'மறுகாலனியவாதம்' என்னும் பிதற்றல் பாகம் 3

பாகம் 1
பாகம் 2
பண்புடன்

நமது பதில்களுக்கு மீண்டும் எதிர் பதில் போட்டு விட்டார் செல்வன்,
தாய்நாட்டின் மீது பற்று கொண்ட ஒருவன் எக்காரணத்தை கொண்டும் இந்த விவாதத்தில் பின்வாங்க மாட்டான்,

// இந்தியாவில் நிலத்தடி நீரில் பூச்சிக்கொல்லி மருந்துகள் கலந்த சதவிகிதம்
அதிகம்.கோக், பெப்சி இந்தியாவில் கிடைக்கும் நிலத்தடி நீரையும் ஆற்று நீரையும்
வைத்துத்தான் தயாரிக்கப்படுபவை.நாம் குடிக்கும் பால்,தண்ணீர்,ஜூஸ்,காபி, டீ
என்று அனைத்து பானங்களிலும் என்ன அளவுக்கு பூச்சி மருந்து கலந்திருக்கிறதோ அதே
சதவிகிதம் தான் கோக்கிலும் இருக்கிறது.பூச்சி மருந்து வேண்டாம் என்றால் நாம்
தண்ணீரே குடிக்க முடியாது. //

என்ன இது கேலிக்கூத்து வெறும் தண்ணீரா கோக்கும் , பெப்சியும் வேறு எதுவும் இதில் கலப்பதில்லையா?
//இந்தியாவில் நிலத்தடி நீரில் பூச்சிக்கொல்லி மருந்துகள் கலந்த சதவிகிதம்
அதிகம்//
அதற்கு காரணம் யார், இயற்கை விவசாயம் பார்த்து கொண்டிருந்த மக்களா!
பணம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு அடுத்த நாட்டின் இயற்கையை சுரண்டும் அன்னிய முதலீடா?

//இனிமேல் பெட்ரோல் போடாமல் கார்,ஸ்கூட்டர் ஓட்ட முடியுமா என்று
பார்க்கலாமா?:-) //
இன்றும் கிராமங்களில் மாட்டு வண்டி உண்டு பார்த்ததில்லையா நீங்கள், ஏறி வரும் கட்சா எண்ணையின் விலைக்கு யார் காரணம்? 2007 சூலை மாதத்தில் வெறும் 50 டாலர்களாக இருந்த கட்சா எண்ணை இப்பொழுது 100 டாலர்களுக்கு விலை போகும் காரணம் என்ன?
மற்ற நாடுகளின் தேவையை புரிந்து கொண்டு முடிந்த வரை கறக்கும் நீங்கள் சொன்ன பொருளாதார சுதந்திரம் உள்ள அந்த அமெரிக்கா தான், அரபு நாடுகளின் பல எண்ணை கிணறுகளை தன் வசம் வைத்துள்ளது, அதற்காக அந்த நாடு செய்த சூழ்ச்சி ஊரறியும் இந்த நாடறியும்,

// ராக்பெல்லர், ஃபோர்ட், கொய்சுட்டா, ஜாக் வெல்ச், என வாழையடி வாழையாக அந்த நாடு மாபெரும் தொழிலதிபர்களையும் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள், மருத்துவர்கள், தொழில் வல்லுனர்கள் என்று உருவாக்கி வருவதுதான்.//

மனித குலத்திற்கு தேவையான வளர்ச்சிகளை செய்யும் விஞ்ஞானம் எல்லா நாட்டிலும் உள்ளது, மக்களின் அழிவிற்கு மட்டுமே ஆராய்ச்சி செய்யும் அமெரிக்காவின் பொய், புரட்டு, பித்தலாட்ட வார்த்தைகளை நம்பி அதற்கு வக்காலத்து வாங்குவது தான் வேதனையான ஒன்று.

//"உன் கனவை நோக்கி நீ உழைத்தால் அதை நீ எட்டுவாய்" என்பதுதான்
இந்த நாட்டின் தாரக மந்திரம்.அதை அமெரிக்கன் ட்ரீம் என்று அழைக்கிறார்கள். //

என்ன கொடும சார் இது! அமெரிக்காவுக்கு கனவு இருக்கலாம், இந்தியனுக்கு கனவு இருக்க கூடாதா?

