நண்பன் தியாகுவுடன் நடந்த உரையாடல் அல்லது கடவுள் பற்றிய என் கருத்தாடல்!!


நண்பன் தியாகுவை பற்றிய சிறு அறிமுகம்
தியாகு என்னுடைய யாஹூ அரட்டை நண்பன். சென்னையில் இருக்கிறான்.ஒரு முறை நான் சென்னை சென்றிருந்த போது, வா ஊர் சுற்றலாம் என்று அவனை அழைத்தேன், எனக்கு வேலை இருக்கிறது வேண்டுமானால் என் வாகனத்தை எடுத்து செல் என்று சொன்னான், என்னை நேரில் பார்க்காமலேயே எனக்கு வாக்கு கொடுத்தான்.
அந்த நம்பிக்கையை என் நெருங்கிய நண்பர்களிடம் கூட இன்றும் நான் பார்த்ததில்லை, ஈரோட்டில் அவன் நட்பை சொல்லி பெருமை பட்டு கொள்வேன்.

உரையாடலுக்கு வருவோம், நேற்று(சனிக்கிழமை) மாலை என் கைபேசிக்கு அழைத்தான், சம்ப்ருதாய தொடக்கத்தை விட்டி விசயத்திற்கு வருவோம்

தியாகு:எவ்வாறு கடவுள் இல்லை என்று நீ சொல்கிறாய்?

நான்:இல்லை என்பது இல்லை, அதை நிருபிக்கவேண்டிய கட்டாயம் எனக்கில்லை, இருக்கு என்று சொல்லும் நீ தான் நிரூபிக்கவேண்டும்.

தியாகு: கடவுள் இல்லை என்று நீ சொல்வது ஒரு விளம்பரத்திற்காக! கடவுள் நம்பிக்கையாளர்களை தாக்குவதை நீ பொழுதுபோக்காக வைத்திருக்கிறாய்!

நான்: கோயிலுக்கு செல்பவன் முட்டாள் என்றோ, அயோக்கியன் என்றோ நான் என் பதிவில் எழுதவில்லை.

தியாகு:பின் ஏன் கடவுள் மறுப்பாளனாக இருக்கிறாய், பெரியார் கூட மூடநம்பிக்கைகளை தானே எதிர்த்தார், கடவுளை இல்லையே.

நான்:தவறான புரிதல்,மூடநம்பிக்கைகளின் ஆரம்பமே கடவுள் நம்பிக்கை தான்.
அதை நான் முழுவதுமாக எதிர்க்கிறேன்.

தியாகு:உனக்கு தான் தவறான புரிதல், உனக்கு மேல் ஒரு சக்தி இருப்பதை நம்புகிறாயா இல்லையா?

நான்:இல்லை

தியாகு:நான் சொல்வது இயற்கையை பற்றி, அதை உன்னால் கட்டுபடுத்த முடியுமா?
இயற்கையை கடவுளாக வணக்குவதை ஏன் எதிர்க்கிறாய்?நான்:கடவுள் அப்படி உருவாக வில்லை,ஆரம்பத்தில் மனிதர்கள் குழுக்களாக வாழ்ந்த்தார்கள், அவர்களுக்கு ஒரு தலைவன் இருந்தான், அவன் அரசனானான், அவனையே கடவுளாக கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்.

தியாகு:இயற்கைக்கு நன்றி சொல்வது தவறு என்கிறாயா?

நான்:இயற்கை என்பது கல்,மண்,மரம், மற்றும் நாமும் சேர்த்து தான், கேட்க்காத ஒன்றுக்கு நன்றி செலுத்துவதை விட, வாழும் காலத்தில் உடன் வாழும் மனிதர்களுக்கு நன்றி சொல்லு.

தியாகு:அப்படியானால் நமக்கு மேல் ஒரு சக்தியாக இயற்கை இருக்கிறது இல்லையா! அதை உன்னால் கட்டுபடுத்த முடியுமா?

நான்:நீ கூட தான் என் நெருங்கிய நண்பன், நான் சொல்வதை நீ கேட்டு நடப்பாயா?
உன்னை என்னால் கட்டுபடுத்த முடியுமா?

தியாகு:இல்லை

நான்:அப்படியானால் நீயும் கடவுளா?

தியாகு:இயேசு,நபிகள்,புத்தர் எல்லாம் பூமியில் பிறக்கவே இல்லை என்கிறாயா?

நான்:பிறந்திருக்கலாம், ஆனால் அவர்களை கடவுள் என்று கொண்டாடுவது திரிக்கப்பட்ட உண்மைகள், தங்களை கடவுளாக அவர்களே வெளிக்காட்டி கொள்ளவில்லை.

தியாகு:அப்படியானால் கடவுளை வணக்குபவன் முட்டாள் என்கிறாய்.

நான்:ஹா,ஹா,ஹா கடவுள் என்று ஒருவன் இருந்தால், அவன் நேரில் வந்து என்னை வணங்கு என்று சொல்லியிருந்தால், பூமியில் இவ்வளவு மதங்கள், ஜாதிகள் உருவாகியிருக்காது,
அரசன் தன்னை உயர்த்திக்கொள்ள, தன் ஆதரவாளர்களை உயர்த்தி காட்ட உருவாக்கியதே ஜாதி, அவனையும் கட்டுபடுத்த தன் போக்குக்கு ஆட்டி வைக்க மதகுருமார்களால் உருவாக்கியதே கடவுள்.

