எல்லாம் முடிவுக்கு வந்தது!!

வெறும் கருத்து வேறுபாடுகளாக ஆரம்பித்தது.
எதோ இரு நாட்டுக்கு நடக்கும் போர் போல ம்ற்றவர்களால் ஆக்கபட்டது அறிந்ததே.
இந்த விவாதங்கள் எதாவது தெளிவை கொடுக்கும் என்று காத்திருந்தால், அது திசை மாறி எங்களுக்குள் பெரும் பகையை மூட்ட தெரிந்தது. நல்லவேளை கணத்தில் சுதாரித்ததால் பிரச்சனை முடிவுக்கு வந்தது.

சில நண்பர்கள் அவர்களுடய கருத்துரிமைக்காகவும் தனியாக அவர்களது ப்ளாக்கில் இதே கருத்து வேற்றுமைகளை பற்றி எழுதிவந்தனர். அவர்களும் இது தேவையில்லாதது என்று புரிந்து நிறுத்தி கொண்டனர். ஆனாலும் பொழுது போகாத சில புல்லுருவிகள். இதை விடுவதாக இல்லை. சிறிது அணைவது போல் தோன்றினாலும். அதை ஊதி பெருசாக்குவதிலேயே பெரும் நேரத்தை செலவிட்டனர்.

எனது பதிவுகளில் ஆபாசமாக பின்னூட்டம் இடுவது, பின்னாலேயே அது அவன் தான் என்றும் பின்னூட்டம் இட்டு சண்டை முட்டி விடுவது. அதே போல் அங்கேயும் என் பெயரில் அதர்ஆப்சனில் ஆபாச பின்னூட்டம் இடுவது போன்ற இழி செயல்களை செய்து வந்தனர். ஒரே நாளில் பேசி தீர்த்திருக்க வேண்டிய பிரச்சனையை மற்றும் என்னை, அவர்களின் பிரச்சனைக்காக பலிகடாவாக ஆக்கி கொண்டார்கள்,அல்லது அவர்களின் பொழுது போக்குக்காக.

இதை ஒரு முடிவுக்கு கொண்டுவர வேண்டி நான் லக்கியிடம் பேச விருப்பம் இருப்பதாக தெரிவித்தேன். மறுப்பேதும் கூறாமல் உடனே பேசி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தார். எங்கள் சம்பாஷனையில் எனக்கு ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது.

இப்பிரச்சனைக்கு முகம் தெரியாத அனானிகள் மட்டுமில்லாமல் கூடவே இருக்கும் சில நண்பகளும் அவர்கள் பங்க்குக்கு பெட்ரோல் ஊற்றி இருக்கிறார்கள், அது அவராகத்தான் இருக்கும் என்றும், இது இவராகாத்தான் இருக்கும் என்றும் அவர்கள் யூகத்தால் பூகம்பம் வரவழைத்திருக்கிறார்கள்.

இனி அது தேவைப்படாது நண்பர்களே இனி ஏதும் பிரச்சனை என்றால் நானே பேசி தீர்த்து கொள்கிறேன். உங்கள் போதைக்கு ஊறுகாயாக எங்களை ஆக்காதீ்ர்கள்.

இதுவரை என் மேல் நம்பிக்கை கொண்டு கடைசி வரை ஆறுதல் தந்த நண்பர்களுகும், கூடவே பழகியிருந்தாலும் நீ தானா அது என்று காயப்படுத்திய நண்பர்களுக்கும் நன்றி.

68 வாங்கிகட்டி கொண்டது:

மணிகண்டன் said...

வால்பையன்,

உங்க ப்ளாக ஹேக் பண்ணி இந்த பதிவ எழுதின நபருக்கு என்னோட கடுமையான கண்டனத்தை தெரிவிச்சிக்கறேன். அவரா தான் அது இருக்கும்ன்னு நினைக்கறேன் !

வால்பையன் said...

கிளிஞ்சது கிருஷ்ணகிரி

Athisha said...

புலி பசித்தாலும் புல்லை தின்னாது...

(ஃபுல்ல குடிக்குமாம்)

அப்படினு ஒரு பழமொழி இருக்கிறது நண்பா...

வெண்பூ said...

ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு வால் & லக்கி.. இன்னிக்கு மத்தியானம் கூட பரிசலோட பேசும்போது ரெண்டு பேருமே வருத்தப்பட்டுகிட்டோம். பிரச்சினை பெரிதானதற்கு காரணம் நீங்கள் இருவருமே இல்லை என்பதை இருவருமே புரிந்து கொண்டதற்கு நன்றி...

Dr.Rudhran said...

நல்லது இதற்க்காக உங்களைப பாராட்டத்தான் tamilish முயற்சி

கார்க்கிபவா said...

சகா... என்னதிது?????? நல்லது நடந்தா சரி.. எது நல்லது என்பதை நீங்கள் இருவரும்தான் தீர்மானிக்க வேண்டும்..

சிம்பா said...

