, அமெரிக்கா போகுது என்பது, ”கூடுதல் பிட்டி”ல் சேரும்.

இந்த மாதிரி ப்ளீம் காட்டினால் இங்கே மட்டுமல்ல! எல்லா இடங்களிலும் உதை வாங்க வாய்ப்புண்டு!

விருது வாங்கலையோ விருது!
அங்கிள் சஞ்சய் எனக்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்து கெளரவ படுத்தியிருக்கிறார்!
அவருக்கு எனது நன்றி

*****************************

பட்டாம் பூச்சி எனக்கு ரொம்ப பிடித்த இனம். ஆனாலும் சிறுவயதில் அதை பிடித்து பிய்த்து எறிந்து விளையாடியுள்ளதை இங்கே ஒப்புகொள்கிறேன். தப்பு தான் ஆனா அப்போ தெரியாதே!
கொஞ்சம் வளர்ந்த பிறகு இயற்கையின் மேல் அளவில்லா காதல் வந்தது! உயிர்களின் மேல் மதிப்பு வந்தது. அதிலிருந்து நான் உயிர்களை வதம் செய்வதில்லை!

பட்டாம்பூச்சி இனத்திலிருந்து தான் பட்டு சேலை தயாரிக்கப்படுகிறது என்று தெரிந்தவுடன், பல முறை மண்டை வீங்க பூரிகட்டையில் அடிவாங்கியும் பட்டுசேலை எடுத்து தர முடியாது என்று சொல்லிவிட்டேன். (இக்கனாமிக் வீக் பிரச்சனை நம்மளோட இருக்கட்டும்)

ஒரு விசயத்தை யோசிக்கும் போது பட்டுசேலை தயாரிப்பை ஒன்றும் குறை சொல்வதற்கில்லை. எதோ ஒரு வகையில் அவர்கள் இயற்கையை சமன் செய்து விடுகிறார்கள், பட்டுபுழு வளர்க்க ஒருவித செடி வளர்க்க வேண்டுமாம், அதனால் நமக்கு ஆக்சிசன் கிடைக்குமே. அதனால இதை கண்டுக்காம விட்டுவிடுவதே சாலச்சிறந்தது.

***********************************

இந்த விருதை நாம் சிலருடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பது வலையுலக விதி!
ஆரம்பத்தில் புதிய பதிவர்களிடம் சுற்றி கொண்டிருந்த பட்டாம் பூச்சி விருது அங்கிள் சஞ்சய் வரை சென்று விட்டது. அவர் எனக்கெல்லாம் மூமூமூத்த்த்த்த்ததததத பதிவர். அவருக்கே கொடுக்கும் போது நான் காலரை தூக்கிவிட்டு வாங்கி கொள்ளலாம்.

நானெல்லாம் ப்ளாக் ஆரம்பித்த புதிதில் சைக்கிள் புதிதாக ஓட்ட வந்த சிறுவன் போல் இருந்தேன். பெடல் பண்ண தெரியாது. பிரேக் பிடிக்க தெரியாது. எப்படி செல்ல வேண்டும். எங்கே செல்ல வேண்டும் எதுவுமே தெரியாது! ஆனால் புதிதாய் எழுத வந்த பதிவர்கள் வரும்போதே மோட்டார்பைக்கில் தான் வருகிறார்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் அனைவரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு எங்கேயோ சென்று விடுகிறார்கள்! உங்களுடய குழு மனப்பான்மை பிடித்திருக்கிறது, ஆனால் அதில் ஒரு பேரிழப்பு இருக்கு! அதை ஒரு பதிவாக சொல்கிறேன்!

சரி இதை நான் யாருக்கு கொடுப்பது! ஏற்கனவே இருக்கும் பிரபலங்கள் பல உயரிய விருதுகளை வாங்கி விட்டார்கள். அவர்களிடம் போய் இந்த விருதை கொடுப்பது, சாருவுக்கு மானிட்டர் சரக்கு வாங்கி தருவதற்கு சமம். அதனால் மேலும் புதிவ பதிவர்களுக்கு கொடுத்து அவர்களை உற்சாக படுத்தலாம்.(விதிவிலக்குகளும் உண்டு)

**************************

தமிழ்நெஞ்சம்
கணிணிதுறை சந்தேகங்களை தீர்த்து வைக்கும் இவர். தற்போது குட்டிகதைகள் எழுதி வாழ்வியல் பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கிறார்.

பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சிக்கே பட்டாம்பூச்சி விருது கொடுத்த எனக்கு யாராவது ”பெரிய வால்” விருது கொடுப்பிங்களா?

பப்பு
நகைச்சுவையிலும், எடுத்து கொள்ளும் விசயத்திலும் இவருகென்று தனி நடையை பயன்படுத்துகிறார், இவருக்கு வெகு விரைவில் வெகுஜன ஊடகத்தில் வாய்ப்பு கிடைக்கலாம்,
தொடர்ந்து எழுதுங்கள் பப்பு.

கிஷோர்
நகைச்சுவை, சீரியஸ் என கலந்து கட்டி அடிக்கிறார்! நல்ல மொழி நடை நேரில் உட்கார்ந்து பேசுவது போல் இருக்கும்! இப்போது தான் ஆரம்பித்திருக்கிறார்! வேகம் எடுத்தார் நாம் அண்ணாந்து தான் பார்க்கனும்

பிரபா
பிரபலங்களின் மிக சிறந்த கவிதைகளை தொகுத்து வழங்குவது இவரது தனிச்சிறப்பு!
அப்பப்ப மொக்கைகளும் எழுதுவார்! இப்போ எதுக்கோ வெயிட் பண்ண சொல்லியிருக்கிறார், பார்ப்போம்

உண்மையான மொக்கை கவுஜ!

நாலு நாலு நாலு நாலு
நாலு மூணு நாலு

மூணு மூணு மூணு மூணு
மூணு நாலு மூணூ

நாலு மூணு
மூணு நாலு

நாலும் மூணும் ஏழு!

ஏழு ஏழு ஏழு ஏழு
ஏழு மூணு ஏழு

மூணு ஏழு
மூணு ஏழு

ஏழும் மூணும் பத்து!

**********************************

உங்களுக்கு மொக்கை கவுஜ எழுத தெரியலைன்னா எங்கிட்ட கேளுங்க எப்படி எழுதுறதுன்னு!
சும்மா ஆளாளுக்கு ஒரு கவிதைய எழுதிட்டு இதான் தான் மொக்கை கவுஜைன்னா உண்மையான மொக்கை கவுஜய எப்படி அடையாளம் கண்டிபிடிக்கிறது!

மேல இருக்கு பாருங்க
உண்மையான மொக்க கவுஜ!

ரெடி கும்மி ஸ்டார்ட்!

நான் அவனானால்!

இந்த ஃபேனு ஓடி தொலைக்க மாட்டிங்குது! போர்த்தாம படுத்தா கொசுத்தொல்லை வேற!
விடிய விடிய தூங்காம இருந்தா ஒரு மனுசனுக்கு எப்படி இருக்கும். சம்பந்தமில்லாம கோபம் கோபமா வருது! சதாரணமா நான் பொறுமையான ஆளு தான்! ஆனா இப்ப என்னான்னு தெரியலை யார பார்த்தாலும் வெறுப்பா இருக்கு! தனியா இருக்குற மாதிரி ஒரு ஃபீலிங்!
உங்ககிட்ட இருக்குற எல்லாம் எங்கிட்டையும் இருக்கு, ஆனாலும் எதோ ஒன்னு மிஸ்ஸிங்

ஆங்..... சந்தோசம்,

உங்ககிட்ட இருக்குற அந்த சந்தோசம் எங்கிட்ட இல்லை! அது எனக்கு வேணும்னா ஒரே வழி ”நான் அவனாகனும்”. அப்படி ஆகிட்டா அவ முழுசும் எனக்கே சொந்தம். அவ பணம், அவ புகழ் மொத்தமா எனக்கே, அப்புறம் நான் சொல்றபடி தான் அவ கேப்பா.. ஹா ஹா ஹா

அதுக்கு அந்த புத்தகம் வேணுமே!

