தமிழச்சியுடன் நடந்த உரையாடல் அல்லது ஊற வைத்த கலாச்சாரத்தை உலர வைத்தல்!!

எனக்கு நீண்ட நாட்களாகவே இந்த சந்தேகம் இருந்தது, தமிழச்சி என்று பதிவு எழுதுபவர் ஒரு பெண்ணா, அல்லது தமிழச்சி என்று ஒருவர் இருக்கிறாரா என்று, நண்பர் இளைய கவியின் தமிழச்சியை ஜொள்ளு விடுவது தவறா என்ற பதிவு வார பத்திரிகையில் வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, மேலும் இளைய கவி இந்த பதிவு தமிழச்சியின் சம்மதத்துடன் தான் எழுதப்பட்டது என்று கூறியிருந்தார், மேலும் சந்தேகமிருந்தால் அவரிடம் கேட்டு கொள்ளலாம் என்றும் கூறியிருந்தார், அவரிடம் நான் தமிழச்சியின் மேசன்ஜெர் ஐடி வாங்கி வீடியோ சாட் செய்தேன், அது பற்றியதே இந்த பதிவு.


படத்தில் இருப்பது போலவே தோற்றம், எழுத்தில் இருப்பது போலவே சமூகத்தின் மேல் கோபம், இது அனைத்தும் அப்படியே இருந்தது, தமிழச்சியை போலவே இறை மறுப்பு மற்றும் முற்போக்கு சிந்தனைகளில் நான் அவருடன் உடன்பட்டாலும், சில பதிவுகளில் எனக்கு அவருடன் முரண்பாடு இருந்தது, இந்த சந்தர்ப்பத்தில் அதை தெளிவு படுத்திக்கொள்ள விரும்பினேன்,

எழுத்திலும், பேச்சிலும் நான் கடினப்பட்டு இருந்தாலும் காட்சிகளில் என்னால் வன்முறைகளை காணமுடியவில்லை, என் இருதயத்தை மாவு பிசைவதை போல் உணர்வேன் அப்படங்களை பார்க்கும் போதெல்லாம், நம் கலாச்சாரத்தில் பொத்தி பொத்தி வளர்க்கப்பட்ட கோழிகுஞ்சுகளில் நானும் ஒருவன்,


செய்தி தாள்களில் ஒரு கற்பழிப்பு செய்தி வந்தால் கூட "பெயர் மாற்றபட்டுள்ளது" என்று அந்த பெண்ணின் இயல்பு வாழ்க்கை பாதிக்க பட கூடாது என்று நினைப்பது நம் சமூகம்,
தமிழச்சியின் சில பதிவுகள் என்னுள் பாதிப்புகளை ஏற்ப்படுத்தியது, நான் பார்க்கும் போது வேறு யாரும் பார்க்கிறார்களா என்ற சங்கடத்தை ஏற்படுத்தியது, எத்தனை பேருக்கு இது போல் இருந்ததோ தெரியவில்லை,

தமிழச்சியின் வெளிப்படையான, புரட்சிகரமான கருத்துக்கள் எந்த அளவுக்கு மற்றவர்கள் நினைப்பது போல் வெறும் விளம்பரத்திலிருந்து தள்ளி நிற்கிறது என்று வெகு அழகாக விளக்கினார், இந்த மாதிரி பதிவுகள் எழுதுவது ஒரு பெண் தான் என்று நம்மால் ஆரம்பத்தில் நம்ப முடியவில்லை, காரணம் பெண் என்பவள் இப்படி தான் இருப்பாள் என்று நமக்குள் இருக்கும் ஒரு கட்டமைப்பு

அந்த கட்டமைப்பை உடைக்க புறப்பட்ட ஆரம்பமே இந்த பதிவுகள்(கவனிக்க ஆரம்பம் மட்டுமே), அவர்கள் அங்கே ஒரு குழுவாக செயல் படுகிறார்கள், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு குரல் கொடுக்கிறார்கள், முக்கியமாக பெரியாரின் புரட்சிகரமான கருத்து விதைகளை அங்கேயும் நடுகிறார்கள், இதற்காக மத அமைப்புகளிடம் இருந்து கொலை மிரட்டல் கூட வந்துள்ளதாம், அதையும் மீறி தன் கொண்ட கொள்கைகளில் உறுதியாக நிற்ப்பது பாராட்டதக்கது,

அவர் மீது நம்முள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவர் விதைக்கும் புரட்சி விதைகளில் நமது விரல்களும் பங்கெடுத்து கொள்ளட்டும்

53 வாங்கிகட்டி கொண்டது:

ஜகம் said...

நானும் தமிழச்சியுடன் பேச விரும்புகிறேன்.

