நான் ஏன் பார்ப்பனியத்தை எதிர்க்கிறேன்!..

அது ஒரு மழைக் கால இரவு, ஆஷ் என்னும் வெள்ளை துரையின் குதிரை பூட்டிய வண்டி, சேரியைக் கடந்து பறக்கிறது. ஆஷ் ஒரு மனித நேயம் மிகுந்த மனிதன் என்பதால், இருள் விலகி கொஞ்சம் அவனுக்கு வழி விடுகிறது.

மனிதர்களில் இருந்து விலக்கப்பட்டு மிருகங்களின் நிலையில் இருந்த ” தலித்” மக்களின் பகுதியை கடந்து ஆஷ் செல்லுகின்ற போது, அங்கே ஒரு அழுகுரல் இருளின் அமைதியை ...விலக்கி வருகிறது.. 

ஆஷ் தன் சாரதியிடம் சொல்கிறான், வண்டியை அந்த அழுகுரல் வரும் திசை நோக்கி செலுத்து என்று.

சாரதி சொல்கிறான், அது தாழ்த்தப் பட்ட மனிதர்கள் வாழும் இடம், அங்கு நாம் செல்லக் கூடாது என்று, 

ஆஷ், கேட்கிறார்,

மனிதர்களில் தாழ்ந்தவர்களா, 

அவர்கள், திருடும் இனமா? என்றான்? 

இல்லை அய்யா பிறப்பால் தாழ்ந்தவர்கள் என்றான்.

வியப்பின் எல்லைக்கு சென்ற ஆஷ், கட்டளை இடுகிறான், அந்த அழுகுரல் வரும் திசை நோக்கிச் செல்” – 

அதிகாரத் தோணி கேட்டு அடங்கிய சாரதி, மறுக்காமல் விரைகிறான்.

அவர்கள் சென்ற இடம், அந்த மனிதர்களைப் போலவே இற்றுப் போன ஒரு குடிசை.

அங்கே, ஒரு பிரசவ வலி வேதனையில் ஒரு பெண் கதறுகிறாள். சுற்றிலும் நான்கைந்து பெண்களும், தூரத்தில் சில ஆண்களும்.

ஆஷ் அருகில் சென்று கேட்கிறான், என்ன ஆனது என்று..

பிரசவ வேதனையில் இருக்கும் இந்தத் பெண்ணுக்கு, ஒரு சிக்கல், அவளை மருத்துவமனை கொண்டு சென்றால், இரண்டு உயிர்களை காப்பாற்றலாம் என்று…….அவர்கள் சொன்னவுடன், 

ஆஷ் கேட்கிறான், 

பிறகென்ன கொண்டு செல்ல வேண்டியது தானே என்று.

அதற்கு, அவர்களில் ஒருவன் சொன்னான்,

அய்யா, 

அக்ரகாரம் கடந்து இந்த இருளில் செல்வது என்பது, எம்மை நாங்களே அழித்துக் கொள்வது போலாகும்.

வண்டி கட்டிச் செல்ல வேண்டும் என்றால், அக்ரகாரம் கடக்க வேண்டும்.

ஆனால், அது இயலாத் காரியம், அந்தப் பகுதிகளுக்கு நாங்கள் செல்லத் தடை செய்யப்பட்டு இருக்கிறோம்.

ஆஷ், அங்கிருந்தவர்களைப் பார்த்துச் சொல்கிறார், 

” இந்த ஜில்லா அதிகாரி சொல்கிறேன், 

உடன், என்னுடைய வண்டியில் அந்தப் பெண்ணை ஏற்றுங்கள்.

நான் அவளை மருத்துவமனை அழைத்துச் செல்கிறேன், என்று சொல்லி சொன்னது போல் செய்தான்,

அக்ரகாரத்தை ஒரு தலித் பெண் கடந்து விட்டாள் என்கிற செய்தி,பரவியது. 

