சீட்டு விளையாட்டு - ஓர் ஆய்வு

உடலையும் உள்ளதையும் இளமையாகவும், புத்துணர்ச்சியுடன் வைத்து கொள்ள பல விளையாட்டுகள் உள்ளன!

அறிவுக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுகளில் அநேகம் பேர் சதுரங்கதையே போற்றுகின்றனர். எனக்கு அதில் உடன்பாடு இல்லை,எதிரியின் படை பலத்தை நம் கண்ணால் பார்க்கிறோம், எதிரியின் அடுத்த நடவடிக்கை கூட நமக்கு தெரிகிறது, இதில் எப்படி சுவாரிசயம் இருக்கும்,



சீட்டு விளையாட்டை எடுத்து கொல்லுங்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட எதிரிகள், எதிரியின் படை பலமும் தெரியாது, எத்தனை ஒற்றர்கள்(jokers) என்றும் தெரியாது,

ரம்மி விளையாட்டு மிக அருமையான பொழுதுபோக்கு மட்டுமல்ல, மூளைக்கு சிறந்த வேலையும் கூட,
இதில் அநேகம் பேர், ஒருவரே அதிகம் ஜெயிப்பதற்கு காரணம் அவரின் அதிர்ஷ்டம் என்று நினைக்கிறார்கள், திறமையை கொட்சை படுத்தும் சொல் தான் அதிர்ஷ்டம்,

விளையாட்டு நுணுக்கதிர்க்கு வருவோம்!

சீட்டு விளையாட்டில் சாத்தியக்கூறுகளை மிக கவனமாக கையாளவேண்டும்,

உதாரணத்திற்கு என்னிடம் 6-ம் 8-ம் இருந்தால் ஐந்து வரும்பொழுது எட்டி கழட்டி விடுவதே சிறப்பு ஐந்திற்கும் ஆறுக்கும் இரண்டு சாத்தியங்கள் உண்டு, அவை நான்கு மற்றும் ஏழு, ஆனால் ஆரிற்க்கும் எட்டிர்க்கும், ஏழு ஒன்றே சாத்தியம், அதே போல் மற்ற ஆட்ட காரர்கள் முக்கியமாக நமக்கு முன், பின் இருவர் ஆட்டத்தையும் மிக கவனமாக பார்க்க வேண்டும்,

நமக்கு முன் இருப்பவர் விடும் அட்டைகளை வைத்தே அவரிடம் எந்த மாதிரியான எண்கள் உள்ளன என்று தெரிந்து கொள்ளலாம், நமக்கு பின் இருப்பவர் எதை நம்மிடம் எதிர் பார்க்கிறார் என்று வைத்தே அவரிடம் என்ன உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்,

சீட்டு விளையாட்டு என்பது ஒரு வகையான கணிதம்,
சிறப்பான ஆட்டகாரர் ஒரே பூவில் ஒரே எண்கள் இரண்டு இருந்தால், பின் ஆட்ட காரர் அந்த எண்ணை ஒட்டிய வேறு எண்ணை வெளியேற்றும் வரை கிழே இறக்க மாட்டார்,

ஒற்றனுக்கு(joker) ஒட்டிய எண்ணிலும் அதிகமாக யாரும் ரம்மி சேர்க்க மாட்டார்கள்,
அதை ஒட்டிய அதாவது ஜோக்கருக்கு முன் அல்லது பின் எண்ணை தாராளமாக எதிர்பார்க்கலாம்,

நான்கு சுற்றுக்கள் முடிந்த பின் யாராவது ஒருவருக்கு ஒரு நம்பர் அல்லது இரண்டு மட்டுமே தேவை படும், அம்மாதிரியான நேரங்களில் பெரிய எண்கள் கிழே விழும், ஜோக்கர் கையில் இருந்தால் நம்கையில் தான் வெற்றி,

ஒரு ரம்மி ஒரு ஜோக்கர் இல்லையென்றால் நான் ஆடமாட்டேன், வெறும் இருபது பாயிண்டில் தற்காலிகமாக வெளியேறி விடுவேன்,
(பங்கு வர்த்தகத்தில் stoploss முறை இதிலுருந்து தான் வந்தது போலும்,)

இவ்வாறாக ஆடினால் இந்த ஆட்டம் மட்டுமல்ல, எல்லா ஆட்டமும் நாம் தான் வெற்றி

4 வாங்கிகட்டி கொண்டது:

Anonymous said...

vanakkam kaipulla bro ,unga seetu velayaatu velakam romba arumayaa irrukoo, athuvum chess and seetu pathi compar senchathu puthumayaairrukoo,,,keep up the good work ,,anpudan sagothari barathy

ஸ்ரீ said...

நல்ல பயனுல்ல ஆராய்ச்சி நண்பரே. நானும் இதையே தான் சொல்றேன் யவனும் கேக்க மாட்டேங்குறானுங்க. சீட்டாட்டம் ஒரு கலை. அதுல ஜெயிக்கிற என்னை பாத்து சூதாடினு ஈசியா சொல்லிடுறாங்க.

வால்பையன் said...

மத்தவங்கள விடுங்க, நீங்க வங்க விளையாடலாம்,
ஒரு ஆட்டத்துக்கு பத்து ரூபா O.K வா

வால்பையன்

வால்பையன் said...

பாரதி சிஸ்டர்! யாகூவில் தான் எனக்கு பட்ட பெயர் கைப்புள்ள!
இங்க போய் அந்த பேர சொல்லி மானத்தை வாங்கிடிங்க்களே

எப்படியோ வந்ததற்கு மிக்க நன்றி

வால்பையன்

!

Blog Widget by LinkWithin