ஏமாறுதல் அல்லது ஏமாற்றபடுதல்!!!

சமீபகாலமாக தமிழ்நாட்டில் ஹாட் டாபிக் மல்டி லெவல் மார்கெட்டிங்.
மாபெரும் டுபாக்குரான இந்த தொழிலுக்கு இன்னும் சில பேர் சப்பை கட்டு கட்டுவதை பார்த்தால் பாவமாக இருக்கிறது.

சிறு வயதிலிருந்தே எனக்கு வாய் அதிகம் என்பதால், இவனுக்கு வாய் இல்லைன்னா நாய் தூக்கிட்டு போயிரும் என்று சொல்லுவார்கள். இத்தனை சாதகமாக்கி கொள்ள சில நண்பர்கள் உனக்காக பணம் கட்டுகிறோம். நீ வொர்க் பண்ணு சம்பாரிப்பதில் ஆளுக்கு பாதி என்று சொன்னார்கள், என்ன கான்செப்ட் என்று கேட்டவுடன் சொல்லிவிட்டேன்
இது மல்டி லெவல் மார்கெட்டிங் அல்ல
மல்டி லெவல் சீட்டிங் என்று,

சன் டிவீயில் சிறந்த பத்து படங்களை வரிசை படுத்தும் போது, பத்தாவது இடத்தில் இருக்கும் படத்தை பற்றி சொல்லுவார்கள், "இந்த படத்தை பற்றி தேவையான அளவு அலசி விட்டதால் அடுத்த படத்திற்கு செல்லுவோம்" என்று, இந்த பதிவும் அது போல தான், மல்டி லெவல் மார்கெட்டிங் பற்றி தேவையான அளவு அனைவரும் அலசி விட்டதால், மக்கள் வேறு எத்தனை விதமாக ஏமாறுகிறார்கள் என்று அலசுவோம்,

பத்தாவது இடத்தில் மல்டி லெவல் மார்கெட்டிங்

ஒன்பதாவது இடத்தில் பணத்தை பெருக்குதல் அதாவது ஒன்றுக்கு இரண்டு என்ற முறையில் கள்ள நோட்டு மாற்றுதல், முதலில் நல்ல நோட்டை கொடுத்து வெளியே கொடுத்து பார் யாருக்காவது சந்தேகம் வந்தால் உன் முன்னாடியே நாக்கை புடிங்கிட்டு சாகிறேன்!? என்பான், அவனும் ஏமாந்து பணத்தை கொடுத்து வெள்ளை பேப்பரை வாங்கி வருவான்,இது ஒரு பெரிய நெட்வொர்க்காக செயல் படுவது இவர்களின் சிறப்பு

எட்டாவது இடத்தில் இரும்பை தங்கமாக்குதல் இடம் பெறுகின்றது, ரசவாதம் என்று அழைக்கப்படும் இந்த மோசடி இன்றும் வெளிநாட்டில் கூட சில விஞ்ஞானிகளால் முயற்சி செய்து பார்க்கபடுகிறது. இதற்காக ஒரு கிலோ இரும்பும் வீட்டில் இருக்கும் தங்கத்தையும் கொடுங்கள் என்று வாங்கி கொண்டு பதிலுக்கு அல்வா கொடுத்தல் இவர்களின் சிறப்பு.

ஏழாவது இடத்தில் சாமியாடி குறி சொல்லுதல்,மற்றும் போயோட்டுதல் ஒரு பைசா "முதல்" தேவையில்லை,
இரண்டு கையிலும் வேப்பில்லை கொஞ்சம் சாம்பல் பவுடர் (அதாங்க விபூதி) இருந்தால் போதும், ஆத்தா டைரக்டா வந்து உங்கள் குறைகளை தீர்த்து வைப்பாள், பூஜை செய்யும் போது பணம், நகை மற்றும் கோழி, ஆடு, சில இடங்களில் நிர்வாணமாக பெண், அந்த பெண்ணின் கற்பு பறி போகும் வாய்ப்பு நிறைய உண்டு.

ஆறாவது இடத்திலும் இதே சாமியார்கள், ஆனால் இவர்களுக்கு செலவு உண்டு,
ஆசிரமம் என்ற பெயரில் ஒரு இடத்தை வளைத்து போட்டு பகலிலே பஜனை இரவிலே கும்மாளம் என்று பொழுது போகும், வாயிலிருந்து லிங்கம் எடுத்தல், (லிங்கம்னா "அது" தானே,அது எப்படி வாய்க்குள்ள போச்சு) காற்றில் மோதிரம் வரவழைத்தல் போன்ற சித்து விளையாட்டுகள் பகலிலும், சில சாமியார்கள் பெண்களையும், சில சாமியார்கள் ஆண்களையும்!? பாலியல் தொந்தரவு செய்தல் இரவிலும் நடக்கும்.

