நான் உனக்கு எதிரி அல்ல

தி.க நடத்தும் ஊர்வலத்தை அனுமதிக்க கூடாது என்று ராமகோபாலன் அறிக்கை விடுத்துள்ளார்,

இது எந்த வகையில் அவர்களுக்கு எதிரானது என்று அவர் நினைக்கிறார் என்று தெரியவில்லை, மத மூட நம்பிக்கைகளை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வருவது தி க,

என்னை மட்டும் ஏன் எதிர்க்கிறீர்கள், சிறுபான்மையினரையும் கிண்டல் செய்யுங்கள் என்று அவர்களையும் வம்புக்கு இழுப்பது நகைப்புக்குரியது, தமிழ்நாட்டில், இந்தியாவில் இருந்து கொண்டு இங்கே எது அதிகமாக மக்களுக்கு மூட நம்பிக்கைகளை புகுத்துகிறதோ அதை தான் முதலில் எதிர்க்க வேண்டும்.

//கடவுள் உண்டு என்று சொல்ல உங்களுக்கு உரிமை இருக்குமானால் இல்லை என்று சொல்ல மற்றவர்களுக்கும் உரிமை உண்டு என்ற பொறுப்பற்ற வாதத்தை சில அதிகாரிகள் கிளப்பி இருப்பது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.//
உதவிஇட்லிவடை

இது எப்படி வேடிக்கை ஆகும், உங்கள் நம்பிக்கை உங்களுக்கு அவர்கள்(என்) நம்பிக்கை அவர்களுக்கு, ஊர்வலம் நடுத்துவதும் அவர்கள் உரிமை. தமிழ் நாட்டில் அரசு அனுமதி இல்லாமல் ஊர்வலம் நடத்த முடியாது, தமிழக அரசும் அதற்கு துணை போகின்றது என்று நினைத்தால், தமிழக அரசின் முத்திரை-ஐ பாருங்கள் கோயில் கோபுரம் தான் இருக்கும்,

அரசியல் ஸ்டண்ட் நடத்துவது நீங்கள் தான், அவர்கள் வேலையை அவர்கள் செய்கிறார்கள், மூட நம்பிக்கைகள் ஊர்வலம் நடத்துவது தவறென்றால், நீங்கள் பிள்ளையார் ஊர்வலம் நடத்துவதும் தவறு தானே, அதற்கு ஏதாவது ஏழைகளுக்கு உதவி செய்யலாமே,

தி.க. நக்சலைட்டு கும்பல் என்று விமர்சிப்பதற்கு உங்களுக்கு உரிமை இல்லை,
சமணர்களுக்கு என்ன கொடுமை செய்தீர்கள் என்று வரலாற்றிற்கு தெரியும், உங்கள் நம்பிக்கை மற்றவர்களை எதிரியாக பார்க்கிறது, இறை எதிர்ப்பு கொள்கை மனித நேயத்தை வளர்கிறது,

வால்பையன்

8 வாங்கிகட்டி கொண்டது:

Bharath said...

//கடவுள் உண்டு என்று சொல்ல உங்களுக்கு உரிமை இருக்குமானால் இல்லை என்று சொல்ல மற்றவர்களுக்கும் உரிமை உண்டு என்ற பொறுப்பற்ற வாதத்தை சில அதிகாரிகள் கிளப்பி இருப்பது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.//
உதவிஇட்லிவடை

இது எப்படி வேடிக்கை ஆகும், உங்கள் நம்பிக்கை உங்களுக்கு அவர்கள்(என்) நம்பிக்கை அவர்களுக்கு, ஊர்வலம் நடுத்துவதும் அவர்கள் உரிமை. தமிழ் நாட்டில் அரசு அனுமதி இல்லாமல் ஊர்வலம் நடத்த முடியாது, தமிழக அரசும் அதற்கு துணை போகின்றது என்று நினைத்தால், தமிழக அரசின் முத்திரை-ஐ பாருங்கள் கோயில் கோபுரம் தான் இருக்கும்///

Da Vinci Code என்ற படம் வந்ததே நினைவிருக்கிறதா? அதை தடை செய்த பொழுது இந்த வாதம் எங்கே சென்றது?
I'm not justifying what ramagopalan said but நம் ஆட்சியாளர்களின் இரட்டை நிலையை கண்டித்தே ஆக வேண்டும்.

Anonymous said...

:) Oru mathathin nambikaiyai mattum kurai kooruvathaithan thavarenru solla varuhirar Mr.IdlyVadai. Bakreeth anru ottaham thinga vendum enbathu mooda nambikaithaaney. Kootu vazhipaatal oonam sariyaahum enbadhu mooda nambikaidhaney.
Ippadi podhuvaha avarhal mooda nambikaihalai ethirthu porattam nadathinal sari. Yen, indhu ponra mooda nambikaihalal sirupanmayirai seyrndhavarhalil oruvar baathika pattalum adhu kandanathukku uriyadhudhaney. Sirupaanmayinar ekkedu kettalum pohattum ena periyar solli irukiraara? Enadhu kadavul enadhu nambikai. Adhai yelanam seyamal un karuthai kooru, thavarendru kooru. oru prachinaiyum illai. :) Indhukkal konra samanar ennikaiyai vida, kiruthuvarhal konra yootharhal, islamiyarhalin ennikai athiham. Adhey pol, islamiyarhal konra kiruthuvarhalin ennikaiyum athiham. Adhu yen, amaidhiyai mattum bothitha boutha samyathavarhalana singalarhalum, inna pira mangoli inathavarhalum illaya. Inrai patri pattum pesuha. Varalaru yarukkum sadhahamai illai.

