புரியாத புரிதலை புரிந்து கொள்ள சில முயற்சிகள்!!


இன்று நாடெங்கும் காட்டுதீ போல் பேசப்படும் பிரச்சனை விலைவாசி உயர்வு!
இதற்கு காரணம் ஆன்லைன் வர்த்தகம் என்று குற்றம் சாட்டபடுகிறது.
இதை புரிந்து கொண்டு தான் சொல்கிறார்களா அல்லது யாரோ விசமி கிளப்பி விட்ட வதந்தியா என்று தெரியவில்லை,

ஆன்லைன் வர்த்தகம் மட்டுமே ஒரு காரணமல்ல என்பதற்காகவே இந்த பதிவு.

ஒரு நாட்டில் புழக்கத்தில் இருக்கும் பணத்திர்கேர்ப்ப தங்கம் கையிருப்பு இருக்க வேண்டும் என்பது நியதி, அதை மாற்றியது முதல் குற்றம், மற்ற மாநிலங்களை சாட்சிக்கு கூப்பிடுவதை விட நம் தமிழகத்தை பற்றியே பேசுவோம்.

நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வருடம் மட்டுமல்லா எப்போதுமே துண்டு விழாத பட்ஜெட் நம் இந்தியாவில் கிடையாது.
முதல் முட்டாள் தனம் இலவச தொலைகாட்சி பெட்டி, அதை அவர்கள் காசு கொடுத்து தான் வாங்க வேண்டும், எங்கிருந்து வரும் காசு,

இரண்டு ரூபாய்க்கு அரிசி உண்மையில் ஏழைகளை சென்றடைகிறதா!?
இட்லி மாவு விற்கும் கடைகளுக்கும், ஓட்டல்களுக்கும் தான் சப்ளை ஆகிறது,
ரேசன் கடைகளில் நேர்மையாக தான் நடந்து கொள்கிறார்கள், எதாவது வாங்க சென்றால்
அவர்கள் கேட்பது
அரிசி வாங்குவீர்களா ?
இல்லை
இருபது கிலோ போட்டு கொள்ளட்டுமா
நாம் தான் வாங்க போவதில்லையே
சரி போட்டு கொள்ளுங்கள் என்கிறோம், அதே போல் ஐந்து பேரிடம் கேட்டால் ஒரு மூட்டை ஆகி விட்டது, அதை தான் விற்கிறார்கள்.

விவசாயகடன் ரத்து, சரி வங்கிகளுக்கு யார் பணம் குடுப்பார்கள்,
இப்படி பேப்பரை பண நோட்டாக அச்சடித்து அதை வேற்று காகிதமாக்கியது யார்?
இந்த கூறு கெட்ட அரசாங்கம் தான்! எனக்கு எந்த அரசியல்வாதிகள் மேலும் நம்பிக்கையில்லை, தன் பாக்கெட்டை நிரப்பவே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது.

ரேசன் கார்டு வைத்திருப்பவர் அனைவருக்கும் இலவச தொலைகாட்சி பெட்டி என்று ஸ்டாலின் அறிக்கை விடுகிறார், நம் கட்டும் வரிப்பணம் இப்படி நாசமாய் போனால் ஏன் வராது இந்த விலைவாசி உயர்வு.

இவர்கள் இஷ்டத்திற்கு நோட்டு அடிப்பதற்கும், வெளியே ஒருவன் கள்ளநோட்டு அடிப்பதற்கும் என்ன வித்தியாசம்,

ஆன்லைன் வர்த்தகத்தை மட்டும் குறை சொல்வது தவறு, அது எல்லா நாட்டிலும் இருக்கிறது, ஆனால் நம் நாட்டில் இருப்பது போல் இந்த அளவு அசுர விலைவாசி உயர்வு எங்கேயும் இல்லை.


அதே நிலம், அதே விவசாயி, அதே பயிர்கள் ஆனால் பத்து வருடத்திற்கு முன் இருந்ததை விட பத்து மடங்கு விலை உயர்வு, மக்களுக்கு வாங்கும் சக்தி அதிகரித்து விட்டதால் இந்த உயர்வு என்று அறிக்கை விடுகிறார்கள், விட்டால் பட்டினி கிடக்க சொல்லுவார்கள்,

பிரச்சினையின் வேரை விட்டுவிட்டு கிளையை பிடித்து தொங்குவது தான் இந்த அரசியல்வாதிகளின் வேலை. விலைவாசி உயர்வுக்கு அவர்கள் சொல்லும் காரணம் துளியும் உண்மையில்லை, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இலவச தொலைகாட்சி தருகிறார்களாம், இலவசமாய் இந்த பெட்டி கிடைக்கும் அரிசி கிலோ நூறு ரூபாய்க்கு விற்கும்

16 வாங்கிகட்டி கொண்டது:

dondu(#11168674346665545885) said...

