எதிர்காலத்துக்கு செல்லும் இயந்திரத்தை கண்டுபிடித்து விட்டேன்!!

சொன்ன நம்பனும், ரொம்ப நாளா எதுவும் எழுதாம இருக்கும் போதே தெரிய வேணாமா ஏதோ ஆராய்ச்சி நடக்குதுன்னு, இருந்தாலும் நம்பாதவங்களுக்கு புரிய வைக்கவேண்டியது என் கடமை,

ஓரளவுக்கு படித்தவர்களுக்கு ஐன்ஸ்டினை தெரியாமல் இருக்காது,
தனது சார்பியல் தத்துவத்தில் எதிர் காலத்துக்கு செல்ல முடியும் என்று நிருபித்தவர்,

ஒளி வேகத்தில் செல்ல கூடிய ஒரு வாகனத்தில் நாம் விண்வெளியை பத்து வருடம் சுற்றினால், திரும்ப வரும்பொழுது பூமியில் நூறு வருடம் ஆகிருக்கும்,

ஆனால் இதில் முக்கியமாக கவனிக்கவேண்டிய ஒன்று,
சினிமாவில் அதாவது back to the future, time machine, terminator படத்தில் வருவது போல் எந்த சூழ்நிலையிலும் உங்களால் இறந்த காலத்திற்கு செல்ல முடியாது, அப்படி யாரேனும் முடியும் என்று சொன்னால் அவர்களை மனநல மருத்துவமனையில் சேருங்கள்.

இறந்த காலத்திற்கு செல்லக்கூடிய ஒரே காரணி நமது சிந்தனை மட்டுமே,
நமது அறிவுக்கு சிந்தனையே காரணியாக இருக்கிறது, நமது சிந்தனைக்கு இறந்த காலமே மூலமாக இருக்கிறது, நம் முதல் சிந்தனைகள் ஞாபகத்திர்க்காக பயன்பட்டது,
நமது ஞாபகங்கள் இறந்தகாலத்தில் புதைந்துள்ளன, இறந்தகாலம் மட்டும் இல்லையெனில் நமக்கெல்லாம் அறிவே இருந்திருக்காது,
ஆனால் துர்தரிஷ்டம் நான் கண்டுபிடித்த இயந்திரத்தால் இறந்தகாலத்துக்கு செல்ல முடியாது,மக்களிடையே எதிர்காலத்துக்கு செல்வதைவிட இறந்தகாலத்திற்கு செல்வதற்க்கே விருப்பம் அதிகம், அவர்கள் நடந்து முடிந்தவற்றையே மாற்றி அமைக்க நினைக்கிறார்கள், எதிர்காலத்தை பற்றி அவர்களுக்கு கவலை இல்லை,
ஆனால் என்னால் முடிந்தது உங்களை எதிர்காலத்துக்கு அழைத்து செல்ல மட்டுமே,

எதிர்காலம் என்பது என்ன "நாளை",
என்னோடு "நாளைக்கு"
யார் யார் வருகிறீர்கள்,நான் அழைத்து செல்கிறேன்,
ஆனால் ஒரு நாள் காத்திருக்கவேண்டும்


"நாளை" வந்துவிடும்!

நாளை சந்திப்போமா!!!

20 வாங்கிகட்டி கொண்டது:

இளைய கவி said...

நல்லாத்தான போய்கிட்டுஇருக்கு அப்புறம் ஏன் இந்த கொல வெறி..
அப்புறம் மிக்கயமான மேட்டர்.. மெ த பஸ்ட்

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
வால்பையன் said...

//அப்புறம் ஏன் இந்த கொல வெறி.//

உங்களுக்கு இருக்கலாம் எனக்கு இருக்க கூடாதா ?

வால்பையன்

Anonymous said...

மீ தெ செகண்ட்,

ரெண்டாவது வந்திருக்க கலர் பின்னூட்டம் ஸ்பாம் , குப்பைத்தொட்டில போட்டுருங்க, க்ளிக்கினா உங்க கம்பூட்டர் அம்பேல்

வால்பையன் said...

தூக்கியாச்சு!

//மீ தெ செகண்ட், //
இது எதுக்கு ஒண்ணாங்கிளாஸ் படிக்கிற மாதிரி

வால்பையன்

தியாகு said...

ஒளி வேகத்தில் செல்ல கூடிய ஒரு வாகனத்தில் நாம் விண்வெளியை பத்து வருடம் சுற்றினால், திரும்ப வரும்பொழுது பூமியில் நூறு வருடம் ஆகிருக்கும்,

இது எப்படி சாத்தியம் என்று விளக்கவும்

தியாகு said...