இங்க தான் வச்சேன்.. ந்தா கிடச்சிருச்சு

யாருயா இது புது கேஸு

பெக்கூலியர் லவ் கேஸ் சார், நடிகை யுவனஸ்ரீயோட தீவிர ரசிகன் இவன், வீடூ பூர அவுங்க போட்டோ, ஆட்டோகிராஃப் தான். அவுங்களுக்கு கல்யாணம் ஆகவும் அப்செட் ஆகிட்டான்.
கண்ட புத்தகமெல்லாம் படிச்சுட்டு கூடுவிட்டு கூடுபாய்றேன்னு சுடுகாட்டுல பிணத்தை நோண்டும் போது யாரோ பார்த்து போன் பண்ணி இங்க கொண்டு வந்து சேர்த்தாங்க.

அடே லூஸுகளா இன்னும் பத்து நிமிசம் லேட்டா வந்துருந்தா நான் அவனாகிருப்பேன். கெடுத்துட்டிங்களேடா, இப்பவும் ஒன்னும் கெட்டு போகல, சித்த முறைப்படி தான் நான் தோத்துட்டேன், எனக்கு விஞ்ஞான முறையும் தெரியும். உங்க லேப் எங்கிருக்குன்னு நான் கண்டுபிடிச்சிட்டேன். இன்னும் ரெண்டே நாள்ல நான் அவனா ஆகிகாட்டுறேண்டா..


(முற்றுமாக தொடரும்)
************************************

டிஸ்கி 1:சாதரணமாக கதைகளில் பயன்படுத்தும் ஒரு தேவையை பயன்படுத்தாமல் இதை எழுதியிருக்கிறேன், அதை கண்டுபிடியுங்கள்

டிஸ்கி 1:பரிசல் ஆட்டைக்கு இல்லை

டிஸ்கி 3:மனபிறழ்வு என்பது விளிம்பு நிலை அல்ல, அவை ஆழ்மனதின் சூப்பர்லேட்டிவ் பவராக கூட இருக்கலாம் என்பது சிலரின் கருத்து. யாரு கண்டா இல்லாத கடவுளையே நீங்க நம்பும் போது, கூடுவிட்டு கூடு பாய்றதையும் நீங்க நம்பலாம். அதனால் இந்த சிறுகதைக்கு “விஞ்ஞானப்புனைவு சிறுகதை”ன்னு லேபிள் போட்டுகிறேன்.

வாழ்த்துக்கள்!
ஒரு பக்கம் நந்தினிய கல்யாணம் பண்ணிகிட்டு, இன்னொரு பக்கம் நளினாவ லவ்விகிட்டு இருக்கும் நண்பர் விக்னேஷவரன் அடைகலத்துக்கு இன்னிக்கி பொறந்த நாளுங்கோவ்.

அரசு இயந்திரம்!

நான் ஒரு கம்பெனி ஆரம்பிச்சுருக்கேன்னு வச்சிக்கோங்க!
அதுக்கு 5 லட்சம் முதல் போட்டு சரக்கு(அந்த சரக்கு இல்ல) வாங்கி வச்சிருக்கேன். ஒரு இடத்துக்கு அட்வான்ஸ் கொடுத்து கடய போட்டாச்சு!. எல்லா வேலையும் நாமளே செய்ய முடியுமா,அதனால நாலு பேர்த்த வேலைக்கு சேர்த்தாச்சு! வியாபாரம் ஆனாலும் ஆகாட்டியும் மாசமாசம் வாடகையும், சம்பளமும் கொடுத்தாகனும். அப்படி இப்படி அதுக்கே மாசம் 20000 ஆகுதுன்னு வச்சிகோங்க. மாசம் ஒரு லட்சத்துக்கு வியாபாரம் ஆனாத்தான் அதை எடுக்க முடியும். மேல நான் போட்டிருக்கும் முதல் 5 லட்சத்துக்கு வட்டி கட்ட இன்னொரு பத்தாயிரம் வேணும்.

ஆக மொத்தம் முப்பதாயிரம். அதுக்கு ஒன்னரை லட்சத்துக்கு வியாபாரம் ஆகனும். முதல் மாசம் என்பதாயிரத்துக்கு ஆச்சு. இரண்டாவது மாசம் ஒரு லட்சத்துக்கு, ஆனாலும் பாருங்க மாசம் 30 ஆயிரம் எனக்கு கட்டாய செலவு இருக்கு. அதனால மேலும் கைகாசு போட்டு சமாளிச்சாச்சு. ஒரு ஆறு மாசமோ, ஒரு வருசமோ கழிச்சு வியாபாரம் சூடு பிடிக்கும்னு நம்பிக்கையில மேலும் மேலும் காசு போட்டு முதலே 6 லட்சமாச்சு.

இதுல எனக்கு மாதம் ரெண்டு லட்சம் வியாபாரம் ஆச்சுன்னு லாபமும் கிடைக்கும்,கடனும் அடைக்கலாம். ஒருவேளை வியாபாரம் படுத்துடுச்சுனா கம்பேனிய இழுத்து சாத்திட்டு தலையில துண்ட போட்டுகிட்டு இருக்குற சரக்க வச்சு கொஞ்சம் கடனையும் அடைச்சிகிட்டு, மேலும் இருக்குற கடனை அடைக்க மம்பட்டிய தூக்கிகிட்டு வயகாட்டுக்கு போக வேண்டியது தான். இத முதல்லயே செஞ்சிருக்கலாம்னு சொல்றிங்கள! எப்பவும் நமக்கு பட்டா தானே புத்தி வரும்.
**********************

இது அடுத்த மேட்டர்.

ஒரு வங்கி ஒன்னு ஆரம்பிக்கலாம். கொஞ்சம் பெருசா பிஸ்னஸ் பண்ண பெருசா ஒரு இடத்த பிடிச்சு, நல்லா அலங்காரம் பண்ணி நிறைய படிச்சவங்களை வேலைக்கு வச்சி கடய நடத்தனும். மக்கள் தர்ர பணத்துக்கு கொஞ்சமா வட்டி கொடுத்து, நம்மகிட்ட மக்கள் வாங்குற பணத்துக்கு அதை விட அதிகமா வட்டி வாங்கி தான் கடய நடத்த முடியும். இதுவும் அதே மாதிரி தான். என்னா தான் லாபம் குறைவா வந்தாலும் மாசாமாசம் இருக்குற செலவு இருந்துகிட்டே இருக்கும்.

இப்ப நாம கடன் கொடுதவங்க திரும்ப பணம் தரலைன்னா கம்பேனி திவால் தான்.
நம்மகிட்ட பணம் கொடுத்தவங்களுக்கு பணத்துக்கு பதிலா அல்வா கொடுத்துட்டு வடநாட்டு பக்கம் ஓடிட வேண்டியது(அவனுங்க அங்க அல்வா கொடுத்துட்டு இங்க வர்ர மாதிரி).
இங்கவே இம்புட்டு பிரச்சனை இருக்கும் போது, நாம கொடுத்த கடனை தள்ளுபடி பண்ணினா என்ன செய்வது. அந்த பணத்தையாவது கொடுங்கடான்னு அரசை கேட்டா அஞ்சா பிரிச்சு தருவாங்களாம். அதுவும் அவங்க நினைக்கும் போது தான். அது வரைக்கும் வேலை செய்யுறவங்களுக்கு சம்பளம் கடன் வாங்கி தான் தரணும். இத இன்னும் விலாவரியா சொல்ல ஒரு ப்ளாக்கர் இருக்காரு, ஆனா வெளியே சொன்ன அவரு டவுசர உருவீருவாங்கன்னு கெட்டியா புடிச்சிகிட்டு இருக்காரு.
**********************

இது இன்னோரு மேட்டர். ஆனா இது தான் மெயின்.

அரசுன்னு ஒன்னு இருக்கு. இல்லைன்னு சொன்னிங்கன்னா இறையாண்மை,சொறியாண்மைன்னு சொல்லி உள்ளே தூக்கி போட்டுவாங்க அதனால ஸ்ட்ரைட்டா மேட்டருக்கு போயிருவோம்.
அரசும் ஒரு கம்பேனி மாதிரி தான்.(உதாரணம்:தமிழ்நாடு). அதுல என்ன பண்ணுவாங்கன்னா பலனடைபவர்கள், அடையாதவர்கள்னு பாகுபாடு பாக்காம எல்லாரிடத்திலும் வரி வசூல் பண்ணுவாங்க.

