ஆனந்தவிகடனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!!

மறுபடியும் பகிரங்க கடிதம் சீஸன் ஆரம்பிச்சிருச்சான்னு பார்க்காதிங்க!
இது ரெண்டு வாரமா மனசுகுள்ள குடைஞ்சிகிட்டு இருக்குற கேள்விகள்!

12 வருடமாக காசு கொடுத்து ஆனந்தவிகடன் வாங்கும் வாசகன் என்ற முறையில் அதனை விமர்சிப்பதற்கும், சில கேள்விகளை முன் வைப்பதற்கும் எனக்கு உரிமை இருப்பதாக நம்புகிறேன். இதனை அவர்களுக்கே கடிதம் மூலம் கேட்டிருக்கலாம், ஆனால் அது அவர்களுடைய தலைமை வரை செல்லுமா எனும் சந்தேகத்திலேயே பதிவாக இடுகிறேன்.

இலவசம் என்ற வார்த்தையே மனிதனை அடிமைப்படுத்தும் ஒரு கருவி என நினைப்பவன் நான். ஆனால் இந்த விசயத்தில் தான் அவர்களுது தரம் அவர்களின் பேப்பர் தரத்தை விட கீழே போனது வருத்தம் தரும் செய்தி.

புதிய வடிவில் 5 ரூபாய் விலையேற்றி வந்திருந்த ஆனந்தவிகடன் எனக்கு புதிதாக எந்த அனுபவத்தையும் தரவில்லை என்பதே உண்மை! இன்பாக்ஸ் என்ற பெயரில் கிசு கிசு போன்ற செய்திகளையும், புதிய எலக்ட்ரானிக் பொருள்களை அறிமுகப்படுத்துகிறேன் என்ற பெயரில் என்னை போன்ற நடுத்தரத்துக்கும் கீழே இருப்பவர்களின் வயிற்றீல் அடுப்பு பற்றவைப்பதில் அப்படி என்ன ஆசையோ! சரி அப்படியே நடுத்தர வர்கத்துகு உதவியாக இருந்தாலும் ஏற்கனவே வாங்கிய பொருள்களை என்ன செய்வதாம்!

நான் கொடுக்கும் 15 ரூபாயும் அவர்களின் பொக்கிஷமாக வரும், சிறு புத்தகத்திற்கே. இன்றைய பிரச்சனைகளுக்கு அன்றைய தலைவர்களின் தீர்வு என்னவாக இருந்தது, சிறிதும் குணத்தை மாற்றி கொள்ளாத இயற்கை பேரழிவில் அதேபோல் குணத்தை மாற்றி கொள்ளாத அரசியல்வாதிகளின் மெத்தனம் போன்றவை என்னை போல் அரசியலின் புதிய பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவம்.


இந்த பதிவிற்கு இவைகள் மட்டுமே காரணமல்ல! அவர்களின் சில அலட்சிய போக்கை சுட்டி காட்டவே இந்த பதிவு. இம்மாதிரியான புதிய வடிவு புத்தகம் வரும் பொழுது, முன் அட்டையில் பாடல் வரிகளின் எழுத்துகளை சிதறி போட்டு சரியான வார்த்தையை கண்டுபிடிக்க சொல்வார்கள், பொதுவாக நான் பாடல்களை பெரிதாக கவனிப்பவனில்லை என்றாலும், “கண்கள் இரண்டால்” என்ற பாடல் வரி எனக்கு கண்டுபிடிக்க மிக எளிதாக இருந்தது. எப்போதும் ஏமாறாமல் இருக்க நான் என்ன இயந்திரமா? ஒரு குறுந்தகவலுக்கு 3 ரூபாய் வீதம் இரண்டு குறுந்தகவல் அனுப்பினேன். 50 ரூபாய்க்கு ரீஜார்ஜ் செய்யப்படும் என மறுநாள் ஒரு குறுந்தகவல் வந்தது. இன்று வரை ஒரு ருபாய்க்கு கூட டாக்டைம் வரவில்லை.

பிறகு ஒருமுறை ஒரு கூப்பன் உரசினால் ஒரு சின்ன சோப்பு இலவசம், கடைக்காரரிடம் கேட்டேன். புத்தகம் மட்டும் தான் வந்தது சோப்பு வரவில்லை என்றார். அன்றும் ஆனந்தவிகடன் புண்ணியத்தில் குளிக்கவில்லை!

மாஸ்டர் பீஸ், ஏர்செல் சிம் இலவசம் தான்! எப்போதும் வியாழக்கிழமை மதியம் சாப்பாட்டிற்கு போகும் போது வாங்கி விடுவேன், அன்று போகும் போது கடையின் வெளியே புத்தகம் இல்லை, சில நாட்களில் அம்மாதிரி நடப்பது உண்டு, புத்தகம் வரவில்லை போல என்று வீட்டிற்க்கு போய்விட்டேன். மறுபடியும் நான்கு மணிக்கு வந்து கேட்டால் புத்தகம் தீர்ந்து விட்டதாம். ஒவ்வொருவரும் நான்கு புத்தகங்கள் வாங்கி சென்றிருக்கிறார்கள். ஈரோடு முழுவதும் சுத்தி பார்த்தேன். எங்கேயும் இல்லை!

