'மறுகாலனியவாதம்' என்னும் பிதற்றல் பாகம் 2


பண்புடன்

இதற்கு முன் இதை பற்றிய விவாதம்
பாகம் 1


//பொய்களையும், கட்டுகதைகளையும் அவிழ்த்துவிட்டு நாட்டு
மக்களை ஏமாற்றுவதை இவர்கள் என்று நிறுத்துகிறார்களோ அன்று தான்
நாட்டுக்கு விடிவுகாலம் வரும் என்பதுதான் உண்மை.//

உங்கள் முடிவையே என் தலைப்பாக தேர்ந்தேடுகிறேன்.

//அந்த குளிர்பானங்கள் குடிக்க சுவை இல்லாதவை.மூணு ரூபாய்க்கு பிரிட்ஜில்
வைக்காமல் கடையில் கிடைக்கும்.வேறு வழியில்லாததால் அதை தாகத்துக்கு
குடித்துக்
கொண்டிருந்தனர் மக்கள்.//

பூச்சி மருந்துகள் தான் உங்களுக்கு சுவை தருமோ, ஒரு காலத்தில் ஆதரித்த
காங்கிரஸ் தான் இப்போது அதை பூச்சி கொள்ளி என்று எதிர்க்கவும் செய்கிறது.
அனால் இன்றும் நமது கொங்கு நாட்டு குளிர் பானமான "போடரங்" அடித்து கொள்ள
கோவை ,ஈரோடு மாவட்டங்களில் வேறெதுவும் இல்லை,

//லட்சம் ரூபாய் கார் வந்தால்
ஸ்கூட்டருக்கு பதில் அனைவரும் கார் ஓட்டுவார்கள். //

கார் ஓட்டுவார்கள். பெட்ரோல் யார் அடிப்பார்கள், அமெரிக்காவின் காலனி
ஆதிக்கத்தின் மூல காரணமே பெட்ரோல் தான், அதற்கு தான் அந்த புத்தகத்தை
படிக்க சொன்னது.

உங்கள் சிறு தொழில்கள் பற்றிய புள்ளி விபரத்திற்கு நன்றி,

1880 ல் சென்னையில் வெறும் நாற்பது துணி கடைகள் மட்டுமே இருந்தன.
இப்பொழுது 4000 இருக்கிறது. ஏன் அதை எல்லாம் விட்டு விட்டீர்கள்,
ஒரு கொல்லன் பட்டறயோ, தட்சு பட்டறயோ ஒவ்வொரு நான்கு வருடத்திற்கும் ஒரு
புது முதலாளி வெளியேறுவான் என்று என் கணிப்பு சொல்கிறது. அது எல்லா
நாட்டிலும் சீரான பொருளாதார வளர்ச்சி என்று 10 வது படிக்கும்
மாணவனுக்கும் தெரியும், உங்கள் புள்ளி விபரம் நாட்டின் வளர்ச்சியை
சொல்கிறது, ஆனால் இதற்கெல்லாம் காரணம் அன்னிய முதலீட்டு என்று வாதிடுவது
தவறு, அவர்கள் வரவில்லை என்றாலும் அது நடக்கும்,

கியூபா என்ற நாட்டை பற்றி தெரியும், விவசாயத்தில், அதுவும் கரும்பு ஒன்றை
மட்டுமே நம்பி அந்த நாடு இருந்தது, இன்றும் அமெரிக்காவை எதிர்த்து நன்றாக
தான் இருக்கிறது,

நமது நாடு முழுக்க முழுக்க(70%) விவசாயத்தை நம்பியது,
உங்கள் பெருளாதார வளர்ச்சியினால் கிராமத்திலிருந்து மக்கள் நகரத்திற்கு
இடம் பெயர்த்தது தான் மிட்சம், நகரத்தில் சேரிகள் அதிகமாகி
கொண்டிருக்கிறது,
கிராமத்தில் கௌரவமாக வாழ்ந்த ஒருவன் நகரத்தில் பிட்சை எடுக்கும் நிலைக்கு
தள்ள பட்டு இருக்கிறான்.(நல்ல வளர்ச்சி)
உங்கள் கருத்து படி பார்த்தாலும் வெளி நாட்டு முதலீடாளர்களுக்கு சிகப்பு
கம்பளம் (மூன்று வருட மின்சார சலுகை, வரி சலுகை.மேலும்......) விரிக்கும்
இந்த அரசாங்கம், உள் நாட்டு சிறு தொழிலாளர்களுக்கு என்ன செய்கிறது.
உங்கள் கணிப்பின் படி சிறு முதலீட்டார்கள் மட்டுமே இருப்பார்கள், ஆனால்
அவர்களும் உங்கள் பெரிய கம்பெனிகளுக்கு வேலை செய்து கொண்டு
இருப்பார்கள்.
உதாரணத்திற்கு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹோன்டாய் நிறுவனத்தை சுற்றி உள்ள
சிறு நிறுவனங்களை பாருங்கள்.
நம் நாடு ஒரு கிலோ நெல்லுக்கு வெளி நாட்டில் கை ஏந்தும் நிலையை
எட்டுவோம்,
அப்போது இப்போதை காட்டிலும் உங்கள் தாரளமயமாக்கல் கொள்கை சிறப்பாக
செயல்படும்.

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin