இளயகவி கட்டு போட்ட கதை! மற்றும் சகவலை பதிவர்கள் அய்யனார் மற்றும் குசும்பனுக்கு ஒரு வேண்டுகோள்!!

அகிலுலக ஜொள்ளர் சங்க தலைவர் இளயகவியை தெரியாதவர்கள் வலைப்பதிவில் வெகு சிலரே, அவரை பற்றிய சில ரகசியங்கள் கீழே தரப்பட்டுள்ளன

ஒருமுறை நான் அலைபேசியில் அழைத்திருந்த போது மதியநேரம், சாப்பாட்டு டைம் என்று கூட வைத்துக்கொள்ளலாம்,

போனை எடுத்த உடன் சொல்லு மச்சி என்று மட்டுமே என்னிடம் பேசியது,
மற்றதெல்லாம்

தம்பி அந்த பக்கம் போய் விளையாடு
அப்பா சொன்னா கேக்கணும்
அப்புறம் அப்பாவுக்கு கோவம் வந்துடும்

நானும் போனை காதில் வைத்து கொண்டுகொண்டே இருக்க
பளீர் பளீர் என்று அறையும் சத்தம்.

நான் பயந்தே போய்விட்டேன், சின்ன பையனை போய் இப்படி அடிக்கிறானே என்று,
அப்புறம் தான் தெரிந்தது, கிரிஷ் கையிலிருக்கும் எதயோ ஒன்றை இவன் புடுங்க
அவன் கன்னம் கன்னம்மாக அப்பி விட்டான்,

அலுவலகத்தில் கன்னத்தில் என்னடா காயம், என்று அனைவரும் கேட்டதாக "சிட்டுக்குருவி" தகவல்.

**********************************************************

அதே போல் ஒரு மதிய நேரம்,
நமது தலைவர் நன்றாக சாப்பிட்டு விட்டு உண்ட மயக்கத்தில் தொலைகாட்சி பார்த்து கொண்டிருந்திருக்கிறார், அச்சமயம் பார்த்தா நான் கூப்பிடுவேன். தொடர்ச்சியாக ரிங் போய் கொண்டே இருந்தது, கட் பண்ணலாம் என்று நினைக்கும் போது யாரோ எடுத்து விட்டார்கள்,

"போனையேல்லாம் பாக்கெட்டில் வைக்கமுடியாதா" என்று எதையோ எரியும் சத்தம்,
ஐயோ என்று அலறும் சத்தமும் தொடர்ந்து வந்தது, பிறகு தான் தெரிந்தது அவங்க வூட்டு தங்கமணி அந்த கைபேசியை தூக்கி எரிய அந்த செங்கல் இளயகவி மண்டையில் பட்டு நான்கு நாட்கள் தலையில் கட்டோடு திரிந்ததாக , ஹெல்மெட் போடாமல் சுற்றுவோர் சங்கத்தில் இருந்து தகவல்,

**********************************************************
இதையெல்லாம் விட்ட ஹைலைட் இதுதான்,

"தமிழச்சியை ஜொள்ளு விடுவது தவறா" என்று ஒரு பதிவு போட்டு
அது ஜூ.வீ.யில் வந்து பிளாக்கர்களின் மானத்தை வாங்க, குசியில் இருந்த இளயகவி, இந்த விஷயம் அவங்க வீட்டு தங்கமணிக்கு தெரிந்தது தெரியாமல் வழக்கம் போல் மதியம் வீட்டுக்கு சாப்பிட சென்றிருக்கிறார்,

வாசலிலேயே அவர் தங்கமணி பெரிய விறகுகட்டையோடு நிற்க,
அதிர்ச்சியில் இளயகவி ரிவேர்ஷ் கியரை தேடியிருக்கிறார்
எவ்வளவு தேடியும் அவரது பைக்கில் ரிவேர்ஷ் கியர் கிடைக்காததால்
பைக்கை அப்படியே போட்டு விட்டு பின்னங்கால் பிடரியடிக்க ஓட
பல வண்டிகளில் மோதி கையில் கையில் கட்டுடன் ஒரு வாரம் திரிந்ததாக
கைகாட்டிகள் (அதாங்க spy) மூலம் தகவல்,

*******************************************************************

இதன் பின்னர் அகில உலக ஜொள்ளர் சங்க கூட்டத்தில் தலைவர் இளயகவி பேசுகையில், புதிதாக திருமணமான அய்யனார் மற்றும் குசம்பனுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்,
அவங்க வீட்டு தங்கமணியுடன் வாக்குவாதம் புரியும் முன் கிரிகெட்டுக்கு போட்டு செல்லும் கவசங்களை அணியுமாறு,

மேலும் புதிதாக தங்கமணி வகையறாவில் சேர்ந்திருக்கும் இம்சையரசி மிகவும் சாதுவானவர் என்று சகவலை பதிவர்கள் சர்டிபிகேட் அளித்திருப்பதால்
அவங்க வூட்டு ரங்கமணி எப்போது விண்வெளிக்கு செல்லும் உடை அணிந்து இருக்குமாறு வேண்டுகோள் வைத்துள்ளார்
காரணம் கேட்டதிற்கு
"சாது மிரண்டால் காடே தாங்காது" என்று பொன்மொழிகளை உதிர்த்தார்

21 வாங்கிகட்டி கொண்டது:

புகழன் said...

