புரியாத புரிதலை புரிந்து கொள்ள சில முயற்சிகள் பாகம் 2.

இந்த பிரச்சனை ஓய்ந்தபாடில்லை!

இதன் முந்தய பதிவு

மீண்டும் நண்பர் ஒருவர் ஆன்லைன் வர்த்தகமே அத்யாவிசய பொருள்களின் விலைவுயர்வுக்கு காரணம் என்று எழுதுகிறார். காரணத்தில் பல விசயங்களை தொட்டிருந்தாலும் இறுதியில் முடிக்கும் போது மீண்டும் ஆன்லைன் வர்த்தகமே காரணம் என்று முடிப்பது தான் வருத்தம் அளிக்கிறது, என் முந்தய பதிவிலேயே ஒத்து கொண்டுள்ளேன், ஆன்லைன் வர்த்தகமும் ஒரு காரணம் ஆனால் அது மட்டுமே காரணம் அல்ல.

ஆன்லைன் வர்த்தகம் ஆரம்பித்து பத்து வருடம் ஆகிறது. ஆனால் விலைவாசி உயர்வு மேல் நோக்கி செல்லும் ஹீலியம் காற்று போல், அது வேலையை, அது நாணயம் கண்டுபிடித்த நாளிலிருந்து செய்து கொண்டிருக்கிறது.

ஒரு சின்ன உதாரணம், என் பாட்டியின் காலத்தில் ஒரு பவுன் தங்கம் நுப்பது ரூபாய், அப்போது ஆன்லைன் வர்த்தகம் இல்லை. என் அம்மாவின் காலத்தில் பவுன் முன்னூறு ரூபாய் அப்போதும் ஆன்லைன் வர்த்தகம் இல்லை, என் காலத்தில் பவுன் மூவாயிரம் ரூபாய் அந்த கால கட்டத்தில் தான் ஆரம்பிக்க பட்டது என்று நினைக்கிறேன்,

என் பாட்டியின் காலத்திற்கும், என் அம்மாவின் காலத்திற்கும் பத்து மடங்கு உயர்வு இருந்தது, அதே போல் என் அம்மாவின் காலத்திற்கும் , என் காலத்திற்கும் பத்து மடங்கு உயர்வு, ஆனால் என் அம்மாவின் காலத்தை விட என் காலத்தில் தான் உயர்வு அதிகமாக இருப்பது போல் தெரிகிறது இல்லையா, இந்த புரிதல் யார் தவறு

உங்கள் தாத்தாவிடம் கேட்டு பாருங்கள் அவர்கள் காலத்தில் அரிசி மூட்டை என்ன விலை என்று, உங்கள் தந்தையிடம் கேளுங்கள் அவர்கள் காலத்தில் என்ன விலை என்று , அப்பொழுது ஆன்லைன் வர்த்தகம் இருந்ததா!

இன்னொரு விஷயம் இந்தியாவில் புகழ் பெற்று விளங்கும் ஆன்லைன் வர்த்தக நிறுவனம், அத்யாவிசய உணவு பொருள்களை அதிலிருந்து நீக்கி விட்டது,
சந்தேகம் இருப்பின் இந்த வலையில் மார்கெட் வாட்ச் என்று இருக்கும் அதை அழுத்தி பாருங்கள், என்ன பொருள் என்ன விலைக்கு போகிறது என்று தெரியும்,
உருளை கிழங்கும், சர்க்கரையும் மட்டுமே இப்போது அதிலிருக்கும் உணவு பொருள்,

ஆன்லைன் வர்த்தம் மட்டுமே விலைவாசி உயர்வுக்கு காரணம் அல்ல என்று கூறும் போது எனக்கு தெரிந்த காரணத்தையும் இங்கே சொல்லியாக வேண்டும், இல்லையென்றால், இந்த பதிவு நான் ஆன்லைன் வர்த்தகத்திற்கு ஆதரவளிப்பதர்க்காகவே எழுதியது போல் ஆகி விடும்.