பல வகையில! நாம கஷ்டபட்டு வேலை செஞ்சு வாங்குற சம்பளத்துல ஒரு பங்கு வரி கொடுக்கணும், வாய கட்டி வயத்த கட்டி ஒரு கடய வச்சு பத்து வட்டிக்கு கடன வாங்கி போட்டு கஷ்டப்பட்டு எதோ நாலு காசு பார்த்தோம்னா அதுலையும் ஒரு பங்கு வரி. வண்டி வாங்குனா ரோட்டு வரி ஆனா பாருங்க இப்போ போட்டுகிட்டு இருக்குற ரோட்டுகெல்லாம் டோல்கேட் போட்டு வரி வசூல் பண்ணுவாங்களாம். நாம கட்டின ரோட்டு வரி எங்கே போச்சுன்னு கேள்வி கேட்டால் நாடு கடத்தபடலாம்.

இந்த நாட்டுல வரி கட்டாத மனிதர்களே கிடையாது. நாம வாங்குற தீப்பெட்டி வரைக்கும் நம்ம வரி அரசுக்கு போகுது. என்னை மாதிரி ஆளுங்க டாஸ்மார்க் மூலியமா ஆயிரகணக்குல வரி கட்டுறோம்.(60%வரி சரக்குக்கு). நம்ம பணம் தொலைக்காட்சி ஆகுதோ, சுவீஸ் பேங்கு போகுதோ அத பத்தி நினைக்க நமக்கு நேரமும் இல்லை,சொரணையும் இல்லை.
சரி அத விடுங்க மேட்டருக்கு போவோம்.

எந்த ஒரு நிறுவனமும் லாபம் வரலைன்னா திவால் ஆகிறும்னு படிக்காத எனக்கே தெரியுது,
ஆனா ஆண்டு கணக்கா துண்டு விழாத பட்ஜெட் போட முடியாத நம்ம நாடு உண்மையில திவாலாயிருச்சா? இல்லை மேல துண்ட போட்டு கீழ நம்ம பணத்தை லவட்டிட்டு போறானுங்களா?

ஒன்னுமே புரியலையே!

சரக்கு அடித்தல்!

மூலம் இங்கே!
அத படிச்சிட்டு படிச்சா தான் ஒரு கிக்கா இருக்கும்!

திறந்திருந்த சரக்கும்
திறக்காத வாட்டர் பாட்டிலும்
டேபிளில் நின்றிருந்தன
பலகாலமாய் விற்காத
சுண்டல் தட்டில்,
கூடவே சிக்கன் துண்டுகளும்
நாறத் துவங்கின
சிகரெட்டோ பீடியோ;
நல்ல கம்பெனி சரக்குக்கு
தெறியாதவர் இங்கெதுக்கு;
எதிரிருந்த டேபிளில்
பாதி தீர்ந்த குவாட்டரும்
சாய்ந்து ஓடிய
வாட்டர் பாட்டிலும்
போதையின் சுவையை
குறிப்பில் காட்டியது.
பூமியில் வாழ்வெதென்பது
துக்கத்தை மறத்தலும்
சுகத்தில் முதத்தலும்.
கழிந்த வாழ்க்கை
எடுக்கப்பட்ட வாந்தி;
பின்வரப்போகும் வாந்தி
கழிய போகும் நாளில் மற்றொன்று.
மனம் நொந்த நாட்களில்
அண்டை வீட்டில்
கடன் வாங்கியாவது
சரக்கடி!

சரக்கு இரவல் கொடுப்பதால் வரும் பதினோரு சங்கடங்கள்!

1) நிச்சயமாக திரும்பி வாங்கி தருவார் என்ற மூடநம்பிக்கையுடனோ, திரும்ப வாங்கி தரவே மாட்டார் என்ற நம்பிக்கையுடனோ தான் சரக்கு வாங்கி கொடுக்க நேரும். இரண்டுமே கொடுப்பவருக்கு நன்மை பயக்கக் கூடியதல்ல.

2) சரக்கு இரவல் கொடுத்த ஓரிரு நாட்களில் அந்த சரக்கு நமக்கே ஏதாவது விசேசத்துக்காக, அல்லது மப்புக்காக தேட நேர்கிறது.

3) ‘எந்த சரக்கையும் இரண்டே கல்ப்பில் குடித்து விடுவேன், குடுங்க. குடிச்சிட்டு மேக்ஸிமம் ஒரே வாரத்துல குடுத்துடுவேன்’ – இது இரவல் வாங்கும் எல்லாரும் சொல்லும் வாசகம். ஆனால் கவிஞர். வாலியின் டெம்ப்ளேட் வரிகளைப் போல, இரவல் வாங்குபவர்களுக்கு எப்போதுமே மாதங்கள் வாரங்களாக, யுகங்கள் கணங்களாகத்தான் இருக்கின்றன.

4) இரவல் வாங்கி குடித்தவர் பெயர் மிஸ்டர்.எக்ஸ் என்று வைத்துக் கொண்டால், குடித்த ஓரிரு வாரங்களுக்குத்தான் அவர் மிஸ்டர்.எக்ஸ் ஆக இருக்கிறார். அதற்குப் பிறகு அவர் ‘என்கிட்ட அந்த நெப்போலியன் சரக்கை வாங்கி குடித்தவர் என்றும், இன்னும் கொஞ்ச நாளில் ‘வாங்கிய இரவல் சரக்கை திருப்பி வாங்கி தராதவர்’ என்றும்தான் அவர் பற்றிய பிம்பம் மனதில் படிகிறது.

5) நாம் இரவல் கொடுத்த சரக்கை நம்மிடம் இரவல் வாங்கியவரிடம், இன்னொருவர் இரவல் கேட்கும்போது ‘நம்மளே இரவல் வாங்கினதாச்சே.. குடுக்கலாமா வேண்டாமா’ என்ற குழப்பத்திற்கு ஆளாக்குகிறோம். அல்லது அவர்கள் இரவல் குடுத்தால் ‘இரவல் வாங்கியதை இரவல் கொடுத்த’ பாவத்திற்கு அவரை ஆளாக்குகிறோம்.

6) வாங்கிய இரவல் சரக்கில் தண்ணீர் கலந்து அடிப்பது, சோடா கலந்து அடிப்பது போன்றவற்றை செய்யும் சுதந்திரம் இல்லாமல் வாங்கியவரை தவிக்க வைக்கிறோம். அல்லது அப்படி அவர் செய்தால் ‘இப்படிப் பட்டவருக்குக் கொடுத்தோமே’ என்ற தவிப்புக்கு நம்மை ஆளாக்கிக் கொள்கிறோம்.

7) உண்மையாகவே அந்த இரவல் சரக்கை வாங்கியவர் வாந்தியெடுத்து விட்டால், அவர் அப்படிச் சொல்லும்போது அதை நம்ப முடியாமல் அவரைப் பற்றி நாம் தவறாகப் புரிந்து கொள்ள நேர்கிறது. உண்மையாகவே வாந்தியெடுக்காமல் அவர் அப்படிச் சொல்வதானால்... (மீண்டும் 6வது பாராவின் கடைசி வரிகளைப் படிக்க....)

8) இரவல் குடுத்து திரும்ப வராத சோகத்தில் நாமிருக்கும்போது, வேறொரு நண்பர் இரவல் கேட்க, சூடு கண்ட பூனையாய் அவருக்கு நாம் இரவல் கொடுக்க மறுக்க, அவர் நம்மைத் தவறாகப் புரிந்து கொள்ள ஏதுவாகிறது.(நமக்கே சரக்கில்லையாமா)

9) நண்பனுக்குப் பணம் கொடுத்தால் நட்பு, பணம் இரண்டையும் இழக்க நேரும் என்று பெர்னாட்ஷா சொன்னது போல, நண்பனுக்கு் சரக்கு வாங்கி கொடுத்தால் அந்த சரக்கு, அதற்கான பணம், நட்பு மூன்றையுமே நாம் இழக்க நேர்கிறது.