வாஞ்சிநாதன் ஒரு உயர் சாதித் தீவிர வாதி.

எப்பாடு பட்டாவது வர்ணங்களையும், 

குல தர்மங்களையும் காப்பாற்ற முயலும் 

ஒரு சாதியக் குலக் கொழுந்து.

அக்ரகாரத்தின், புனிதம் கெடுத்த ஆஷ் துரையின் ஆயுளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணி மனியாச்சியின் புகை வண்டி நிலையத்தில் வைத்து, 

வாஞ்சினாதன் என்கிற பிராமணன் ஆஷ் துரையைத் தன் துப்பாக்கித் தோட்டாவுக்கு இரையாக்கிய போது அவனுக்கே தெரியாது, 

நமக்கு இப்படி ஒரு நாட்டுப் பற்று விருது கிடைக்கும் என்று.

மனிதம் காப்பாற்றிய ஆஷ் துரை வரலாற்றினை எப்படி மறைத்திருக்கிறது இந்த வரலாற்று உண்மை.,


********
நன்றி..செல்வா கவிஞர்,

உடுமலை.சு.தண்டபாணி தண்டபாணி
மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்..

21 வாங்கிகட்டி கொண்டது:

மருதநாயகம் said...

தூத்துக்குடியில் ஆஷ் துரைக்கு நினைவுச் சின்னம் ஒன்று இருக்கிறது. ஒருவேளை அவ்வூர் மக்களுக்கு மட்டும் உண்மை தெரிந்து இருக்குமோ

Massy spl France. said...

வந்தேறி ஆரிய காட்டுமிராண்டிகள் உருவாக்கிய கற்பனை இந்து மதத்தின் கேடு கெட்ட சாதி. அடுக்குகளின் பின்னால் ஒளிந்துகொண்டு எளியவர்களின் இரத்தத்தை உறிந்து பழகிப்போன அட்டைப்பூச்சி இன பார்ப்பன மடையர்களின் புத்தி இப்படித்தான் வேலை செய்யும்.
பகிர்வுக்கு நன்றி.

ssk said...

மனித தன்மை உள்ள இடத்தில் பார்பனியம் இருக்க முடியாது.
சாதி என்ற கட்டு கதையை இன்றும் பிடித்து தொங்கி இங்கேயே பிறந்த மற்றவரை இழிவு படுத்தி நடத்தும் கொடுமை மிக கேவலமானது.
பல தனிப்பட்ட மனிதரிடம் குணங்கள் ஏற்ற தாழ்வாக இருக்கலாம். ஆனால் அனைத்திலும் கொடுமையானது பார்பனியம். எப்போதும் எதையாவது பொய் கருத்துகளை , எட்டப்பர்களை வைத்து பேச வைத்து இன்று வரை பார்பனியம் பிழைத்துள்ளது. காரணம் தமிழர்களை விட இளிச்சவாயர் உலகில் எங்கும் இல்லை அதே போல் பார்பனியமும் இங்கு தவிர எங்கும் பிழைக்க முடியாது எவ்வளவு புளுகினாலும்.

Unknown said...

வாஞ்சிநாதனின் தியாகத்தின் பின்னால் உள்ள உண்மை இதுவா? அப்போ அவன் தியகியில்லையா? வரலாறுகள் எப்படி எல்லாம் திரிந்து கொள்ளுகின்றன..

ttpian said...

there are so many reasons to HATE bramins/braminism:
as long as INDIANS& BRAMINS are existing,well,there can be no RAISE for tamil community:
pathiplans@sify.com

Anonymous said...