கடைசியாக அந்த கடைக்காரரிடமே எனக்கு புத்தகம் மட்டும் தான் வேண்டும், அதை மட்டும் யாராவது கொடுத்தால் வாங்கி வையுங்கள் என்றேன்.

அது இருக்குதே என்றார்.

10 ருபாய் வாங்கி கொண்டு புத்தகம் மட்டும் கொடுத்தார்!(ஆக சிம் 5 ருபாய்)

இதே போல் திருப்பூர், கோவை, மதுரையிலும் நடந்திருக்கிறது.
சில இடங்களில் புத்தகம் 60, 70 ருபாய்க்கு விற்பனையானதாக தகவல்.

ஒரு வாசகனை போய் சேர முடியாத இணைப்புகள், கொடுத்தால் என்ன கொடுக்காவிட்டால் என்ன? ஏன் இந்த இணைப்பை பற்றி முன் வார விகடனில் சொல்லவில்லை. இம்மாதிரியான இணைப்புகள் கொடுக்கும் பொழுது அதிக புத்தகங்கள் வெளியிட்டு இருக்கலாமே! தொடர்ச்சியாக வாங்கும் வாசகனுக்கும், இணைப்புகளை மட்டும் வாங்கும் வாசகனுக்கும் வேறுபாடுகளை எப்படி காண்பீர்கள். சந்தாதாரர்களுக்கு இணைப்புகளை அனுப்புவீர்களா? ஆன்லைனில் பணம் கட்டி படிப்பவர்களுக்கு!

நிறைய கேள்விகள் இருக்கிறது?

நான் பேப்பரின் தரத்தை விட கட்டுரைகளின் தரத்தை மட்டும் பார்ப்பதால் அது வேண்டாம்!



73 வாங்கிகட்டி கொண்டது:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கடிதமாக எழுதினால் தலைமைக்குப் போகாது, ஆனால் பதிவா எழுதினா போகுமா? :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இதுலயும் நிறைய எழுத்துப் பிழைகள் வால். சரி பண்ணுங்க.

ஆ! இதழ்கள் said...

"அன்றும்" ஆனந்தவிகடன் புண்ணியத்தில் குளிக்கவில்லை!//

என்னையா இது.... ப்ளாக்ஸ்பாட்டுக்கு வந்த சோதனை.

Tech Shankar said...

இது என்ன மதுரைக்கு வந்த சோதனை.

ஆனந்த விகடன் எப்போது இலவசம் கொடுக்க ஆரம்பித்ததோ - அப்போதே தரம் தாழ்ந்துவிட்டது.

ஞாநியைத் தூக்கியது. - அப்போது அதன் சுயரூபம் வெளிப்பட்டது.

எல்லாமே காசுக்காகத்தான்.

பண நோக்கம் இல்லாத ORG க்கள் இணையத்தில் வேண்டுமானால் இருக்கலாமே ஒழிய,

-ஹார்டு காப்பி புத்தகங்களை விற்கும் ஒரு வாரப்பத்திரிகையிடம் அதையெல்லாம் எதிர்பார்க்க இயலாது.

கிரி said...

அருண்..பத்திரிகைகளின் தரம் குறைந்து எவ்வளோ வருடங்களாகி விட்டது. தற்போது அனைவரின் கவனமும் வசூலில் தான்..தரத்தில் இல்லை..

கார்க்கிபவா said...

அய்யோ அய்யோ... பாவங்க நீங்க‌

- இரவீ - said...

நீங்க வாலு பய்யனா... லூசு பய்யனா?
கோபபடாதீங்க,
அவங்களே - பதிவுகளை பிரதியாக்கி பணம் பண்ணுறாங்க,
நீங்க - பதிவும் எழுதி பணமும் கொடுக்கறீங்க.

வேற என்ன சொல்ல ....
இன்னும் - இந்த உலகம் நம்மள நம்புது.

கணேஷ் said...

//
ஒரு குறுந்தகவலுக்கு 3 ரூபாய் வீதம் இரண்டு குறுந்தகவல் அனுப்பினேன். 50 ரூபாய்க்கு ரீஜார்ஜ் செய்யப்படும் என மறுநாள் ஒரு குறுந்தகவல் வந்தது. இன்று வரை ஒரு ருபாய்க்கு கூட டாக்டைம் வரவில்லை.

பிறகு ஒருமுறை ஒரு கூப்பன் உரசினால் ஒரு சின்ன சோப்பு இலவசம், கடைக்காரரிடம் கேட்டேன். புத்தகம் மட்டும் தான் வந்தது சோப்பு வரவில்லை என்றார்.
//

மருதைல ஒரு பழமொழி சொல்லுவாய்ங்க... "பட்ட காலிலேயே படும் கெட்ட குடியே கெடும்னு" விகடன்ல இருந்து நீங்க இலவசமா எதையும் வாங்க கூடாதுன்னு யாரும் செய்வினை வச்சிருப்பாய்ங்களோ???... பாத்து சூதனமா இருந்துக்கோ தல........