தியாகு:கடவுள் என்பது ஒரு நேர்மறையான சிந்தனை, மனிதன் ஒழுக்கம் தவறாமல் நடக்க அது உதவும் இல்லையா.

நான்:கடவுளை நம்பாதே,உன்னை நம்பு இது நேர்மறையான சிந்தனையா
கடமையை செய், பலனை எதிர்பாராதே
இது நேர்மறையான சிந்தனையா!
உன் சிந்தனையில் மனிதன் ஒழுக்கமாக இருக்க கண்டுபிடிக்க பட்டதே கடவுள் இல்லையா? அப்படியானால் ஒழுக்கமாக இருப்பவனுக்கு கடவுள் தேவையில்லை சரிதானே.

தியாகு:ஒழுக்கம் என்று எதை சொல்கிறாய்!

நான்:அதை சொல்ல முடியாது, அதை தான் நான் செய்து கொண்டிருக்கிறேன், தெரியவேண்டுமென்றால் என்னுடன் ஒருமாதம் வாழ்ந்தது பார்

44 வாங்கிகட்டி கொண்டது:

Sridhar V said...

விவாதம் நல்லா இருக்கு. இதுக்கு மேல தொடர்ந்தீங்களா இல்லையா?

/கடவுளை நம்பாதே,உன்னை நம்பு இது நேர்மறையான சிந்தனையா
கடமையை செய், பலனை எதிர்பாராதே
இது நேர்மறையான சிந்தனையா!
//

கடவுள் என்பது எப்படி ஒரு உருவாக்கமோ அது போல்தான் 'உன்னை நம்பு' என்று சொல்வதும். Chaos theory என்று சொல்வார்கள். கிரிக்கெட் பந்து வீச்சாளர் மாதிரிதான். பந்து நம்ம கையை விட்டு போற வரைக்கம்தான் நம்ம முயற்சி. அப்புறம் அந்த ஆடுகளத்தின் தன்மை, பந்து விழும் இடம், பந்தடிப்பவரின் திறமை, அவருடைய அந்நேர கவனம், பந்தின் தன்மை, மற்றும் மட்டையடியாளர் தவறாக அடித்து அந்த கேட்சை சக பீல்டர் பிடிக்க அவருடைய தயார் தன்மை - இந்த மாதிரி பல unknown parameters தாண்டிதான் அந்த பந்து வீச்சாளருக்கு விக்கெட் கிடைக்கிறது.

அதாவது விக்கெட் கிடைக்கவில்லை என்று கவலைப்படாமல் பந்தை சரியாக வீச வேண்டும் என்பதே கர்ம யோகம் என்று சொல்லப்படுகிறது. அது நேர்மறை சிந்தனை இல்லை என்றுதான் தோன்று்கிறது.

வால்பையன் said...

வாங்க ஸ்ரீதர்
உதாரணக்கள் என்றுமே கருதாடல்களுக்கு முழுமை கொடுப்பதில்லை என்பது என் எண்ணம், ஆனாலும் உங்கள் உதாரணம் நன்றாக இருக்கிறது

வால்பையன்

கூடுதுறை said...

//அதை நிருபிக்கவேண்டிய கட்டாயம் எனக்கில்லை, இருக்கு என்று சொல்லும் நீ தான் நிரூபிக்கவேண்டும்.//

இப்படிக்கூறிக்கொண்டால் சுலபமாக தப்பித்துக்கொள்ளலாம்.

காலம் காலமாக நாத்திகர்கள் இதைத்தான் பிடித்துக்கொண்டு தொங்குகிறார்கள்

//தவறான புரிதல்,மூடநம்பிக்கைகளின் ஆரம்பமே கடவுள் நம்பிக்கை தான்.
அதை நான் முழுவதுமாக எதிர்க்கிறேன்.//

மூடநம்பிக்கைகள் எத்தனையோ உள்ளன வியாபாரத்தில் லாபம் வரும் என்பதைப்போல

கடவுள் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் எல்லாம் மூடவாதிகள் அல்ல

எப்படி இருந்தாலும் ஆத்திகர்களும் உங்களுக்கு கடவுளை காண்பிக்க இயலாது.

நீங்களும் கடவுளில்லை நிருபிக்க இயலாது.

விவாதம் மட்டும் தொடர்ந்திருக்கும்

வால்பையன் said...

வாங்க கூடுதுறை!
கடவுள் இல்லை என்று நிரூபிக்க முடியாமல் நான் பின் வாங்கவில்லை.
சாத்தியகூறுகளை நான் மதிக்கிறேன். இருக்கு என்பதை தான் நிரூபிக்கவேண்டும்.

எனக்கு மட்டும் விவாதம் பண்ணிகொண்டே இருக்கவேண்டும் என்று ஆசையா என்ன? கடவுள காட்டிங்கன்னா நானும் ஒத்துக்கபோறேன்

வால்பையன்

மதுவர்மன் said...

கூடுதுறைக்கு ஒரு பதில்,

நீங்கள் மனதிலே கற்பனை பண்ணிக்கொண்டு, அது உண்மையிலே இருக்கு என்று வந்து சொல்கின்றீர்கள்.

நான், அப்படியொன்றுமே கற்பனை பண்ணாமல் சும்மா இருக்கின்றேண்.

யார் இப்போது நிறுவவேண்டும்.. நீங்களா? நானா?

இலகு, தேவையில்லாததை கற்பனை பண்ணிக்கொண்டு வந்த நீங்கள் தானே.