உண்மையில் இது போன்று ஆங்கிலேயேர் ஆற்றிய எண்ணற்ற சமூகப் பணிகளை விடுதலை தேசிய தீயில் எரித்தும் மறைத்தும் விட்டோம். பார்ப்பனியம் மட்டுமில்லாமல், அதற்கு கழுவி விட முண்டியடிக்கும் ஆதிக்க சாதியமும் மிகக் கொடியதாம்..! மனிதம் காத்த ஆசு துரையை துரோகி ஆக்கி தீவிரவாதியை போராளி ஆக்கிவிட்டோம், ஈழத்திலும் இத்தகைய ஆதிக்க சாதிய தீவிரவாதிகள் எல்லோரும் போராளிகளாகவும், நாட்டுப் பற்றாளர்களாகவும் ஆக்கப்பட்டுள்ளனர். :(

நன்னயம் said...

வாஞ்சி சாகும் போது அவனது சட்டை பையில் இருந்த கடிதம் அவனின் கொலை நோக்கத்தை நிரூபிக்க சான்றாக கொள்ளலாம்.

"ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில், கேவலம் கோமாமிசம் தின்னக் கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ், பஞ்சமனை (George V) முடி சூட்ட உத்தேசம் செய்து கொண்டு, பெருமுயற்சி நடந்து வருகிறது. அவன் (George) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை.
இப்படிக்கு,
R. வாஞ்சி அய்யர்

"அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள்."

இதுதான் வாஞ்சியின் முக்கிய கவலையாக இருக்க வேண்டும்

நீச்சல்காரன் said...

வாஞ்சிநாதன் அவர்கள் பல சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் பங்களித்ததற்கான ஆதாரங்களும், அவர் பையில் இருந்த கடிதமும், ஆஷ் துரையின் சுதேசி எதிர்ப்புக் கொள்கையும், மேல் கூறப்பட்ட தகவலுக்கு முற்றிலும் முரணாகத் தெரிகிறது. ஒரு மாவட்ட கலெக்டர் குடிமகன் வீட்டிற்கு வந்து உதவதும் நம்ப கடினமாக உள்ளது. போதிய ஆதரங்களுடன் பதிவிட்டிருந்தால் படிப்பவர்களுக்கு உதவும்

Anonymous said...

வரலாற்று உண்மைகள்..
அருமை வால் பையரே!
எல்லோரும் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய வரலாறு.

வால்பையன் said...

@ நீச்சல்காரன்

இதை எழுதியது வாஞ்சிநாதனின் சமகாலத்தில் வாழ்ந்த ஒரு சுதத்திர போராட்ட வீரர் தான்.

வாஞ்சிநாதன் சட்டையில் இருந்த கடிதம் முழுக்க முழுக்க ஆஷ்துரையின் மீது இருந்த தனிமனித வன்மத்தையே காட்டுகிறது.

இரண்டின் மையமும் உயர்சாதிய திமிர் தான்..

கேரளாக்காரன் said...

//அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள்//

Confessed :) Thanks for sharing

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//ஒரு மாவட்ட கலெக்டர் குடிமகன் வீட்டிற்கு வந்து உதவதும் நம்ப கடினமாக உள்ளது.//
நீச்சல்காரன்; நீங்கள் இன்றைய இந்திய மாவட்டக் கலக்டர்களை மனதில் கொண்டு கணக்கிடுகிறீர்கள்.
இச் சம்பவம் பற்றி படித்துள்ளேன். அவை உண்மையாக இருப்பதற்கு நம் வரலாறுகளே சாட்சி!
திருஞானசம்பந்தர் அவர் திருமணத்தன்று மொத்தக் குடும்பத்துடனும், இறைவனுடன் சோதியில் கலந்தார்.
இது நாம் படிப்பது,
ஆனால் உண்மை தமிழில் பெருமைகளை ஒரு பார்பனன் கூறுகிறானே என , ஏனைய பார்பனர்களால் திருமணப் பந்தல் தீயிட்டுக் கொழுத்தப்பட்டது.
இன்று வரை பார்பனர்கள் மத்தியில் உள்ள தமிழ் வெறுப்பைப் பார்க்கும் போது, நிச்சயம் இவர்கள் தீயிட்டிருப்பார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
அத்துடன் இலங்கையில் நடந்த சம்பவம் ஒன்று. வெள்ளையர்களில் பலர் பெருமை பாரது இறங்கி வேலை செய்வது, உதவும் மனம் படைத்தவர்கள் என்பதற்கு உதாரணம்.
சுதந்திரத்துக்கு முன் இலங்கை பூராகவும் அரச அதிபர்கள் ஆங்கிலேயர் இருந்த காலம்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணிக்க இடைக்காடர் என்பவர், உதவி அரசாங்க அதிபராக மலையகத்தில் கடைமையாற்றும் போது அரச அதிபராக இருந்தது, ஆங்கிலேயர்.
சுற்றுக்குச் செல்லும் போது,பூந்தோட்டத்துள் ஒரு நீர்க்குழாய் சரியாக மூடாததால், நீர் ஒழுகிக் கொண்டு இருந்துள்ளது.
அவர் அக்குழாயை இறுக்கி மூடி விட்டுச் சென்றுள்ளார். இதைப் பார்த்த மாணிக்க இடைக்காடர் , நீங்கள் ஏன் இதைச் செய்கிறீர்கள், வேலைகாரனிடம் சொன்னால் செய்வானே என்றபோது , அவர் கூறியுள்ளார் "நான் என் அறைக்குச் சென்று, வேலைகாரனைக் கூப்பிட்டு, அவர் போய் அதைச் செய்யும் வரை பல லீற்றர் நீர் வீணாகிவுடுமே, ஒரு குழாயை என்னால் மூடமுடியாதா? அதை நான் மூடுவதால் என்னில் என்ன குறைந்து விடுமென்றாராம்".
மாணிக்க இடைக்காடர் - தொடர்ந்து கூறுகிறார். இப்படியான தேவையற்ற கிரீடங்களை சுமந்தே நாம் வீணாகிறோம்.
அதுபோல் நிறைய உண்டு.
காமராஜர் எனும் முதலமைச்சர்; கக்கன் எனும் அமைச்சர்- வாழ்ந்தார்கள் என்பதை நம்பவா முடிகிறது?

Chandru said...

ஒரு உத்தமனை தேசத்திற்காக உயிர் கொடுத்தவனை, உண்மையான ”வீரமரணம்” அடைந்தவனை அவன் பார்ப்பனன் என்ற காரணத்திற்காக இவ்வாறு திரித்து எழுதுவது எளிது.. வாஞ்சி நாதன் எழுதிய கடிதத்தில் ”ஸனாதன” என்ற (உரிச்சொல்லை) ஒரே ஒரு வார்த்தையை எடுத்துவிட்டால் .அக்காலத்திலுள்ள ஒரு சிறந்த தேசப் பற்றுள்ளவனது கடிதமாகத் தான் இருக்கிறது. அந்த வார்த்தையைக் கூட கால வர்த்தமானம் (100 வருடங்களுக்கு முன்இருந்த எழுத்து நடையை) கொண்டு பார்க்கும் போது அதில் ஏதும் ஜாதித் துவேஷம் இல்லை. இவ்வாறு இட்டுக் கட்டுவதானல் யாருடைய நோக்கத்தையும் எளிதாக கொச்சைப் படுத்தலாம், பாராட்டலாம்.
இதே ரீதியில் போனால் மும்பையில் நடக்கும் அக்கிரமத்தை கண்டு பொறுக்க மாட்டாமல் பொங்கி எழுந்த,தனது குடும்பத்தின் மீது பாசம் கொண்ட் அன்புருவம், தனது குடும்பத்தின் வறுமையை போக்க போராடிய செம்மல், அப்சல் குருவுக்கு சிலை கேட்டு போராட்டம் கூட நடத்தலாம்.
தயவு செய்து தேசப் பற்று சம்பந்தப் பட்ட விஷயத்தில் நஞ்சை விதைக்காதீர்கள். அப்புறம் நாட்டுக்காக இல்லை, மனித குல நன்மைக்காகக் கூட தியாகம் செய்ய ஆள் கிடைக்காது. தேசத்திற்காக உயிர் கொடுத்த தமிழன் என்ற லிஸ்ட்டில் அவன் பெயரை எடுத்துவிடாதீர்கள். இந்த 2013ல் கூட சுதந்திரம் வந்து விட்டதா இல்லையா என்று தெரியாமல் பயந்து ஓட்டு போடும் சொரணையற்ற மக்கள் உள்ள நாட்டில் 100 வருடங்களுக்கு முன் சுதந்திரத்திற்காக போராடியவனை பழிக்காதீர்கள்.
அப்படியே இருந்தாலும் நோக்கம் எதுவாக இருந்தாலும் விளைவு நன்மையில் முடிந்தது தானே..100வருடங்கள் கழித்து செய்யப் படும் போஸ்ட் மார்ட்டத்தினால் உண்மை கிடைக்காது.