குஜராத்திலும் அதே இலவச டி.வி. ஆசை காட்டியது காங்கிரஸ். மோடியோ தான் ஆட்சிக்கு வந்தால் வரிபாக்கி வைத்திருப்பவர்களுக்கு நோட்டீஸ் விடுவேன் என்றார். ஆனாலும் மக்கள் அவரைத்தான் தேர்ந்தெடுத்தனர்.

இலவசம் என்று வாழ்க்கையில் எதுவும் கிடையாது என்பதை புரிந்து கொண்டாலே பாதி பிரச்சினை தீரும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

வாங்க டோண்டு சார்

வாகனம் வாங்கும் பொழுது சாலைவரி வாங்குகிறார்கள்
ஆனால் சாலை சரியாக இல்லை,
தமிழகத்தில் வரி ஏய்ப்பு நிறைய நடக்கிறது, அதற்காக தனியாக ஒரு பதிவு போடவேண்டும். நம்மிடம் வாங்கும் வரிபணத்தை வைத்து ஒழுங்காக ஆட்சி நடத்தலாம்.
ஆனால் இந்த மாதிரி ஓட்டுக்காக இலவச மோகத்தை ஏற்படுத்தினால் நாடு உருப்படாது.
நீங்கள் இது பற்றி ஏதும் பதிவு போடலையா

வால்பையன்

வால்பையன் said...

நான் ஒரு சாட்சிக்காகத்தான் தமிழக அரசை இங்கே இழுத்துள்ளேன், ஒரு சிலர் நான் தி.மு.காவிர்று எதிராக பதிவு போட்டுள்ளேன் என்று மின்னஞ்சல் அனுப்புகிறார்கள், என்னுடைய பதிவில் நான் பலமுறை சொல்லியிருக்கிறேன், நான் எந்த கட்சிக்கும் ஆதரவாளன் கிடையாது, என்னைபொறுத்தவரை அரசியல்வாதிகள் நாகரிக திருடர்கள்

வால்பையன்

g said...

உண்மைதாங்க. எல்லா அரசியல்வாதிகளும் (ஒருசிலரை தவிர), ஒருவிதத்தில நாகரிக திருடர்கள்தான்! இந்த இலவசங்களையெல்லாம் நிறுத்திவிட்டு, விலைவாசியை குறைக்க என்ன வழினு யோசிக்கவேண்டும். அப்படி செய்தால், அரசியல்வாதிகள் கொள்ளையடிப்பது எப்படி?!

வால்பையன் said...

வாங்க ஜிம்ஸா
ஊழல் எல்லா நாட்டிலும் தான் இருக்கிறது
இந்தியன் படத்தில் சொல்வது போல் அங்கெல்லாம் கடமையை மீறுவதற்கு தான் லஞ்சம், இங்கே கடமையை செய்வதற்கே லஞ்சம்,
வாங்கும் சக்தி அதிகரித்து விட்டது என்கிறார்கள், உண்மையில் இந்த ஊழல் பெருச்சாளிகளுக்கு தான் வாங்கும் சக்தி அதிகரித்து விட்டது, நம்மை போல் சாமானியர்களுக்கு வாழும் தகுதியே போய் கொண்டிருக்கிறது

வால்பையன்

சாலிசம்பர் said...

வாலு,உலகளாவிய பிரச்சினைக்கு இலவச டிவி தான் காரணம் என்று சொல்வது சரியில்லை.ஏழை நாடுகளை மட்டுமல்ல இங்கிலாந்து போன்ற நாடுகளையும் இந்த விலைவாசி உயர்வு பாதித்துள்ளது.இன்று சன் டிவி செய்தியில் ருவாண்டா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர்,நாங்கள் பட்டினியால் தகொலைதான் செய்து கொள்ளப்போகிறோம் என்று கதறுகிறார்.இந்த விலைவாசி உயர்வினால் ஏழை நாடுகளில் குற்றங்கள் பெருகலாம் என்று அமெரிக்க அதிபர் கூறுகிறார்.இப்படிக்கூறும் அமெரிக்காவே இந்த நிகழ்வுகளுக்குப் பின்னால் இருக்கக்கூடும்.