உலக உணவு உற்பத்தியில் சீனாவும் ,இந்தியாவும் 55% உணவை எடுத்து கொள்கிறது,
முழுக்க முழுக்க மற்ற பொருள்களை ஏற்றுமதி செய்ய கவனம் செலுத்திய சீனா, உணவை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்தது, (அதை இப்பொழுது தான் தடை செய்திருக்கிறோம்),

ஐரோப்பிய நாடுகளில் வளர்ந்து வரும் மக்கம் தொகை வளர்ச்சிக்கேற்ப உணவு உற்பத்தி இல்லை, அதுவும் இறக்குமதி தான் செய்கிறது, மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் சொல்லவே வேண்டியதில்லை உணவுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்ய தயாராக இருக்கிறது, மேலும் வளர்ந்து வரும் கச்சா எண்ணையின் விலையால்
உலக நாடுகள் அனைத்தும் எதையும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல இரட்டிப்பு செலவு செய்கிறது,

அந்த செலவு உணவு பொருட்கள் மேல் தானே திணிக்கப்படும், உணவு பொருள்களின் விலை உயர்வை கட்டுபடுத்த கட்டாய உற்பத்தி அதிகரிப்பே தீர்வாக இருக்க முடியும்,
ஆன்லைனை தவிர வேறு காரணங்கள் நிறைய இருக்கும் போது அதை மட்டுமே மாற்றி மாற்றி குறை சொல்வது, கொம்பை விட்டு வாலை பிடித்த கதை தான்

10 வாங்கிகட்டி கொண்டது:

அமர பாரதி said...

//பத்து சதவிகித உயர்வு இருந்தது// பத்து படங்கு என்று இருந்திருக்க வேண்டுமோ? மற்றபடி நல்ல அலசல்.

வால்பையன் said...

வருகைக்கு நன்றி அமரபாரதி!
தவறை திருத்தி விட்டேன்

வால்பையன்

g said...

இதை படித்த உடனே மப்புல எழுதன மாதிரி தெரியுது.
அவனுங்க பிடித்த முயலுக்கு மூன்று கால்தான்.
அவனுங்கள திருத்தமுடியாது.

வால்பையன் said...

//இதை படித்த உடனே மப்புல எழுதன மாதிரி தெரியுது.
அவனுங்க பிடித்த முயலுக்கு மூன்று கால்தான்.
அவனுங்கள திருத்தமுடியாது.//

பதிவர் வட்டத்துல குடிகாரன்னு எனக்கு பேர் வாங்கி கொடுத்துருவிங்க போலருக்கு,
சனி ஞாயிறு விடுமுறை என்பதால் தான் பாருக்கு போகிறோம், நீங்கள் என்னை எல்லா நேரமும் பாரிலேயே கற்பனை செய்து பார்த்து கொண்டிருப்பீர்கள் போலிருக்கு.
விசயத்திற்கு வருவோம், ஆன்லைன் வர்த்தகம் தான் காரணம் என்று வலையில் எழுதுபவர்கள் அனைவரும் வெட்டி ஒட்டுபவர்களே, சரியான விளக்கத்தை அவர்களால் கொடுக்க முடியாது,
அதாவது அவர்கள் முயலே பிடிக்கவில்லை பிறகு எப்படி மூணு கால்

வால்பையன்

புகழன் said...

தேவையான சர்ச்சைதான்.
ஆனால் சர்ச்சை செய்பவர்கள் யாரும் இதனால் பாதிக்கப்படுவதுபோல் தெரியவில்லை.
விலைவாசி உயர்வையும் இன்ன பிற சமூக சீர்கேடுகளையும் பற்றி பேசுபவர்கள் பேசிவிட்டுப் போய் விடுகின்றார்கள்.
பாதிக்கப்படும் பாமரர்கள் யாருக்கும் இதைப் பற்றி சிந்திக்கவே நேரம் இல்லை.
ஒரு ரூபாய்க்கு விற்ற அரிசி பத்து ரூபாய் என்று விலையேற்றமடையும் போது சின்ன பெருமூச்சு ஒன்றை விட்டு விட்டு பத்து ரூபாய் இன்னைக்கு சம்பாதிப்பது எப்படி? அல்லது பட்டினியோடு இன்னும் ஒரு பொழுதைக் கழிப்பது எப்படி என்ற யோசனையில் சென்று விடுகிறார்கள்.
மாற்றம் அவசியம்தான் அது அடிப்படையிலிருந்தே இருக்க வேண்டும்.
ஆனால் அடிப்படை எது என்பதில்தானே இப்பொழுது பிரச்சினை?