கடவுள் இல்லை என்பவர்கள் நிறுவவேண்டிய அவசியமே இல்லை. கடவுள் உண்டு என்று சொல்பவர்கள் மீதுதான் அந்த பொறுப்பு உள்ளது.

நீங்கள் சும்மா அதை இதை கற்பனை பண்ணிக்கொண்டு வந்து சொல்வீர்கள், பிறகு, எங்களை அதை இல்லை என்று நிறுவச்சொல்வீர்களாக்கும்.. எப்படியிருக்கின்றது இது..

பின்வரும் இணைப்பில் முன்னணி விஞ்ஞானிகள் இருவர் (ஒருவர் கடவுள் இல்லை என்பவர், இன்னொருவர் கடவுள் இல்லை என்பவர்) வாதிடுகின்றனன். சென்று பாருங்கள் இலகுவாக விளங்கும்
http://www.wired.com/culture/geekipedia/magazine/geekipedia/faith_smackdown

வால்பையன், உங்கள் கலந்துரையாடல், உங்கள் பதில்கள் மிக மிக தர்க்கரீதியானவை, நான் கூட உங்களை போன்று தான் பதிலளிப்பவன்.

g said...

அருமையான உரையாடல். கடவுள் என்று ஒன்றுமே இல்லை. மனிதனுக்கு அப்பார்ப்பட்ட சக்தி ஒன்று உண்டு. அந்த சக்திதான், இவ்வளவு அழகான-அருமையான உலகை படைத்து, உயிரினங்களையும் படைத்திருக்கிறது. அந்த அபார சக்தியை நம்மால் பார்க்க முடியாது. அந்த சக்தியை நாம் கடவுளாக ஏற்று வழிபடவேண்டிய அவசியமில்லை. இயேசு நாதரோ, முகமது நபிகள் நாயகமோ, கடவுள் இல்லை. அவர்கள் மனிதர்களே. மனிதனாகப் பிறந்தவன் எவனும், எவளும் கடவுள் இல்லை. தனக்கென்று ஒரு சிறிய கூட்டத்தை ஏற்படுத்தவும், எந்த வேலையும் செய்யாமல் அந்தக் கூட்டத்தினரிடமே ஒரு குறிப்பிட்ட தொகையை கடவுள் பெயர் சொல்லி ஏமாற்றி வாங்கி, உண்டு வாழும் பேடிகள் அவர்கள்.

g said...

காலையில் வீட்டிலிருந்து சென்னைக்கு பேருந்தில் வந்துகொண்டிருந்தேன். அப்போ ஒரு சினிமா போட்டான். அந்தப்படத்தை நான் சரியாக கவனிக்கவேயில்லை. ஒன்றை மட்டும் கவனித்தேன். நம்ம நடிகர் விவேக் இருக்காறே, அவரு ஒரு காரின்முன் தேங்காய் மீது கற்பூரத்தை வைத்து ஆரத்தி எடுத்தார். அப்போது ஜப்பான் காரன், லேன்சர் காரைக் கண்டுபிடிச்சான், நாம்பதான் அதற்கு முன்னாடி நின்று தேங்காய் மீது கற்பூரத்தை வைத்து ஆரத்தி எடுக்க கண்டுபிடித்தோம் என்றார் பாருங்கள்! எனக்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை. இன்னொரு விஷயம். உங்களுக்கெல்லாம் கம்ய்பூட்டரை கண்டுபிடித்து கொடுத்தாலும், அந்த கம்ப்யூட்டர்ல தேங்காய் உடைப்பது, சாமிகும்பிடுவது, கடவுள் இருக்கானா? இல்லையா?னு ஆராய்ச்சி செய்வது. வாய்ல நல்லா வருது முடிச்சிக்கிறேன்.

Sanjai Gandhi said...

//எனக்கு மட்டும் விவாதம் பண்ணிகொண்டே இருக்கவேண்டும் என்று ஆசையா என்ன? கடவுள காட்டிங்கன்னா நானும் ஒத்துக்கபோறேன//

பஸ்ல வந்தா 2.30 மனி நேரம்.. ரயிலில் வந்தால் 2 மணி நேரம். கடவுளை பார்க்கலாம். அட நான் தானுங்க கடவுள்.

....வால்.. இந்த விவாதத்தின் மூலம் நீங்கள் சொல்ல வருவது என்ன?....

Sanjai Gandhi said...

//முன்னணி விஞ்ஞானிகள் இருவர் (ஒருவர் கடவுள் இல்லை என்பவர், இன்னொருவர் கடவுள் இல்லை என்பவர்) வாதிடுகின்றனன்.//

2 பேருமே கடவுள் இல்லைனு தான சொல்றாங்க. அப்புறம் எதுக்கு வாதாடனும். பாத்திங்களா.. நீங்க கடவுளை எதிர்க்கிறதால கடவுளுக்கு கோவம் வந்து உங்கள குழப்பி விட்டுடிச்சி... சாமி வந்திச்சி .. போச்சி.. சொல்லிச்சினு உயிரற்ற பொருளை குறிப்பிடுவது போல் குறிப்பிடுகிறார்களே .. ஏன்? ஒரு வேளை பக்த கோடிகள் தூங்குவது போல் நடிக்கிறார்களோ? :(

தருமி said...