என்ன வால் ஆரம்பிச்சிட்டீங்களா?

வால்பையன் said...

பாபா கவுண்டிங் ஸ்டார்ட்

வால்பையன்

Anonymous said...

சர்தார்ஜி ஜோக் மாதிரி இது இளைய கவி ஜோக்கா, நல்லாருக்கு

வால்பையன் said...

வாங்க சின்ன அம்மிணி
ஒரு உண்மை சம்பவத்தை எப்படி ஜோக்குன்னு சொன்னிங்கன்னா எப்படி?
இன்னும் நிறைய இடத்துல கட்டு போட்ட கதையை நாளைக்கு இளயகவி பின்னூட்டத்துல சொல்லுவார்

வால்பையன்

இளைய கவி said...

//சின்ன அம்மிணி said...
சர்தார்ஜி ஜோக் மாதிரி இது இளைய கவி ஜோக்கா, நல்லாருக்கு
//

இதை விட என்னை யாரும் கேவலப்படுத்த முடியாது சின்ன அம்மிணி. மிக்க நன்றி.. டேய் வால் பையா க்ர்ர் க்ர்ர்ர்க்ர்க்ர்க்ர்க்க்ர்க்ர்க்க்ர்......

இளைய கவி said...

//இன்னும் நிறைய இடத்துல கட்டு போட்ட கதையை நாளைக்கு இளயகவி பின்னூட்டத்துல சொல்லுவார்

வால்பையன்
//

நீ கட்டு போட்டு அலையுறத நான் சொண்னேனா? ஏதோ ஒரு ஆம்பள மணசு ஒரு ஆம்பிளைக்கு தான தெரியும்ன்னு ஒரு விஷயத்து சொண்ணா. இப்படியா public பண்றது ராஸ்கல்..

Anonymous said...

பொதுவாக தனக்கு நடக்கும் சம்பவங்களை தனது நண்பர்களுக்கு நடந்தது எனக் கூறிக்கொண்டு பத்திரிக்கைகளில் பலர் எழுதுவது வழக்கம்.

அந்த வேலையை வால்பையனும் ஆரம்பித்துவிட்டார்.

நடக்கட்டும் நடக்கட்டும்

கூடுதுறை said...

இது தொடர்புக்கு

குசும்பன் said...

//அவங்க வீட்டு தங்கமணியுடன் வாக்குவாதம் புரியும் முன் கிரிகெட்டுக்கு போட்டு செல்லும் கவசங்களை அணியுமாறு,//

அய்யோ அய்யோ என்ன இது சின்ன புள்ள தனமா இருக்கு அந்த அடி வாங்குவதிலும் ஒரு சுகம் இருக்குய்யா அதை அப்படியே கண்ண மூடி தவம் மாதிரி அனுபவிக்கனும் பேடு கட்டி தடுக்க கூடாதுள:))))

புகழன் said...

\\இன்னும் நிறைய இடத்துல கட்டு போட்ட கதையை நாளைக்கு இளயகவி பின்னூட்டத்துல சொல்லுவார்

வால்பையன்
\\
கதை படிக்க ஆசைதான்
இளையகவி தனியாக இதற்கு ஒரு பதிவே போட்டாலும் நன்றாகத்தான் இருக்கும்.

தமிழன்-கறுப்பி... said...

இளைய கவி
இது என்ன கொடுமை கவி...

தமிழன்-கறுப்பி... said...

//இதன் பின்னர் அகில உலக ஜொள்ளர் சங்க கூட்டத்தில் தலைவர் இளயகவி பேசுகையில், புதிதாக திருமணமான அய்யனார் மற்றும் குசம்பனுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்,
அவங்க வீட்டு தங்கமணியுடன் வாக்குவாதம் புரியும் முன் கிரிகெட்டுக்கு போட்டு செல்லும் கவசங்களை அணியுமாறு//

தேவையான அட்வைஸ்தான்:)

குசும்பன் ஏற்கனவே சரண்டருங்கோ...:):)

தமிழன்-கறுப்பி... said...