சகா இந்த பதிவ எழுதும் பொழுது, எதுனா சரக்கு உள்ள இருந்துதா.. பிரச்சனைகள் இப்படி பேசி சமாதானம் ஆனா.. அப்புறம் பேப்பர் காரங்களுக்கு வேலை இல்லாம போய்ருமே..

கபீஷ் said...

வாழ்த்துக்கள்!

g said...

குடிக்கிறோம்; குடிக்கிறோம். ஏன் குடிக்கிறோம்? எதற்கு குடிக்கிறோம்? யாருக்காவது தெரிகிறதா? புரிகிறதா? சிலர் ‘டயர்டாக’ இருக்கிறது. அதனால கொஞ்சம் குடிக்கிறேன்னு பீலா விடுகிறார்கள்.

குடிப்பது தவறு; குடி குடியைக் கெடுக்கும்; உடல் நலத்தையும் கெடுக்குமாம். இப்போதான் அனுபவ ரீதியாக எனக்குத் தெரிகிறது. குடிகாரனிடம் குடிக்காதீங்கன்னு சொன்னா கேட்கவா போறான். திருந்தவே மாட்டான்.

நான் மட்டும் என்ன யோக்கியனா... இல்லவே இல்லை... நானும்தான் குடிக்கிறேன். (ஒரு கட்டிங்) 90 மட்டுந்தான். அதுவே ஏன் என எனக்குத் தெரியவில்லை. விடுமுறை நாட்களில் ஒரு கட்டிங். வேலை முடிந்தால் எப்போதாவது ஒரு கட்டிங்.

தூங்குகிறவனை செத்தவனுக்கு சமம்னு வள்ளுவர் சொன்னாரு. அதோடு விடக்கூடாதா... கள்ளுன்டவனை நஞ்சுண்டவன்னு வேறு சொல்லிப்புட்டாரு. நம்மூரு சாராயம் குடிக்கிறவங்களுக்கு நன்றாக தெளிவாக பொருந்தும் இது.

குடிச்சிட்டு கொஞ்சம் தள்ளாடிட்டு போறோம்... நாமென்னமோ ஸ்டெடியாதான் போறோம் என்ற அல்ப நினைப்பு வேறு அந்த நேரத்தில். சமுதாயத்தில் கெட்ட பேரு. வீட்டில இவன் உருப்படப்போறதில்லேனு மற்றொரு பேரு.

இவையெல்லாமே நமக்கு நல்ல வார்த்தைகளாகத்தான் படுகிறது. குடிக்கும்போது நண்பர்கள் கூட்டம். நாம குடிக்கும்போது நண்பர்கள் இருந்தான்தான் ஒரு ஜாலி. ஒரு கட்டிங் அடிச்சிட்டு நான் பாட்டுக்கு எழுதிக்கிட்டேன் போறேன்.

நீங்களும் படிச்சிட்டே வந்தா எப்படி? இதோடு நிறுத்திக்கிறேன். யாரும் குடிக்காதீங்க நண்பர்களே. இது என்னுடைய அன்பான வேண்டுகோள். ஆனால் என்னை மட்டும் கண்டுக்காதீங்க.

அப்புறம் வால்பையனுக்கு ஒரு வேண்டுகோள்... சரக்கு அடிக்கும்போது சியர்ஸ் பண்ணவோ, கம்பெனிக்கு ஆள் இல்லைன்னோ காத்திருக்கவேண்டாம். உடனே எனக்கு ஒரு போன் போடுங்க... அப்படியும் லைன் கிடைக்கலன்னா என்ன?...

பிளாக்குல ஊத்துங்க பின்னூட்டத்துக்கூடவே... என்னது சாத்தியமில்லையா? ஏன் இல்லை... சாத்தியப்படுத்தணும். இன்னைக்கு ஈரோட்ல இருக்கிற வால்பையன் கூட போனில் போசுறோம். செல்... செல் போனில் பேசுறோம்.

அன்னைக்கு கிரஹாம் பெல் போனைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு, இது சாத்தியமா என நினைத்திருப்பாரா? அவர் நினைத்திருக்கலாம். ஆனால் அந்த நேரத்தில் மக்கள்... சத்தியமே இல்லை என்றுதான் சொல்லியிருப்பார்.

டேட்டாவை கடத்தறோம்... போனில் வார்த்தைகளைக் கடத்தறோம்... ஒலி ஒளியைக் கடத்தறோம் இல்லே. அதைப்போல பொருட்களைக் கடத்தறமாதிரி ஏதாவது ஒன்றைக் கண்டுபிடிக்கணும். கண்டுபிடிச்சே ஆகணும்... எப்படி?

எப்படியென்றால் வால்பையன் சரக்கு அடித்துவிட்டு ஒரு புல் பாட்டிலில் முக்கால் பாட்டில் ஈரோட்டில் ஒயின்ஷாப் பாரில் வைத்திருக்கிறார் என்று வைத்துக்கொள்றோம். அப்படியே சென்னையில் இருந்து அதை... லபாக் என ராவிடவேண்டியதுதான்...