ப்ளீஸ் தொலைப்பேசி எண்...

புகழன் said...

//
எனக்கு நீண்ட நாட்களாகவே இந்த சந்தேகம் இருந்தது, தமிழச்சி என்று பதிவு எழுதுபவர் ஒரு பெண்ணா, அல்லது தமிழச்சி என்று ஒருவர் இருக்கிறாரா என்று,
//

தமிழச்சியின் பதிவுகளைப் படித்தது கொஞ்ச நாள் தான்.
ஆனால் எனக்கு இந்தச் சந்தேகங்களெல்லாம் வரவில்லை.
ஏனெனில் சமூக மாற்றமும் முன்னேறமும்தான் இதற்குக் காரணம்.

பெரியாரின் கருத்துக்களையும் எழுதுவதால் அவர் வழியில் நிச்சயமாக பொய் சொல்லாமல் பெண் பெயரில் பெண்தான் எழுதியிருக்க வேண்டும் என்று நானாகவே முடிவு செய்து விட்டேன்.

தமிழச்சி இவ்வளவு வெளிப்படையாக எழுதுவதற்குக் காரணம் பெரியார்தான்.
ஏனெனில் அவரும் ரெம்பவே வெளிப்படையாகத்தான் இருந்தார்.
உள்ளொன்றும் புறமொன்றும் என்பது பெரியாரிடம் பார்க்க முடியாத ஒன்று.

வால்பையன் said...

//யோனிஸ்வரி said...
நானும் தமிழச்சியுடன் பேச விரும்புகிறேன்.
ப்ளீஸ் தொலைப்பேசி எண்...//

தமிழச்சி தமிழ்நாட்டில் இல்லை,
உங்களுடன் பேச விருப்பமா என்று அவர் தான் சொல்லவேண்டும்,
முயற்சியை தளர விடாதிர்கள்

வால்பையன்

Anonymous said...

ஆகா! வீடியோ சாட்டா?

யோவ் எங்கேயிருக்கியா மச்சம் உனக்கு?
:-(

ஜகம் said...

// தமிழச்சி தமிழ்நாட்டில் இல்லை,
உங்களுடன் பேச விருப்பமா என்று அவர் தான் சொல்லவேண்டும்,
முயற்சியை தளர விடாதிர்கள் //


எங்கே இருக்கிறார்? நீங்கள் வீடியோவில் பேசியதாக சொல்கிறீர்களே! ப்ளீஸ் உதவி செய்யுங்களேன்!

Anonymous said...

வால் பையன் அவர்களுக்கு,

தமிழச்சியின் மேசன்ஜெர் ஐடி சொல்ல முடியுமா?

வால்பையன் said...

//ஆகா! வீடியோ சாட்டா?
யோவ் எங்கேயிருக்கியா மச்சம் உனக்கு? //

உடம்பே மச்சத்துல தான் இருக்கு

வால்பையன்

வால்பையன் said...

//புகழன் said...
தமிழச்சி இவ்வளவு வெளிப்படையாக எழுதுவதற்குக் காரணம் பெரியார்தான்.
ஏனெனில் அவரும் ரெம்பவே வெளிப்படையாகத்தான் இருந்தார்.
உள்ளொன்றும் புறமொன்றும் என்பது பெரியாரிடம் பார்க்க முடியாத ஒன்று.//

பராயில்லை நீங்கள் நம்புவதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது.
ஆனால் நான் வந்த புதிதில் அனானிகளிடம் நான் பட்ட கஷ்டம் யாரையும் நம்ப முடியாத சூழ்நிலையை உருவாக்கியது, அதனால் நான் யாரையும் நேரில் பார்க்காமல் நம்புவதில்லை, ஏன் மற்றவர்களை என்னையே எடுத்து கொள்ளுங்கள் வால்பையன் 55 வயது கிழவன் என்று நினைத்து கொண்டிருந்தவர்கள் உண்டு
வருகைக்கு நன்றி

வால்பையன்

வால்பையன் said...

//யோனிஸ்வரி said...
எங்கே இருக்கிறார்? நீங்கள் வீடியோவில் பேசியதாக சொல்கிறீர்களே! ப்ளீஸ் உதவி செய்யுங்களேன்!//

இங்கே வரும் பின்னூட்டங்களை அவர் பார்த்துகொண்டு தான் இருப்பார்,
அவர் அனுமதி இல்லாமல் நானாக தர முடியாது, கேட்டு சொல்கிறேன்,
இல்லையென்றால் உங்கள் ஐடீயை அவர் தளத்தில் பின்னூட்டமாக இடுங்கள்

வால்பையன்

Anonymous said...