10) இரவல் வாங்கினால் உடனே குடிக்க வேண்டும் என்ற நினைப்பு வருவதில்லை. அதே காசு கொடுத்து வாங்கியிருந்தாலாவது, அதன் மதிப்புணர்ந்து நிச்சயமாக ரசித்து ரசித்து குடிப்போம்... (அல்லது அப்படி நாம் நினைத்துக் கொள்கிறோம்!)

11) நல்ல சரக்கு என்பதால்தான் பகிர்ந்து கொள்கிறோம். அந்த நல்ல சரக்கை இரவலாகக் கொடுப்பதால் அந்த நல்ல சரக்கை தயாரிப்பவருக்கு கிடைக்கும் மரியாதைக்கு நாம் தடையாக இருக்கிறோம்.(ஓசி சரக்கை என்னைக்கு நல்லாயிருக்குனு சொல்லியிருக்கானுங்க)

டிஸ்கி: இந்தப் பதிவில் வரும் எதுவும் யாரையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ குறிப்பிடுவதல்ல என இதன்மூலம் உறுதியளிக்கிறேன்!

இந்த பதிவு, தான் இதுக்கு மூலக்காரணம்

ஜிலு ஜிலு போட்டி! ஆண்களுக்கு மட்டும்!

அதிகமில்லை ஜெண்டில்மேன் ஆறே ஆறு வித்தியாசங்கள் மட்டும் கண்டுபிடியுங்கள் போதும்!

தன் கண் பார்வையை சோதிக்க விரும்பும் பெண்களும் கலந்து கொள்ளலாம்.
பின்னூட்டம் மட்டுறுத்தப்படுவதால் விருப்பப்பட்டால் மட்டும் வெளியிடப்படும்

இதய பலகீனமுள்ளவர்கள் படத்தை பெரிதாக்கி பார்க்கவேண்டாம்.

இதை எனக்கு செய்து கொடுத்த நண்பர் அந்தமான் பாலசந்தர்.
எனக்கு வால்பையன் லோகோவையும் செய்து கொடுத்தவர் இவர் தான்.
இவை வெற்றி பெறும் பட்சத்தில் இன்னும் நிறைய போட்டிகள் வைக்கலாம் என்று உத்தேசம்.


நன்றி நண்பரே!

மொக்க கவுஜ! ரிட்டர்ன்ஸ்

ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு!
நீயும் நானும் ஃப்ரெண்டு!
ஜெயலலிதா குண்டு!

மேல பாரு வானம்!
கீழ பாரு பூமி!
பூமி மேல ரயிலு!

ரயிலு மேல கல்லடிச்சா
ஆறு மாசம் ஜெயிலு!

ஜெயில விட்டு வெளியே வந்தா
படையப்பா ஸ்டையிலு!

*****************************

நாலு கரண்டி நல்லண்ணெணை
நாற்பத்தியாறு தீப்பெட்டி

வாரார்ரைய்யா சுப்பையா
வழுக்கி விழுந்தால் மீனாட்சி

தும்பி
துளசி

தூக்கி போட்டா மம்புட்டி.

******************************


இந்த உலக புகழ்மிக்க கவுஜகளை எனக்கு சொல்லியது யார் என்று கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு, அந்த வி.ஐ.பி. யுடன் பேசும் வாய்ப்பு கிடைக்கலாம்.

கவுஜ புரியலைனு மண்டைய சொறிபவர்கள்,
அய்யனார், ஜ்யோவ்ராம் சுந்தர், அனுஜன்யா போன்ற பின் நவீனத்துவவாதிகளிடம் பாடம் படித்து விட்டு வாருங்கள், ஏனென்றால் அந்த கவுஜயை சொன்னவர் எல்லா நவீனங்களையும் கரைத்து குடித்தவர்.

கனா கண்டேன்!

தமிழுக்கு இப்படியெல்லாம் சோதனை வரும்னா யார் வந்து காப்பாற்றுவது! என்ன செய்ய அதுவும் என்னால், வெள்ளி இரவு தான் அந்த கனவு வந்தது. எனக்கு இன்சோம்னியா இருப்பதால் என் கனவை என்னால் உணர முடியும், வழி நடத்த முடியும், அப்படியே உள்வாங்கி கொள்ள முடியும்,
ஞாபகம் வைத்து கொள்ளமுடியும். என் கனவில் நான் தான் நாயகன் ஆனாலும் அதையே எட்ட நின்று பார்க்க முடியும்.

இது தான் கனவு

நான் ஒரு நாவல் எழுதியிருக்கிறேன். அதற்காக பாராட்டுகள், சில கேள்விகள்.
நானே எனது நாவலை ஒரு முறை படித்து பார்க்கிறேன். உண்மையில் அப்படி ஒரு நாவலை நான் படித்ததில்லை. அதாவது கதை கோணத்தை சொல்கிறேன்.

கதை இரண்டு பெண்களை மையப்படித்தி உள்ளது.
ஒரு பெண் பிரபல நடிகை, ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொள்கிறாள்.
திருமணதிற்கு பிறகும் அவளது நடவடிக்கை மாறவில்லை.
கணவன் கண்டிக்கிறான். திருமணதிற்கு முன்னரே சொல்லிவிட்டேன் நான் ஒன்றும் பத்தினி இல்லையென்று, என்னை கண்டிக்கும் உரிமை உனக்கில்லை என்கிறாள்.

கணவன் தனது பணபலத்தால் அவளுக்கு வரும் வாய்ப்புகளை தடுக்கிறான். இவளுக்கு முன்னை விட அதிகம் ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் சூழ்நிலை உருவாகிறது.
கணவன் விவாகரத்துக்கு போகிறான். உண்மையில் அது அவளுக்கு பெரும் உதவியாக இருக்கிறது


மற்றொரு பெண் ஒரு தொழிலதிபரின் மகள், ஒரு நடிகரை திருமணம் செய்து கொள்கிறாள்,
இங்கேயும் அதே பிரச்சனை ஆனால் வேறு மாதிரி போகிறது.
தன் கணவனை பழி வாங்குவதாக நினைத்து கொண்டு தானும் பல ஆண் நண்பர்களை சேர்த்து கொள்கிறாள். ஆனாலும் அவளுக்கு கணவன் செய்யும் தவறை ஏற்று கொள்ளமுடியவில்லை.
அவளும் விவாகரத்து வாங்குகிறாள்.

இது தான் கதை கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கிறேன்(கனவில்).
இது போல் ஒரு கதையை, நாவலை இதற்கு முன் படித்ததில்லை. ஒருவேளை யாரேனும் படித்திருந்தால் சொல்லவும். அப்படி ஒன்று இல்லாவிட்டால் நானே எழுதி விடலாம் என்று உத்தேசம்.

படிப்பதும் படிக்காததும் உங்கள் இஷ்டம் மற்றும் கஷ்டம்.
**********************

இன்றோடு எனது நட்சத்திர வாரம் முடிகிறது. ஆதரவளித்த அனைத்து நட்புகளுக்கும் நன்றி

வழக்கொழிந்த சொற்கள்!

இப்போது சந்தோசமாக இருக்கும் என்று நம்புகிறேன். எனக்கு ஒன்றும் தெரியாது என்ற சொல்லிய பிறகும் மாற்றி மாற்றி என் பெயரையும் இழுத்து விட்டு மகிழ்ச்சி அடைந்த நண்பர்களுக்கு நன்றி.
இதோ என் பங்குக்கு வழகொழிந்த சொற்கள்.

******************

இதுவரை எழுதியவர்கள் பெரும்பாலும் என்னை அயர்ச்சிகுள்ளாக்கி விட்டார்கள்.
வழகொழிந்த சொற்கள் என்று அவர்கள் சொன்னது எதுவுமே நான் கேள்விப்பட்டது கூட இல்லை.
பெரும்பாலும் சங்க கால தமிழ் சொற்கள். அவைகளெல்லாம் வழகொழிந்த சொற்கள் என்று எழுதலாம் என்றால், கம்பராமாயணத்தை அப்படியே எழுதி இதிலுள்ள சொற்கள் வழகொழிந்து போய்விட்டது என சொல்லலாம்.