//இந்தியா உயரவேண்டுமானால் இந்த நாட்டிடமிருந்து இந்த சிறப்புக்கள்
அனைத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும்.//

கற்று கொள்வதற்க்காக இந்தியாவை அடமானம் வைக்க எந்த இந்தியனும் தயாராக இருக்கமாட்டான்,

//கம்யூனிசம் பேசினால் ரஷ்யா,கிழக்கு ஐரோப்பா, கியூபா, மாதிரி குட்டிசுவராகத்தான் போவோம் //

கம்யூனிசம் பேச எனக்கு அறிவு பத்தாது, அவர்களின் கொள்கை கூட எனக்கு தெரியாது,
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் என்றால் அது கம்யுனிசமா?

//அன்னிய முதலீடு இல்லையென்றால் இன்று பெட்ரோல் இறக்குமதி செய்யகூட நம்மிடம் காசு இருந்திருக்காது.//

அர்த்தமற்ற வாதம் நாமும் ஏற்றுமதியில் சளைதவர்கலள்ள! இங்கிருந்து அனுப்பும் பொருள்களுக்கு பதிலாக பெட்ரோல் வாங்கி கொள்ளலாம், அன்னிய முதலீட்டு எதற்கு இதில்!

//க்யுபா அமெரிக்காவை எதிர்த்து இருக்கிரது என்றால் எப்படி? நம் ஊர் அரசியல்வாதிகள்
மாங்கொல்லையில் நின்றுகொண்டு 'ஜார்ஜ் புஷ்ஷை எச்சரிக்கிறேன்" என
முழங்குவார்கள்.அந்த மாதிரி உலக அரங்கில் முழங்கும் கோமாளிதான்
காஸ்ட்ரோ.தேர்தல் என்று ஒன்றை வைத்திருந்தால் என்றோ அவர் தூக்கி
வீசப்பட்டிருப்பார்:-)//

அமெரிக்காவின் சதி திட்டங்களும், C.I.A வின் படுகொலைகளும் தெரியாதது போல் பேசுவது, உங்கள் அறிவு முதிர்ச்சிக்கு கிடைத்த சறுக்கு, அவர்கள் வேலையே உள்நாட்டில் குழப்பம் விளைவித்து குளிர் காய்வது தானே!

//பொருளாதார கொள்கை வந்தாலும் வரவில்லை என்றாலும் உலகத்தில் எந்த காலத்திலும்
எந்த நாட்டிலும் மக்கள் கிராமத்தில் இருந்து நகரத்துக்கு குடிபெயர்ந்து தான்
கொண்டிருக்கிறார்கள்.//

கிராமத்தில் இருந்து குடி பெயர்வது வளர்ச்சியலா, கிராமத்தை மேம்படுத்துவதே வளர்ச்சி, உங்கள் திட்டம் மக்களை கூண்டோடு இடம் பெயர்த்து விட்டு விளை நிலங்களை பொருளாதார மேம்பாடு என்ற பெயரில் நாசபடுதுவதே!

//செய்யட்டுமே?கஸ்டமர்களுக்கு வேலை செய்யத்தானே தொழிற்சாலைகள்?அது சின்ன கம்பனி, பெரிய கம்பனி, வெளிநாட்டு கம்பனி என எதுவாக இருந்தால் என்ன?நாய் விற்ற காசு குரைக்கவா போகிறது?//

ஏன் சொல்ல மாட்டிர்கள்! பிறந்த மண்ணை , வளர்த்த மண்ணை கூறு போட்டு விற்க துணிந்த நீங்கள், கேவலம் பணத்திற்காக மாற்றான் நாட்டிற்கு வக்காலத்து வாங்கும் நீங்கள் வேண்டுமானால் பணம் எப்படி வந்தாலும் பரவாயில்லை என்று நினைக்கலாம்.
கலாசார, பாரம்பரியும் மிக்க நாடு நம் நாடு, ஏற்கனவே பாதி சிதைதாயிற்று, அடியோடு ஒழிக்க அப்படி என்ன ஆசை உங்களுக்கு?

//அந்த நிலையை நேரு கலத்திலேயே எட்டிவிட்டோம்.அரிசி/கோதுமை இறக்குமதி நேரு
காலத்தில் இருந்தே இருக்கிரது.உணவு இறக்குமதி செய்ய காசில்லாமல் மொரார்ஜி
தேசாய் 'எல்லோரையும் திங்கள்கிழமை உபவாசம் இருக்க' சொல்லியெல்லாம் வேண்டுகோள் விடுத்தார்.சோஷலிச பொருளாதாரத்தின் மகத்துவம் அப்படி. //

பஞ்சம் என்பது இயற்கையுடன் சம்பந்தப்பட்டது, அந்த நேரத்தில் அவர்கள் வரும் முன் காக்க மறந்திருக்கலாம், அதற்காக எல்லா நேரமும் வெளி நாட்டின் கையை நம்பி இருக்க வேண்டுமா? உள்நாட்டில் விவசாய புரட்சி செய்து நம் வளத்தை நாமல்லவா பெருக்க வேண்டும்.