அதே பாட்டில் அதே சரக்கு இங்கே இங்கே சென்னையில் பாதி காலியாகியிருக்கும். நான் பாட்டுக்கு எதையோ ஆரம்பிச்சி எதையோ சொல்லிக்கிட்டு இருக்கேன்... வர்ட்டா... இதை எழுதுறதுக்குள்ள அடிச்ச சரக்கும் இறங்கிப்போச்சு... போய் படுக்கவேண்டியதுதான்...

g said...

குடிக்கிறோம்; குடிக்கிறோம். ஏன் குடிக்கிறோம்? எதற்கு குடிக்கிறோம்? யாருக்காவது தெரிகிறதா? புரிகிறதா? சிலர் ‘டயர்டாக’ இருக்கிறது. அதனால கொஞ்சம் குடிக்கிறேன்னு பீலா விடுகிறார்கள்.

குடிப்பது தவறு; குடி குடியைக் கெடுக்கும்; உடல் நலத்தையும் கெடுக்குமாம். இப்போதான் அனுபவ ரீதியாக எனக்குத் தெரிகிறது. குடிகாரனிடம் குடிக்காதீங்கன்னு சொன்னா கேட்கவா போறான். திருந்தவே மாட்டான்.

நான் மட்டும் என்ன யோக்கியனா... இல்லவே இல்லை... நானும்தான் குடிக்கிறேன். (ஒரு கட்டிங்) 90 மட்டுந்தான். அதுவே ஏன் என எனக்குத் தெரியவில்லை. விடுமுறை நாட்களில் ஒரு கட்டிங். வேலை முடிந்தால் எப்போதாவது ஒரு கட்டிங்.

தூங்குகிறவனை செத்தவனுக்கு சமம்னு வள்ளுவர் சொன்னாரு. அதோடு விடக்கூடாதா... கள்ளுன்டவனை நஞ்சுண்டவன்னு வேறு சொல்லிப்புட்டாரு. நம்மூரு சாராயம் குடிக்கிறவங்களுக்கு நன்றாக தெளிவாக பொருந்தும் இது.

குடிச்சிட்டு கொஞ்சம் தள்ளாடிட்டு போறோம்... நாமென்னமோ ஸ்டெடியாதான் போறோம் என்ற அல்ப நினைப்பு வேறு அந்த நேரத்தில். சமுதாயத்தில் கெட்ட பேரு. வீட்டில இவன் உருப்படப்போறதில்லேனு மற்றொரு பேரு.

இவையெல்லாமே நமக்கு நல்ல வார்த்தைகளாகத்தான் படுகிறது. குடிக்கும்போது நண்பர்கள் கூட்டம். நாம குடிக்கும்போது நண்பர்கள் இருந்தான்தான் ஒரு ஜாலி. ஒரு கட்டிங் அடிச்சிட்டு நான் பாட்டுக்கு எழுதிக்கிட்டேன் போறேன்.

நீங்களும் படிச்சிட்டே வந்தா எப்படி? இதோடு நிறுத்திக்கிறேன். யாரும் குடிக்காதீங்க நண்பர்களே. இது என்னுடைய அன்பான வேண்டுகோள். ஆனால் என்னை மட்டும் கண்டுக்காதீங்க.

அப்புறம் வால்பையனுக்கு ஒரு வேண்டுகோள்... சரக்கு அடிக்கும்போது சியர்ஸ் பண்ணவோ, கம்பெனிக்கு ஆள் இல்லைன்னோ காத்திருக்கவேண்டாம். உடனே எனக்கு ஒரு போன் போடுங்க... அப்படியும் லைன் கிடைக்கலன்னா என்ன?...

பிளாக்குல ஊத்துங்க பின்னூட்டத்துக்கூடவே... என்னது சாத்தியமில்லையா? ஏன் இல்லை... சாத்தியப்படுத்தணும். இன்னைக்கு ஈரோட்ல இருக்கிற வால்பையன் கூட போனில் போசுறோம். செல்... செல் போனில் பேசுறோம்.

அன்னைக்கு கிரஹாம் பெல் போனைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு, இது சாத்தியமா என நினைத்திருப்பாரா? அவர் நினைத்திருக்கலாம். ஆனால் அந்த நேரத்தில் மக்கள்... சத்தியமே இல்லை என்றுதான் சொல்லியிருப்பார்.

டேட்டாவை கடத்தறோம்... போனில் வார்த்தைகளைக் கடத்தறோம்... ஒலி ஒளியைக் கடத்தறோம் இல்லே. அதைப்போல பொருட்களைக் கடத்தறமாதிரி ஏதாவது ஒன்றைக் கண்டுபிடிக்கணும். கண்டுபிடிச்சே ஆகணும்... எப்படி?

எப்படியென்றால் வால்பையன் சரக்கு அடித்துவிட்டு ஒரு புல் பாட்டிலில் முக்கால் பாட்டில் ஈரோட்டில் ஒயின்ஷாப் பாரில் வைத்திருக்கிறார் என்று வைத்துக்கொள்றோம். அப்படியே சென்னையில் இருந்து அதை... லபாக் என ராவிடவேண்டியதுதான்...