சிலர் எழுதியிருந்தது கிராம வட்டார சொற்கள், அதை கூட ஏற்று கொள்ளலாம். நகரம் பெருக கிராமம் அழிய, கிராமிய வட்டார மொழி சொற்களும் அழிந்து விட்டது என்பது உண்மை. ஒரே ஒரு பிரச்சனை பக்கத்து பக்கத்து கிராமத்தில் கூட ஒரே சொல்லுக்கு வேறு அர்த்தம் தருமாறு இருக்கும். அதாவது உங்கள் சொல் எங்களுக்கு வேறு அர்த்தம் தரும் அது மாதிரி. எது எப்படியோ பழயதை நினைவு கூறுவதற்கு இது ஒரு நல்ல வடிகால்.

*************************************
என்னை பொறுத்தவரை வழகொழிந்த சொற்கள் என்பது என் காலத்தில் பயன்பாட்டில் இருந்து நம் கண் முன்னே அதன் பயன்பாடு குறைந்து கொஞ்சம் கொஞ்சமாக அழிவது. அதை தான் நான் குறிப்பிட விரும்புகிறேன். அதில் சில இன்றும் பயன்பாட்டில் இருக்கலாம், ஆனால் எந்த அளவு நாம் உபயோகிக்கிறோம் என யோசித்து பார்க்க இது வாய்ப்பாக அமையட்டும்.

முதன் முதல் என்னை இந்த தொடர் பதிவெழுத அழைத்த போது, வழகொழிந்த சொற்களை தேட நான் கண்டுபிடித்த வழி பழைய சினிமாக்கள் பார்ப்பது. நேரமின்மை காரணமாக அதையும் முழுதாக பார்க்க முடியவில்லை. இன்னும் எழுதாமல் இருப்பவர்கள் இம்முறையை பயன்படுத்தலாம், ராயல்டி எல்லாம் கேட்க மாட்டேன்.

பலே பலே- ரங்காராவ் அடிக்கடி உபயோகிக்கும் சொல். ஒருவரை பாராட்ட பயன்படுத்துவது.
தூய தமிழா என்றெல்லாம் தெரியாது. நான் கேட்டது பழைய தமிழ்படத்தில்.

கெட்டிக்காரபைய- கெட்டிக்காரன் என்று பெயர் சொல்லால் அழைக்கப்படுவது, இதுவும் ஒருவரை பாராட்டுவது தான், ஆனால் தற்சமயம் யாரும் இந்த வார்த்தையை உபயோகிப்பது போல் தெரியவில்லை. யாரையாவது பாராட்டுவது என்றால் “பையன் ரொம்ப பிரில்லியண்டு” என்று தான் சொல்கிறார்கள். கெட்டிகாரனுக்கு எதிர்சொல்லாக கோட்டிகாரன் என்ற வார்த்தையும் உண்டு.

வண்ணம்-நம் கண் முன்னே காணாமல் போவதில் முதல் இடம் பிடிப்பது வண்ணம்.
எல்.கே.ஜி படிக்கும் குழந்தையை கேட்டாலும் சொல்லும் ”கலர்” என்பது தமிழ் சொல் என்று அந்த அளவுக்கு கலர் நம்மிடையே கமீட் ஆகிவிட்டது.

இடுக்கு-இதன் அர்த்தம் தெரியாமல் உபயோகிப்பதால் இதுவும் சில நாட்களில் காணாமல் போகும். இடுக்கு என்றாலே சந்து என்று தான் அர்த்தம் ஆனால் நம் மக்கள் எப்போதுமே இடுக்குசந்து என்று சேர்த்து தான் அழைப்பார்கள்.

சர்ப்பம்- இது பாம்பை குறிக்கும் சொல்

இதுபோல் நிறைய சிறு விலங்குகள் ஒவ்வொரு வட்டாரதிற்கும் ஒவ்வொரு பெயர் சொல்லி அழைக்கப்படும். பல்லி போன்று வண்ணத்துடன் வீடுகளுக்கு அருகில் அழையும். சிலர் அரணை என்பார்கள். சிலர் அரணா என்பார்கள், சிலர் சாம்புராணி என்பார்கள்.

ஒணான் என்பதையே சிலர் ஒடக்கான் என்பார்கள், சிலர் கரட்டான்வண்டி என்பார்கள்.
இன்னும் தட்டான்,தும்பி என்று ஒவ்வோரு வட்டாரதிற்கும் ஒவ்வொரு மாதிரியான பெயர்களுடன் சிறு சிறு விலங்குகள் இருகின்றன.

நகரமாக்களின் தாக்கத்தால் வேலி முட்கள் அகற்றபடும் பொழுது இவைகளுக்கு புகலிடம் இல்லாமல் அழிந்து விடும். அப்போது இந்த சொற்களும் வழகொழிந்து போய்விடும்.


இந்த தொடரை எழுத நானும் சிலரை அழைக்கவேண்டும்.

1.மேக்சிமம் இந்தியா

2.பரிசல்காரன்

3.நர்சிம்

மூவருமே மிகுந்த தமிழ் ஆர்வம் மிக்கவர்கள். இது பற்றி நம்மைவிட இவர்களுக்கு நிறையவே தெரிந்திருக்கும் என நம்புகிறேன்.

இன்னொருவர் இருக்கிறார் ரமேஷ் வைத்யா என்று, அவர் பல்கலைகழகம் அவரிடம் கேட்டால் நமக்கு தாவூ தீர்ந்துவிடும். அதனால் அப்போ அப்போ அவரே இது பற்றி பதிவு போர சொல்லாம்.

*********************************************

இது சின்ன புரிந்துணர்வு ஒப்பந்தம்.

நட்சத்திரபதிவு ஆரம்பத்திலிருந்து எந்த பின்னூட்டதிருக்கும் நான் பதில் சொல்லவில்லை.
யாரும் தவறாக நினைக்கவேண்டாம். சாதாரணமாக வாரம் ஒரு பதிவு தான் எழுதுவேன்.
மற்ற நேரங்களில் எனது நண்பர்களுக்கு பின்னூட்டம் போடுவது தான் எனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு என்பது உங்களுக்கே தெரியும். நட்சத்திர வாரத்தில் முகப்பில் எனது பெயர் இருப்பதால் தினம் ஒரு பதிவு எழுதி, நேரம் கிடைக்கும் பொழுது மற்ற நண்பர்களின் பதிவுகளுக்கும் சென்று பின்னூட்டம் இட்டு, சாப்பிட்டு, தூங்கி இடையே கொஞ்சம் வேலையும் பார்க்கிறேன்

அதனால் யாரும் தவறாக எடுத்து கொள்ளாதீர்கள், இந்த நட்சத்திரவாரம் முடிந்தது முதல் வேலையே உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்வது தான்.

தோழருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தனிதன்மையான எழுத்து நடையுடயவர்!
வரம்புகளின்றி சமூகத்தில் மறைக்கப்படவைகளை வெளிச்சத்தில் காட்டுவார்!
சொற்களில் விளிம்புநிலை தன்மையும், மூடி மறைக்காத நேரடி சொற்கலைகளும் இருக்கும்.
பழக அன்பானவர். அவருக்கு இன்று பிறந்த நாள்.
உங்களுடன் சேர்ந்து என் வாழ்த்துகளையும் இங்கே பதிவு செய்கிறேன்

வாழ்க தோழர் அதிஷா

போட்டோவை கிளிக் செய்தாலும் தோழரை படிக்கலாம்

கேரக்டர்ன்னா என்ன?

பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் வார்த்தை, புழக்கத்தில் உள்ள வார்த்தை இப்படி சொல்லி கொண்டே போகலாம். அந்த வார்த்தை

அவரு கேரக்டர் சரியில்லை?

சமீபத்தில் ஒரு நண்பருய பதிவில் இது தொடர்புடய ஒரு வார்த்தையை கண்டும் கேரக்டர்ன்னா என்னான்னு கேட்டிருந்தேன். ஒருவரிடமிருந்தும் பதிலில்லை. அதனால் எனது சிற்றறிவுக்கு எட்டிய அவரை யோசித்து இதுவாக தான் இருக்கலாம் என நானே ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்.
தவறாக இருந்தால் திருத்த வேண்டியது உங்கள் பொறுப்பு!