நீ இன்னைக்கு நரி முகத்துல முழிச்சியாப்பா? (வயித்தெறிச்சல் தாங்க முடியலையா! பேசித்தான் தொலைச்சே கொஞ்சம் வாயை மூடிக்கொண்டு இருந்திருக்கக் கூடாதா?)

வால்பையன் said...

//Anonymous said...
நீ இன்னைக்கு நரி முகத்துல முழிச்சியாப்பா? (வயித்தெறிச்சல் தாங்க முடியலையா! பேசித்தான் தொலைச்சே கொஞ்சம் வாயை மூடிக்கொண்டு இருந்திருக்கக் கூடாதா?)//

ஒரு பெண் தன் பெண் இனம் ஒடுக்க படுவதை விரும்பாது, அதற்காக முயற்சிகள் செய்யும் பொழுது, நம்மால் முடிந்த உதவிகளை செய்வது தவறில்லையே,
மேலும் தமிழச்சி ஒருவர் தான் உலகிலே பெண் என்பது போல் எனக்கு பின்னூட்டங்கள் வருகிறது, அவர் கருத்துகளை பற்றி இங்கே அலசலாம், அவர் அழகை பற்றி அல்ல

வால்பையன்

தமிழ்பித்தன் said...

ஆகா! வீடியோ சாட்டா?

யோவ் எங்கேயிருக்கியா மச்சம் உனக்கு? ////

எவன்டா சொன்னது வால்பையனுக்கு உடம்பில மச்சம் இருக்கெண்டு

அவரது உடம்பே மச்சத்துக்கதான் கிடக்கு

Anonymous said...

//எவன்டா சொன்னது வால்பையனுக்கு உடம்பில மச்சம் இருக்கெண்டு

அவரது உடம்பே மச்சத்துக்கதான் கிடக்கு//

எவன்டா சொன்னது வால் பையனுக்கு உடம்பே மச்சத்துக்கதான் கிடக்குன்னு!
உண்மை தமிழச்சி

Anonymous said...

யோவ் பித்தா!


இந்த வீடியோ சாட் போதுமா? இன்னுங்கொஞ்சம் வேணுமா?


உண்மை தமிழச்சி

Thamizhan said...

ஒரே கருத்தை ஒரு ஆண் சொல்வதற்கும் ஒரு பெண் சொல்வதற்கும் வேறு பாடு காணும் ஆண் ஆதிக்க சமூகத்தில்தான் வாழ்கிறோம்.
பிரான்சில் சிறு வய்து முதல் வளர்ந்த ஒருவர் இவ்வளவு ஆர்வத்துடன் தமிழில் பெரியார் பற்றியும் பெண்ணியம் பற்றியும் துணிவுடன் எழுதுவதை பலர் தாங்கிக் கொள்ள முடியாதுதான்.
சில வார்த்தைகள் மேற்கு நாடுகளிலே சர்வசாதாரண்மாகப் பயன் படுத்தப் படுகின்றன்.அதைத் தமிழில் எழுதினால் என்ன தப்பு என்று அவர் கேட்கிறார்.
கேட்டுப் பழக்கமில்லாததாலும் முக்கியமாகப் பெண்கள் இந்தப் பதிவுகளைப் படிக்க வேண்டும் என்பதாலும் அவரை மட்டுப்படுத்தி எழுதச் சொல்லிப் பலர் வேண்டினோம்.

தமிழகத்துக் கவிஞர் சல்மா அவர்களின் கவிதைகளைக் கண்டு எவ்வளவு பேர் முகஞ்சுழிக்கிறார்கள்.

தமிழ்மணத்தில் அவர் பதிவுகள் போடாதது ஒரு குறையாகத்தான் இருக்கிறது.கும்மிகள் அடித்தக் கொட்டங்கள் வேறு காரணமாக இருக்கலாம்.

தமிழச்சியின் துணிவும் வேட்கையும் அவரது சமூகப் பணி தொடர்ந்து கட்டாயம் பெரியார் விழிப்புணர்வு ஐரோப்பா வழியாகத் தொடரட்டும்.அது முக்கியமாக மகளிரைச் சென்றடையட்டும்.

King... said...

///தமிழச்சிக்கு தைரியம் நிறைய இருக்கிறது என்பது நான் ஏற்றுக்கொண்ட விடயம் ஆனால் சில விடயங்களில் பபதிவுகளில் எனக்கும் உடன்பாடு கிடையாது...ஏன் பொரியாருக்கும் என்னிடம் சில கேள்விகள் இருக்கிறது...///

King... said...

யோனிஸ்வரி உங்கள் வரவுக்கான நோக்கம் என்ன...

வால்பையன் said...

Thamizhan said...