அதே பாட்டில் அதே சரக்கு இங்கே இங்கே சென்னையில் பாதி காலியாகியிருக்கும். நான் பாட்டுக்கு எதையோ ஆரம்பிச்சி எதையோ சொல்லிக்கிட்டு இருக்கேன்... வர்ட்டா... இதை எழுதுறதுக்குள்ள அடிச்ச சரக்கும் இறங்கிப்போச்சு... போய் படுக்கவேண்டியதுதான்...

கோவி.கண்ணன் said...

//இனி அது தேவைப்படாது நண்பர்களே இனி ஏதும் பிரச்சனை என்றால் நானே பேசி தீர்த்து கொள்கிறேன். //

தெளிவான முடிவு இருவருக்கும் பாராட்டுக்கள் !

அமர பாரதி said...

வால்,

நல்ல வேலை செஞ்சிருக்கீங்க. வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

rapp said...

அதெல்லாம் ஓகே. நான் உங்க ரெண்டு பேரையும் மன்னிச்சிடறேன்:):):)
(ஹி ஹி)

rapp said...

ஆரம்பத்துல இருந்து, சம்மந்தி வெண்பூதான் ரெண்டு இடத்திலையும் ரொம்ப வருத்தப்பட்டார். அவருக்காகவாவது சமாதனமானதில் சந்தோஷம்:):):)

rapp said...

me the 15th:):):)

rapp said...

பாருங்க டாக்டர் ருத்ரனே உங்களை பாராட்டியிருக்கார்:):):)

சின்னப் பையன் said...

தெளிவான முடிவு... இருவருக்கும் பாராட்டுக்கள் !

நல்லதந்தி said...

நல்ல முடிவு! :)

தமிழன்-கறுப்பி... said...

சந்தோசமா இருக்கு...

:))))))))))

தமிழன்-கறுப்பி... said...

இரண்டு பேரும் சேர்ந்து ஒரு பார்ட்டி கொடுத்தா நல்லாருக்கும்...

எந்த பிராண்ட் என்றாலும் எனக்கு OK தான்...;)

விஜய் ஆனந்த் said...

:-)))...

வீணாபோனவன் said...

ஜிம்ஷா,
நீங்க உண்மையிலேயே சரக்க போட்டுட்டு தான் இத எழுதி இருக்கிங்க... பாருங் ரெண்டு வாட்டி எழுதி இருக்கிங்க...குடிகாரர்களுக்கு எல்லாமே ரெண்டு ரெண்டா தெரியுமாமே...எனக்கு நீங்க எழுதியது நாலா தெரியுது... :-)

-வீணாபோனவன்.

பரிசல்காரன் said...

என் பதிவில் அவர் பின்னூட்டியதற்குப் பின், நீங்கள் பின்னூட்டியதற்கே சந்தோஷமாக இருந்தது. இது இன்னும் நலம்!

//அவர்கள் பங்க்குக்கு பெட்ரோல் ஊற்றி //

பங்க்கா? பங்கா?

பரிசல்காரன் said...

// வால்பையன் said...

கிளிஞ்சது கிருஷ்ணகிரி//

கும்க்கியை ஏன் வம்புக்கு இழுக்கறீங்க?

rapp said...

me the 25th:):):)

அருண்மொழிவர்மன் said...

கருத்தை கருத்தால் ஜெயிக்கும்வரை கருவிகள் எதுவுமே ஜெயிப்பதில்லை என்ற வரிகள் நினைவுக்கு வந்தன். இந்த பிரச்சனையை திசை திருப்புவதை விட இதனை சற்று மனிதாபிமானமாக அணுகவேண்டும் என்பது என் கருத்து.....


வேறென்ன வால் பையன்

Tech Shankar said...

சாமியே! சரணம் அய்யப்பா!

பிரச்சினை ஓய்ந்ததா?
இல்லையா?

வழக்கு நிலுவையில் இருக்கிறது.

வாய்தா அடுத்த வருடம் ஜனவரி மாதம் 26ம் நாள்.

வணக்கம்.

வால்பையன் said...

வாங்க மணிகண்டன்
முடிய விடமாட்டிங்க போலிருக்கே

அருண் said...

அப்போ ப்ளீச்சிங் பவுடர் blogs இனிமே வராதா? :-/

அருண் said...

\\"எல்லாம் முடிவுக்கு வந்தது!!"//

மறுபடியும் எப்போ ஆரம்பிக்கும்??

வால்பையன் said...

நன்றி அதிஷா
அந்த பழமொழி எதுக்கு

நன்றி வெண்பூ
உங்களின் அன்புக்கு இன்னொரு நன்றி

வால்பையன் said...

வருகைக்கும் தமிழ் முயற்சிக்கும் நன்றி ருத்ரன் சார்.

நீங்கள் முதன் முதலில் பின்னூட்டம் இட்டதும் என் ப்ளாக் தானாம். பின் முதன் முதலில் தமிழில் பின்னூட்டம் இட்டதும் என் ப்ளாக் தான் என்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

வால்பையன் said...

