இந்திரலோகத்தில் நா.(றின) அழகப்பன்



எதோ ஒரு புண்ணியவான் ப்ரிவியு ஷோ பார்த்துவிட்டு எல்லா நண்பர்களுக்கும் படம் படு டப்பா என்று குறுந்தகவல் அனுப்பி இருக்கிறார்.
அதை மறுத்து கதையின் நாயகன், செய்தி தாள்களில் பயங்கர பில்டப் கொடுத்தார்,
படம் பார்த்த பின்பு தான் தெரிகிறது, புண்ணியவான் செய்த நல்ல காரியம்.

தம்பி ராமையா படத்தின் டைரக்டர், அவர் அண்ணன் ராமையா(குரு) யாரென்று தெரியவில்லை, மிக அருமையாக வந்திருக்க வேண்டிய படம், சுந்தர்.சி டைரக்ட் செய்திருந்தால் நூறு நாள் கேரண்டி, கிரேசி மோகன் வசனம் எழுதி இருந்தால் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிருக்கும்,

காமெடி நடிகர்கள் கருத்து சொல்லும் ட்ரெண்ட் இது போலிருக்கு, கருத்து சொல்கிறேன் பேர்விழி என்று எல்லார் கழுத்தருத்தது தான் மிச்சம், ஒரு பாட்டு கூட என் காதில் விழவில்லை, என் காது மீது தவறா? மதுரை குரு தியேட்டர் மீது தவறா? மதுரைக்காரர்கள் என் சந்தேகத்தை தீர்த்து வைக்கவேண்டும்.


எனக்கு எழுத்து பிழை வரும் என்பது எல்லோருக்கும் தெரியும், படத்தில் நாயகன் பள்ளி கொள்வோம் என அழைக்க, அந்த பெண் நாம் ஏன் பல்லியை கொல்லவேண்டும் என்று கேட்க கிரேசி மோகன் ஸ்டைலை காப்பி அடித்தது தெரிகிறது, என் எழுத்து பிழை பரவாயில்லை என்று தோன்றுகிறது.

படத்தை பார்க்கையில் மொத்தம் இரண்டு முறை சிரித்தேன்!!?. கிங்காங், எமன் வடிவேலுவிடம் நீங்கள் நல்லவரா, கெட்டவரா என்று கேட்கும் போதும், படத்தின் முடிவில் நாயகி ஹிந்தியில் பேசுவதும் காமெடி( இது ஒரு முழு நீள காமெடி படம் )

நல்ல A.C தியேட்டரில் படம் பார்த்தல் அடிக்கிற வெயிலுக்கு இதமாக இருக்கும், எதற்கும் காதில் வைத்து கொள்ள பஞ்சை எடுத்து செல்லுங்கள்.

இயக்குனருக்கு திரைக்கதை அமைப்பதில் கொஞ்சம் அனுபவம் தேவை

9 வாங்கிகட்டி கொண்டது:

மங்களூர் சிவா said...

எச்சரிக்கைக்கு நன்றி.

இன்னொரு நண்பரும் நேற்றே பதிவு போட்டு எச்சரித்திருக்கிறார்.

ஸ்ரீ said...

நான் நேத்து தாங்க இதை பாத்து தொலைச்சேன். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்................ முடியலை :(

வால்பையன் said...

நல்லவேளை நண்பர்களோடு போயிருந்தேன், இல்லையென்றால் பால்கனியிலிருந்து கிழே குதித்திருப்பேன்.

வால்பையன்

பிரேம்ஜி said...

நல்ல வேளை சொன்னீங்க. ரொம்ப நன்றி.

கருப்பன் (A) Sundar said...

பணத்தையும் நேரத்தையும் மிச்சமாக்கியமைக்கு நன்றி! வடிவேலுவெல்லாம் கவுண்டமனி மாதிரி 2-nd ஹீரோவா நடிக்கிறத விட்டுட்டு எதுக்கு இந்த கொலை வெறினு தெரியல :-(

வின்னர், கிரி, மருதமலை எல்லாம் வடிவேலுவுக்கு நல்ல பெயர் வாங்கி குடுத்துச்சு. பயபுள்ளைக்கு ஆசை ஓவரா போச்சு.

நித்யன் said...

நான் பார்த்த நொந்த காரணத்தை நானே அறியும் முன்னே... நீயும் பார்த்து ஏன் நொந்தாய், வால்பையா...

வால்பையன் said...

//வின்னர், கிரி, மருதமலை எல்லாம் வடிவேலுவுக்கு நல்ல பெயர் வாங்கி குடுத்துச்சு. பயபுள்ளைக்கு ஆசை ஓவரா போச்சு.//

வின்னர், வடிவேல் காமெடிக்கு ஒரு மைல்கல்,
கிரி, மருதமலை என்று வடிவேலுவை அடி வாங்கியே பார்த்து விட்டதால்
இந்த படம் காமெடிக்கு எடுபடவில்லை,

//நான் பார்த்த நொந்த காரணத்தை நானே அறியும் முன்னே... நீயும் பார்த்து ஏன் நொந்தாய், //

:))

வால்பையன்

நிவிஷா..... said...

innum padam paarkala..
//அந்த பெண் நாம் ஏன் பல்லியை கொல்லவேண்டும் என்று கேட்க//
lol

natpodu
nivisha

வால்பையன் said...

மங்களூர் சிவா, ஸ்ரீ,பிரேம்ஜி,கருப்பன்,நித்யகுமாரன்,நிவிஷா

வருகைக்கு நன்றி

!

Blog Widget by LinkWithin