//மேலும் புதிதாக தங்கமணி வகையறாவில் சேர்ந்திருக்கும் இம்சையரசி மிகவும் சாதுவானவர் என்று சகவலை பதிவர்கள் சர்டிபிகேட் அளித்திருப்பதால்
அவங்க வூட்டு ரங்கமணி எப்போது விண்வெளிக்கு செல்லும் உடை அணிந்து இருக்குமாறு வேண்டுகோள் வைத்துள்ளார்
காரணம் கேட்டதிற்கு
"சாது மிரண்டால் காடே தாங்காது" என்று பொன்மொழிகளை உதிர்த்தார்//


:))):)
இதுல இம்சையரசிய வேற சேத்துட்டிங்களே...
(பாவம்பா அது ரொம்ப அப்பாவிப்பொண்ணு...:)

g said...

///அகிலுலக ஜொள்ளர் சங்க தலைவர் இளயகவியை தெரியாதவர்கள் வலைப்பதிவில் வெகு சிலரே///
மேற்கண்ட சங்கத்திற்கு எனக்கு எந்த பதவியும் வேண்டவே வேண்டாம். எல்லா பதவியையும் அவருக்கே கொடுத்திருங்க.

வால்பையன் said...

வாங்க குசும்பன்!
உங்க பெருந்தன்மை யாருக்கும் வராது
ஆனாலும் அடிவாங்குரத ரசிகனும்ம்ன்னு சொல்றது கொஞ்சம் ஓவர்,
இளயகவியை பார்த்த உங்களுக்கு பாவமா தெரியலையா

வால்பையன்

வால்பையன் said...

///இளைய கவி said...
நீ கட்டு போட்டு அலையுறத நான் சொண்னேனா? ஏதோ ஒரு ஆம்பள மணசு ஒரு ஆம்பிளைக்கு தான தெரியும்ன்னு ஒரு விஷயத்து சொண்ணா. இப்படியா public பண்றது ராஸ்கல்..///

என் பதிவுக்கு எப்படியும் ஒரு எதிர்வினை உண்டுன்னு எனக்கு தெரியும்
நாங்க உன்ன மாதிரி வெளிய சொல்லி அழுகுறது இல்ல
மனசுகுல்லையே அழுதுக்குவோம்

வால்பையன்

வால்பையன் said...

////கூடுதுறை said...
பொதுவாக தனக்கு நடக்கும் சம்பவங்களை தனது நண்பர்களுக்கு நடந்தது எனக் கூறிக்கொண்டு பத்திரிக்கைகளில் பலர் எழுதுவது வழக்கம்.
அந்த வேலையை வால்பையனும் ஆரம்பித்துவிட்டார்.
நடக்கட்டும் நடக்கட்டும்///

கூடுதுறைக்கு இன்னும் கொலைவெறி அடங்கல!
அவர நான் இன்னும் நேர்ல பார்த்ததில்ல,
பார்த்ததுடன் அடுத்த பதிவு அவருக்கு தான்

வால்பையன்

வால்பையன் said...

//கூடுதுறை said...
இது தொடர்புக்கு//

நீங்கள் தொடர்பு கொண்ட வாடிக்கையாளர்
வேறுருவருடன் தொடர்பில் இருப்பதாக தெரிகிறது

வால்பையன்

வால்பையன் said...

///தமிழன்... said...
//மேலும் புதிதாக தங்கமணி வகையறாவில் சேர்ந்திருக்கும் இம்சையரசி மிகவும் சாதுவானவர் என்று சகவலை பதிவர்கள் சர்டிபிகேட் அளித்திருப்பதால்
அவங்க வூட்டு ரங்கமணி எப்போது விண்வெளிக்கு செல்லும் உடை அணிந்து இருக்குமாறு வேண்டுகோள் வைத்துள்ளார்
காரணம் கேட்டதிற்கு
"சாது மிரண்டால் காடே தாங்காது" என்று பொன்மொழிகளை உதிர்த்தார்//
:))):)
இதுல இம்சையரசிய வேற சேத்துட்டிங்களே...
(பாவம்பா அது ரொம்ப அப்பாவிப்பொண்ணு...:)///

அத தானுங்கோ நானும் சொல்லியிருக்கேன்

வால்பையன்

வால்பையன் said...

///ஜிம்ஷா said...
///அகிலுலக ஜொள்ளர் சங்க தலைவர் இளயகவியை தெரியாதவர்கள் வலைப்பதிவில் வெகு சிலரே///
மேற்கண்ட சங்கத்திற்கு எனக்கு எந்த பதவியும் வேண்டவே வேண்டாம். எல்லா பதவியையும் அவருக்கே கொடுத்திருங்க.///

இப்படி பொறுப்புகளை தட்டி கழிகிறது ரொம்ப தப்புங்க!
எதாவது ஒரு பதவியை வாங்கி தான் ஆவணும்

வால்பையன்

நளன் said...

//அகிலுலக ஜொள்ளர் சங்க தலைவர் இளயகவியை தெரியாதவர்கள் வலைப்பதிவில் வெகு சிலரே//


தெரிந்து கொண்டோம் வால்ஸ் :)))

!

Blog Widget by LinkWithin