நன்றி சகா

நன்றி சிம்பா
யார் பேப்பர்காரங்க, புதுசா வார பத்திரிக்கையில எழுதுராரே ஒருத்தர் அவரா, அவரு ரொம்ப நல்லவராச்சே

நன்றி கபீஷ்
உங்களின் ஆலோசனையும் இதில் உண்டு, அதற்க்காக நன்றி

வால்பையன் said...

ஜிம்ஷா
என்னதிது ஒரு பதிவுக்குண்டான மேட்டர இப்படி அசால்டா பின்னூட்டதில போட்டுடிங்க,
அதுவும் கிரஹாம்பெல் மேட்டர் சூப்பர்.
கண்டிப்பா அடுத்த முறை சரக்கடிக்கும் போது கொஞ்சம் என் கணிணியில் ஊத்திறுறேன்.

ஆமா இது போன பதிவுக்கு போட வேண்டிய பின்னூட்டம் தானே

வால்பையன் said...

நன்றி கோவிஜி


நன்றி அமரபாரதி
பணத்தையும் பொருட்படுத்தாமல் இதற்காக அமெரிக்காவில் இருந்து நீங்கள் அழைத்து பேசியதும் ஒரு காரணம்

நன்றி ராப்
உங்க மன்னிப்பை நான் ஏத்துக்கிறேன்
வெண்பூவிற்க்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.

நன்றி ச்சின்னபையன்

வால்பையன் said...

நன்றி நல்லதந்தி

நன்றி தமிழன்...(கறுப்பி...)

நன்றி விஜய்ஆனந்த்
இதனால் தான் நீங்கள் என்னிடம் சில நாட்களாக சரியாக பேசவில்லை என்று எனக்கு தெரியும்

சரியா சொன்னிங்க வீணாபோணவன்

வால்பையன் said...

நன்றி பரிசல்
//பங்க்கா? பங்கா?//
பெட்ரோல் எங்கே கிடைக்குமோ அது

//கும்க்கியை ஏன் வம்புக்கு
இழுக்கறீங்க?//
ரஜினிக்கும் சொந்த ஊர் கிருஷ்ணகிரியாம், நீங்க தான் கும்க்கியை சிக்க வைக்கிறிங்க இங்க

நன்றி அருண்மொழிவர்மன்
பெரியவங்க சொன்னா சரியாத் தான் இருக்கும்

வால்பையன் said...

நன்றி தமிழ்நெஞ்சம்
நீங்களே வக்கிலா வந்துருங்களேன்.

நன்றி அருண்
அதை ப்ளீச்சிங்பவுடர் தான் சொல்ல வேண்டும்.

மீண்டும் ஏன் ஆரம்பிக்கவேண்டும்.

அருண் said...

//வால்பையன் said...
நன்றி அருண்
அதை ப்ளீச்சிங்பவுடர் தான் சொல்ல வேண்டும். //

அப்போ அந்த ஐடில லாகின் பண்ணி சொல்லுங்க. :)

வால்பையன் said...

கோவிச்சிக்காம பாஸ்வேர்டு கொடுங்க அருண்குமார் உடனே லாக்கின் பண்ணிடுறேன்

குசும்பன் said...

ரைட்டு சந்தோசமான விசயம்!

அப்பால
//உங்கள் போதைக்கு ஊறுகாயாக எங்களை ஆக்காதீ்ர்கள்.//

ஊறுகாய் தேடும் உங்களையே ஊறுகாயாக ஆக்கியவர்களை கண்டிக்கிறேன்:))))

குசும்பன் said...

மிஸ்டர் வால் இந்த பஞ்சாயத்துக்கு சஞ்சய் & நந்து வந்தார்களா இல்லையா? இல்லை என்றால் இதை ஒத்துக்கமுடியாது!

குசும்பன் said...

பதிவை விட ஜிம்சா பின்னூட்டம் பெருசா இருக்கு:)

Sanjai Gandhi said...

இது ரொம்ப சந்தோஷமான விஷயமாக இருந்தாலும் எங்கள் முன்னிலையில் பஞ்சாயத்து நடைபெறாமல் தனியே நீங்கள் இருவரும் பேசித் தீர்த்துக் கொண்டதாம் பலரின் தாக சாந்திக்கு வழி இல்லாமல் போனதாலும் சங்கக் கட்டிடத்திற்கு வர வேண்டிய வருமானம் போனதாலும் , இந்த பதிவு சும்மா தமாஷுக்கு எழுதியதாகவே கருதப் படுகிறது.

சரி, இதே மாதிரி எப்போ உங்க மத்த பெயர்களிலும் பதிவு வரும்?
...கிகிகி... :))

☼ வெயிலான் said...

பிரச்சனைகள் எல்லாம் முடிவுக்கு வந்தது.

இனிய நட்புறவு இன்றிலிருந்து ஆரம்பமாகிறது.

Bleachingpowder said...

//அருண் said...

