வரலாறில் உள்ள கோளாறுகள்

தமிழ் நடிகர்கள் முதன் முதலில் நடிக்க செல்லும் பொழுது அவர்கள் பேசி காட்டும் வசனம்
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் சிவாஜி பேசிய வசனம் தான், ஆனால் அத்வு ஒரு புனைவு என்று நிரூபிக்கப்பட்டால் வரலாற்றை எப்படி நம்புவது,

பின்நவினத்துவ பார்வையில் வரலாறு என்பது "புனைவால் புனையப்பட்ட ஒரு புனைவு" அவ்வளவே, M.G.சுரேஷ் அதை "யுரேகா என்றொரு நகரம்" என்ற நாவலில் மிக அழகாக சொல்லியிருக்கிறார்,

பண்புடன் குழுமத்தில்
"கட்டபொம்மன் வசனங்கள் எல்லாம் "டுபாக்கூர்'தானா?" என்ற தலைப்பில் வந்திருக்கும் இந்த கட்டுரை கட்டபொம்மனின் வரலாற்றிர்க்கே வேட்டு வைக்கிறது. முழு கட்டுரையும் படிக்க அந்த சுட்டியை சொடுக்கவும்.

வரலாறு அனைத்தும் அதன் நம்பிக்கை தன்மையை இழந்து வந்து கொண்டிருக்கிறது.
இம்சை அரசன் படத்தில் வடிவேலுவின் தலையும், ஒரு வீரனின் உடலும் இணையும் காட்சி அதற்கு ஒரு உதாரணம். தன் இனம் என்று தலையில் தூக்கி வைத்து கொண்டு ஆட நமக்கு ஒரு தலைவன் தேவைபடுகிறான், இதற்கு மற்ற இனங்களும் விதி விலக்கல்ல,


பைபிள் கூட தன் ஆதார நிலையை விட்டு பல நிலைகள் கடந்து வந்து விட்டதாக சில சரித்திர ஆசிரியர்கள் சொல்கிறார்கள், தன் தேவைகேற்ப சில இடைசொருகல்கள் எல்லா வேத நூல்களிலும் இருக்கிறது. மாறி வரும் சமூகத்தின் கேள்விகளுகேர்ப்ப அது நடப்பதாக தகவல்,

வரலாற்றின் மீது சந்தேகிக்க பல நூற்றாண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டாம்
சம காலத்தில் நடந்த ஒன்றை சொல்கிறேன்,
சென்ற ஜெயலலிதா ஆட்சியில், கருணாநிதி கைது செய்யப்பட்டார்,
அது ஜெயா டீ.வீயில் அமைதியாக நடந்தது போல் காட்டப்பட்டது,
அந்த நிகழ்வையே சன் டீ.வீயில் "ஐயோ, அம்மா, கொல்றாங்களே" என்று காட்டப்பட்டது.

எதை நம்பும் இந்த பாலாய் போன சமூகம்,

பழங்கதைகளை பேசிதிரிவதை நிறுத்துவோம்,
செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம்
பயணத்தை தொடருவோம்

21 வாங்கிகட்டி கொண்டது:

துளசி கோபால் said...

பத்து வருசத்துக்குள்ளே இருக்கும் 'வரலாறு'கள் கூட எப்படி மறைக்கப்படுது, எப்படி மாற்றி அமைக்கப்பட்டிருக்குன்னு பார்க்கும்போது.........

நானும் 'நடந்தவைகள் நடந்தபடி'ன்னு இருக்கணுமுன்னு சிலவிசயங்களை ஆவணப்படுத்திக்கிட்டு இருக்கேன்.

எல்லாம் நம்ம மக்கள் செஞ்சிருக்கும் குழறுபடிகள்தான்(-:

dondu(#11168674346665545885) said...

முதலில் வீரபாண்டிய கட்டபொம்முலு நாயக்கருக்கு தமிழ் தெரியாது. அவரது தாய் மொழி தெலுங்கு. அப்படியே தமிழ் பேசியிருந்தாலும் அது ரொம்பவுமே கொச்சையான தமிழாகத்தான் இருந்திருக்கும்.

இரண்டாவதாக அவர் வரியை கட்டத்தான் ஜாக்ஸன் துறையின் பின்னாலேயே ஓடினார். ஆகவே வானம் பொழிகிறது ரேஞ்சில் பேச சான்ஸே இல்லை.

இன்னும் பல உள்ளன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

வாங்க டோண்டு அவர்களே!

தோண்ட தோண்ட புது புது உண்மைகள் வெளிவருகிறது,
கட்டபொம்மன் பரம்பரை என்று சொல்லி திரியும் தமிழர்கள் இனி கொஞ்சம் அடக்கி வாசிப்பார்கள் என்று நினைக்கிறேன்

வரியை கட்ட பின்னால் ஓடிய கதை விரிவாக நான் கொடுத்திருக்கும் சுட்டியில் உள்ளது

வால்பையன்

கூடுதுறை said...