*************************************

கேரக்டர்ன்னா என்ன?

வேட்டி சட்டை, பேண்ட் சட்டை.
இவைகள் உடைகள், அதனால் ஏற்படுவது தோற்றம் மட்டுமே!
தோற்றதிற்கு ஆங்கிலத்தில் அப்பியரன்ஸ் என்று ஒரு சொல் இருகிறது.
ஆக ஒருவரது உடையை வைத்து அவரது கேரக்டரை முடிவு செய்ய முடியாது.
தோற்றம் என்பது கேரக்டர் அல்ல!


தம் அடித்தல், தண்ணி அடித்தல்!

இதை சேர்க்க காரணம், எனது பக்கத்து வீட்டில் இருவர் பேசி கொண்டது.
அவன் கேரக்டர் சரியில்லைப்பா!
அப்படியா என்ன பண்றான்?
தம்மு, தண்ணி எல்லா பழக்கமும் இருக்கு!

எனக்கு எந்திரிச்சி போய் வாதம் பண்ணலாம்னு தோணுச்சு!
இணையத்துலனா திட்டோட போயிரும், நேர்ல அடிவிழ வாய்ப்பிருக்கிறதுனால அந்த எண்ணத்தை விட்டுடேன்.

அவர்களுடய பதிலில் பதில் இருக்கிறது.

தம்மு, தண்ணி எல்லா பழக்கமும் இருக்கு!

அதாவது பழக்கம் இருகிறது!

பழக்கம் எப்படி கேரக்டர் ஆகும்!

சிலர் சாப்பிடும் முன் கை கழுவியே ஆக வேண்டும் என அடம்பிடிப்பர்.
சிலருக்கு சாப்பிடும் போது படிக்க புத்தகம் வேண்டும்.
சிலருக்கு தினமும் சாப்பாட்டில் அசைவம் வேண்டும்.

இவையெல்லாம் பழக்கங்கள் தானே!
பழக்கம் என்றால் ஹேபிட்ஸ் தானே, அது எப்படி கேரக்டர் ஆகும்.

ஒருவருடய பழக்கங்கள் உங்களுக்கு பிடித்தே ஆக வேண்டிய கட்டாயமில்லை தான், அதற்காக அவரது கேரக்டர் சரியில்லை என புரளியை கிளப்பக்கூடாது இல்லையா!


சரி வேறு என்னாவாக இருக்கும்,
கோபப்படுதல்?

பக்கத்துல வந்துட்டோம்!
கேரக்டர்ன்னாலே தமிழ்ல குணாதிசியம்னு அர்த்தம்.
அதனால குணங்கள் அதுல சம்பந்தப்படிருக்கு, ஆனா பாருங்க இந்த கோபத்த அதுல சேர்க்க முடியாது,

தன் மீது அனைவருக்கும் பயம் இருக்கனும்னு சில உயரதிகாரகள் எப்ப பார்த்தாலும் முகத்தை கோபமாகவே வைத்திருப்பார்கள், உள்ளூர சிரிப்பு இருக்கும். அது ஒருவகையான பழக்கம் ஆகிவிடுவதால் அது பழக்கத்தில் பாதி சேர்ந்து விடுகிறது.

இறுதியா கேரக்டர்ன்னா என்ன?

நமது தனிப்பட்ட குணம்!
கேரக்டர் சரியில்லைனா?

அதுவும் நமது குணம் தான்!

ஒரு நண்பர் என்னிடம் உதவி கேட்கிறார்!

என்னால் முடிந்தால் செய்ய வேண்டும்! அதற்காக அவருக்கு உறுதி அளிக்கிறேன் கண்டிப்பாக செய்கிறேன் என்று ஆனால் செய்யவில்லை, இதனால் அவரும் பாதிக்கபடுவார்.

இதுபோல் பல சொல்லலாம்!
வருகிறேன் என்று வராமல் போவது
தருகிறேன் என்று சொல்லி தராமல் போவது!

இம்மாதிரியான கமீட்மெண்டுகளை கொடுத்துவிட்டு அதை காற்றில் விடுவது தான் மோசமான கேரக்டர்!

ஒருவருடய தோற்றமோ, பழக்கவழக்கமோ மற்றவர்களை பாதிக்க வாய்ப்பில்லை.
ஆனால் ஒருவருக்கு கொடுக்கும் வாக்குறுதிகள் நிறைவேற்ற படவில்லையெனில் நம்மால் அவரும் பாதிக்கப்படுவார். அம்மாதிரியான செயல்களை செய்பவர்களே மோசமான கேரக்டர் உள்ளவர்கள்.

நமது கேரக்டர் சரியாக இருக்க!
கொடுத்த வாக்குகளை சரியாக நிறைவேற்றுவோம்.

***********************************

எங்கேயும் படிக்கல
நானா தான் எழுதியிருக்கேன், கண்டிப்பாக தப்பு இருக்கும், இருக்கும் பட்சத்தில் எனக்கு தெளிவு படுத்த வேண்டியது உங்கள் பொறுப்பு

சினிமா, கவிதை, காதல்!!!

சினிமா!

போக வேண்டிய அவசியமேயில்லை, மிக்கியமா தமிழ்சினிமா போஸ்டர கூட பார்க்க வேண்டியதில்லை, எத்தனை மணிக்கு அழைத்தாலும் பிஸியாக போனையே எடுக்கமுடியாத நண்பர்கள் இந்த விசயத்தில் “அட்டு”,”லட்டு”, “பிட்டூ” என பாகுபாடு பார்க்காமல் எல்லாவற்றையும் பார்த்து அலசி, துவைத்து காயப்போட்டு விமர்சனம் எழுதி விடுகிறார்கள். அதன் பின் அந்த படத்தை பார்ப்பதில் என்ன இருக்கு!

மற்றபடி செயற்கை தனங்கள் இல்லாத உலக சினிமாக்கள் அத்தனையும் டீ.வீ.டீ வழியே பார்க்க கிடைக்கிறது, தியேட்டர் வாசமே மறந்து விட்டது. ஆனாலும் தமிழ் சினிமாக்களை எனக்கு பிடிக்கும் காரணம் அது எப்போதும் காதலை பிடித்து தொங்குவதால், காதல் சாதி, மதங்களை ஒழிக்க மகத்தான சக்தி என்பதால், அதை வளர்க்கும் சினிமாவை நான் காதலிகிறேன்.

அலைகள் ஒய்வதில்லை என்று நினைக்கிறேன், அதற்கு முன்னரும் காதல் சினிமாவில் இருந்தது, ஆனால் காதலுடன் பல விசயங்களை சேர்த்து காட்டியது சினிமா, ஆனால் புதிய ட்ரெண்டில் காதல் தான் எல்லாம். பார்த்த காதல், பார்க்காத காதல், பேசிய காதல், பேசாத காதல், வித்தியாசமான காதல், காதல் வித்தியாசமாக, இருங்க மூச்சு வாங்குது. இந்த பதிவு முழுக்க எழுதினாலும் எத்தனை வகையான காதல்கள் இருக்குன்னு சொல்ல முடியாது.
விடுங்க நமக்கு சலிக்கலாம், என்றும் புதிய காதலர்கள் இறக்கை முளைத்த பறவைகள் தானே!
*****************************************
கவிதை

போன வாரம் என் ஜிமெயில் ஸ்டேட்டசுல ஒன்னு வச்சிருந்தேன்

கவிதை என்பது
வரிகளாலானெதென்றால்
உன் உதடுகளும்
கவிதை தானே!