//வால்பையன் said...
நன்றி அருண்
அதை ப்ளீச்சிங்பவுடர் தான் சொல்ல வேண்டும். //

அப்போ அந்த ஐடில லாகின் பண்ணி சொல்லுங்க.
//

அதை ப்ளிச்சிங்பவுடர் தான் சொல்ல வேண்டும். போதுமா அருண் :))

Bleachingpowder said...

ச்சே என்ன தான் சமாதானம் ஆனாலும் இந்த ஐடி மாத்தி பின்னூட்டம் போடற பழக்கம் மட்டும் போகவே மாட்டேங்குது

Bleachingpowder said...

//அருண் said...
அப்போ ப்ளீச்சிங் பவுடர் blogs இனிமே வராதா? :-/
//

அத நீங்க வால்பையன் கிட்ட தான் கேட்கனும்

Bleachingpowder said...

//கார்க்கி said...
எது நல்லது என்பதை நீங்கள் இருவரும்தான் தீர்மானிக்க வேண்டும்..//

அப்ப நானு??

Bleachingpowder said...

//சிம்பா said...
இப்படி பேசி சமாதானம் ஆனா.. அப்புறம் பேப்பர் காரங்களுக்கு வேலை இல்லாம போய்ருமே..//

பேப்பர்காரங்களை விடுங்க இப்ப நான் என்ன செய்யயயயய....

Bleachingpowder said...

//அருண் said...
\\"எல்லாம் முடிவுக்கு வந்தது!!"//

மறுபடியும் எப்போ ஆரம்பிக்கும்??
//

நீங்க சொல்லுங்க திரும்ப ஆரம்பிச்சிடலாம் :))

Kumky said...

ஹலோ..நீங்கதான் வால் பையனா?
லக்கி யாரு...சென்னையில இருக்காரே அவரா?
உங்க ரெண்டு பேருக்கும் என்ன பிரச்னை?
சொத்து தகறாரா?...பங்காளி சண்டயா..?
யார கேட்டு சண்டை போட்டிங்க?
அப்புறம் யரை கேட்டு சமாதான் ஆனிங்க?
எதுக்கு எல்லாரும் சந்தோஷப்படறாங்க?
ரெண்டு பக்கமும் எதிர் பதிவுகள் குறையும் என்றா?
அப்புறம் இதுல கிருஷ்ணகிரி எதுக்கு கிழியுது?
அதிஷ புல்லுக்கு (full)தாங்குவாரா..மாட்டாரா?
ஏன் அதிஷ வுக்கு கால் போட்டா வரமாட்டேங்குது?
பிரச்னைக்கு நீங்க இருவருமே காரணம் இல்லைன்னு இருவருமே புரிஞ்சிகிட்டீங்களா..இல்லையா......அதை வெண்பூ புரிஞ்சிகிட்டாரா இல்லையா?
எது நல்லதுன்னு கார்க்கி கிட்ட கேட்டீங்களா..இல்லையா?
சிம்பா என்ன சொல்லியிருக்கார்ன்னு புரியுதா..இல்லையா?
இந்த ஜிம்ஜா எதுக்கு கொஞ்சூண்டு போட்டுட்டு இப்படி ஒப்பன் பண்றார்?
அவரை ஒரு360 போட்டு மட்டை ஆக சொல்லவேண்டியதுதானே?

ப்பக்கா என்னத்துக்கு சந்ததோஷப்படுறாங்க?

வால்பையன் said...

//குசும்பன் said...
மிஸ்டர் வால் இந்த பஞ்சாயத்துக்கு சஞ்சய் & நந்து வந்தார்களா இல்லையா?//

அவர்கள் இல்லாமலா!
சம்பவத்தின் ஆரம்பத்திலிருந்தே இதில் சஞ்சய் பெரும் ஆர்வமாய் இருந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்.
சம்பவத்தை பற்றி அடிக்கடி தலைவருடன் தொலைபேசுவாராம்.
தலைவரும் இதற்க்காக உலக நாட்டில் உள்ள பல தலைவர்களுடன் கலந்தாலோசிப்பாராம். பொறுமை இழந்த சஞ்சய் தினமும் தலைவரின் அப்பாயின்மெண்ட் கேட்டு ஆயிரம் தந்தி ஸாரி மெயில்களாம்.
தலைவர் ஒரே வார்த்தையில்
அமெரிக்கா ப்ரசிடெண்ட் எலக்‌ஷன் முடியட்டும் பார்க்கலாம் என்று சொல்லியிருக்கிறார்.

பொறுமை இல்லாத சஞ்சய் எனக்கு உதவி செய்வதாக நினைத்து விட்டு எதோதோ பதிவும் போட்டு தலைவரிடம் வாங்கி கட்டி கொண்டார் (வீடியோ ஆதாரம் இருக்கு)

நான் தான் அவசரப்பட்டு லக்கியிடம் தொலைபேசி விட்டேன்.
இதற்காக தலைவருக்கு மன்னிப்பு கடிதம் எழுத வேண்டும்.

தலைவர் யாருன்னு தெரியும்ல
ஈரோட்டு இலக்கிய சிங்கம்
அதாங்க போட்டோகாராரு!
இன்னமுமா தெரியல!