//எதை நம்பும் இந்த பாலாய் பொன சமுகம்//

எது பால்,தயிர்,மோர்,நெய் அந்த சமுகமா???

அது பாழாய் போனது!!

புலவர்கள் இருக்கும்வரை புனைவு, அதிக புனைவு, அதீத புனைவு கண்டிப்பாக இருந்தே தீரும்.

வருங்காலத்தில் நமது மக்கள் சொல்வார்கள் இந்த பதிவுகளில்தான் எத்தனை கதை விட்டுள்ளனர் முற்காலத்தில் என்று..

மகன்கள் தான் பேரன்கள் அல்ல அவர்களுக்கு இவற்றை படிக்க ஏது நேரம்???

வால்பையன் said...

////எதை நம்பும் இந்த பாலாய் பொன சமுகம்//
எது பால்,தயிர்,மோர்,நெய் அந்த சமுகமா???///

திரிக்கபடுவதால் அது பாலாய், தயிராய், மோராய் போன சமூகம் தான்,

//வருங்காலத்தில் நமது மக்கள் சொல்வார்கள் இந்த பதிவுகளில்தான் எத்தனை கதை விட்டுள்ளனர் முற்காலத்தில் என்று..//

உண்மைதான், இன்று நீங்கள் உண்மை என்று சொல்லி திரியும் கடவுள் நம்பிக்கை பற்றி தானே சொல்கிறீர்கள்
ஹா,, ஹா.. ஹா,,

வால்பையன்

கூடுதுறை said...

கடவுள் நம்பிக்கை 5000 வருடங்களாக இருந்துவருகிறது...

நாத்திக நம்பிக்கைதான் பதிவுகளில் அதிகம்...

மேலும் இந்தச்சேறு மேலே விழக்கூடாது என்று ஆத்திகர் நிறைய பேர் படித்துவிட்டு நமக்கேன் வம்பு ஒதுங்கிவிடுகின்றனர்.

நமது அமைச்சர் ஆற்காட்டாரின் தயவால் இப்பின்னுட்டத்த்தை பாதியில் முடிக்கிறேன்.

புரியவில்லையா? கரண்ட் போய்விட்டது

வால்பையன் said...

//கடவுள் நம்பிக்கை 5000 வருடங்களாக இருந்துவருகிறது...///

மனித நாகரீகம் தோன்றி 5000 வருடங்கள் ஆகலாம்,
ஆனால் மனித இனம் தோன்றி லட்சகணக்கான வருடங்கள் ஆகிறது,

//மேலும் இந்தச்சேறு மேலே விழக்கூடாது என்று ஆத்திகர் நிறைய பேர் படித்துவிட்டு நமக்கேன் வம்பு ஒதுங்கிவிடுகின்றனர்.//

நானும் "அந்த பக்கம்" இருந்து வரும் சேற்றை என் மேல் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தான் நினைக்கிறேன்.

//நமது அமைச்சர் ஆற்காட்டாரின் தயவால் இப்பின்னுட்டத்த்தை பாதியில் முடிக்கிறேன்.//

:))

வால்பையன்

சாலிசம்பர் said...

வாலு,உங்க கட்டுடைப்புக்கு அளவே இல்லையா?கட்டபொம்மன் ஆங்கிலேய அடிவருடியா இருந்திருந்தா அவரை ஏன் தூக்கில போடப்போறாங்க?

மதுரை நகரின் மையத்தில் நகருக்கே அழகு சேர்க்கும் விதமாக கட்டபொம்மனின் சிலை இருப்பது உங்களுக்கு தெரியும்.அந்த கம்பீரமான ,கலை நுணுக்கம் வாய்ந்த அந்த சிலைக்கு உரிய மரியாதையோ,கவனிப்போ இப்போது இல்லை.வீரத்தின் ஒட்டுமொத்த குத்தகை ஜாதியை சேர்ந்தவராக இருந்திருந்தால் இந்த நிலைமை இருக்காதே என்று எண்ணிய போது தான் அவர் ஜாதி என்ன என்று தெரிந்து கொள்ள தோன்றியது.வலைப் பதிவுகளின் மூலம் தான் அவர் நாயக்கர் சாதியை சேர்ந்தவர் என அறிந்து கொண்டேன்.எப்படி ஒரு கேவலமான சமுதாயத்தில் வாழ்கிறோம் என வழக்கம் போல நொந்து கொண்டேன்.

சாதிவெறியால் ஒரு வீரனின் சிலை இன்று சீந்துவாரற்றுக் கிடக்கிறது.

வால்பையன் said...