இது கவிதையான்னு எனக்கு தெரியாது!
எதோ தோணுச்சு ஆனா நண்பர்களிடம் ரெஸ்பான்ஸ் நிறைய!
நீங்களும் ஆரம்பிச்சிடிங்களால்ல ஆரம்பிச்சி, மாட்டிகிட்டிங்களான்னு வேறு கோணத்தில் அலச ஆரம்பித்து விட்டார்கள், சரின்னு சென்ஷியிடம் கருத்து கேட்டேன், அவ்ரு போர்ஹோன்னு ஆரம்பிச்சி எனக்கு மயக்க மருந்து கொடுத்தார், அண்ணே விட்டுடுங்க வலிக்குதுன்னு ஓடி வந்துட்டேன், அப்புறம் அய்யனார் ஆன்லைன்ல இருந்தால் அவர்கிட்டயும் இத பத்தி என்ன நினைக்கிறிங்கன்னு கேட்டேன், விட்டாலாச்சார்ய படம் மாதிரி டஸ்ஷுன்னு ஆஃப்லைன் போயிட்டார். அவரையும் குறை சொல்ல முடியாது. தூக்கத்துல கூட புனைவுன்னா என்னா விளக்க கொடுத்துகிட்டு இருக்காராம். அது மாதிரி இதுவும் எதாவது என்கொயரின்னு நினைச்சிருப்பார்.

கவிதைங்கிறது என்ன பொறுத்தவரை மனமொழி.
புதிதான வார்த்தைகளை பிடிச்சி மடக்கி நெளிச்சி எதாவது பண்ணிருப்பிங்க!
என்னை கூப்பிட்டு கருத்து கேட்டா நான் உங்க மெயின் மேட்டரை சரக்கா மாத்தி எதிர் கவுஜ எழுதிருவேன், இல்லைனா தாவூ தீருதுன்னு எஸ்கேப்பாயிருவேன்.

கவிதை எழுதுறவங்க அதை விளக்க முயற்சிக்காதிங்க!
அதை வாசகனின் பார்வையில் விட்டுடுங்க!, இந்த விசயத்தில் ஜ்யோவ்ராம் சுந்தர் சூப்பர், நாம என்ன தான் மாத்தி மாத்தி விளக்கம் கொடுத்தாலும் அவரு விளக்கம் கொடுக்க மாட்டாரு, கூல திரும்பவும் ஒருக்கா படிங்கட்டு போயிருவார்.

எனக்கு கவிதை பிடிக்காததல்ல, புரியாதது.

****************************************

காதல்

சினிமா மேட்டர்லயே சொல்லிடேன், அது சலிப்பு ஏற்பட்ட விசயன்னு!
ஆனாலும் சினிமாவுக்கு முன்னாடியே எனக்கு அது பெரிய ஈர்ப்பை கொடுக்கலைங்கறது தான் உண்மை. சில வருடங்களுக்கு முன்னால் உசிலையில் ஒரு சொந்தகார பெண்ணை காதலித்து உருகி மருகி வீட்டில் பொய் சொல்லி உசிலை போய் அவள் வரும், போகும் பாதையில் நின்று கொண்டிருப்பேன், ஒருநாள் அவளே வந்து எங்கப்பாரு பார்த்தாரு, கூறு போட்டு ஊருக்கு பார்சல் அனிப்பிருவாருன்னா! விடு ஆத்தா ரொம்ப தான் அழட்டிகிறன்னு மதுர பஸ்ஸுல ஏறிட்டேன்.
அவ ஞாபகமாகவே இருந்தது, இது தாண்டா காதல்ன்னு நினைச்சிகிடேன். நினைப்பு முடியும்மின்னே ஒரு பிகர் பஸ்ஸுல ஏறுச்சு. மனசுல இருந்த காதலி காணாம போயிட்டா, அந்த புது பிகர பார்த்து உருகி மருகி!
அடப்போங்கப்பா காதலாவது மண்ணாங்கட்டியாவது.

ஆனாலும் சாதி வெறி பிடித்த பொற்றோர்ளின் குமட்டில் காதல் குத்துவதால், காதல் மேல் எனக்கும் காதல் உண்டு

காதல் வாழ்க,
சாதி ஒழிக!

உண்மை எல்லா நேரமும் கசப்பதில்லை! 2..

என் மாமாவிடம் சண்டை போட்டு கொண்டு வெளியே வந்த நான் நேராக ஊருக்கு வரவில்லை, அதற்கு பதிலாக இன்னொரு மாமாவை பார்க்க சென்றேன்.(அவர் என் அம்மாவின் இன்னொரு சித்தி மகன்). எனக்கு சென்னையிலேயே வேறு ஒரு வேலை வேண்டும். எனக்கு ஈரோடு செல்ல விருப்பமில்லை என்றேன். அவரும் ஒரு ஸ்டுடியோ வைக்க ஆவலாய் தான் இருந்தார். அப்போதய பொருளாதர சூழ்நிலை முடியவில்லை, அவர் ஸ்டூடியோ வைக்கும் வரைக்கும் இடைகாலமாக என்னை எதாவது ஒரு இடத்தில் வேலைக்கு சேர்த்து விடுகிறேன் என்றார்.

அப்போது அவர் பனகல் பார்க்கில் ஒரு பங்குவர்த்தக நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். சில வேலைகளை எனக்காக தேர்வு செய்து என்னை வரச்சொன்னார்.
(அதுவரை எங்கே தங்கியிருந்தேன் என்பது வேறு ஒரு பதிவில் வரும்).நானும் அவரது அலுவலகத்திற்கு சென்றேன், அங்கே தான் தெரிந்து கொண்டேன் என் மாமா என் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருகிறார் என்று. என் மாமா வேலை செய்யும் அலுவலகம் மாதிரியே இருக்கும் மற்றொரு அலுவலகதிற்கு போன் செய்தார், பேசி கொண்டிருக்கும் போதே, ரீசிவரை மறைத்து உனக்கு டைப்பிங் தெரியுமா என்றார், நான் தெரியாது என்றேன்.
மீண்டும் ரிசீவரில் “டைப்பிங்க் தெரியாது ஆனா ரண்டு நாள்ல டைப் அடிப்பான் ”என்றார்”.
நான் மன்றாடி ரிஸ்க் வேண்டாம் எனக்கு வேறு வேலை பாருங்கள் என்றேன்.
அப்படி கிடைத்தது தான் இந்த கதையில் வரும் ”ஸ்வர்ணமகால் ஜுவல்லரி”
*******************************************

என் மாமா ஏற்கனவே பேசிவிட்டதால் இண்டர்வீயூ பயமுறுத்தும் அளவுக்கு இல்லை.
வேலைக்கு சேர்ந்தாயிற்று.
அங்கேயே தங்க வேண்டும். காலையில் அங்கேயே சாப்பாடு, பின் கடை, மதியம் சாப்பாடு, பின் கடை, இரவு சாப்பாடு, பின் தூக்கம், மீண்டும் காலை இவ்வாறே வாழ்க்கை சுகமாக போய் கொண்டிருந்தது. கடையில் ஏசி வேறு. அப்படியே செட்டில் ஆகிவிடலாமா என்று யோசித்தேன். நிஜமாத்தாங்க முதல்மாத சம்பளமாக 600 ரூபாய் கொடுக்கும் வரை அப்படித்தான் நினைத்து கொண்டிருந்தேன்.

சம்பளம் வாங்கியதும், பகீரென்று இருந்தது. சென்னை டீ.நகரில் இருந்து செங்குன்றம் செல்லவே 10 ரூபாய் பேருந்துக்கு வேண்டும். வாரம் ஒரு நாள் ஊர் சுற்ற 250 தாவது வேணும்.
ஒண்ணும் கட்டுபடியாகுதுன்னு கூட வேலை செய்யும் உபி என்ற நண்பனுடம் சொல்லி கொண்டிருந்தேன். அவர் ஒரு ராஜ விசுவாசி முதலாளியிடம் போட்டு கொடுத்து விட்டார். கூடவே நான் மெத்த படித்த மேதாவி என்றும் சில பல பிட்டுகள் எக்ஸ்ட்ரா!?, என் மேல் என்ன காண்டோ அவனுக்கு!