அட கடவுளே! இந்தக் காலத்துப் பசங்க எப்படியெல்லாம் பேசுறாங்க ... இதெல்லாம் அந்த சாமிக்கே அடுக்குமா ...!!!

jokes apart, இதெல்லாம் பேசி ஒருத்தரை ஒருத்தர் convince செய்ற விஷயமில்லை; ஒவ்வொருத்தரின் சொந்த மனமுடிவுகளைப் -conviction - பொருத்தது என்று நினைக்கிறேன்.

வால்பையன் said...

வாங்க மதுவர்மன்!
என் பணியை பாதியாக குறைத்து விட்டீர்கள் மிக்க நன்றி!
உங்களை போல தான் எனக்கு நண்பர்கள் வேண்டும், சில சமுதாய மாற்றங்களை ஏற்படுத்த

வால்பையன்

வால்பையன் said...

///SanJai said...
//எனக்கு மட்டும் விவாதம் பண்ணிகொண்டே இருக்கவேண்டும் என்று ஆசையா என்ன? கடவுள காட்டிங்கன்னா நானும் ஒத்துக்கபோறேன//
பஸ்ல வந்தா 2.30 மனி நேரம்.. ரயிலில் வந்தால் 2 மணி நேரம். கடவுளை பார்க்கலாம். அட நான் தானுங்க கடவுள்.
....வால்.. இந்த விவாதத்தின் மூலம் நீங்கள் சொல்ல வருவது என்ன?....///

வாங்க கடவுளே!
இந்த விவாதத்தின் மூலம் நான் சொல்ல வருவது உங்கள மாதிரி கடவுள் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்!அதான்

வால்பையன்

வால்பையன் said...

///தருமி said...
அட கடவுளே! இந்தக் காலத்துப் பசங்க எப்படியெல்லாம் பேசுறாங்க ... இதெல்லாம் அந்த சாமிக்கே அடுக்குமா ...!!!
jokes apart, இதெல்லாம் பேசி ஒருத்தரை ஒருத்தர் convince செய்ற விஷயமில்லை; ஒவ்வொருத்தரின் சொந்த மனமுடிவுகளைப் -conviction - பொருத்தது என்று நினைக்கிறேன்.///

என் நண்பர்களின் மேல் நான் பெருத்த மரியாதை வைத்திருக்கிறேன்! அவர்கள் நம்பிக்கை அவர்களுடையது, என் நண்பன் தியாகு இதுக்கெல்லாம் அசைந்து கொடுக்கும் ஆளல்ல! மதுரைக்கு கூட்டி வந்து உங்ககிட்ட தான் உடனும்னு நினைக்கிறான்

வால்பையன்

வால்பையன் said...

வாங்க ஜிம்ஸா!
மெயிலில் கடைசியில் இருந்ததால் உங்கள் பின்னூட்டத்தை தாமதமாக வெளியிட்ட நேர்ந்தது!
ரொம்பா சூடா இருந்தது உங்கள் பின்னூட்டம்

வால்பையன்

தியாகு said...

நண்பர் மது வர்மனுக்கு அட்ச மற்றும் தீர்க்க ரேகை கூட கற்பனைதான் அதை மட்டும் எப்படி ஏற்றுகொள்வீர்கள்
அதும் இல்லாத ஒன்று தானே ?

Anonymous said...

அட்சரேகையையும், தீர்க்கரேகையையும் நாம் கும்பிட்டு வழிபட தேவையில்லை. அது பாட்டிற்கு கிடந்து விட்டு போகும். அது போல்தான் கடவுளும் என்றால் OK தான்.

வால்பையன் said...

என்ன தியாகு இது! உண்ண பத்தி தான் இங்கே பதிவே ஓடிகிட்டு இருக்கு!
நீ வந்து அட்சரேகை, தீர்க்கரேகைன்னு கதை பேசிகிட்டு இருக்க,
அப்புறம் எதாவது அனானி வந்து கற்பனை ரேகையை நம்புரிங்க! என் கையில இருக்குற கைரேகையை ஏன் நம்ப மாட்டறிங்கன்னு கேப்பான்,
உங்க உதாரணத்திற்கு ஒரு வரம்பே இல்லையா

வால்பையன்

வால்பையன் said...

வாங்க அனானி!
சரியா போட்டிங்க கோலை!
இனி அவன் ஆட்டா மாட்டான் வாலை!
இதுதான் இனி நம்ம வேலை!

வால்பையன்

தியாகு said...

கடவுள் அப்படி உருவாக வில்லை,ஆரம்பத்தில் மனிதர்கள் குழுக்களாக வாழ்ந்த்தார்கள், அவர்களுக்கு ஒரு தலைவன் இருந்தான், அவன் அரசனானான், அவனையே கடவுளாக கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள் ?

இது முற்றிலும் தவறான வாதம் . தனிநபர் உருவவழிபாடு மட்டுமே இறைவழிபாடு இல்லை . முகமதியர்கள் உருவமற்ற ஒன்றைதான் கடவுளாக வழிபடுகின்றனர் . இன்றைக்கும் தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் பண்டிகைகூட தமக்கு உதவுகின்றன இயற்கையை மற்றும் கால்நடை வழிபடும் ஒருதிருநாள் தான் .