ஒளி வேகத்தில் செல்ல கூடிய ஒரு வாகனத்தில் நாம் விண்வெளியை பத்து வருடம் சுற்றினால், திரும்ப வரும்பொழுது பூமியில் நூறு வருடம் ஆகிருக்கும்,

இது எப்படி சாத்தியம் என்று விளக்கவும்

Tech Shankar said...

அப்படியே.. செத்தவனை / வளை உயிர்ப்பிக்க ஏதாவது உறுப்படியா கண்டு பிடிங்கய்யா..

புண்ணியமாய் போகட்டும்.

சுக்ராச்சாரியார், தேவயானி, கசன் - இவர்களுக்கிடையே 'செத்தவனைப் பிழைக்க வைக்கும் ஆற்றல்' பற்றிய கதை படித்திருக்கிறேன்.

வால்பையன் said...

தியாகு இதற்கென்று தனியாக ஒரு பதிவே போடனும்,
முடிந்தவரை விளக்குகிறேன்,
நீ ஒரு ரயிலில் செல்கிறாய், அது 60 கி.மீ வேகத்தில் செல்கிறது,
எதிரில் ஒரு ரயில் வருகிறது அதுவும் 60 கி.மீ வேகத்தில் வருகிறது,
ஆனால் உன் பார்வைக்கு அது 120 கி.மீ வேகத்தில் செல்கிறது,
புரிகிறதா, அதே போல் நீ போகும் திசை நோக்கி இன்னொரு ரயில் வருகிறது,
நீ இதிலிருந்து அதற்கு தாவலாம், எதையும் வாங்கலாம்,அங்கே வேகம் ஒரு பொருட்டே அல்ல,
இது தான் வேக கோட்பாடு,
அதுபோல் வெளியில் பூமியில் இருப்பதை போல் கிழக்கு மேற்கு எல்லாம் கிடையாது,
என் பதிவில் இருக்கும் படம் போல ஒரு வட்ட வடிவ உருளையாக தான் இந்த பிரபஞ்சம் அல்லது பயணம்,
நீ போகும் வேகத்தை விட நீ போகும் இடம் உன்னை நோக்கி இருமடங்கு வேகத்துடன் வரும், அது வேறு எதுவுமல்ல பூமி தான், நீ செய்யும் பயணத்தில் வேகம் இருக்கும் ஆனால் காலம் இருக்காது,
ஆனால் பூமியில் இருப்பவர்களுக்கு காலம் இருக்கும்,
இன்னும் புரியவில்லை என்றால் நல்ல பாரில் ஒரு புல் வாங்கிட்டு கூப்பிடு விளக்கிபுடுறேன், விளக்கி

வால்பையன்

வால்பையன் said...

//அப்படியே.. செத்தவனை / வளை உயிர்ப்பிக்க ஏதாவது உறுப்படியா கண்டு பிடிங்கய்யா..//

வாங்க தல!
இறந்தவர்கள் என்றாலே இறந்தகாலம்,
அங்கே செல்ல வாய்ப்பு இல்லை,
யாராவது கூட்டிபோறேன்னு சொன்ன போயராதிங்க

வால்பையன்

dondu(#11168674346665545885) said...

இறந்தகாலத்துக்கு செல்வது குறித்து நான் இட்ட அந்த நாளும் வந்திடாதோ என்னும் பதிவைப் பார்க்கவும்

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

வருகைக்கு நன்றி டோண்டு அவர்களே!

//இறந்தகாலத்துக்கு செல்வது குறித்து நான் இட்ட அந்த நாளும் வந்திடாதோ என்னும் பதிவைப் பார்க்கவும்//
படித்தேன், பிடித்த வரிகளை கீழே கொடுத்துள்ளேன்.

//"அண்ணா, கோகுலத்தின் காலம் நம்மைப் பொருத்தவரை முடிந்து விட்டது. அதற்கு திரும்பப் போவது இயலாது,//
திரும்ப போவது இயலும், ஆனால் பருவம் திரும்பாது.

