தமிழ் இலக்கியத்தில் ஏதேனும் ஓட்டை விழுந்து விட்டதா?

கடந்த சில நாட்களாகவே எதுவும் தோன்றவில்லை எழுதுவதற்கு. சரக்கு இருந்தால் தானே தோன்றுவதற்கு. ஆனாலும் வாசிப்பதை நிறுத்தவில்லை நான். கடந்த சில நாட்களாக வலை மற்றும் பத்திரிகைகளில் சூடான விவாதம் ஜெயமோகன் மற்றும் சாருநிவேதிதா சண்டை தான். சமகால எழுத்தாளர்களில் சாருவை நான் தெரிந்து கொண்டது குமுதத்தில் கோணல் பக்கங்கள் மூலம்.

ஜெயமோகனின் ஒரு படைப்பை கூட இதுவரை நான் படித்ததில்லை. ஆனால் சாருவின் 49 பக்க சண்டை செலவிலாத விளம்பரத்தை ஜெமொவிர்க்கு பெற்று தந்து விட்டது.
சரி என்னய்யா மேட்டர், ஒன்றுமே இல்லை, பெரிதாக சொல்லவேண்டுமென்றால் சாரு பொய் சொல்கிறார் என்ற குற்றசாட்டு. அதற்கு 49 பக்க பதில் தேவையா? சரி அப்படியே உங்களுக்குள் உள்குத்து இருந்தாலும் அதில் மற்றவரை ஏன் இழுக்க வேண்டும். M.G.சுரேஷ் உங்கள் யார் வம்புக்கு வந்தார் இப்பொழுது, ஆர்னிகா நாசர் என்ன செய்தார் உங்களை.

படைப்பு திறமை அவரவர் உரிமை, ஆர்னிகா நாசரை போல் ஒரு விஞ்ஞான புனைவு கதைகளை உங்களால் படைக்க முடியுமா! இன்றும் பழைய புத்தக கடைகளில் ஆர்னிகாவின் குறுநாவல்கள் கேட்டு வாங்க படுகின்றன. உங்கள் புதுசே தூங்கி கொண்டு தானே இருக்கிறது.

அடுத்தவர்களின் படைப்புகள் சாக்கடைகள் என்றால், உங்களுடயவைகளை எழுதியபின் நீங்கள் படிப்பதில்லையா. படித்து பாருங்கள் நீங்களே சாக்கடைக்குள் தான் உட்கார்ந்து இருப்பீர்கள்.
***************************************************
இது ஒன்றும் எனக்கு புதிதல்ல. பலமுறை இவ்வாறு நடந்திருக்கிறது. நானும் திருந்தியபாடில்லை.
ஒருமுறை இப்படித்தான் 93/94 இருக்கும் என்று நினைக்கிறேன் அப்பொழுது நான் கல்யாணத்திற்கு வீடியோ எடுக்கும் வேலை பார்த்து கொண்டு இருந்தேன். அது ஒரு முஸ்லீம் கல்யாணம். பெண் வீட்டார்களை தனியே எடுத்து விட்டு பிறகு மாப்பிளையை படம் பிடிக்க வேண்டும். வரவேற்ப்பு ஹாலில் சில ஆண்கள் கூட்டமாக நின்று பேசி கொண்டிருந்தனர். ஒய்வு தானே என்று நானும் உள்ளே புகுந்தேன். உள்ளே அசடு போல் சற்றே குள்ள ஒருவம் ஒருவர் பார்க்க பாவமாக இருந்தார். நான் சும்மா இல்லாமல் அவரை ஓட்ட ஆரம்பித்துவிட்டேன். பிறகு தான் தெரிந்தது அவர்தான் கல்யாண மாப்பிள்ளை என்று. கடைசியில் அசடு நான் வழிந்தேன். இரவில் பயங்கர அட்வைஸ் வேறு.

இதைவிட சுவாரஷ்யமான மேட்டர் ஒன்று. அப்பொழுது நான் சென்னை தாஜ் ஹோட்டலில் வேலை செய்து கொண்டிருந்தேன். என்னை விட உயர் அதிகாரிகள் நான்கு பேர் நின்று, அவர்களின் ஆண் குறியின் நீல அகலங்களை பற்றி பேசி கொண்டிருந்தனர். "என்னுடையது ஏழு. எட்டு என்று", இதை கேட்ட நான் பொத்தி கொண்டு போகாமல் ஏழு என்ன இன்சா அல்லது செண்டிமீட்டரா என்று கேட்டு தொலைத்து விட்டேன். எனக்கு அடிவிளாத குறை தான்.


மேலே உள்ள செய்திக்கும், கிழே உள்ளதுக்கும் என்ன தொடர்பு என்று இப்பொழுது தெரிந்திருக்கும். இப்படி தான் எப்பவுமே அடுத்தவர் பிரச்சனையில் மூக்கை நுழைத்து வாங்கி கட்டிக்கொள்வது என் வழக்கமாகிவிட்டது.

1 வாங்கிகட்டி கொண்டது:

தருமி said...

வரவேற்ப்பு - வரவேற்பு
சுவாரஷ்யமான - சுவாரஸ்யமான
நீல அகலங்களை - நீள அகலங்களை
அடிவிளாத - அடி விழாத

!

Blog Widget by LinkWithin