வருண் said...

எனக்கு வாஞ்சிநாதான் பற்றித் தெரியாது. அவன் செயலுக்கு உண்மையான காரணம் அவன் அருகில் இருந்த பார்ப்ப்னர்களுக்கு நிச்சய்ம தெரியும். ஆனால் அவர்களுக்கு இன்றுகூட திறந்த மனது இல்லையே. அப்படியிருக்கும்போது அந்தக் காலகட்டத்தில் எப்படி இருந்து இருப்பார்கள்?னு உங்க யூகத்திற்கே விடுகிறேன்.

வெள்ளைக்காரன் சாதி மற்றும் சதியை நிச்சயம் ஒழித்தான். அதெல்லாம் நிச்ச்யம் அவனுக்கு அர்த்தமுள்ளதாகத் தோணவில்லை.

பார்ப்பான்ப் இன்றும் சாதியை கட்டி அழறான். ஆனால் சாதி வந்ததுக்குக் காரணம் வெள்ளைக்காரன் என்கிறான்!!!இவன்ந்தான் பார்ப்பான். தான் செய்த தவறை உணர்ந்து திருந்துவதற்கு பதிலா இன்னொருவனை கை காட்டுபவன் தான் பார்ப்பான். அதைத்தான் காலங்காலமா செய்றான்.

தீண்டாமை, தீட்டுனுதான் பார்ப்பனர்கள் அறிவுகெட்ட முண்டங்களாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

அதை எடுத்துச் சொன்ன பெரியாரை இன்றும் எந்தப் பார்ப்பானும் மனதாற பாராட்டுவதில்லை.

தன்னை ஒரு தாழ்த்தப்பட்டவனாக வைத்து அவன் நிலையில் இருந்துயோசிக்கத் தெரியாத அடிமுட்டாள்கள்தான் பார்ப்பனர்கள்னு தெரிந்துகொள்ள வாஞ்சிநாதன் பொணத்தை கொண்டுவர வேண்டிய அவசியமே இல்லை. இங்கே நம்மைச் சுற்றி உள்ள பார்ப்பனர்களை கவனித்து அவன் சிந்தனைகளை எடைபோட்டாலே தெரியும்.

பார்ப்பனர்களுக்கு மூளை வளர்ச்சி கம்மி. அவனுகளால் இந்தியா முன்னேறாது. அவனுகள் சுயநல சிந்தனைகளால் ஒரு மயிரையும் புடுங்க முடியாது. ஆனால்.. அதுக்காக அவனுகளை என்ன செய்வது? அடித்துக்கொல்லவா முடியும்? இல்ல்லைனா தினந்தோறும் திட்டி ஒரு பதிவு போட முடியுமா?