கடைசியாக ஒரு வேண்டுகோள்,
நிறைய படித்திருக்கிறீர்கள், புள்ளி விபரங்களுடன் தகவல் தர தொழில் நுட்ப அறிவு இருக்கிறது, உங்களை போல் உள்ளவர்கள் நமது தாய் நாட்டிற்க்காக அதை செலவு செய்தால் மற்ற நாடுகள் நம்மிடம் கடன் வாங்கும் அளவுக்கு நம்மால் வளர முடியும்,
வெளிநாட்டில் வேலை செய்தாலும் உங்களை போல் உள்ளவர்கள், தாய் நாட்டின் வளர்ச்சிக்காக சிறிது முயற்சி செய்வோமானால், நம் மூதாதையர்க்கு நாம் செய்யும் நன்றியாகும், மேலும் நம் சந்ததியினர்க்கு நாம் செய்யும் கடமையும் கூட!

நன்றி

5 வாங்கிகட்டி கொண்டது:

சாலிசம்பர் said...

அருமையன வாதங்கள் வால்.
முதலாளித்துவத்தை செயல்படுத்துவதற்கு முன் நம்நாடு தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் ஏராளமாக உள்ளது.பன்னாட்டு மூலதனத்தால் பலனடைபவர்கள் சில கோடி என்றால் துன்பத்திலேயே உழன்று கொண்டிருப்பவர்கள் பலப்பல கோடி மக்கள்.உலகமயமாக்கலினால் வாய்ப்பு இருப்பவர்கள் பிழைக்கிறார்கள்,வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் கீழ் மட்டத்திலேயே இருக்க வேண்டியது தான்.

சாலிசம்பர் said...

தமிழ்மணத்தில் இன்னும் இணையவில்லையா?

வால்பையன் said...

சரியாக சொன்னீர்கள், வெளிநாட்டில் வேலை கிடைத்து விட்டால் தாய் நாட்டை மறக்கும் குணம் எப்படித்தான் வந்ததோ இவர்களுக்கு தன் பொருளாதாரத்தை கூட்ட நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க வேண்டுமா!

//தமிழ்மணத்தில் இன்னும் இணையவில்லையா?//

ஒரே குழப்பமாக இருக்கிறது, இந்த முறை மதுரை வரும் பொழுது சொல்லிகுடுங்கள்

வால்பையன்

Chanakyan said...

// இந்தியாவில் நிலத்தடி நீரில் பூச்சிக்கொல்லி மருந்துகள் கலந்த சதவிகிதம்
அதிகம்.கோக், பெப்சி இந்தியாவில் கிடைக்கும் நிலத்தடி நீரையும் ஆற்று நீரையும்
வைத்துத்தான் தயாரிக்கப்படுபவை.நாம் குடிக்கும் பால்,தண்ணீர்,ஜூஸ்,காபி, டீ
என்று அனைத்து பானங்களிலும் என்ன அளவுக்கு பூச்சி மருந்து கலந்திருக்கிறதோ அதே
சதவிகிதம் தான் கோக்கிலும் இருக்கிறது.பூச்சி மருந்து வேண்டாம் என்றால் நாம்
தண்ணீரே குடிக்க முடியாது. //

அண்ணா, தண்ணி நம்ம வீட்டுக் கிணத்திலும், குழாயிலும் வருதுண்ணா, பெப்சியும் கோக்கும் அது போல ஓசியில் வந்தால் நானும் குடிப்பேண்ணா.

//இந்தியாவில் நிலத்தடி நீரில் பூச்சிக்கொல்லி மருந்துகள் கலந்த சதவிகிதம்
அதிகம்//
இதுக்கெல்லாம் காரணம் வெளிநாட்டு உரக் கம்பெனிகளும், அதை உபயோகப்படுத்தச் சொன்ன உலக வங்கியும்தாண்ணா
//இனிமேல் பெட்ரோல் போடாமல் கார்,ஸ்கூட்டர் ஓட்ட முடியுமா என்று
பார்க்கலாமா?:-) //

பெட்ரோல் வருவதற்கு முன்னால் இந்தியாவில் யாரும் வெளியூருக்குச் செல்லவில்லையா? 20$ இருந்த கச்சா எண்ணை விலை இன்று 100$ ஆனதற்கே காரணம் அமெரிக்கப் படையெடுப்பும், அதனால் இந்தப் பகுதியில் ஏற்பட்ட பிரச்சினைகளும் தானே.
// ராக்பெல்லர், ஃபோர்ட், கொய்சுட்டா, ஜாக் வெல்ச், என வாழையடி வாழையாக அந்த நாடு மாபெரும் தொழிலதிபர்களையும் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள், மருத்துவர்கள், தொழில் வல்லுனர்கள் என்று உருவாக்கி வருவதுதான்.//

இன்று அமெரிக்காவில் டாக்டர்கள், கம்ப்யூட்டர் விஞ்ஞானிகள் என்று எத்தனை பேர் இந்தியர்கள்?