ஐந்தாவது இடத்தில் ஜோதிடம் பார்த்து பரிகாரம் சொல்லுதல்,
இதை ஒரு கணிதம் என்று சொல்லும் ஜோதிட சிகாமணிகள் இன்னும் பிட்சை எடுத்து கொண்டிருப்பது ஏன் என்று தெரியவில்லை? ராகு பாக்குறான், கேது கேக்குறான்னு சொல்லி, பத்து அந்தணர்களுக்கு உணவளிக்கணும், பசு தானம் செய்யணும்-இப்படி நிறைய, ஆனா நீங்க அலைய வேண்டாம் காசு கொடுத்துருங்க நாங்களே பண்ணிருவோம்ன்னு கடுக்கா கொடுத்தல் இவர்களின் சிறப்பு!

நான்காவது இடத்தில் சூனியம் வைத்தல், பெரிதாக வேலையில்லை ஆனால் ஓம். கிலீம், க்ரீம் என்று சவுண்டு கொடுக்கவேண்டும், அடுத்தவர்களை கெடுத்து நாம் நல்லாயிருக்க வேண்டும் என்று நினைக்கும் சோம்பேறி நாய்களிடமிருந்து பணம் பிடுங்கம் நல்ல பணியை இவர்கள் செய்கிறார்கள்.

மூன்றாவது இடத்தில் சூனியம் எடுத்தல், இவர்களுக்கும் பெரிதாக வேலையில்லை ஆனால் கடப்பாரையை எடுத்து "அங்கே ஓடுது குத்து, இங்கே ஓடுது குத்து" என்று சவுண்டு கொடுக்க வேண்டும், யாரும் வைக்காத, வைக்கவும் முடியாத சூனியத்தை
கட்டம் வரைந்த தகடு அல்லது கோழி தலை போன்று மறைதிருந்து எடுப்பது இவர்களின் சிறப்பு.

இரண்டாவது இடத்தில் இருப்பது அரசியல்வாதிகள், பொய் சொல்லி ஏமாற்றி ஒட்டு கேட்பது இவர்களின் முதல் வேலை, வாக்குறுதி என்ற பெயரில் மக்களை நம்ப வைத்து பதவிக்கு வந்தவுடன் ஊரையே விலைக்கு வாங்குவது இவர்களின் சிறப்பு, எத்தனை முறை ஏமாற்றினாலும் மக்கள் மீண்டும் மீண்டும் இவர்களிடம் ஏமாறுவது இவர்களின் தனிச்சிறப்பு.

முதல் இடத்தில் இருப்பது புதையல் எடுத்து தரும் சாமியார்கள், இவர்கள் முதல் இடத்தில் இருக்க காரணம், மற்றவர்களாவது பொருள்களை மட்டும் அடித்து சென்றனர்,
இவர்கள் பெற்ற குழந்தைகளையே நரபலி கொடுக்க சொல்வது கொடுமை, அதைவிட கொடுமை இவர்களும் அதை செய்வது

நெஞ்சு பொறுக்குதில்லையே கண்ணம்மா
இந்த நிலை கெட்ட மானிடரை நினைத்திடும் பொழுது

12 வாங்கிகட்டி கொண்டது:

மங்களூர் சிவா said...

கலக்கலா சொல்லிருக்கிங்க அருண்

மங்களூர் சிவா said...

well done. very good post.

மந்தி said...

நல்ல பதிவு

கூடுதுறை said...

முதல் இரண்டு இடங்கள் மாறி உள்ளன.

அரசியல்வாதிக்குத்தான் முதலிடம் தரவேண்டும்.

//வாயிலிருந்து லிங்கம் எடுத்தல், (லிங்கம்னா "அது" தானே,அது எப்படி வாய்க்குள்ள போச்சு) //

இது ரொம்ப அதிகம்...

சாமியார்கள் மட்டும் அல்ல பாதிரியார்களின் அயோக்கியதனங்களை விட்டுவிட்டீர்கள். எல்லோருக்கும் பொதுவாக எழுதுங்கள்.

முக்கியமான ஒரு சிலவற்றை விட்டு விட்டீர்கள்.