கவனமாக இருக்க வேண்டும் அவர்களிடம், மதத்துக்காக யாரை வேணா காட்டிக் கொடுப்பானுக, கூட்டிக்கூட கொடுப்பானுக என்பதை மனதில் கொள்ளவேண்டாம்.

இந்துக்களில் பார்ப்பானுக்கு மட்டும் ஏன் இவ்வ்வளவு மதவெறி இருக்கு? ஒரு நிமிடம் யோசிங்க! அவனுக முட்டாப் பயளுகனு தெளிவாக்த் தெரியும்.

naren said...

ஆங்கிலேயர்கள் செய்த செய்கைகளுக்காக, ஆஷ் துரையை சுட்டு வீழ்த்தினான் வாஞ்சிநாதன். அது என்ன செய்கை என்பது சர்ச்சை.
அதேப்போல, அந்த காலகட்டத்தில், சனாதன தர்மத்தின் பெயரால், தாழ்த்தப்பட்ட மக்களை, மிருகங்களை விட கேவலமாக அடக்கி மற்ற இந்திய சாதி மக்களால் நடத்தப்பட்டது சரித்திர உண்மை. இந்த கொடுமையுடன் ஆங்கிலேயர்கள் கொடுமையை ஒப்பிட்டால், ஆங்கிலேயர்கள் செய்த கொடுமை ஒன்றுமே இல்லை. ஒன்றுமே இல்லாததுக்கு ஆஷ் துரையை கொலையென்றால், தாழ்த்தப்பட்ட மக்கள், அவர்களை மிருகத்தனமாக அடக்கிய சாதிளின் மக்களை எவ்வளவு கொன்றிருக்க வேண்டும்.
எவ்வளவு அடிமைத்தனமாக மிருகத்தனமாக தாழ்த்தப்பட்டிருந்தும் அவ்வாறு கொலைகள் நடைப்பெறவிலையென்பது, அந்நிலையில் தாழ்த்தப்பட்ட மக்களின் மனிதத்தன்மையை காட்டுகின்றது. அவர்கள் போட்ட பிச்சையினால் கருணையினால் மற்றவர்கள் உயிர் வாழ்ந்தனர். உண்மையில் அவர்களின் உழைப்பை சுரண்டி வாழ்ந்தனர் என்பது வேறு விஷயம்.

raghs99 said...

very disgusting post on a freedom fighter

you will only appreciate nayakkar who condemned the free dom fighters for opposing british

நாட்டாமை said...