கடமையை செய், பலனை எதிர்பாராதே
இது நேர்மறையான சிந்தனையா


ஓஷோவின் கருத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவிரும்புகிறேன்
வில்லன் ஒருவன் வேடிக்கையாக அம்பு எய்தும்போது முழு திறமையும் அவனிடம் இருக்கிறது . ஒரு பரிசிற்காக எயும்பொது எய்வது காட்டிலும் வெற்றி பெறவேண்டும் என்கின்ற நோக்கம் அவனிடம் , அவன் திறமை மாறவில்லை ஆனால் பரிசு பொருள் அவன் திறமையை பிரிகின்றது . கடமையை செய், பலனை எதிர்பாராதே
இது நேர்மறையான சிந்தனையா என்பது இப்பொது உங்களுக்கே புரியும்மென்று நம்புகிறேன்

கடவுளை நம்பாதே,உன்னை நம்பு இது நேர்மறையான சிந்தனையா ?
தங்களுடன் ஒத்த கருத்துதுடைய மற்றும் நெருங்கிய நண்பரான தமிழச்சி அவர்கள் சிலதினங்களுக்குமுன் ஜெம்ஸ் அலன் கருத்துக்கள் எனும் தலைப்பில் ஒரு தொகுப்பு ஒன்றை தான் வலை பதிவில் எழுதி உள்ளார் .

எண்ணங்கள் எத்துனை வலிமையானது என்றும் அதை ஒருமுகப்படுத்த வேண்டிய
அவசியதையும் சொல்லி உள்ளார் . என்னகளை ஒருமுகபடுத்த தியானமே சிறந்த வழி என்பது ஜெம்ஸ் ஆலன் கருத்து . பிராத்தனை அல்லது இறை வழிபாடு என்பது தியானதிற்கு அடிப்படை .

தியாகு said...

கடவுள் அப்படி உருவாக வில்லை,ஆரம்பத்தில் மனிதர்கள் குழுக்களாக வாழ்ந்த்தார்கள், அவர்களுக்கு ஒரு தலைவன் இருந்தான், அவன் அரசனானான், அவனையே கடவுளாக கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள் ?

இது முற்றிலும் தவறான வாதம் . தனிநபர் உருவவழிபாடு மட்டுமே இறைவழிபாடு இல்லை . முகமதியர்கள் உருவமற்ற ஒன்றைதான் கடவுளாக வழிபடுகின்றனர் . இன்றைக்கும் தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் பண்டிகைகூட தமக்கு உதவுகின்றன இயற்கையை மற்றும் கால்நடை வழிபடும் ஒருதிருநாள் தான் .


கடமையை செய், பலனை எதிர்பாராதே
இது நேர்மறையான சிந்தனையா


ஓஷோவின் கருத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவிரும்புகிறேன்
வில்லன் ஒருவன் வேடிக்கையாக அம்பு எய்தும்போது முழு திறமையும் அவனிடம் இருக்கிறது . ஒரு பரிசிற்காக எயும்பொது எய்வது காட்டிலும் வெற்றி பெறவேண்டும் என்கின்ற நோக்கம் அவனிடம் , அவன் திறமை மாறவில்லை ஆனால் பரிசு பொருள் அவன் திறமையை பிரிகின்றது . கடமையை செய், பலனை எதிர்பாராதே
இது நேர்மறையான சிந்தனையா என்பது இப்பொது உங்களுக்கே புரியும்மென்று நம்புகிறேன்

கடவுளை நம்பாதே,உன்னை நம்பு இது நேர்மறையான சிந்தனையா ?
தங்களுடன் ஒத்த கருத்துதுடைய மற்றும் நெருங்கிய நண்பரான தமிழச்சி அவர்கள் சிலதினங்களுக்குமுன் ஜெம்ஸ் அலன் கருத்துக்கள் எனும் தலைப்பில் ஒரு தொகுப்பு ஒன்றை தான் வலை பதிவில் எழுதி உள்ளார் .

எண்ணங்கள் எத்துனை வலிமையானது என்றும் அதை ஒருமுகப்படுத்த வேண்டிய
அவசியதையும் சொல்லி உள்ளார் . என்னகளை ஒருமுகபடுத்த தியானமே சிறந்த வழி என்பது ஜெம்ஸ் ஆலன் கருத்து . பிராத்தனை அல்லது இறை வழிபாடு என்பது தியானதிற்கு அடிப்படை .

தியாகு said...

அட்சரேகையையும், தீர்க்கரேகையையும் நாம் கும்பிட்டு வழிபட தேவையில்லை ஆனால் அது மனிதர்க்கு பயன்தரும் ஒன்றுதான் . அது போலத்தான் இறைநம்பிக்கையும் மானிடகுலதிற்கு .

வால்பையன் said...

வாப்பா தியாகு!
கடவுள் இப்படி உருவாகவில்லை என்று என் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லியிருக்கிறாய், அப்படியே எப்படி உருவானார் என்றும் சொல்லியிருந்தால் வசதியாக இருக்கும்,
இஸ்லாமியர்களுக்கு உருவ வழிபாடு இல்லை என்பது சரி, ஆனால் அவர்கள் மசூதி என்று அழைக்கும் அனைத்தும் சமாதி தான் என்று உனக்கு தெரியுமா?,
இந்துவில் கூட த்வைதம், அத்வைதம் என்று இரு பிரிவுகள் இருந்தது,
உடன்கட்டை பழக்கத்தை ஒழித்த ராஜாராம் மோகன்ராய் இறை நம்பிக்கை உடைய ஆனால் உருவ வழிபாட்டை வெறுத்த ஆன்மீகவாதி, விவேகானந்தர் முதலில் இவருக்கு தான் சீடராக இருந்தார்.