1)வங்கிகளில் அல்லது வெளிநாடுகளில் லோன் வாங்கி தருவது (ஆதிகேசவன் வகையறாக்கள் தமிழகம் முழுவதும் அல்ல அல்ல இந்தியா முழுவதும் விரிந்து கிடக்கின்றனர்.)

2)இன்று பணம் கட்டினால் 10 நாளில் 2மடங்கு பணம் அல்லது பொருள் என்று ரூம் போட்டு உள்ளூர் ஆட்களை வைத்து வசூல் அவர்களை மாட்டிவிட்டு ஓட்டம் எடுப்பது

3)வீட்டில் இருந்து கொண்டே கணினி டேட்டா வேலை என்று விளம்பரம் கொடுத்து வேலை தர டெபாசிட் வாங்கி கம்பி நீட்டுவது.

வால்பையன் said...

வருகைக்கு நன்றி மங்களூர் சிவா, மந்தி
கூடுதுறை சுந்தர்
இந்துக்களுக்கு சாமியார், கிறிஸ்தவர்களுக்கு பாதரியார்
என்னை போல் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு எல்லாம் ஒன்று தான்,
கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் தான் என் கடவுள் பெரிது என்று அடித்து கொள்ளுவார்கள்,
ஆனால் எங்களுக்கு கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் ஒரு பக்கம் நாங்கள் ஒரு பக்கம்,

மற்றபடி நீங்கள் சொல்லியிருக்கும் ஏமாற்று வேலைகளும் சேர்த்துக்கொள்ள கூடியது தான், ஏமாந்தது போகும் விழிப்புணர்வு இல்லாத மக்கள் உள்ளவரை ஏமாற்றுபவர்கள் இருக்க தான் செய்வார்கள்.

வால்பையன்

dondu(#11168674346665545885) said...

//வாயிலிருந்து லிங்கம் எடுத்தல், (லிங்கம்னா "அது" தானே,அது எப்படி வாய்க்குள்ள போச்சு) //

யாராவது வச்சிருந்திருக்கணும்தானே. :)))

என்னோட பதிவையும் பார்க்கவும்: http://dondu.blogspot.com/2008/05/blog-post_07.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...
This comment has been removed by the author.
வால்பையன் said...

வருகைக்கு நன்றி! டோண்டு சார்

உங்களுடைய பதிவை தான் முதலில் படித்து இந்த பதிவை எழுதினேன்,
நிறைய பேர் இதே போல் பதிவு எழுதியதால் உங்கள் லிங்க்கை கொடுக்க முடியவில்லை,
நீங்களாவது உங்கள் லிங்கை தொடர்போடு கொடுத்திருக்கலாம்,
பரவாயில்லை நானே கொடுத்து விட்டேன்

வால்பையன்

தருமி said...

அருண்,
மிக நல்ல அறிவார்ந்த பதிவு. ஒவ்வொன்றும் அறிவைத் தொட்டதென்றால், கடைசி வரிகள் மனதையும் தொட்டது.

வால்பையன் said...

//தருமி said...
அருண்,
மிக நல்ல அறிவார்ந்த பதிவு. ஒவ்வொன்றும் அறிவைத் தொட்டதென்றால், கடைசி வரிகள் மனதையும் தொட்டது.//

மூடநம்பிக்கைகளால் மக்கள் செய்யும் முட்டாள் தனம், அவர்களை அவர்களே ஏமாற்றி கொள்வது போல் தான், தீவிரவாதிகள் செய்யும் மூளை சலவையும் இதில் சேர்த்திருக்க வேண்டும், தேடினால் ஏமாறும் மக்களை விட ஏமாற்றுபவர்கள் அதிகமாக அதுவும் தன் செய்வது தவறு என்று தெரியாமலே செய்து கொண்டிருக்கிறார்கள்,
தங்களின் வருகைக்கு நன்றி

வால்பையன்

Unknown said...

வால்பையா, கூடுதுறை சொன்னது எனக்கு சரியா படுது.

//வாயிலிருந்து லிங்கம் எடுத்தல், (லிங்கம்னா "அது" தானே,அது எப்படி வாய்க்குள்ள போச்சு) //


உங்க பதிவு நல்லா தான் இருக்குது

Unknown said...

இந்த தொட்டால் சுகம் , தொடாமல் சுகம் ,தொடு சிகிச்சை ,அதுவும் வைத்தியம் செய்து கற்றும் கொடுத்து அக்குஹீலர் ,மருந்தில்லா உலகம் படைப்போம் .இதுவெல்லாம் எத்தனையாவது இடம் .

!

Blog Widget by LinkWithin