வால்பையன் said...

//பலரின் தாக சாந்திக்கு வழி இல்லாமல் போனதாலும் சங்கக் கட்டிடத்திற்கு வர வேண்டிய வருமானம் போனதாலும் ,//

சங்கத்துக்கு வர வேண்டிய ரெண்டு ஃபுல் மானிட்டர் பெனால்டியாக ஊறுகாயும் தவறாமல் வந்து சேரும்.

இப்படிக்கு
மானஸ்தன்

Kumky said...

ராப்பக்கா சம்மந்திக்கு இதுல ஏன் சந்தோஷம்?
ச்சின்னப்பையன் பாராட்டுராரே ஏத்துக்கிட்டீங்களா..இல்லையா?
நல்ல தந்தியின் தந்தி நல்லாருக்கா..இல்லையா?
வீணா.......வேண்டாம்

பரிசலுக்கும்...பங்க்குக்கும் என்ன சம்மந்தம்?

ஆமா இந்த கும்க்கியை ஏன் வம்புக்கு இழுக்கறீங்க..?

தமிழ் நெஞ்சம் ஏன் சாமி பேர சொல்லி சாபம் விடுறார்?
சஞ்ஜெய் சொல்வதில் என்ன தப்பு?
வெயிலான் ஏன் இங்க வந்து கவுஜ எழுதிக்கொண்டிருகிறார்?
கடைசியா அலுது புலம்பிட்டிருக்கற ப்ளீச்சிங் பவுடருக்கு நீங்க சொல்ல வர்ரது என்ன?
அது சரி...இதையெல்லாம் கேள்வி கேட்க நான் யாரு?
??????????????????????????????????????????????????????????????????????
(மேற் கண்ட கேள்விகளுக்கு பதில் தெரிந்தும் நீர் சொல்லாவிடில்...அடுத்த ஓராண்டிற்க்கு உமக்கு எந்த சரக்கும் கிடைக்காமல் போகக்கடவது)

Sanjai Gandhi said...

வால்.. நீங்க வேண்டுமானால் மானஸ்தனாக இருக்கலாம். ஆனால் நீங்க குடுப்பதை எல்லாம் வாங்கிக் குடிக்க நாங்க ஒன்றும் மானங்கெட்டவர்கள் இல்லை. எங்கள் தலைவருக்கு மானிட்டர் ஒத்துக்காது. ஒரு ஃபுல் பாட்டில் ஓட்காவும் மணிக்கட்டில் வைத்து நக்கிக் கொள்ள எலுமிச்சை பழமும் ”கொச்சினில் ஒரு குடிலும்” புக் பண்ணித் தரவேண்டும் என சங்கம் சார்பில் கட்டளையிடுகிறேன்.

வால்பையன் said...

நன்றி வெயிலான்

நன்றீ ப்ளீச்சிங்பவுடர்
நீங்களும் இதை எனது வேண்டுகோளாக ஏற்று நடந்து முடிந்த பழைய சங்கடங்களை மறந்து விடுமாறு கேட்டு கொள்கிறேன்.

நன்றி கும்க்கி
கிருஷ்ணகிரிகாரங்க ரொம்ப நல்லவங்கன்னு சொன்னாங்க நீங்க அதுக்கு ஆப்பு வச்சிருவிங்க போலிருக்கு

வால்பையன் said...

//ஒரு ஃபுல் பாட்டில் ஓட்காவும் மணிக்கட்டில் வைத்து நக்கிக் கொள்ள எலுமிச்சை பழமும் ”கொச்சினில் ஒரு குடிலும்” புக் பண்ணித் தரவேண்டும்//

தலைவனுக்கு ஏற்ற தொண்டன்.

குடில் எதுக்கு?
நம்ம லிஸ்டுல அது இல்லையே!

Sanjai Gandhi said...

//கிருஷ்ணகிரிகாரங்க ரொம்ப நல்லவங்கன்னு சொன்னாங்க நீங்க அதுக்கு ஆப்பு வச்சிருவிங்க போலிருக்கு//

அப்போ தம்பிசெட்டிபட்டிக்காரன் கெட்டவனா? :(

கிருஷ்னகிரியில் இருந்து காவேரிப்பட்டினம், காரிமங்கலம் மார்க்கமாக கம்பைநல்லூர் வழியில் சென்றால் மொரப்பூரைத் தாண்டி தம்பிசெட்டிபட்டி இருக்கு.. இவ்ளோ பக்கத்துல இருக்கிற நான் கெட்டவனா? :((

வால்பையன் said...

//மேற் கண்ட கேள்விகளுக்கு பதில் தெரிந்தும் நீர் சொல்லாவிடில்...அடுத்த ஓராண்டிற்க்கு உமக்கு எந்த சரக்கும் கிடைக்காமல் போகக்கடவது//

கிடைக்காட்டி நானே காய்ச்சி குடிப்பேன்.

காய்ச்சுறது எப்படீன்னு சஞ்சய் சொல்லி தர்றேன்னு சொல்லிருக்கார்.