//தமிழச்சியின் துணிவும் வேட்கையும் அவரது சமூகப் பணி தொடர்ந்து கட்டாயம் பெரியார் விழிப்புணர்வு ஐரோப்பா வழியாகத் தொடரட்டும்.அது முக்கியமாக மகளிரைச் சென்றடையட்டும்.//

ஆரம்பித்து விட்டதாக தகவல், அது தமிழகத்திலும் தொடர போவதாக சொல்லியிருக்கிறார், வன்கொடுமைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு போராடும் ஒரு குழுவை இங்கே அமைக்க போவது உறுதி.

மேலும் ஒரு செய்தி
தமிழச்சி புலம் பெயர்ந்த ஈழத்தமிழர் அல்ல
அவர் பாண்டிச்சேரியை சேர்ந்தவர்,
தற்பொழுது பிரான்சில் இருக்கிறார்

வால்பையன்

வால்பையன் said...

// King... said...
தமிழச்சிக்கு தைரியம் நிறைய இருக்கிறது என்பது நான் ஏற்றுக்கொண்ட விடயம் ஆனால் சில விடயங்களில் பதிவுகளில் எனக்கும் உடன்பாடு கிடையாது...ஏன் பொரியாருக்கும் என்னிடம் சில கேள்விகள் இருக்கிறது...///

இதையே தான் நானும் சொல்லியிருக்கிறேன், எனக்கும் சில விசயங்களில் முரண்பாடு இருந்தது, பெரியாரிடம் கேள்வி எல்லோரிடமும் உள்ளது ஆனால் பதில் சொல்ல தான் அவர் இல்லை, பெரியாரை பற்றி என் கருத்துக்களை இங்கே பாருங்கள்

வால்பையன்

இரண்டாம் சொக்கன்...! said...

கும்மியடிப்பதும், கோலம் போடுவதும், அடுக்களை குறிப்புகளையும் பதியும் பதிவர்கள் மத்தியில் நிஜமான நியாயமான கோவத்துடன் வலம் வரும் தமிழச்சி போன்ற பதிவர்களை தள்ளி வைப்பதன் மூலம் தமிழ்மணத் திரட்டி என்ன சாதித்து விட்டது என தெரியவில்லை.

தமிழ்மணம் தன்னை திருத்திக் கொள்ள இன்னமும் வாய்ப்பிருப்பதாகவே கருதுகிறேன்.

கூடுதுறை said...

கப கப கப கப கப கப கப கப
கப கப கப கப கப கப கப கப
பக ப்க பக ப்க பக ப்க பக ப்க
பக ப்க பக ப்க பக ப்க பக ப்க

எனது வயிரு எரியும் சத்தம் கேட்கிறதா !!!

அவருடன் பேச வேண்டும் எனில் பெரியார் தாசன் ஆனால்தான் முடியும்.

நான் இந்த ஆட்டத்திற்கு வர்லப்பா !!!

இளைய கவி said...

//வால்பையன் 55 வயது கிழவன் என்று நினைத்து கொண்டிருந்தவர்கள் உண்டு
// சத்தியாமான‌ உண்மை

//
கும்மியடிப்பதும், கோலம் போடுவதும், அடுக்களை குறிப்புகளையும் பதியும் பதிவர்கள் மத்தியில் நிஜமான நியாயமான கோவத்துடன் வலம் வரும் தமிழச்சி போன்ற பதிவர்களை தள்ளி வைப்பதன் மூலம் தமிழ்மணத் திரட்டி என்ன சாதித்து விட்டது என தெரியவில்லை.

தமிழ்மணம் தன்னை திருத்திக் கொள்ள இன்னமும் வாய்ப்பிருப்பதாகவே கருதுகிறேன்.//


இதை நான் வழிமொழிகிறேன்

கூடுதுறை said...

இவர் எந்த படத்தை வேண்டுமானலும் போடுவார்.

அதற்க்காக தமிழ்மணம் நீக்ககூடாதாம்.இது என்னப்பா நியாயம்?

என்னைப்போன்ற சிருவர்களும் தமிழ்மணம் பார்வையிடுகிறோமா?

எனக்கு பதிவில் உள்ள படங்களை பார்த்துவிட்டு 2 நாள் காய்ச்சல் வந்துவிட்டது

Sanjai Gandhi said...

ஒரு பக்கம் தன் இனத்தை பெருமை பேசும் ஒரு பெரியவரிடம் நெருக்கமான நட்பு... இன்னொரு பக்கம் சாதிகள் கூடாது எனும் பெரியாரின் கொள்கையை பின்பற்றுபவரிடம் நட்பு மற்றும் பாராட்டு.. நல்லாதான்யா பேலன்ஸ் பண்றாரு நம்ம வாலு. வாழ்க வளமுடன் :)

தமிழச்சி said...