//"உன் கனவை நோக்கி நீ உழைத்தால் அதை நீ எட்டுவாய்" என்பதுதான்
இந்த நாட்டின் தாரக மந்திரம்.அதை அமெரிக்கன் ட்ரீம் என்று அழைக்கிறார்கள். //

"தத்வ மஸி" நீ எதாக நினைக்கிறாயோ அதாகவே ஆகிறாய். இதை பகவத் கீதை என்று கூறுவார்கள்.
//இந்தியா உயரவேண்டுமானால் இந்த நாட்டிடமிருந்து இந்த சிறப்புக்கள்
அனைத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும்.//

நம் நாட்டில் இல்லாத எதையும் நாம் அமெரிக்காவிடம் கற்றுக் கொள்ளத் தேவையில்லை. நம்மிடம் உள்ளதை மறக்காமல் இருந்தால் போதும்.
//கம்யூனிசம் பேசினால் ரஷ்யா,கிழக்கு ஐரோப்பா, கியூபா, மாதிரி குட்டிசுவராகத்தான் போவோம் //

சமீபத்தில் பிரான்ஸிலும் நெதர்லாண்டிலும் நடந்த ஒன்றிணைந்த ஐரோப்பாவிற்கான அரசியல் சட்டத்திற்கான வாக்கெடுப்பினை மக்கள் தோல்வியுறச் செய்ததற்கான காரணம் என்ன தெரியுமா? "அது முதலாளித்துவக் கருத்துக்களைக் கொண்டிருக்கிறது. மக்கள் நலனில் அக்கறை காட்டவில்லை" இது முதலாளித்துவம் வேரூன்றியிருக்கும் நாடுகளில். ஆனால், இதனை அவர்கள் கம்யூனிஸம் என்று கூறவில்லை. ஆகவே முதலாளித்துவத்தை எதிர்ப்பவனெல்லாம் கம்யூனிஸ்ட் என்று முத்திரை குத்தினால், உங்கள் அரசியல் மற்றும் பொருளாதார அறிவை சந்தேகப் பட வேண்டியதுதான்.
//அன்னிய முதலீடு இல்லையென்றால் இன்று பெட்ரோல் இறக்குமதி செய்யகூட நம்மிடம் காசு இருந்திருக்காது.//

இந்தியாவிலுருந்து உலகின் பல பாகங்களுக்கு ஏற்றுமதி ஆகிக் கொண்டிருந்த்தது. வெள்ளையர்களும் கொள்ளையர்களும் வந்து நம் தொழில்களை முடக்கி விட்டனர். ஒரு காலத்தில், உலகத்தின் மொத்த உற்பத்தியில் ச்ற்றேறக்குறைய 30% இந்தியாவில் மட்டும் இருந்தது. அது குறைந்து போனதற்குக் காரணம், வெளிநாட்டினரின் அடிவருடிகளாகிவிட்ட ஒரு கும்பல், அவர்களுக்கு வால் பிடித்து நம் தொழில்களையும், முன்னேற்றத்தையும் நசுக்கியதுதான். -- நான் உங்களைச் சொல்லவில்லை.
//க்யுபா அமெரிக்காவை எதிர்த்து இருக்கிரது என்றால் எப்படி? நம் ஊர் அரசியல்வாதிகள்
மாங்கொல்லையில் நின்றுகொண்டு 'ஜார்ஜ் புஷ்ஷை எச்சரிக்கிறேன்" என
முழங்குவார்கள்.அந்த மாதிரி உலக அரங்கில் முழங்கும் கோமாளிதான்
காஸ்ட்ரோ.தேர்தல் என்று ஒன்றை வைத்திருந்தால் என்றோ அவர் தூக்கி
வீசப்பட்டிருப்பார்:-)//