தருமி said...

மு.கு., பி.கு. (முன் / பின் குறிப்புகள்) - இவைகளோடு பதிவிட்டிருந்தால் யார், எங்கே, எப்போது, எதற்கு சொன்னது என்பது போன்ற என்ற விவரங்கள் தெரிந்திருக்குமே...

வால்பையன் said...

//Da Vinci Code என்ற படம் வந்ததே நினைவிருக்கிறதா? அதை தடை செய்த பொழுது இந்த வாதம் எங்கே சென்றது?
I'm not justifying what ramagopalan said but நம் ஆட்சியாளர்களின் இரட்டை நிலையை கண்டித்தே ஆக வேண்டும்//

படத்தை தடை செய்தது தவறான செயல்.
சமுதாயதிற்கு தொந்தரவு இல்லாத எந்த ஒரு செயலுக்கும் அரசு தடை செய்ய முடியாது, அவ்வாறு செய்யும் என்றால், இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு என்பது பொய்யாகி விடும்,
இதில் இரட்டை நிலை எங்கே இருக்கிறது
வருகைக்கு நன்றி

வால்பையன்

வால்பையன் said...

//Bakreeth anru ottaham thinga vendum enbathu mooda nambikaithaaney//

கண்டிப்பாக மூட நம்பிக்கை தான், மத்திய கிழக்கு ஆசியாவில் தோன்றிய இஸ்லாமிய மதம், அங்கே வாழும் மக்களின் பழக்க வழக்கங்களை கொண்டது, இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் ஒட்டகம் சாப்பிட வேண்டும் என்பது, பூனையை தூணில் கட்டிய கதை தான்,

//Indhukkal konra samanar ennikaiyai vida, kiruthuvarhal konra yootharhal, islamiyarhalin ennikai athiham. Adhey pol, islamiyarhal konra kiruthuvarhalin ennikaiyum athiham.//

நான் ஏற்கனவே சொன்னது போல் மதம், மாற்ற நம்பிக்கையாளர்களை எதிரியாக பார்க்கிறது, இறை மறுப்பு கொள்கை மனித நேயத்தை வளர்கிறது, என் பதிவின் தலைப்பே நான் உனக்கு எதிரி அல்ல என்பது தான், நான் இந்து மதத்தின் எதிரி அல்ல, எல்லா மதத்திற்கும் எதிரி,

வருகைக்கு நன்றி

வால்பையன்

வால்பையன் said...

இது ஏற்கனவே இட்லிவடையில் வந்து விட்டதால், அதை பற்றிய முன் ,பின் குறிப்புகள் கொடுக்கவில்லை, அடுத்த முறை நிகழ்வு பதிவு போடும் போது கண்டிப்பாக சேர்க்கிறேன்

வருகைக்கு நன்றி

வால்பையன்

Anonymous said...

செத்து போன பெரியாருக்கு இன்னமும் ஜாதகம் பார்க்கிற இவர்களா பகுத்தறிவாளர்கள் ? எல்லாம் வெளி பேச்சு..இந்த மாதிரி ஆட்களின் வீட்டில் பெண்கள் இன்னமும் பூஜை புனஸ்காரம் செய்து கொண்டு இருக்கிறார்கள்...கலைஞரே இதற்க்கு சாட்ட்சி...

தைரியம் இருந்தால் ..உண்மையான ஆண் பிள்ளைகளாய் இருந்தால்..இஸ்லாமியத்தையோ..கிறிஸ்துவத்தையோ எதிர்த்து பார்க்கட்டும்... எவனுடையத்தை எவன் அறுப்பான் என்று அப்போது பார்க்கலாம்...ஊருக்கு இளிச்சவாயன் பார்ப்பனன்...வேறு எவனுடையதும் இவர்கள் கண்களுக்கு தெரியாது போலும்...

வால்பையன் said...

இட்லிவடையில் நீங்கள் எழுதிய பினோட்டத்தை அப்படியே இங்கே போட்டுஇருகிறீர்கள்,
என் கருத்துக்களை நான் சொல்கிறேன்,
ஆரம்பத்தில் ஆன்மீக வாதியாக இருந்து விட்டு பிறகு கடவுள் மறுப்பு கொள்கைகளை எடுத்து கொண்டவர்கள் நிறைய உண்டு, உதாரணத்திற்கு தருமி சாரை சொல்லலாம், அதே போல் நாத்திகராய் இருந்த ஒருவர், மீண்டும் சாமி கும்பிடுவது பெரிய விசயமில்லை,
தி.க வை ஒரு அரசியல் கட்சியாக பார்ப்பது ஒரு அரசியல் வாதிக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம், பெரியார் அதை சமுதாய சீர்திருத்த கழகமாக தான் கொண்டு வந்தார்,

//தைரியம் இருந்தால் ..உண்மையான ஆண் பிள்ளைகளாய் இருந்தால்..இஸ்லாமியத்தையோ..கிறிஸ்துவத்தையோ எதிர்த்து பார்க்கட்டும்//

இவர்களுக்கு உள்ளேயே நிறைய உட்பிரிவு உண்டு, அதில் சலித்து போய் அங்கேயும் ஒரு பெரியார் வருவார்,
நாத்திக வாதிகள் மனித நேயம் கொண்டவர்கள். அவர்களிடம் விவாதம் புரியுங்கள், அதை செய், இதை செய் என்று சண்டைக்கு வராதிர்கள்,

வால்பையன்

!

Blog Widget by LinkWithin