/// கூடுதுறை said...


இவர் எந்த படத்தை வேண்டுமானலும் போடுவார்.

அதற்க்காக தமிழ்மணம் நீக்ககூடாதாம்.இது என்னப்பா நியாயம்?

என்னைப்போன்ற சிருவர்களும் தமிழ்மணம் பார்வையிடுகிறோமா?

எனக்கு பதிவில் உள்ள படங்களை பார்த்துவிட்டு 2 நாள் காய்ச்சல் வந்துவிட்டது ///


தோழர் கூடுதுறை அவர்களுக்கு,

எந்த படத்தை பார்த்து 2 நாட்களாக காய்ச்சல் வந்துவிட்டது என்று கூறினால் மேற்கொண்டு விவாதிக்க எனக்கு இலகுவாக இருக்கும்.


காத்திருக்கிறேன்.....

இளைய கவி said...

//SanJai said...
ஒரு பக்கம் தன் இனத்தை பெருமை பேசும் ஒரு பெரியவரிடம் நெருக்கமான நட்பு... இன்னொரு பக்கம் சாதிகள் கூடாது எனும் பெரியாரின் கொள்கையை பின்பற்றுபவரிடம் நட்பு மற்றும் பாராட்டு.. நல்லாதான்யா பேலன்ஸ் பண்றாரு நம்ம வாலு. வாழ்க வளமுடன் :)
//ஒரு பலமான ரிப்பீட்டே. சஞ்செய்க்கு வலை உலக நாரதர் என்ற பட்டத்தை பெருமையோடு வழங்குகிறேன்

வால்பையன் said...

//இரண்டாம் சொக்கன்...! said...
தமிழ்மணம் தன்னை திருத்திக் கொள்ள இன்னமும் வாய்ப்பிருப்பதாகவே கருதுகிறேன்.//

தமிழ்மணம் சில பதிவர்களின் வேண்டுகோளுகினங்க அவ்வாறு செய்ததாக சிலர் சொல்லி கொள்கின்றனர், தமிழ்மணம் சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் அழைத்ததாகவும் தகவல்,
எது எப்படியோ தமிழச்சி தன் பதிவுகளை நிறுத்தி கொள்ளவில்லை,அவர் எழுதி கொண்டு தான் இருக்கிறார்

வால்பையன்

வால்பையன் said...

//கூடுதுறை said...
எனது வயிரு எரியும் சத்தம் கேட்கிறதா !!!//

இதுக்கே இப்படியா, நேற்று இரவு நான் தூக்கம் கெட்ட கதையை கேட்டால் என்ன ஆவீர்கள் தெரியவில்லை

வால்பையன்

வால்பையன் said...

//இளைய கவி said...
//வால்பையன் 55 வயது கிழவன் என்று நினைத்து கொண்டிருந்தவர்கள் உண்டு
//
சத்தியாமான‌ உண்மை//

தாத்தாவுக்கு வாக்கிங் ஸ்டிக் யாராவது வாங்கி தாங்கப்பா

வால்பையன்

வால்பையன் said...

//கூடுதுறை said...
இவர் எந்த படத்தை வேண்டுமானலும் போடுவார்.
அதற்க்காக தமிழ்மணம் நீக்ககூடாதாம்.இது என்னப்பா நியாயம்?
என்னைப்போன்ற சிருவர்களும் தமிழ்மணம் பார்வையிடுகிறோமா?//

இப்படி பின்னூட்டம் போட்டுட்டு அனானியா தமிழச்சி போன் நம்பர் கேட்டது நீங்க தானே! ஊருக்குள்ள உங்கள ப்ளேபாய்ன்னு சொன்னாங்க உண்மையா

வால்பையன்

வால்பையன் said...

// SanJai said...
ஒரு பக்கம் தன் இனத்தை பெருமை பேசும் ஒரு பெரியவரிடம் நெருக்கமான நட்பு... இன்னொரு பக்கம் சாதிகள் கூடாது எனும் பெரியாரின் கொள்கையை பின்பற்றுபவரிடம் நட்பு மற்றும் பாராட்டு.. நல்லாதான்யா பேலன்ஸ் பண்றாரு நம்ம வாலு. வாழ்க வளமுடன் :)//

வருகைக்கு நன்றி சஞ்சய்!
என் தந்தை கூட தன் ஜாதி மேல் மிகுந்த பற்றுள்ளவர்! ஆனால் நான் எப்படி இருக்கிறேன் என்பது தானே முக்கியம், என்னை பொறுத்தவரை பெரியாரும் மனிதர் தான், டோண்டுவும் மனிதர் தான், தமிழச்சியும் மனிதர் தான்,
நட்பில் ஏது கொள்கைகளும் ஜாதியும்

வால்பையன்

வால்பையன் said...

