பின்னோக்கி ஏன்? கொஞ்சம் முன்னோக்கி பார்ப்போமே!

ஆள்காட்டி விரலிலிருந்து மெல்லிய வெளிச்சம் வந்தது. அவனுக்கு மட்டுமே தெரியும் அளவுக்கு அதில் சிறிய அதிர்வும் இருந்தது.
அந்த விரலை காதின் அருகில் வைத்தான்.

"சொல்லுடா"
"எப்போ"
"விடுமுறை ஆரம்பிக்க இன்னும் இரண்டு நாட்களே இருகின்றன. அதன் பிறகு தொடர்ச்சியாக ஆறு மாதம் விடுமுறை, அதற்குள் என்ன அவசரம்."
"சரி"
"இன்று இரவு செக்டார் நான்கில் உன்னை சந்திக்கிறேன்"

சிறிது நிறம் மாறியிருந்த அவனது விரல் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பியது.

செக்டார் நான்கு.
கால் சட்டையும் மேல் சட்டையும் ஒன்றாக இணைந்த உடை அணிந்திருந்த அவன் கதவை திறந்தான்.

"நீ இன்னமும் உனது சீருடையை கூட மாற்ற வில்லையா? அதற்குள் என்ன அவசரம்.
நமது மேலதிகாரிகளுக்கு தெரிந்தால். கிரகம் கடத்தபடுவோம் என்று உனக்கு தெரியாதா?"

அவன் பேச தொடங்கினான்.
இன்று எனது சுரங்கம் தோண்டும் பணியின் போது ஒரு பெட்டியை கண்டெடுத்தேன்.
அதில் பண்டைய மனிதர்கள் உபயோகபடுத்திய குறுந்தட்டுகள் கிடைத்தன.

என்ன சொல்கிறாய் அது இயங்குமா?

இல்லை அதை இயக்க ஒரு கருவியும் கிடைத்தது. அது பண்டைய கால மின்சார முறையில் இருந்தது. அதை சூரிய சக்தியில் இயங்கும்படி மாற்றியமைத்து விட்டேன்.

சரி இதில் என்ன இருக்கிறது அதை உன் மேலதிகாரிகளிடம் குடுத்து விட வேண்டியது தானே.

இல்லை அதில் நம் அரசாங்கத்தையே புரட்டி போடும் சில விசயங்கள் உள்ளன.
அதை பார்த்தால் நீ அதிர்ச்சியாகி விடுவாய்.

"என்ன சொல்கிறாய்?"

ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் நாம் தான் இந்த பூமியை ஆட்சி செய்து கொண்டிருந்தோம்.சகல திறமையும் படைத்தவர்களாக நாம் இருந்திருக்கிறோம்.

"அப்படியா"

இன்னும் கேட்டால் மூர்ச்சையாகி விடுவாய்.

என்ன?

இப்பொழுது நம்மை அடிமையாக வைத்திருக்கும் இவர்கள், அப்பொழுது பேச கூட தெரியாமல் இருந்திருக்கிறார்கள், நாம் அவர்களை கூண்டில் அடைத்து நமது குழந்தைகளுக்கு வேடிக்கை காட்டியிருக்கிறோம்.

அப்பொழுது அவர்கள் பெயர் "சிம்பன்ஷியாம்"

இவனுக்கு கண்கள் சொருகியது.

1 வாங்கிகட்டி கொண்டது:

யோசிப்பவர் said...

நடை அருமையாக இருக்கிறது!! (கதை கொஞ்சம் சாதாரணமாகத்தான் இருக்கிறது!)

!

Blog Widget by LinkWithin