பின்நவீனத்தை கண்டு பயம் ஏன்?


நான்கு, ஐந்து வருடங்களுக்கு முன் நான் தீவிர குறுநாவல் ரசிகனாயிருந்தேன்.
ராஜேஷ்குமார், பட்டுகோட்டை பிரபாகர், சுபா இவர்கள் பெயர் தெரிந்தாலே வாங்கி விடுவேன்.
நாளடைவில் யதார்த்த புனைவுகள் எனக்கு சலிப்பை தந்தன.
க்ரைம் நாவல்களில் குற்றவாளி ஒரு நாவலில் மஞ்ச சட்டை போட்டு மீசையுடன் கொலை செய்தான் என்றால், அடுத்த நாவலில் சிகப்பு சட்டை மீசையில்லாமல் கொலை செய்கிறான். அந்நாளில் பின்நவீனம் என்றால் என்னவென்று தெரியாமலேயே அதை படித்திருக்கிறேன். ஆர்னிகா நாசரின் புனைவுகள் இயல்பு மீறிய கற்பனைகள் இவை தான் பின்நவீனம் என்று பின் நாளில் தெரிந்து கொண்டேன்.

ஆர்னிகா நாசரின் புனைவுகள் அமானுஷ்ய வகையை சார்ந்தது. இருந்தால் என்ன கடவுளை நம்பாத நான்! ஆவியை மட்டும் நம்ப போகிறேனா என்ன!
வேறு ஒரு எழுத்தாளர் இந்திரா என்று ஆரம்பிக்கும் அவரது பெயர், அவரும் நிறைய புனைவுகள் எழுதினாலும், அவரடையது சித்தர்களை சுற்றியே வரும். அதனால் அம்மாதிரியான புனைவுகளை படிப்பதில்லை.

M.G.சுரேசின் சில புத்தகங்கள் சிறந்த இயல்பு மீறிய கற்பனை புனைவு.
"சிலந்தி" மற்றும் "யுரேகா என்றொரு நகரம்" போன்றவை என்னை பொறுத்தவரை யதார்த்த புனைவுகளே.

பின்நவீனத்தை புத்தகங்களில் தேடும் போது நிறைய குழப்பங்கள் ஏற்படும். நம் கண்ணோட்டத்தை பொறுத்து அவை மாறுபடும்.

சினிமாவில் சொல்கிறேன்.

யதார்த்த புனைவுகளை சினிமாவாக எடுத்து கொண்டிருந்த அந்த காலத்தில், மக்களும் சினிமாவின் மேல் சலிப்பு கொண்டனர், அங்கே ஒரு தேக்க நிலை ஏற்பட்டது.
திடீரென்று முளைத்தாற்போல் ஸ்பீல்பெர்க் E.T என்ற படத்தை வெளியிட்டார்.
அதை தொடர்ந்து ALIEN, TERMINATOR, PREDATOR வெளி வந்தது. இயல்பு மீறிய கற்பனை என்றால் என்னவென்று இப்பொழுது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

கற்பனைகெட்டாத விஷயங்களை சொல்லும் பொழுது, அதில் ஈடுபாடு அதிகமாகிறது.
BACK TO THE FUTURE என்ற படமும் பின்நவீனத்தில் நல்ல மைல் கல். அந்த படத்தில் காட்டப்படும் காரில் மேல்நோக்கி திறக்கும் மாதிரியான கதவுகள் வடிவமைக்க பட்டிருக்கும். அந்த படம் வெளிவந்த பொழுது அம்மாதிரியான கதவுகள் கார்களில் உபயோகபடுத்த படவில்லை. பிறகு அம்மாதிரியான முயற்சிகள் எடுக்கப்பட்டது.

இயல்பு மீறிய கற்பனைகள் சில நேரங்களில் விஞ்ஞானத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அழைத்து செல்கிறது.
என்னை பொறுத்தவரை பின்நவீனம் விஞ்ஞானம் மற்றும் கலை ,இலக்கியத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி

3 வாங்கிகட்டி கொண்டது:

தருமி said...

அடடே! இம்புடுதானா.. புரிஞ்சமாதிரில்ல இருக்கு.

வால்பையன் said...

//அடடே! இம்புடுதானா.. புரிஞ்சமாதிரில்ல இருக்கு.//

பின்நவீனத்தை எழுத்து வடிவில் தேடுகிறார்கள் அதனால் தான் குழப்பம்.
அடுத்தது என்ன என்ற உள்ளுணர்வின் கேள்வியே பின்நவீனம்

வால்பையன்

துளசி கோபால் said...

அட! அப்டீங்களா?

!

Blog Widget by LinkWithin