உண்மை என்றால் என்ன? அது எத்தனை வகைப்படும்?

வாய்மையே வெல்லும் என்று தான் இந்தியாவில் வளர்க்கபடுகிறோம்.
ஆனால் இது தான் உண்மை என்ற நிலைபாடு இடம், பொருள், ஆட்களுகேர்ப்ப மாறுபடுவது அனைவரும் அறிந்ததே. உலகில் இருமாறி கொள்கையில் உண்மையும் உள்ளது, அது உண்மை இல்லையென்றால் பொய்யாகவே நம்பபடுகிறது.

உண்மை போன்று விவாதத்திற்கு உள்ளாக்கப்படும் விஷயம் மிக குறைவே,
அது வேறு விசயமாக இருந்தாலும் அதன் உண்மை தன்மை கேள்விக்குள்ளாக்க படுகிறது, முடிவில்லாது முடிக்கப்படும் விவாதங்கள் இரு தன்மையிலும் நிலை கொள்கிறது, அது வாதி, பிரதிவாதிகளின் நம்பிக்கை தன்மையில் ஒளிந்து கொள்கிறது, ஆனாலும் அது உண்மையா, பொய்யா என்பது முடிவில் முடியாது.

வாதங்களில் முன்முடிவுகளே உண்மையாக நம்பபடுகிறது, இரண்டு வாதிகளுக்குமே,
சில நேரங்களில் விட்டுகொடுக்க பட்டாலும், வாதியின் நிலைபாடு மாறுவதே உண்மையான உண்மையின் வெற்றி, ஆனாலும் எல்லா வாதத்திலும் இது நடக்கிறதா என்பது கேள்விகுள்ளாக்கபடவேண்டிய வாதம்,

உண்மையில் திட தன்மையுள்ள நிலைப்பாடுகள் மட்டுமே நிருபிக்க பட தகுதியுள்ள உண்மைகளாக உள்ளன, அதை நிருபிப்பது சுலபம். நம்பிக்கையின் அடிப்படையில் உள்ளவை, என்றென்றும் இறுதி தன்மை இல்லாததாகவே இருக்கிறது,


நம்பிக்கையில் தனிமனித நம்பிக்கை மற்றும் தனிமனிதனை பற்றிய நம்பிக்கையும் கேள்விக்குள்ளாக்க படுவது, தோற்றம் பற்றிய நிலைபாடு நமக்குள் ஒரு நம்பிக்கையை தரும், அவரவர் நம்பிக்கையும், கருத்துக்களும், குணங்களை பற்றிய நம்பிக்கை தரும்.
ஆனால் அவையெல்லாம் உண்மை தானா?

இதெல்லாம் எதுக்குன்னா இளயகவி போட்ருக்கிற இந்த பதிவ நம்பாதிங்க நண்பர்களே

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

3 வாங்கிகட்டி கொண்டது:

KARTHIK said...

இளையகவிய விட்டா உங்களுக்கு வேற மேட்டர் கிடைக்காதா.

இத படிச்சு தலைவலி வந்ததுதான் மிச்சம்
தயவு செஞ்சு கொஞ்சம் புரியும் படி எழுதுங்க பாஸ்

வால்பையன் said...

//கார்த்திக் said...
இளையகவிய விட்டா உங்களுக்கு வேற மேட்டர் கிடைக்காதா.
இத படிச்சு தலைவலி வந்ததுதான் மிச்சம்
தயவு செஞ்சு கொஞ்சம் புரியும் படி எழுதுங்க பாஸ்//

என்னங்க பாஸ் பண்றது,
எழுதுறதுக்கும் ஒண்ணும் மேட்டர் இல்ல!
அவன் வேற என் மானத்தை கூறு கட்டி விக்கிறான்,
எப்படி புரியாம எதாவது எழுதுனா, மக்கள் பரிதாபப்பட்டு
என்னை நம்புவாங்கன்னு ஒரு நம்பிக்கை தான்

வால்பையன்

வால்பையன் said...

விடுபட்டு போன உண்மைகள்!
வலியவர்களிடம், பெரும்பான்மையினரிடமும் போய், உண்மையாக உருமாறுகிறது,
விளிம்பு நிலை மனிதர்கள் உரக்க கத்தினாலும் குமட்டில் குத்து தான் வாங்க வேண்டியிருக்கிறது.

வால்பையன்

!

Blog Widget by LinkWithin