அவர் வீரன் இல்லையென்று சொல்லவில்லை,
அந்த வசன காமெடிக்காக தான் இந்த பதிவு,
மற்றபடி நான் ஜாதி முறைகளை முழுவதுமாக எதிர்பவன்,
அவர் என்ன ஜாதியாக இருந்தாலும், ஆங்கிலேய எதிர்ப்பில் அவருடைய பங்கும் உண்டு என்பதில் மறுப்பில்லை,
சிலை கலாச்சாரம் நாளை கட்டபொம்மன் என்ற ஒரு கடவுளை உருவாக்கும்,

முருகனுக்கு சூடம் காட்டு, பிள்ளையாருக்கு உக்கி போடு என்று சொல்லி கொடுக்கும்
சமூகம்,
கட்டபொம்மன், ஊமைத்துரை கதைகளை சொல்லி வளர்த்தாலே போதும் நாட்டும், நாட்டு மக்களும் உருபடியாக இருக்கும்

வால்பையன்

Anonymous said...

எட்டப்பன்தான் உண்மையில் ராஜா என்றும், கட்டபொம்மன் பிழைக்க வந்த இடத்தில் எட்டப்பன் உதவி பெற்று, பின் அவருக்கே தொல்லை தந்தவன் என்றும் ஒரு கருத்தும் உண்டு.

எது உண்மை என்று தெரியவில்லை.

கட்டபொம்மன் தாய் மொழி தெலுங்கு.

அடுக்குமொழி பேசியதாகக் காட்டியது சுவராசியத்திற்காகத்தான்.

வால்பையன் said...

//எட்டப்பன்தான் உண்மையில் ராஜா என்றும், கட்டபொம்மன் பிழைக்க வந்த இடத்தில் எட்டப்பன் உதவி பெற்று, பின் அவருக்கே தொல்லை தந்தவன் என்றும் ஒரு கருத்தும் உண்டு. //

நமக்கு ஏற்றாற்போல் மாற்றி கொள்வது தானே வரலாறு,

வால்பையன்

வால்பையன் said...

வாங்க துளசி கோபால் மேடம்

உங்க பதிவுகளை எல்லாம் படிச்சிட்டு பதில் போடலாம்ன்னு இருந்தேன்
அதான் லேட், மன்னிக்கவும்

வால்பையன்

தியாகு said...

வரலாறு முற்றிலும் புனைவு என்பது மூடதனம் . கட்ட பொம்மன் இல்லை என்றோ அவன் வெள்ளையர்களை எதிர்த்து போரிடவில்லை என்று கூறமுடியுமா ? அடிப்படை நிகழ்வுகளுக்கு முன்பும் பின்பும் சில விடயங்கள் திரிக்க பட்டுஇருக்கலாம் .தங்கள் கூறுவது போல எந்த செய்தி தொலைக்காட்சியும் கலைஞர் கைதை மறுக்கவில்லை .அதுவே அடிப்படை நிகழ்வு அதை யாராலும் மாற்றவும் முடியாது மறக்கவும் முடியாது .

வால்பையன் said...

சிலப்பதிகாரம் ஒரு புனைவு நாவலே
ஆனால் கண்ணகிக்கு சிலை உங்கள் ஊரில் உண்டு
நான் கட்டபொம்மன் என்று ஒருவர் இல்லை என்று சொல்லவில்லை
உண்மைகள் திரிக்கபடுவது பற்றி தான் இந்த பதிவு

வால்பையன்

தியாகு said...

சில சம்பவங்களை அடுத்து நடந்த நிகழ்வுகள் திரிக்கப்பட்டு இருந்தால் ,வரலாறே ஒரு புனைவு என்பது அறிவற்ற செயல் அன்றோ ?

Athisha said...

//
பழங்கதைகளை பேசிதிரிவதை நிறுத்துவோம்,
செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம்
பயணத்தை தொடருவோம்
//

ஆஹா ஆஹா..... முடியல

Anonymous said...

பாண்டியன் பரம்பரைல வந்த எல்லோருமே அப்ப தெலுங்கர்ந்கதானா

ஏன்னா நம்ம வீர பாண்டிய கட்ட பொம்மனும் பாண்டியன் தனே

என்னா டோண்டு சார் பதில் சொல்விங்களா ??????

Unknown said...

யோவ் சுதாகர்,
பாண்டியன் தமிழன் தான். ஆனால் வீரபாண்டிய கட்டபொம்முலு நாயக்கர் ஒரு தெலுங்கன் போதுமா

Anonymous said...

your good but you dont like one of the political party you dont say abuthing about that pary aotherthen u r good i hope never u dont doing that kind of work ,,,,,

வால்பையன் said...

அனானி அண்ணே புரியல!
தமிழ்ல சொல்லுங்கண்ணே!

sivakumar said...

May i know what is the mother tongue of E.V.Ramaswamy(periyar) who brought mordenised and brought new letters to Tamil.

Is he a Tamilian?...i simply disagree with the feed back of Dondu as it is completely baseless and barbaric.

In todays context ,If some one disrespect tamil in public and don't speak tamil properly then he would obviously a person whose mother tongue is tamil.

!

Blog Widget by LinkWithin