Sanjai Gandhi said...

//காய்ச்சுறது எப்படீன்னு சஞ்சய் சொல்லி தர்றேன்னு சொல்லிருக்கார்.//

அய்யா சாமி.. எதுவா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம்.. லோக்கல் போலிசால எண்டர் ஆக முடியாத ஏரியாவா இருந்ததால இப்போ தான் நாமக்கல் போலிஸ்காரங்களை விட்டு பின்னி பெடல் எடுத்தாங்க எங்க ஆளுங்கள.

நீங்க வேற எனக்கும் ஆப்பு வச்சிடாதிங்க.. :(

வால்பையன் said...

//அப்போ தம்பிசெட்டிபட்டிக்காரன் கெட்டவனா? :(//

இத நான் வேற என் வாயால சொல்லனுமா!

வால்பையன் said...

//இவ்ளோ பக்கத்துல இருக்கிற நான் கெட்டவனா? :((//

பக்கத்துல இருக்குறது நால தான் எல்லா மேட்டரும் எங்களுக்கு தெரியுது.

அந்த ஞாயிற்றுகிழமை டேட்டிங் யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சிங்களா
எங்கிட்ட வீடியோ ஆதாரம் இருக்கு

வால்பையன் said...

//நீங்க வேற எனக்கும் ஆப்பு வச்சிடாதிங்க.. :( //

நீங்க சொன்னதுக்கு என்னிடம் ஆடியோ ஆதாரம் இருக்கு

Anonymous said...

சந்தோசம் வால். இத இத இதத்தான் நான் எதிர்பார்த்தேன்.

Unknown said...

// இந்த விவாதங்கள் எதாவது தெளிவை கொடுக்கும் என்று காத்திருந்தால், அது திசை மாறி எங்களுக்குள் பெரும் பகையை மூட்ட தெரிந்தது. நல்லவேளை கணத்தில் சுதாரித்ததால் பிரச்சனை முடிவுக்கு வந்தது. //

பெரிய... அம்பானி , டாட்டா ரெண்டு பேரும்....... பிரியபோய் சுதாரிச்சுகிட்டு ஒன்னு சேர்ந்துட்டாங்களாம் ... கம்முனாடிங்களா ., நீங்க வாங்குற அஞ்சு பத்துக்கு .. எதுக்குடா இந்த விளம்பரம்...


//எனது பதிவுகளில் ஆபாசமாக பின்னூட்டம் இடுவது, பின்னாலேயே அது அவன் தான் என்றும் பின்னூட்டம் இட்டு சண்டை முட்டி விடுவது.//

இதெல்லாம் அரசியல்ல சாதாரணம்பா...........


//அதே போல் அங்கேயும் என் பெயரில் அதர்ஆப்சனில் ஆபாச பின்னூட்டம் இடுவது போன்ற இழி செயல்களை செய்து வந்தனர். //

என்ன ஆபாசம் ..... சகிலாவையும் உங்களையும் சேர்த்து வெச்சு பேசிட்டாங்களா..?
சந்தோசபடுங்க பாஸ்... ஒரு publicity கெடைக்குமுள்ள......

இப்போ நீங்க எதுக்கு post போடுறிங்கா!? ஒரு விளம்பரம் .... அதுபோலத்தான் இதுவும் ....

// இப்பிரச்சனைக்கு முகம் தெரியாத அனானிகள் மட்டுமில்லாமல் கூடவே இருக்கும் சில நண்பகளும் அவர்கள் பங்க்குக்கு பெட்ரோல் ஊற்றி இருக்கிறார்கள், //

ஆஹா..!! cycle gap 'ல பஞ்ச் அடுசிடிங்கலே பாஸ்..., இந்த list 'ல நா இல்லையே???

கவலை படாதிங்க பாஸ் ... அந்த நண்பர்களையெல்லாம் கண்டுபிடுச்சு ., ஹிட்லர் style 'ல போட்டுதள்ளீடுவோம்..............


//இனி அது தேவைப்படாது நண்பர்களே இனி ஏதும் பிரச்சனை என்றால் நானே பேசி தீர்த்து கொள்கிறேன்.//

one man army ??!!???


// உங்கள் போதைக்கு ஊறுகாயாக எங்களை ஆக்காதீ்ர்கள். //

செம தத்துவம் பாஸ் .. chance 'எ இல்ல.......

//இதுவரை என் மேல் நம்பிக்கை கொண்டு கடைசி வரை ஆறுதல் தந்த நண்பர்களுகும், கூடவே பழகியிருந்தாலும் நீ தானா அது என்று காயப்படுத்திய நண்பர்களுக்கும் நன்றி. /////


ரொம்ப நல்லவன்யா நீ..... ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் .............

புதுகை.அப்துல்லா said...

appaadaa :))))))

வால்பையன் said...

நன்றி வடகரைவேலன்

நன்றி மாதேஷ்
அடங்கவே மாட்டிங்க போல

நன்றி புதுகை அப்துல்லா
உங்களின் முயற்சியும் இதில் உண்டு

!

Blog Widget by LinkWithin