முதலாளி அழைத்து பேசினார்!
மாதம் 1000 சம்பளம் , எக்ஸ்ட்ராவாக அவரது பையனுக்கு டியூசன் சொல்லிதர வேண்டும்.
பட் எனக்கு டீல் ரொம்ப பிடிச்சிருந்தது. ஒத்துகிட்டேன், அவருக்கு சொல்லி கொடுக்கும் முன்னர் நான் ஒருக்கா முழுசா படிக்கனும், தெரியாதத எழுதி வச்சு டிக்‌ஷனரியில தேடனும். எனக்கும் சவாலா இருந்ததால நான் பத்தாவது கூட படிக்காத உண்மைய மறைச்சு டியூசன் சொல்லி கொடுத்தேன். இன்னைக்கும் கேட்டு பாருங்க, அவருக்கு சொல்லி கொடுத்தது எல்லாம் மனப்பாடமா சொல்லுவேன், ஆனா கடைசி வரைக்கும் அவரை படிக்க வைக்க முடியல.

என்னன்னவோ பன்ணி பார்த்தேன். கேட்கல சில பல தண்டனைகள் கூட கொடுத்தேன், இளவரசர் கோவிச்சிகிட்டு ராசாகிட்ட சொல்லிட்டார். முதலாளியும் என்னை கூப்பீட்டார்.

”தம்பி இவரு தான் நாளைக்கு உனக்கு முதலாளியா வரப்போறாரு! அதனால அவரை ஐயான்னு கூப்பிடுங்க”ன்னாரு

இல்லைங்க சொல்லி கொடுக்கும் நானே ஐயான்னு கூப்பிட்டா அவருக்கு எப்படிங்க படிக்கனுன்னு எண்ணம் வரும்னேன்

அவருக்கு படிப்பு வராட்டியும் பரவாயில்லை, சும்மா சொல்லி கொடுங்க, ஆனா ஐயானு கூப்பிடுங்கன்னாரு

இது தான் மேட்டருன்னு முதல்லயே தெரிஞ்சிருந்தா எப்பவோ கம்பி நீட்டிருபேன்,
உங்க பணதிமிர உங்களோட வச்சிகோங்க, எனக்கு சம்பள பாக்கிய செட்டில் பன்ணுங்கன்னு சொன்னேன்.

யார பார்த்து பணதிமிருன்னு சொன்னன்னு தையா தக்கான்னு குதிச்சாரு!

நான் அமைதியா ஒரு பேப்பர்ல என்னோட சம்பள பாக்கி எவ்வளவுன்னு எழுதி கொடுத்தேன்.

தரமுடியாதுன்னாரு

”அப்போ உங்களுக்கு பணதிமிரு இல்லையா”ன்னு கேட்டேன்.

எடுத்து கொடுத்துட்டாரு

வந்துட்டேன்..............................

ஏதாச்சும் செய்யணும் பாஸ்!

லாக்அப் அறை

உன் பேரென்ன?

பிலால், முகமது பிலால்

என்ன ஜேம்ஸ்பாண்டுன்னு மனசுல நினைப்பா?

அப்படியா! ஜேம்ஸ் பாண்டும் இப்படி தான் சொல்லுவாரா?

நக்கலா? உண்மையான பேர் என்ன?

பேரு பிலால் தாங்க! ப்ரென்ஸ்செல்லாம் பெல்ட்டு பிலால்ன்னு கூப்பிடுவாங்க

ஓ! அந்த பெல்ட்டு பாம் பிலால் நீதானா?

பாமா? ஐய்யா நான் இடுப்புல கட்டுற பெல்ட்டு விக்கிறவன், அத சொன்னேன்.

நீ பண்ணியிருக்குற காரியத்துக்கு உனக்கு எத்தனை வருசம் கிடைக்கும் தெரியுமா?

தெரியாதுங்க! ஆனா நான் குற்றத்த ஒப்புகிறேன்.

**************************************

நீதிமன்றம்

உங்கள் மீது சுமத்தபட்டுள்ள குற்றங்களை ஒப்புகொள்கிறீர்களா?

ஆமாங்கய்யா!

உங்களுக்காக வாதாட வக்கில் இருக்காங்களா?

இல்லைங்கய்யா நானே வாதாடிக்கிறேன்!

சரி, உங்கள் தரப்பில் நீங்கள் சொல்ல விரும்புவதை சொல்லலாம்,

ஐயா! நானும் சாதாரணம ஓட்டு போட்டு இந்த அரசியல்வாதிகள் நம்ம ஊருக்கு எதாவது செய்வாங்கன்னு பார்த்துகிட்டு இருக்குற சாமன்யன் தாங்க!
கடந்த 20 வருசமா எங்க ஊர்ல அவுங்க குடும்பம் தான் மாத்தி மாத்தி சட்டசபைக்கு போறாங்க!
யாராவது நல்லது செய்வாங்கன்னு பார்த்தா, ஒருத்தருக்கும் மனசு வரல!
சரி அப்படி தான் நாசமா போங்க எங்கள தொந்தரவு பண்ணாதிங்க்கனு தாங்கய்யா எத்தனி வருசமா இருந்துட்டோம், ஆனா பாருங்க இப்போ கொஞ்ச நாள அவுங்க ஆட்டம் தாங்க முடியலைங்க! இருக்கிற சொத்த பூர அடிச்சி புடுங்குறது, தரலைன்னா ஆள கடுத்துரது, கொலை பண்ணிடுவேன்னு மிரட்டுரதுன்னு அராஜகம் மிஞ்சி போச்சுங்க!
நாங்களும் எம்புட்டோ பொருத்து பார்த்தோம், அவுங்க ஆட்டம் கொஞ்சம் கூட குறையல,
இதுக்கு எதாவது செய்யனும்னு நான் நினச்சிகிட்டு இருந்த போது தான் சகோதரர் முத்துகுமார் ஈழத்தமிழர்களுக்காக தன்னையே எரிச்சிகிட்டு உயிரவிட்டாருன்னு பேப்பருல படிச்சேன்.
அது மாதிரி நாமளும் செத்தா ஊருக்கு எதுவும் நடக்காது, அதுக்கு பதிலா அவனை கொன்னுபுட்டோம்னு வச்சிக்கிங்களேன், ஊருக்கு இடைத்தேர்தல் வரும், மக்களுக்கு கையில காசு புழங்கும், எப்படியும் ஜனங்க அடித்த வாட்டியிம் அவுங்களுக்கு ஓட்டு போட போறதில்லை, அடுத்து வர்ர புது ஆளுக்களாவது நம்ம ஊருக்கு எதாவது செஞ்சா போதும்னு தாங்க அந்த எம்.எல்.ஏ.வை கொலை பண்ண போனேங்க. ஆனா பாருங்க கூட்டத்துல பண்ண முடியுல, போலிஸ்காரங்க புடிச்சி இங்கவந்து நிப்பாட்டிட்டாங்க.

குற்றவாளி கூண்டில் இருக்கும் பிலாலுக்கு இ.பி.கோ. 307 வது பிரிவின் படி 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கலாம், ஆனாலும் அவரது வாதத்தின் படி இது முன் பகையினால் ஏற்பட்ட கொலை முயற்சி அல்ல என்பது தெரிகிறது, அதே நேரம் ஆயுதத்தால் தாக்க சென்றது குற்றம் தான் ஆகவே இ.பி.கோ.324 வது பிரிவின் படி அவருக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கிறேன்.
குற்றவாளி பிலாலால் குற்றம் சாட்டப்பட்ட எம்.எல்.ஏ பற்றிய வாதங்களையும் இந்த நீதி மன்றம் கருத்தில் கொள்கிறது, அவர் மீது சாட்டபட்ட குற்றங்களை புகாராக ஏற்று காவல்துறை விசாரிக்க வேண்டும் என்றும், அந்த குற்றங்கள் உண்மை என்றும் அறியும் பட்சத்தில் அவரை சட்டத்தின் முன் ஆஜர் படுத்தும் படி காவல்துறைக்கு இந்த நீதிமன்றம் ஆணையிடுகிறது.

**********************************************

நீதிமன்ற வளாகம்-பத்திரிக்கை நிருபர்கள்

மிஸ்டர் பிலால்- உங்களுக்கு தண்டனை கிடைக்கும்னு தெரிஞ்சம் அந்த கூட்டத்துல ஏன் உங்க ஊரு எம்.எல்.ஏ.வ கொல்ல போனிங்க!

(புன்னகையுடன்) மனுசனா பொறந்தா மக்களுக்கு எதாவது செய்யனும் பாஸ்.

!

Blog Widget by LinkWithin