இயற்கைக்கு நன்றி சொல்லும் பொங்கலை பற்றி சொன்னாய்!
நீ சொன்ன பிறகு தான் தமிழ்நாட்டில் மட்டும் விவசாயம் இருக்கிறது என்று எனக்கு தெரிந்தது. இல்லையென்றால் உலகமே அல்லவா நன்றி சொல்லும்.

//ஓஷோவின் கருத்துக்களுக்கு// உவமை என்றுமே கருத்தாடலின் முழுமைக்கு உதவாது.
நீ சொல்லும் உதாரணம் வேறொரு இடத்தில் வேற மாதிரி பயன்படலாம்.
ஓஷோ சொன்னார் என்பதற்காக அப்படியே ஏற்றுகொள்வதற்கு நான் ஓஷோவின் சீடன் அல்ல.

தமிழச்சியின் பதிவில் படித்ததை நீ அங்கேதான் கேட்க வேண்டும்.
உன்னை போல தான் அவர்களும் எனக்கு ஒரு நண்பர்.
கடவுள் இல்லை என்று சொல்லும் சில பகுத்தறிவாளர்கள் கூட தனக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது என்பார்கள்,
இருந்தால் இருந்துட்டு போகட்டும் அதை வணங்க வேண்டிய அவசியமில்லை என்று நான் சொல்வேன்

///அட்சரேகையையும், தீர்க்கரேகையையும் நாம் கும்பிட்டு வழிபட தேவையில்லை ஆனால் அது மனிதர்க்கு பயன்தரும் ஒன்றுதான் . அது போலத்தான் இறைநம்பிக்கையும் மானிடகுலதிற்கு .//

இன்றைய கண்டுபிடிப்புகள் ஒரு காலத்தில் கற்பனையாக இருந்தவை தான்.
ஆனால் எல்லாமே மனிதகுல நன்மைக்கு தான் பயன்படுகிறதா என்று நீ தான் சொல்லவேண்டும்
கடவுளும் கற்பனையே என்று ஒத்து கொண்டதற்கு நன்றி நண்பனே!

வால்பையன்

g said...

///நண்பன் தியாகுவை பற்றிய சிறு அறிமுகம்
தியாகு என்னுடைய யாஹூ அரட்டை நண்பன். சென்னையில் இருக்கிறான்.ஒரு முறை நான் சென்னை சென்றிருந்த போது, வா ஊர் சுற்றலாம் என்று அவனை அழைத்தேன்///சென்னை வரும்போது என்னையெல்லாம் சந்திக்கமாட்டீங்களா!. தியாகுவை மட்டும்தான் சந்திப்பீங்களா?

g said...

///நண்பன் தியாகுவை பற்றிய சிறு அறிமுகம்
தியாகு என்னுடைய யாஹூ அரட்டை நண்பன். சென்னையில் இருக்கிறான்.ஒரு முறை நான் சென்னை சென்றிருந்த போது, வா ஊர் சுற்றலாம் என்று அவனை அழைத்தேன்///சென்னை வரும்போது என்னையெல்லாம் சந்திக்கமாட்டீங்களா!. தியாகுவை மட்டும்தான் சந்திப்பீங்களா?

வால்பையன் said...

அப்படியில்லைங்க ஜிம்ஸா!
இது நடந்தது இரண்டு வருடங்களுக்கு முன்னால்
அதாவது உங்களை சந்திப்பதற்கு முன்
இனி சென்னை வரும்பொழுது உங்களை அழைக்காமல் இருப்பேனா

வால்பையன்

தென்றல்sankar said...

//வாங்க அனானி!
சரியா போட்டிங்க கோலை!
இனி அவன் ஆட்டா மாட்டான் வாலை!
இதுதான் இனி நம்ம வேலை!//

தோடா! வலைப்பூவில் ஒரு டி.ராஜேந்தர்
ssssssssssssssssss
முடியல

Unknown said...

யாரு சார் இவரு....

சரியான மொக்கையா இருக்காரு ..... இவரெல்லாம் எதுக்கு blog open பண்ணுறாரு ...இப்படயும் சில மொக்கயர்கள் ......என்ன கொடும sir இது ...

வால்பையன் said...

வாங்க தென்றல்,
டி,ஆரை மறந்த இந்த சமூகத்துக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் தகும்,
அவரை ஞாபக படுத்தவே அந்த பின்னூட்டம்
மற்றபடி இப்போதெல்லாம் ஏன் டி.ஆர் நகைசுவை படங்கள் எடுப்பதில்லை என்று எனக்கு தெரியாது

வால்பையன்

வால்பையன் said...

வாங்க மேடி,
உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி,
என்னங்க செய்யறது உங்க அளவுக்கு அறிவு பூர்வமா எழுத எனக்கு மசாலா பத்தாது
அதனால தான் எப்படி மொக்கை எல்லாம், நீங்க தாங்கி தான் ஆவணும்

வால்பையன்

மதுவர்மன் said...

நீண்ட நாட்களுக்கு பின்பு அதிகமான பின்னூட்டங்களை பார்த்தேன்.

நண்பர்களே நீங்கள் ஒன்றை செய்யவேண்டும். விஞ்ஞானத்தி, அறிவியலை, அதன் விந்தைகளை படியுங்கள்.

அப்பொழுது புரிவீர்கள் கடவுள் மைய கருத்துக்கள் யாவும் விஞ்ஞானத்தின் முன் அடிபட்டுப்போவதை.