ஹாஹாஹாஹாஹ் ஹய்யோ ஹய்யோ ஆஷ் கேட்டானாம் ”மனிதர்களில் தாழ்ந்தவர்களா” என்று. ஏனென்றால் ஆஷ், மார்ஸ் கிரகத்தில் இருந்து வந்தவன் பாருங்கள். இந்த நூற்றாண்டின் இணையற்ற காமெடி இதுவாகத்தான் இருக்கமுடியும். பார்ப்பானாவது பக்கத்தில் வந்தபின்பு விசாரித்து ஜாதியை அறிந்து கொள்வான். அவனோ தூரத்தில் இருந்து நிறத்தைப் பார்த்தே தனது நீண்டகால்களில் அணிந்திருக்கும் பூட்ஸால் எட்டி உதைப்பவன். இவனாவது மனித இனத்தில் சேர்த்துக் கொண்டான் அவனோ நாய்களும் இந்தியர்களும் ஒன்று என மிருகமாகக் கருதியவன் அவன் ஆச்சரியத்தோடு கேட்டானாம் “மனிதர்களில் தாழ்ந்தவர்களா” என்று. இப்படித்தான் வரலாற்றில் கெட்டவனுக நல்லவனாக மாற்றப் படுகிறான்.
மனிதனை விலை பொருளாக்கி, அந்த விற்கும் பொருளான கறுத்த தோல்காரனை வேட்டையாடி அலைந்து, இந்தியா வந்தவனை தலையில் வைத்து கொண்டாடும் அப்பாவிகளை என்னவென்று சொல்வது. நல்லவேளை அவனை வெளியில் நிறுத்தி, விசாரித்து, வியாபாரம் செய்த நமது முன்னோர்களால் நாம் இந்தளவிற்கு தப்பித்தோம் இல்லாவிட்டால் நாமும் வேடையாடப்பட்டு விற்கப்பட்டு அமெரிக்காவிலோ அல்லது ஐரோப்பாவிலோ வரலாற்றை தொலைத்து விட்டு அடிமைகளாகத் திரிவோம். Just missed.
இட்டுக்கட்டும் கதை என்றாலும் லாஜிக் வேண்டாமா?. அப்படியே அவன் செய்தான் என்றால் ஏன் செய்தான் என்று பகுத்தறிய வேண்டாமா. அக்காலத்தில் சுதந்திரத்திற்காக போராடியவர்களில் முக்கியமானவனும் மோசமானவனும் பார்ப்பனன்தான் ஆகவே அவனை ஒழிக்க,முதலில் ”ஆரியன்” என்று கற்பித்து அவனை இங்குள்ளவனுக்கு எதிரியாக்கினான். இந்திய மக்களிடம் பார்ப்பனனை எதிரியாக உருவாக்க இந்தமாதிரி பெரிய, சிறிய நாடகங்களை, பிரித்தாளும் சூழ்ச்சியினால் அரங்கேற்றியுள்ளான். கோடிகணக்கான இந்தியர்களை தனது சுரண்டலுக்காகவும் அதனால் ஏற்பட்ட பஞ்சத்தாலும் கொன்ற வெள்ளைக்காரனை உத்தமன் என்று நம்பும் இந்த வகைப் பகுத்தறிவுவாதிகளை காலம் மன்னிக்காது.

Anonymous said...

அய்யா நாட்டாமை!
வரலாற்றில் 3 மிகப்பெரிய கொடுமைகளாக ஹிட்லர் யூதர்களுக்கு செய்த கொடுமையும், வெள்ளையர்கள் கருப்பர்களுக்கு செய்த கொடுமையும், பார்ப்பனர்கள் சூத்திரர்களுக்கு செய்த கொடுமையும் பார்க்கப்படுகிறது. இம்மூவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல.

//பார்ப்பானாவது பக்கத்தில் வந்தபின்பு விசாரித்து ஜாதியை அறிந்து கொள்வான். அவனோ தூரத்தில் இருந்து நிறத்தைப் பார்த்தே தனது நீண்டகால்களில் அணிந்திருக்கும் பூட்ஸால் எட்டி உதைப்பவன். இவனாவது மனித இனத்தில் சேர்த்துக் கொண்டான் அவனோ நாய்களும் இந்தியர்களும் ஒன்று என மிருகமாகக் கருதியவன்//
வெள்ளைக்காரர்களுக்கு ஜால்ரா அடித்து, அவர்கள் கூடவே இருந்து, சூத்திரர்களை கொடுமைப்ப்டுத்தியது இந்த பார்ப்பனர்கள் தான். பூட்ஸால் உதைக்கவாவது வெள்ளைக்காரன் பக்கத்தில் போவான். ஆனால் பார்ப்பனர்கள் தங்கள் தெரு பக்கமே சூத்திரர்களை விடுவதில்லை. நாய்கள் கூட தான் விரும்பின இடத்தில் தண்ணீர் குடித்து கொள்ள முடியும். ஆனால், இந்த பார்பனர்கள் ஆற்றில் ஓடுகிற தண்ணீரை கூட சூத்திரர்களை குடிக்க விடவில்லை. Dr. Babasaheb Ambedkar என்று ஒரு மராடிய படம் youtube இல் ஆங்கிலத்தில் உள்ளது. அதைப்பாருங்கள். இங்கு படிக்க முடியாத படிப்பு, வெள்ளையனிடம் போய் படிக்க முடிந்தது அம்பேத்காருக்கு.