சாலிசம்பர் said...

சொந்த நிலமற்ற விவசாயக் கூலிகளின் வாழ்வில் மகிழ்ச்சியைக் கொணர்ந்துள்ளது இரண்டு ரூபாய் அரிசி.ஆண்டிற்கொருமுறை அரிசிச் சோற்றைப் பார்க்கும் ஆதிவாசிகளுக்கும் இன்பத்தைக் கொடுத்துள்ளது இரண்டு ரூபாய் அரிசி.

ஜாம்பஜார் ஜக்கு said...

வெலவாசி உயர்வை ஒரே நாள்ல கட்டுப்படுத்த முடியாதுன்னு நம்ப நிதி அமைச்சரு 4 வருஸமா சொல்லிகினுகாரு. "வாங்கும் சக்தி" இல்லாத ஆளுங்களுக்கெல்லாம் பேஜாருதான். வாங்கும் சக்திய எப்டி ஜாஸ்தி பண்ணிகிறதுன்னு ஒரு பதிவு போடு தலீவா!

அது சரி. அது இன்னா தலீப்பு வச்சுகிற. படிக்கறது சொல்ல நாக்கே சுளுக்கி கிச்சு :))))) பிரியாத பிரிதலை... சரி வாணாம். உடுங்க!


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

வால்பையன் said...

நண்பர் ஜாலி சாம்பார் அவர்களே!
முதலில் முன்முடிவோடு வராதிர்கள்.
இலவச டிவியும் ஒரு காரணம் என்பது தான் என் வாதம்,
ருவாண்டா மட்டுமல்லா,ஆப்பிரிக்காவில் சில நாடுகளில் என்ன கொடுமை அனுபவிக்கிறது என்று அனைவருக்கும் தெரியும், லண்டனின் விலைவாசி உயர்வுக்கு காரணம் அவர்கள் இறக்குமதியை மட்டுமே நம்பியிருப்பதே காரணம்.
தமிழக அரசின் இலவசித்தில் ஒரு சதவிகிதம் கூட நீங்கள் வாங்க மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும், ஆனால் இது நம் பின் தலைமுறையின் வாழ்வை பாதிக்கும், கொஞ்சம் முற்போக்கு சிந்தனையோடு, தனி மனித துதியை விட்டு பார்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

வால்பையன்

வால்பையன் said...

வாங்க ஜக்கு!
என்னால் புரிந்தவரை நம் அரசு மேல்மட்ட மக்களுக்கு தான் சலுகை கொடுத்து வருகிறது, சிறப்பு பொருளாதார மண்டலம் உட்பட, தின கூலி மக்களும் மனிதர்கள் தான், உண்மையில் விலைவாசி உயர்வால் பாதிக்கபடுவது அவர்கள் தான்.
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காக்க வகுத்தலும் வல்லத்தரசு
இது எனக்கு பிடித்த குரல். அர்த்தம் புரியுமென்று நம்புகிறேன்

வால்பையன்

தியாகு said...

உணவு மற்றும் அத்யாவசிய பண்டங்கள் ஆன்லைன் வர்த்தகம் செய்ய அனுமதிக்க வேண்டாம் என்பது முற்றிலும் சரியான வாதம் ஆகும் . ஆன்லைன் வர்த்தகத்தில் உணவு மற்றும் அத்யாவசிய பண்டங்கள் குறைந்த விலைக்கு வாங்கி சேமிக்கும் போது . சந்தையில் செயற்கையான முறையில் தட்டுபாடு ஏற்பட்டுகிறது . இதன் காரணமாக உணவு மற்றும் அத்யாவசிய பண்டங்கள் விலை ஏறுகின்றது

தியாகு said...

உணவு மற்றும் அத்யாவசிய பண்டங்கள் ஆன்லைன் வர்த்தகம் செய்ய அனுமதிக்க வேண்டாம் என்பது முற்றிலும் சரியான வாதம் ஆகும் . ஆன்லைன் வர்த்தகத்தில் உணவு மற்றும் அத்யாவசிய பண்டங்கள் குறைந்த விலைக்கு வாங்கி சேமிக்கும் போது . சந்தையில் செயற்கையான முறையில் தட்டுபாடு ஏற்பட்டுகிறது . இதன் காரணமாக உணவு மற்றும் அத்யாவசிய பண்டங்கள் விலை ஏறுகின்றது

வால்பையன் said...