//சொன்ன விஷயத்தை சுவாரசியமாகச் சொல்ல வேண்டும் என்ற நிலை உருவானது.//

இது சிறப்பு, மேலும் சிறப்பு, மேலும் மேலும் சிறப்பு வகையறாவில் சேரும் நானும் அதை தான் கடைபிடிக்கிறேன்

என் பதிவிலேயே இறந்த காலத்திற்கு செல்வதை பற்றி சொல்லியிருக்கிறேனே!
//இறந்த காலத்திற்கு செல்லக்கூடிய ஒரே காரணி நமது சிந்தனை மட்டுமே,
நமது அறிவுக்கு சிந்தனையே காரணியாக இருக்கிறது, நமது சிந்தனைக்கு இறந்த காலமே மூலமாக இருக்கிறது, நம் முதல் சிந்தனைகள் ஞாபகத்திர்க்காக பயன்பட்டது,
நமது ஞாபகங்கள் இறந்தகாலத்தில் புதைந்துள்ளன, இறந்தகாலம் மட்டும் இல்லையெனில் நமக்கெல்லாம் அறிவே இருந்திருக்காது, //

வால்பையன்

g said...

வாலு ஏதோ காலத்த பத்தி சொல்லுறாரு. இவ்வளவு நாள் எங்கேயா போயிருந்தே?

வால்பையன் said...

//வாலு ஏதோ காலத்த பத்தி சொல்லுறாரு. இவ்வளவு நாள் எங்கேயா போயிருந்தே?//
ஜிம்ஷா
இப்படி பதிவ
பாத்தவுடனே கண்ணுல தண்ணி வர்ற மாதிரி எழுதுறதுக்கு பதிலா
மேட்டர் கிடைக்கரவரைக்கும் இல்லாத மூளைய கசக்கிட்டு இருன்னு ஒரு கிரேக்க பெரியவர் சொல்லியிருக்காராம்

வால்பையன்

JK said...

எதிர்காலமும் வேண்டாம் ...இறந்த காலமும் வேண்டாம்....
நிகழ் காலத்தை பற்றி யோசிப்போம் ..தலைவா!!!!!

வால்பையன் said...

//எதிர்காலமும் வேண்டாம் ...இறந்த காலமும் வேண்டாம்....
நிகழ் காலத்தை பற்றி யோசிப்போம் ..தலைவா!!!!!//

அட என்னங்க ஜே.கே இதுக்கெல்லாம் போய் சீரியஸ் ஆகிட்டு
லேபுல பாருங்க இது ஒரு மொக்க பதிவுன்னு போட்ருக்கும்

வால்பையன்

கூடுதுறை said...

ஆகா !!!

இந்த மக்களை பதிவை பார்வையிட வைக்க என்னவெல்லாம் சுற்ற வேண்டியுள்ளது.

நான் ஒரு வாரம் ஊரில் இல்லை. அதனால் உடனே இந்த மொக்கையை பார்க்காமல் தப்பித்தேன்.

ஏன் ஒரு நாள் எதிர்காலத்தோடு நிறுத்திவிட்டீர்கள்.

ஒரு வருடம் என்று கூறி இருக்கலாமே?

வால்பையன் said...

//ஏன் ஒரு நாள் எதிர்காலத்தோடு நிறுத்திவிட்டீர்கள்.
ஒரு வருடம் என்று கூறி இருக்கலாமே?//

நீங்க தான் வாங்க கூட்டிட்டு போறேன்!
ஆமா நம்ம ஈரோடு பதிவர் சந்திப்பு என்னாயிற்று?

வால்பையன்

குமரன் (Kumaran) said...

வால்பையரே. அப்படியே பத்து வருடம் ஒளி வேகத்தில் சுற்றி வந்தாலும் பூமியில் அது நிகழ்காலமாகத் தானே இருக்கும்? நமக்குத் தான் பத்தே வயது கூடியிருக்கும். அவ்வளவு தான். அது எதிர்காலத்திற்குச் செல்வதாகாதே.

வால்பையன் said...

//குமரன் (Kumaran) said...
வால்பையரே. அப்படியே பத்து வருடம் ஒளி வேகத்தில் சுற்றி வந்தாலும் பூமியில் அது நிகழ்காலமாகத் தானே இருக்கும்? நமக்குத் தான் பத்தே வயது கூடியிருக்கும். அவ்வளவு தான். அது எதிர்காலத்திற்குச் செல்வதாகாதே.//

சார்பியல் தத்துவபடி நாம் பத்து வருடம் சுத்தும் போது பூமியில் நூறு வருடம் ஆகிருக்கும். அதாவது தொண்ணூறு வருடங்கள் அதிகமாக

வால்பையன்

!

Blog Widget by LinkWithin