முதல்வருக்கு என் வாழ்த்துக்கள்

இதை பற்றி படிக்கும் பொழுது முதல்வரை பற்றிய என் விமர்சனத்தையும் படியுங்கள்

பெருகி வரும் மக்கள் தொகையின் அத்யாவிசய தேவைகளில் ஒன்று இருப்பிடம்,
இந்த சமுதாயத்தில் சொந்த வீட்டு இருப்பவருக்கு தனி மரியாதையை என்று அனைவருக்கும் தெரியும்,
இந்திய பொருளாதாரம் வளர்சியுற்றாலும் அத்யாவிசய பொருள்களின் விலையும் கூடவே சேர்ந்து ஏறுவதும் தெரியும்,
இந்நிலையில் கட்டுமான பொருளில் முக்கிய தேவையான சிமென்ட் விலை குறைபிற்கு முக்கிய காரணமாக இருந்த தமிழக முதல்வரை பாராட்டுவதில் தப்பில்லை,

இதனிடையே இது வெறும் கண்துடைப்பு, சிமென்ட் நியாயவிலை கடைகளில் விற்க படவேண்டும் என்று டாக்டர் அய்யா சொல்வது நகைப்பிற்குரியது,
எந்த அறிக்கை வந்தாலும் அதற்கு எதிர் அறிக்கை விடுவதே தொழிலாக கொண்டுள்ளார் இவர்,
தனி தமிழகம் கேட்ட இவர், பின் நாளில் தமிழர்களுக்கு பெரும் தலைவலியாக இருப்பார் என்று நினைக்கிறேன், இவர் சொல்வது போல் நியாய விலை கடைகளில் சிமென்ட் குடுக்க ஆரம்பித்தால், பின் செங்கல் மற்றும் மணலையும் நியாயவிலை கடைகளில் கொடுக்க சொல்வார், அறிக்கைகளை விடுவதற்கு முன் அதில்லுள்ள சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து விட்டால் பரவாயில்லை,

விசயத்திற்கு வருவோம் சிமென்ட் நிறுவனமே இறங்கி வந்து விலையை குறைத்திருப்பதால் எவ்வளவு நாட்கள் அதிக லாபத்தில் விற்றிருக்கிறார்கள் என்று தெரிகிறது,
என் ஆசையெல்லாம் இதே போல் மற்ற அத்யாவிசய பொருள்களையும் விலையை குறைத்தல் நான் மட்டுமல்ல, மொத்த தமிழகமே சந்தோசபடும்,

வால்பையன்

2 வாங்கிகட்டி கொண்டது:

சாலிசம்பர் said...

//இதனிடையே இது வெறும் கண்துடைப்பு, சிமென்ட் நியாயவிலை கடைகளில் விற்க படவேண்டும் என்று டாக்டர் அய்யா சொல்வது நகைப்பிற்குரியது//

சரிதான்.ராமதாஸ் அவர்களின் பரபரப்பு அரசியல் தான் அவரை இன்னும் களத்தில் நிறுத்தி வைத்துள்ளது என்ற கோணத்தில் பார்த்தால் டாக்டருடைய சூழ்நிலையை புரிந்து கொள்ளலாம்.

வால்பையன் said...

லேட்டஸ்ட் அறிக்கை சிமென்ட் நிறுவனங்களை அரசுடமை ஆக்க வேண்டுமாம்,
என்னை கேட்டால் முதலில் அரசுடமை ஆக்க வேண்டியது அனைத்து தனியார் கல்லுரிகள் என்பேன்,

வால்பையன்

!

Blog Widget by LinkWithin