//இரண்டு ரூபாய் அரிசி.ஆண்டிற்கொருமுறை அரிசிச் சோற்றைப் பார்க்கும் ஆதிவாசிகளுக்கும் இன்பத்தைக் கொடுத்துள்ளது இரண்டு ரூபாய் அரிசி.//

புள்ளிவிபர கணக்கில் விஜயகாந்தை முந்தி விட்டீர்கள்,
யார் ஆதிவாசி, நீங்களும் நானும் நகர வாசியா, எங்கிருந்து வந்தோம்.
தமிழகத்தில் ஆண்டிர்கொரு முறை அரிசி சோறு சாப்பிடும் நிலைக்கு மக்களை தள்ளியது யார்? இயற்கை பஞ்சம் என்றால் பரவாயில்லை, ஆனால் எல்லாம் இருக்கிறது, வாங்கும் சக்தி பணக்காரனிடம் மட்டும் இருக்கிறது,
சரி உங்கள் பேச்சுக்கே வருவோம் ஆதிவாசிகளுக்கு மட்டும் இரண்டு ரூபாய் அரிசி கொடுக்கலாமே, எல்லோருக்கும் ஏன்? சரி எல்லோருக்கும் தருவதென்றால்,
துவரம் பருப்பு பத்து ரூபாய்க்கும், அதே போல் மற்ற உணவு பொருள்களுக்கும் கொடுங்கள், அதுவல்லாது அரிசி மட்டும் கொடுத்து, அரிசி விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் தமிழக விவசாயிகளின் கதி என்ன?,
இரண்டு ரூபாய் அரிசி முழுமையாக ஏழைகளுக்கு தான் போகிறது என்று உங்களால் நிருபிக்க முடியுமா?, கேரளா பூர நம்ம ரெண்டு ரூபாய் அரிசி தான் சாப்பிடுதாமே

வால்பையன்

வால்பையன் said...

//ஆன்லைன் வர்த்தகத்தில் உணவு மற்றும் அத்யாவசிய பண்டங்கள் குறைந்த விலைக்கு வாங்கி சேமிக்கும் போது //

ஆன்லைன் வர்த்தகத்தில் அத்யாவிசைய உணவு பொருள்களை தூக்கி ரொம்ப நாளாகிவிட்டது, இதில் மார்கெட் வாட்ச் அழுத்தி பாருங்கள், இதிலிருக்கும் இரண்டு உணவு பொருள் உருளை கிழங்கு மற்றும் ரீபைண்ட் ஆயில், இதனால் தான் எல்லா உணவு பொருள் விலையும் ஏறியதா?
தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏறியுள்ளது, அதையா நீ சாப்பிட போகிறாய்

வால்பையன்

குமரன் (Kumaran) said...

வால்பையரே. பழைய பதிவுக்குப் பின்னூட்டமான்னு சலிச்சுக்க மாட்டீங்களே?! :-)

இந்த அரசியல்வாதிகள் எல்லா ஊர்களிலும் இப்படித் தான் ஐயா. இங்கே பாருங்கள் இந்த புஷ்ஷை இந்த ஊரில் உணவு விலை ஏறியதற்குக் காரணம் நம்ம ஊருல மக்கள் நல்லா சாப்புடத் தொடங்குனது தான்னு சொல்றார். அதை என்ன சொல்றது? அடிப்படைக் காரணத்தை விட்டுட்டு கையை வேற எங்கேயோ காட்டுகிறார்கள். எல்லோருமே.

வால்பையன் said...

//குமரன் (Kumaran) said...
வால்பையரே. பழைய பதிவுக்குப் பின்னூட்டமான்னு சலிச்சுக்க மாட்டீங்களே?! :-)
இந்த அரசியல்வாதிகள் எல்லா ஊர்களிலும் இப்படித் தான் ஐயா. இங்கே பாருங்கள் இந்த புஷ்ஷை இந்த ஊரில் உணவு விலை ஏறியதற்குக் காரணம் நம்ம ஊருல மக்கள் நல்லா சாப்புடத் தொடங்குனது தான்னு சொல்றார். அதை என்ன சொல்றது? அடிப்படைக் காரணத்தை விட்டுட்டு கையை வேற எங்கேயோ காட்டுகிறார்கள். எல்லோருமே.//

புஷ் ஒரு உளறல் பார்டி என்று உலகுக்கே தெரிந்து விட்டது இதன் மூலம்,

வால்பையன்

!

Blog Widget by LinkWithin