//அவனோ நாய்களும் இந்தியர்களும் ஒன்று என மிருகமாகக் கருதியவன்//
//நல்லவேளை அவனை வெளியில் நிறுத்தி, விசாரித்து, வியாபாரம் செய்த நமது முன்னோர்களால் நாம் இந்தளவிற்கு தப்பித்தோம்//
நாய்கள் கூடவும் மிருகங்கள் கூடவும் கூட வெள்ளையன் வியாபாரம் செய்வான் என்று எனக்கு இன்றைக்குத்தான் தெரியும்.
//இல்லாவிட்டால் நாமும் வேடையாடப்பட்டு விற்கப்பட்டு அமெரிக்காவிலோ அல்லது ஐரோப்பாவிலோ வரலாற்றை தொலைத்து விட்டு அடிமைகளாகத் திரிவோம். Just missed.//
அப்படி அடிமைகளாக போன கருப்பர்கள், இங்குள்ள ஏழைகளை விட நன்றாக இருக்கிறார்கள் இப்போது.

வெள்ளையர்கள் சதி, உடன்கட்டை ஏறுதல், ஜாதி போன்றவற்றை ஒழித்து, சிறிது நல்ல காரியாமானாலும் செய்தார்கள். ஆனால் பார்ப்பனர்கள் அதுகூட செய்யவில்லை.
ஒரு காலத்தில் மிக மோசமானவர்களாக இருந்த வெள்ளையர்கள் கூட இப்போது திருந்தி விட்டார்கள். ஆனால் பார்ப்பனர்கள்???????????
நாம் ஒன்றுமே செய்யாதிருந்தால் கூட, வெள்ளைக்காரன் தானாகவே போயிருப்பான். வெள்ளையனுக்கு Tax கொடுத்ததும், இப்போது நீங்கள் Government-க்கு Tax கொடுப்பதற்க்கும் என்ன வித்தியாசம் என்று நீங்களே சொல்லுங்கள். ஒரு வித்தியாசமும் கிடையாது. நீங்கள் ஒரு வருடம் income tax கட்டாமல் இருந்து பாருங்கள் அப்போது தெரியும், இதை விட வெள்ளையனே பரவாயில்லை என்று.

¸ñ½ý ÌõÀ§¸¡½õ said...

நல்ல கற்பனை வளம்; சாகித்ய அகாடமி விருதுக்குக்கூட பரிந்துரை செய்யலாம்! கிடைத்தாலும் கிடைக்கும்; பிரமாதம்!

-கண்ணன்.

ram ram said...

ஆஷ் துரை தலித்துக்கு உதவி இருக்கலாம் . ஆனால் அந்த காரணத்தால் மட்டுமே துப்பாக்கி சூடு நடத்த அவசியமில்லை .

பார்பணர்களை விட கீழ்த்தரமானவர்கள் ஆதிக்க சாதி இந்துகளே .

தலித் & எல்லா இனத்திலேயேயும் பல பிரச்சினை உண்டு .

பள்ளன் பறையனை மதிக்க மாட்டான் .
பறையன் சங்கிலியனை மதிக்க மாட்டான் .
வன்னியன் நாடானுக்கு பெண் தர மாட்டான் .
நாடான் கோணானுக்கு பெண் தர மாட்டான் .
பக்கிரிசா க்கு ராவுத்தன் " ".
RC பெந்தகோசுக்கு " ".

பார்பணை விட கேவலமான கீழ்த்தரமானவர்கள் ஆதிக்க சாதியினர் தான்

ram ram said...

ஹ்ஹஹ்ஹஹ
ஹ்ஹஹா

அப்ரூவல் போட்டு தான் பதிவு போடனுமா ??

இதுவும் ஒருவகை ஆதிக்க சர்வாதிகாரம் தான்

!

Blog Widget by LinkWithin