//இளைய கவி said...
ஒரு பலமான ரிப்பீட்டே. சஞ்செய்க்கு வலை உலக நாரதர் என்ற பட்டத்தை பெருமையோடு வழங்குகிறேன்//

நீ ஒரு ஆள் போதுமேயா, எதுக்கு எல்லாத்தையும் துணைக்கு கூப்பிடுற

வால்பையன்

கூடுதுறை said...

// இப்படி பின்னூட்டம் போட்டுட்டு அனானியா தமிழச்சி போன் நம்பர் கேட்டது நீங்க தானே! ஊருக்குள்ள உங்கள ப்ளேபாய்ன்னு சொன்னாங்க உண்மையா //

எனக்கு நம்பர் வேண்டும் என்றால் உங்களுக்கு போன் செய்தே கேட்டுவிடுவேன். அனானி நான் இல்லை. ஊருக்குள் பேசிக்கொள்ளும் அளவுக்கு மோசம் இல்லை. அளவோடு ஜொள்ளு அவ்வளவுதான்...

ஜொள்ளு யார்தான் இல்லை டோண்டு அய்யாவே நக்மாவிடம் ஜொள்ளுகிறார்.


//இதுக்கே இப்படியா, நேற்று இரவு நான் தூக்கம் கெட்ட கதையை கேட்டால் என்ன ஆவீர்கள் தெரியவில்லை //

இந்த சஸ்பென்ஸ்தான் வேண்டாம்.

என்ன என்ன என்ன என்ன????????

Sanjai Gandhi said...

////ஒரு பலமான ரிப்பீட்டே. சஞ்செய்க்கு வலை உலக நாரதர் என்ற பட்டத்தை பெருமையோடு வழங்குகிறேன//
குடுக்கறதுனு முடிவாய்டிச்சி. அதென்ன பின்னூட்டத்துல குடுத்துகிட்டு.. சின்னப் புள்ளதனமா?.. தனியா ஒரு பதிவு போடு அதுல என் வலைப்பூவுக்கு ஒரு இணைப்பும் குடுத்தா தான நானும் கொஞ்சம் ஹிட்ஸ் பாக்க முடியும்... என்னால என்ன காசு குடுத்து ஜூவிலயா எழுத வைக்க முடியும்? :P

g said...

யோனிஸ்வரி said...
// தமிழச்சி தமிழ்நாட்டில் இல்லை,
உங்களுடன் பேச விருப்பமா என்று அவர் தான் சொல்லவேண்டும்,
முயற்சியை தளர விடாதிர்கள் //


hai every body!

வால்பையன் said...
This comment has been removed by the author.
வால்பையன் said...

//கூடுதுறை said...
ஜொள்ளு யார்தான் இல்லை டோண்டு அய்யாவே நக்மாவிடம் ஜொள்ளுகிறார்.//

அவர் லொள்ளு விடுவது நக்மாவிடம் இல்லை, மும்தாஜிடம்,
அப்புறம் தூக்கம் கெட்ட மேட்டர், அதை தனி பதிவாக போடுகிறேன்,
தலைப்பு: வீணா போன girl friendum, பாழாய் போன தூக்கமும்

வால்பையன்

வால்பையன் said...

வாங்க ஜிம்ஸா! யாருக்கு ஹாய் சொல்றிங்க!
ஒண்ணும் புரியலையே

வால்பையன்

ஜகம் said...

// hai every body! //


ஜிம்ஷா எனக்கு பய்மா இருக்கு?


எது ஹாய்!

Anonymous said...

// வீணா போன girl friendum, பாழாய் போன தூக்கமும் //


ஓ! ஒரு நாளு வீடியோவில பேசனதுக்கே கேள் ப்ரென்டாய்டாங்களா தமிழச்சி? இன்னா உடான்ஸ் உடுறே!

வால்பையன் said...

///Anonymous said...
// வீணா போன girl friendum, பாழாய் போன தூக்கமும் //
ஓ! ஒரு நாளு வீடியோவில பேசனதுக்கே கேள் ப்ரென்டாய்டாங்களா தமிழச்சி? இன்னா உடான்ஸ் உடுறே!///

அட வீணா போன அனானி பதரே! இது சாட் பண்ண கதையில்லை!
போன்ல சிக்கிகிட்ட கதை! அதான் நானே எழுதுறேன்னு சொன்னேன்ல அதுக்குள்ளே என்ன அவசரம்

வால்பையன்

கூடுதுறை said...

எந்த படம் என்று குறிப்பிட்டு சொல்ல இயலுமா?