காலாகாலத்துக்கும் பூமியை தட்ட்டையென்றும், பூமி தான் பிரபஞ்சத்தின் மையமென்றும், பூமி நிலையாக இருக்க சூரியன் சந்திரன் அனைத்தும் பூமியையே சுற்றி வருகின்றன என்றும், பூமியைத்தவிர்த்து, சூரியன் சந்திரனை உள்லடக்கி 9 கிரகங்கள் என்றும் நம்பி வந்தவர்களல்லவா நாங்கள்.

இப்போதும் கடவுள் என்ற ஒன்று உண்டு என்பவர்கள், மேற்படி நிரூபிக்கப்பட்ட பொய்களை, இன்னும் உண்மைகள் என்று நம்பிக்கொண்டிருந்தாலும் ஆச்சரியமில்லை.

அறிவியலிம், டார்வினை படியுங்கள், அவரில் ஆரம்பித்த, இன்று ஆதாரங்களுடன் நிரூபிக்கக்கூடிய உயிரியல் பரிணாமத்தை படியுங்கள், இன்னும் வானசஸ்திரத்தை பற்றி படியுங்கள், மருத்துவத்துறையின் ஆச்சரியங்களை படியுங்கள், கடவுள் என்ற ஒன்று உண்டென்று மூடநம்பிக்கை கொண்டவர்களெல்லாம் யதார்த்தபூர்வமாக சிந்திக்கத்தொடங்குவீர்கள்.

'கடவுள் என்ற ஒன்று உண்டு' என்ற விடயம் ஊன்மையாயானால், இவ்விடயம், இடத்துக்கிடம், மக்கட்கூட்டத்துக்கு ஒன்றாக, மதத்துக்கு மதம், எவ்வாறு திரிபுபட்டு, ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கின்றது என்று பாருங்கள். இதுவா உண்மை.

உண்மை அப்படி திரிபு பட்ட, முரண்பட்ட இருக்கும்.

பூமிக்க்கு உபகோள் ஒன்று என்பது 'ஒரு உண்மை'

அது இற்ரைவரை ஒரு பிரபஞ்ச உண்மை. திரிபுபடா, முரண்படா உண்மை. உண்மை என்றால் அப்படியல்லவா இருக்கவேண்டும்.

அதை விடுத்து. கடவுள் உண்டு என்ற முட்டாள் தனமான சிந்தனைகளையெல்லாம் உண்மை என்று சொல்வீர்களானால், உண்மை என்றால் என்ன என்று தெரியாதவர்களாகவே உங்களை கொள்ளவேண்டியிருக்கும்.

Unknown said...

//தியாகு:ஒழுக்கம் என்று எதை சொல்கிறாய்!

நான்:அதை சொல்ல முடியாது, அதை தான் நான் செய்து கொண்டிருக்கிறேன், தெரியவேண்டுமென்றால் என்னுடன் ஒருமாதம் வாழ்ந்தது பார் //ஐயோ பாஸ்,

உங்ககிட்ட போய் ஒழுக்கத்த பத்தி கேட்டா என்ன சொல்லுவீங்க ... உங்களுக்கும் அதுக்கும் சம்மந்தமே இல்லையே ... உங்கல பலபேர் சோதிகிறாங்க பாஸ்... ஆனா எவ்ளோ ஓடுனாலும் தாங்கிகிறீங்க.. நீங்க ரொம்போ நல்லவரு பாஸ்......

பாஸ், உங்களோட அவரு எப்படி பாஸ் வாழமுடியும் .. oppsite ஆ நீங்க

Anonymous said...

//தியாகு:ஒழுக்கம் என்று எதை சொல்கிறாய்!

நான்:அதை சொல்ல முடியாது, அதை தான் நான் செய்து கொண்டிருக்கிறேன், தெரியவேண்டுமென்றால் என்னுடன் ஒருமாதம் வாழ்ந்தது பார் //ஐயோ பாஸ்,

உங்ககிட்ட போய் ஒழுக்கத்த பத்தி கேட்டா என்ன சொல்லுவீங்க ... உங்களுக்கும் அதுக்கும் சம்மந்தமே இல்லையே ... உங்கல பலபேர் சோதிகிறாங்க பாஸ்... ஆனா எவ்ளோ ஓடுனாலும் தாங்கிகிறீங்க.. நீங்க ரொம்போ நல்லவரு பாஸ்......

பாஸ், உங்களோட அவரு எப்படி பாஸ் வாழமுடியும் .. oppsite ஆ நீங்க

வால்பையன் said...

வாங்க மதுவர்மன்:

உங்கள் கருத்துகளை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

வால்பையன்

வால்பையன் said...

//பாஸ், உங்களோட அவரு எப்படி பாஸ் வாழமுடியும் .. oppsite ஆ நீங்க//

அவரு கூட நீங்க பழகி இருக்கிங்களா மேடி.
பழகுனா நானே பெட்டர்ன்னு சொல்லுவிங்க

வால்பையன்

Unknown said...

//பாஸ், உங்களோட அவரு எப்படி பாஸ் வாழமுடியும் .. oppsite ஆ நீங்க//

///அவரு கூட நீங்க பழகி இருக்கிங்களா மேடி.
பழகுனா நானே பெட்டர்ன்னு சொல்லுவிங்க

வால்பையன் //

ஆ! அய்யய்யோ.. பாஸ் .. நம்ம என்ன பழகறதுக்கு அமுதன் , இளமாரனா ? வேண்டாம் பாஸ் , இந்த விளையாட்டுக்கு நான் வரலை..