ஐயா, காஸ்ட்ரோ மயிலை மாங்கொல்லையில் நின்று கொண்டு அமெரிக்காவை எச்சரிக்கவில்லை. அமெரிக்காவின் புறக்கொல்லையில் நின்று கூவுகிறார். க்யூபாவில் தேர்தல் வந்தால் என்ன வராவிட்டால் என்ன? இங்கே கேள்வி அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பது தானே தவிர ஜனநாயகம் அல்ல. அமெரிக்காவின் ஜனநாயகம்தான் புஷ்ஷின் முதல் தேர்தலில் நன்றாகத் தெரிந்து விட்டதே. ஜெயித்தது அல் கோர். ஆனால், இங்கே பீகாரில் நடப்பது போல, சகோதரர் புஷ் ஆட்சியில் இருந்த மாகாணத்தில் லட்சக் கணக்கின் பல பேர் voter listல் இருந்து நீக்கப் பட்டனர். பல வோட்டுக்கள் செல்லாதவை என்று அறிவிக்கப் பட்டன. அது மட்டுமல்ல, அரிஸ்டாட்டில் ஜனநாயகத்தை perverted form of polity என்று கூறுகிறார். ஆகவே க்யூபாவில் ஜனநாயகத்திற்கு நீங்கள் வக்காலத்து வாங்க வேண்டாம்.
//பொருளாதார கொள்கை வந்தாலும் வரவில்லை என்றாலும் உலகத்தில் எந்த காலத்திலும்
எந்த நாட்டிலும் மக்கள் கிராமத்தில் இருந்து நகரத்துக்கு குடிபெயர்ந்து தான்
கொண்டிருக்கிறார்கள்.//

அப்படியென்றால் மிகவும் முன்னேறிய மேலை நாடுகளில் இந்நேரம் கிராமங்களில் ஆளே இருக்கக் கூடாதே? ஆனால் அங்கே கிராமங்களையும் நகரத் தரத்திற்கு முன்னேற்றுகிறார்களே தவிர நீங்கள் சொல்வதைப் போல கிராமங்களை ஒட்டுக்கா காலி செய்வதில்லை.
//செய்யட்டுமே?கஸ்டமர்களுக்கு வேலை செய்யத்தானே தொழிற்சாலைகள்?அது சின்ன கம்பனி, பெரிய கம்பனி, வெளிநாட்டு கம்பனி என எதுவாக இருந்தால் என்ன?நாய் விற்ற காசு குரைக்கவா போகிறது?//

அதேதாண்ணா, துபாயில் கேக்கறான் & மேக்கறான் கம்பெனியில் வேலை பாத்தா மாதிரிதான்.
//அந்த நிலையை நேரு கலத்திலேயே எட்டிவிட்டோம்.அரிசி/கோதுமை இறக்குமதி நேரு
காலத்தில் இருந்தே இருக்கிரது.உணவு இறக்குமதி செய்ய காசில்லாமல் மொரார்ஜி
தேசாய் 'எல்லோரையும் திங்கள்கிழமை உபவாசம் இருக்க' சொல்லியெல்லாம் வேண்டுகோள் விடுத்தார்.சோஷலிச பொருளாதாரத்தின் மகத்துவம் அப்படி. //

ஐயா சாமி, ஒரு காலத்தில் உலகத்துக்கே விவசாயத்தில் முன்னோடியாக இருந்தவர்கள் நாம். பழம்பெருமை பேசுகிறேன் என்று நக்கல் வேண்டாம். பழசை நினைவு படுத்திப் பார்ப்பது நாம் எந்த நிலைமையில் இருந்தோம், அதை மீண்டும் அடைய என்ன வழி என்று பார்க்கத் தானே தவிர, சும்ம சொறிந்து கொண்டு சுகமடைய அல்ல.

வால்! இந்தியா முன்னேறும். அது தன்னம்பிக்கையும் முயற்சியும் கொண்ட நம் போன்றவ்ர்களால்தானே தவிர இவர்களைப் போன்றவர்களால் அல்ல. ஆனால் ஒன்று, அப்போது இவர்கள் நிச்சயம் "நான் இந்தியன். என் நாடு இந்தியா" என்று பெருமை பேசிக் கொள்ள ஆரம்பிப்பார்கள். நம் முயற்சியும் அதை அடையும் நோக்கில் இருக்கட்டும்.

www.chanakyansays.blogspot.com

வால்பையன் said...

வருகைக்கு நன்றி,
பண்புடன் குழுமத்தில் நடந்த விவாதம் இது,
நல்ல வேலை எனக்கு ஆதரவாக பேச நீங்கள் வந்து விட்டீர்கள்

வால்பையன்

!

Blog Widget by LinkWithin