இன்றைய தங்களீன் பதிவுப்படங்கள் கூடத்தான் பார்க்க பயங்கரமாக உள்ளன.

உதா: விரிந்த பெண் குறி படம்

வால்பையன் said...

கூடுதுறை!
சொல் என்பது காட்சி பொருள்களின் குறியீடு
நீங்கள் குறிப்பிட்டுள்ள சொல்கூட தமிழச்சியின் பதிவுக்கு நிகரான பாதிப்பை தரும்,
இதற்க்கு நீங்கள் அந்த லிங்க்கை கொடுத்திருக்கலாம். அனுபவசாலிகள் புரிந்துகொள்வார்கள்

வால்பையன்

கூடுதுறை said...

நானும் யோசித்தேன் லிங்க் கொடுக்க

மறுபடியும் அந்த படத்தை தேடிப்பிடித்து பார்க்க விரும்பவில்லை.

தங்களுக்கு பிடிக்கிவில்லையெனில் delete செய்துவிடுங்கள்

Anonymous said...

அய்யோ அம்மா,
தமிழச்சியோடவா? பேசினீங்க!!! ரொம்ப தில்லுதாங்க உங்களுக்கு...!

வால்பையன் said...

///தமிழச்சியோடவா? பேசினீங்க!!! ரொம்ப தில்லுதாங்க உங்களுக்கு...!///

நீங்க பயப்படுற மாதிரி அவங்க கிட்ட ஒண்ணுமில்லை,
ஒரே வித்தியாசம் என்னான்னா மத்த பொண்ணுங்ககிட்ட கடல வருக்குற மாதிரி இங்க பப்பு வேகாது,

வால்பையன்

Anonymous said...

// நீங்க பயப்படுற மாதிரி அவங்க கிட்ட ஒண்ணுமில்லை,
ஒரே வித்தியாசம் என்னான்னா மத்த பொண்ணுங்ககிட்ட கடல வருக்குற மாதிரி இங்க பப்பு வேகாது,//

ஓ! இப்ப புரியுதுய்யா மேட்டரு. வாலு பப்பு கூட வேகல போல கெடக்கு.

வால்பையன் said...

சும்மாவே தமிழ்நாட்டு ஆம்பளைகெல்லாம் ஜொள்ளு பாண்டின்னு அவங்களுக்கு ஒரு எண்ணம் இருக்கு, அதை மாத்தலாம்ன்னு பார்த்த வர்ற பின்னூட்டம் எல்லாம் அதை விட பெரிய ஜொள்ள இருக்கு,
அட போங்க அனானி, வெந்த புண்ணுல வேல பாச்சிகிட்டு

வால்பையன்

தமிழச்சி said...

/// வால்பையன் said...


சும்மாவே தமிழ்நாட்டு ஆம்பளைகெல்லாம் ஜொள்ளு பாண்டின்னு அவங்களுக்கு ஒரு எண்ணம் இருக்கு, அதை மாத்தலாம்ன்னு பார்த்த வர்ற பின்னூட்டம் எல்லாம் அதை விட பெரிய ஜொள்ள இருக்கு,
அட போங்க அனானி, வெந்த புண்ணுல வேல பாச்சிகிட்டு

வால்பையன் ///


இந்த பதிவின் விவாதம் இன்னும் வந்துக் கொண்டா இருக்கின்றது?


அப்பறம் தமிழ்நாட்டு ஆணகள் எல்லாம் ஜொல்லு பார்ட்டிகள் என்ற எண்ணம் எனக்கு இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறீர்கள்.


தமிழ்நாட்டு ஆண்களை ஜொள்ளுக்களாக்கியது தமிழ்நாட்டு பெண்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

ஆண்களுக்கு கடலை போடக் கற்றுக் கொடுத்ததும் பெண்களின் உடல்மொழிகள் தான் என்று நினைக்கிறேன்.


முன்பின் தெரியாத ஓர் ஆண் தொலைப்பேசியில் பேசும்போது உங்கள் வாய்ஸ் ஸ்வீட்டி என்றால் இவளுக்கு கில்மா கொடுத்தது போல் இருக்கிறது.


ஆண் என்ன செய்வான்? ஓகோ கலர்களை செட்டாக்க இப்படியெல்லாம் வழி இருக்கான்னு ஆரம்பிச்சுடறாங்க!

என்ன பிரச்சனைன்னா வாய்ஸ் பத்தி பேசும் போதே தேவையில்லாத வர்ணனை என்று ஓற்றை வார்த்தையை பெண்
உபயோகித்திருந்தால் கடலை போடும் வார்த்தைகள் தோன்றியிருக்குமா?