Rasu said...

அருமையான பதிவு....

ISR Selvakumar said...

என்னை பொருத்தவரை கடவுள் என்பவர் ஒரு இயக்கம். அவ்வளவுதான்!

கஷ்டப்படும் போது உதவுவது, மற்ற நேரங்களில் தூங்குவது போன்ற வேலைகளை கடவுள் செய்வது இல்லை.

கடவுளின் வேலை என்பது 'இயங்குவது'

வால்பையன் said...

வருகைக்கு நன்றி செல்வகுமார்

இயக்கம் அல்லது இயற்கையை போன்று, சரி அப்படியே வைத்து கொள்வோம்.
நீங்களும் ஒரு இயக்கம் தானே, நீங்கள் எதற்காக மற்றொரு இயக்கத்தை வணங்க வேண்டும்.
இயங்குவதேல்லாம் கடவுள் தான் என்று மத நம்பிக்கையாளர்கள் ஒத்துகொள்வார்களா

வால்பையன்

ராஜ நடராஜன் said...

interesting argument.

வால்பையன் said...

மிக்க நன்றி ராஜ நடராஜன்

நிகழ்காலத்தில்... said...

வால்


’கடவுள்’

இது இடுகையின் தலைப்பாக வைத்து
இருக்கிறாரா அல்லது இல்லையா என்பதை முக்கியப்படுத்தாமல்,

நீங்கள் இல்லை என்ற சொல்லக்கூடிய கடவளைப்பற்றி
உங்கள் மனதில் தோன்றுவதை எழுதுங்கள்

ஏனென்றால் எனக்கு உங்களின் நிலை இன்னும் சற்று தெளிவாகவில்லை

நட்புடன்

Anonymous said...

* கஷ்டங்களைச் சொல்வதாக இருந்தால் கடவுளிடம் மட்டும் சொல்லுங்கள். கண்ட இடங்களிலும் கண்ணில் பட்ட மனிதர்களிடம் எல்லாம் நம் துன்பங்களைச் சொல்வதால் எப்பயனும் இல்லை. கடவுளால் மட்டுமே நம்முடைய கஷ்டங்களை பொறுமையுடன் கேட்டு அதற்கு தீர்வு தரமுடியும்.
* பாவங்களை எப்படி தீர்த்துக் கொள்வது என்றால் புண்ணியத்தால் தான் தீர்த்துக் கொள்ள முடியும். போன பிறவியில் செய்த பாவங்களை இந்த பிறவியிலாவது தீர்க்கட்டும் என்ற கருணையினால் தான் இறைவன் நமக்கு பிறப்பினைத் தந்திருக்கிறார்.
* மனம் இருக்கும்வரை ஆசைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் மனதை அடக்கி விட வேண்டும். மனம் அடங்கக் கற்றுக் கொண்டால் மரணநிலையில் இருப்பது போல், ஒரு சக்தியுமின்றி ஜடம் போல் ஆகிவிடுவோம் என்று எண்ணக்கூடாது. மாறாக, மனம் அடங்கும் போது, சகல சக்திகளுக்கும் ஆதாரமான நிலை உருவாகும்.
* பேசும்போது "வளவள' என்று மிகையாகப் பேசாமல் நிதானமாக அளந்து பேச வேண்டும். திருவள்ளுவரும் எதைக் காக்காவிட்டாலும் நாக்கைக் கட்டுப்படுத்திப் பழகவேண்டும் என்று சொல்லியிருப்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

Anonymous said...

* கஷ்டங்களைச் சொல்வதாக இருந்தால் கடவுளிடம் மட்டும் சொல்லுங்கள். கண்ட இடங்களிலும் கண்ணில் பட்ட மனிதர்களிடம் எல்லாம் நம் துன்பங்களைச் சொல்வதால் எப்பயனும் இல்லை. கடவுளால் மட்டுமே நம்முடைய கஷ்டங்களை பொறுமையுடன் கேட்டு அதற்கு தீர்வு தரமுடியும்.
* பாவங்களை எப்படி தீர்த்துக் கொள்வது என்றால் புண்ணியத்தால் தான் தீர்த்துக் கொள்ள முடியும். போன பிறவியில் செய்த பாவங்களை இந்த பிறவியிலாவது தீர்க்கட்டும் என்ற கருணையினால் தான் இறைவன் நமக்கு பிறப்பினைத் தந்திருக்கிறார்.
* மனம் இருக்கும்வரை ஆசைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் மனதை அடக்கி விட வேண்டும். மனம் அடங்கக் கற்றுக் கொண்டால் மரணநிலையில் இருப்பது போல், ஒரு சக்தியுமின்றி ஜடம் போல் ஆகிவிடுவோம் என்று எண்ணக்கூடாது. மாறாக, மனம் அடங்கும் போது, சகல சக்திகளுக்கும் ஆதாரமான நிலை உருவாகும்.
* பேசும்போது "வளவள' என்று மிகையாகப் பேசாமல் நிதானமாக அளந்து பேச வேண்டும். திருவள்ளுவரும் எதைக் காக்காவிட்டாலும் நாக்கைக் கட்டுப்படுத்திப் பழகவேண்டும் என்று சொல்லியிருப்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

Anonymous said...

நீ முட்டாள்.

கர்த்தரே தேவன்.

!

Blog Widget by LinkWithin