கூடுதுறை said...

நான் இதைப்பற்றி எழுத துடித்துக்கொண்டுருந்தேன்.

ஆனால் என்னிடம் தேவையான புள்ளிவிவரங்கள் இல்லை.

தாங்களும் மேலோட்டமாகத்தான் எழுதியுள்ளீர்கள் இன்னும் விரிவாக பதிவிட வேண்டுகிறேன்.

நாம் என்ன எழுதினாலும் நமது அரசியல்வியாதிகள் மண்டையில் ஏறவா போகிற்து.

ஊதுகிற சங்கை ஊதிவைப்போம்.

g said...

///வால்பையன் said...
பதிவர் வட்டத்துல குடிகாரன்னு எனக்கு பேர் வாங்கி கொடுத்துருவிங்க போலருக்கு,
சனி ஞாயிறு விடுமுறை என்பதால் தான் பாருக்கு போகிறோம், நீங்கள் என்னை எல்லா நேரமும் பாரிலேயே கற்பனை செய்து பார்த்து கொண்டிருப்பீர்கள் போலிருக்கு.///உங்க பதிவை படிக்கும்போது நான் கொஞ்சம் மப்புல இருந்தேன். அதான். கோபித்துக்கொள்ளவேண்டாம்.

வால்பையன் said...

//பத்து ரூபாய் இன்னைக்கு சம்பாதிப்பது எப்படி? அல்லது பட்டினியோடு இன்னும் ஒரு பொழுதைக் கழிப்பது எப்படி என்ற யோசனையில் சென்று விடுகிறார்கள்.//

நினைக்கவே எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது புகழன்
தனி மனிதன் ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்

//மாற்றம் அவசியம்தான் அது அடிப்படையிலிருந்தே இருக்க வேண்டும்.
ஆனால் அடிப்படை எது என்பதில்தானே இப்பொழுது பிரச்சினை?//

மாற்றம் தேவையே அடிப்படையின் தேவைகளுக்கு தானே!
அரசியல்வாதிகளின் முற்போக்கு சிந்தனை இல்லாமையே இதற்கு காரணம்,
நிறைய இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கவேண்டும், தேர்தலில் நிற்க வயது உச்ச வரம்பு வேண்டும், கல்வியறிவு வேண்டும், போன்ற சட்டங்கள் முதலில் அமுல் படுத்த வேண்டும்

வால்பையன்

வால்பையன் said...

//நாம் என்ன எழுதினாலும் நமது அரசியல்வியாதிகள் மண்டையில் ஏறவா போகிற்து.//

வார்த்தை விளையாட்டு அருமையாக உள்ளது. முதலில் நானே சரியாக கவனிக்கவில்லை,
விரிவாக எழுத சொல்லி கேட்டுள்ளீர்கள், இதை பற்றி சரியாக எழுத ஒரே ஆள் அண்ணன் மா.சி மட்டுமே ஆனால் அவர் இப்போது பதிவுகள் எழுதுவதில்லை என்பது தான் மிக பெரிய வருத்தமான ஒன்று

வால்பையன்

வால்பையன் said...

//உங்க பதிவை படிக்கும்போது நான் கொஞ்சம் மப்புல இருந்தேன். அதான். கோபித்துக்கொள்ளவேண்டாம்.//

ஏதோ நம்மளால முடிஞ்சவரையில் தமிழக அரசை காப்பாற்றுகிறோம், அவர்கள் நம்மை கவனிக்காவிட்டாலும் பரவாயில்லை, அடிமட்டத்தில் இருக்கும் மக்களை இலவச ஆசை காட்டி ஏமாற்றாமல் இருந்தால் சரி

மற்றபடி கோபிக்க என்ன இருக்கிறது நண்பரே!
நான் குடிகாரன் என்று சொன்னால் தூக்கில் போட்டுவிடுவார்களா என்ன?

வால்பையன்

!

Blog Widget by LinkWithin