இன்னொன்ரு சொல்ல வேண்டும் கடலைப்போடும் மேட்டரில் அதிகம் சொக்கிப் போவது திருமணமான பெண்கள் தான். தன் கணவனிடம் கிடைக்காத புகழ்ச்சி மற்ற ஆணிடம் இருந்து வரும் போது கிறங்கிப் போய்விடுகிறாள்.

ஆக பெண்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள் தமிழ்நாட்டில் இரண்டுமே சரியில்லை என்பது தான் உண்மை........

வெண்ணை(VENNAI) said...

unmaithan tamizachi.....Tamilnatulamattum illa....ulgathula ulla ella manaivimargalum vera oru aambila pagzndha udane makizchi pongidudhu...

Vennaii
www.Vennaii.blogspot.com

வால்பையன் said...

தமிழச்சியின் பின்னூட்டத்திற்கு
பதில் கொஞ்சம் பெரிதாகிவிட்டதாலும், நானும் ஒரு வாரமாக வேறெந்த பதிவும் போடாததாலும், இந்த பதிவையே பதிலாக தருகிறேன்

வால்பையன்

மந்திரன் said...

//ஜோடியாக அமர்ந்திருக்கும் இருவரை நம் சமூகம் வயது வரம்பில்லாமல் வெறித்து பார்க்கிறது, இதனாலேயே அவர்கள் இருட்டை தேடி ஒதுங்க வேண்டியிருக்கிறது, இருட்டு அவர்களுக்கு குற்றஉணர்வை தருகிறது, //

ஓரத்தனுக்கு ஒருத்தி என்று உலகுக்கு சொன்ன தமிழகத்தில்தான் AIDS நோயாளிகள் அதிகம் ..
உள்ளே ஒர்ன்று வைத்து வெளியே ஒன்று பேசுவது தமிழனின் வழக்காகி விட்டது . நீங்களுமா ?
நண்பர்கள் காதலர்கள் ஆகலாம் . காதலர்கள் நண்பர்கள் ஆகலாம் .. ஏன்? ...
நண்பர்கள் அண்ணன் , தங்கச்சியாக மாற கூடாதா ? ஆக மாட்டர்கள் .. அதற்குத்தான் அந்த இருட்டு ..
இருட்டு அவர்களுக்கு ஒரு போர்வை தவறை மறைக்க ..

// ஒரு ஆணும் ,பெண்ணும் மனமுவந்து புணர்ந்தால் கூட, அவர்களை பிடித்து விபச்சார வழக்கு போடும் சட்டம் நமக்கு இருக்கிறது,//
13 வயது பெண் இன கவர்ச்சியால் ஒரு 25 வயது ஆணுடன் புணர்ந்தால் அதன் பெயர் என்ன ?
புனித உறவா ? புனித புனர்வா ? நாம் நாய் அல்ல ..கண்டவுடன் புணர்வதற்கு ...எப்படியும் வாழலாம் என்று இருந்தால் நாம் ஏன் தமிழனாக இருக்க வேண்டும் .... நாம் நாயகவே இருக்கலாம் ...

//
தமிழச்சி said...

//சிகரெட் குடிப்பது கெட்ட பழக்கமே தவிர ஒழுக்கமின்மை கிடையாது//

கரெக்ட்!
//
என்ன கரெக்ட் ?... உன்னை அழித்து கொல்லேவே உனக்கு உரிமை இல்லாத போது ,ஏன் பிறரை அழிக்கும் புகை பழக்கம் ஒழுக்க சீர் கேடுதான் .... சில விஷயங்கள் சொன்னால் புரியாது ...அதனால் தான் அடித்தாவது அந்த பழக்கத்தை விட முயற்சிக்கிறார்கள் .. நெருப்பில் விழாத தங்கம் நகை ஆவது இல்லை என்பது தமிழச்சிக்கு தெரியாதா ?

//கண்டபடி திரிந்தால் எய்ட்ஸ் வருமென்று எல்லோருக்கும் தெரியும்,
அதை கட்டுபடுத்தவே திருமணம், //
திருமணம் இன்று கண்டு பிடிக்கப்பட்டது இல்லை .. அது இரு மனங்களின் சேர்க்கை மட்டும் இல்லாமல் ,
இரு பரம்பரையின் கூடல் .. இரு பாரம்பரியத்தின் புணர்ச்சி ... அதை நான் மதிக்கும் நீங்கள் கேவலமாக பேசாதீர்கள் ...

மந்திரன் said...

தமிழச்சியின் ஒரு பின்னூடத்திற்கு ஒரு பதிவா ?...
எங்கோ இடிக்குதே ..
ஒண்ணுமே புரிய இந்த உலகத்திலே ..
என்னோமோ நடக்குது மர்மமா இருக்குது ...

!

Blog Widget by LinkWithin