ஆமா நீங்க இதுக்கு முன்னாடி போட்ட பதிவுக்கும் இந்த பதிவுக்கும் எதுவும் சம்மந்தம் இல்ல தான ???

Kumky said...

ஆ,,வி யெல்லாம் படிச்சி பல காலமாச்சுன்னே....இன்னுமா அந்த கண்ராவியெல்லாம் வாங்கி கட்டிகிட்டு அழறீங்க...?

Kumky said...

சலுகை ஒழுங்கா வரலைன்னுதானே உங்க கம்ப்ளெய்ண்ட்..?
அப்புறம் வேற குறையெல்லாம் சொல்லபடாது.

Kumky said...

ஒரு வேளை இந்த சாம்ப்பு..சீப்பெல்லாம் ஒயுங்கா குடுத்தாங்கன்னா....அப்ப என்னா சொல்வீங்க..?

VIKNESHWARAN ADAKKALAM said...

என்னா ஒரு வில்லத்தனம் பண்றாங்க...

நட்புடன் ஜமால் said...

\\ ஜ்யோவ்ராம் சுந்தர் said...
கடிதமாக எழுதினால் தலைமைக்குப் போகாது, ஆனால் பதிவா எழுதினா போகுமா? :)\\

அதானே ...

நட்புடன் ஜமால் said...

\\அதனை விமர்சிப்பதற்க்கும், சில கேள்விகளை முன் வைப்பதற்க்கும் எனக்கு உரிமை இருப்பதாக நம்புகிறேன். \\

தாராளமா இருக்குன்னே

நட்புடன் ஜமால் said...

\\இலவசம் என்ற வார்த்தையே மனிதனை அடிமைப்படுத்தும் ஒரு கருவி என நினைப்பவன் நான். \\

சரியாச்சொன்ன நண்பா

நட்புடன் ஜமால் said...

\\ ஒரு குறுந்தகவலுக்கு 3 ரூபாய் வீதம் இரண்டு குறுந்தகவல் அனுப்பினேன். 50 ரூபாய்க்கு ரீஜார்ஜ் செய்யப்படும் என மறுநாள் ஒரு குறுந்தகவல் வந்தது. இன்று வரை ஒரு ருபாய்க்கு கூட டாக்டைம் வரவில்லை.\\

நண்பா உங்களின் போன பதிவின் “தலைப்பு” ஞாபகப்படுத்துகிறது.

நட்புடன் ஜமால் said...

\\அன்றும் ஆனந்தவிகடன் புண்ணியத்தில் குளிக்கவில்லை!\\

ஒரு மார்க்கமாதான் இருக்குகீக

நட்புடன் ஜமால் said...

\\நான் பேப்பரின் தரத்தை விட கட்டுரைகளின் தரத்தை மட்டும் பார்ப்பதால் அது வேண்டாம்!\\

நல்ல குமறல் நண்பா.

இத தொடர் பதிவாக்கவேண்டியதுதானே

CA Venkatesh Krishnan said...

பத்து ரூபா ஆக்கினப்பவே எப்பவாவது ஒருதரம் தான் வாங்குவேன்.

பதினஞ்சு ரூவாய்க்கப்பறம் அந்தப் பக்கமே போறதில்ல. ஓசியில படிக்கக் கூட முடியல. அவ்வளவு தரம் குறஞ்சி போச்சி. உண்மையிலேயே ஆ.வி.யார் இதை சுய பரிசோதனை செய்ய வேண்டும்.

இல்லையென்றால் காலப்போக்கில் மறைந்துவிடும்.

KARTHIK said...

கடைக்காரங்க புத்தகத்த வெச்சுகிட்டு
சிம் கார்டு பட்டும் தனியா ஒரு விலைக்கு வித்திருக்காங்க.

இது அவங்கலுக்கு எங்க தெரியப்போகுது.

Unknown said...

தேவையான பதிவு... நம்மிடம் காசு வங்கிகொண்டு இலவசம் என்று கூறுவது தவறு...அதுவும் தேவையில்லாத விசயத்தை...

வால்பையன் said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கடிதமாக எழுதினால் தலைமைக்குப் போகாது, ஆனால் பதிவா எழுதினா போகுமா? :)
//

கடிதங்கள் ஓரிரு கைகளிள் இருட்டடிக்கபடலாம். ஆனால் நமது ப்ளாக் உலகில் விகடன் குழுமத்தில் நேரடியாகவும்,மறைமுகமாகவும் வேலை செய்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், அவர்களில் யாராவது கொண்டு செல்வார்கள் என்ற நம்பிக்கை தான்.

வால்பையன் said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இதுலயும் நிறைய எழுத்துப் பிழைகள் வால். சரி பண்ணுங்க.//

மன்னிக்கனும், எனக்கு எது எது தவறென்றே தெரியவில்லை, எப்படி திருத்துவது. யாராவது சுட்டி காட்டினால் இனி அந்த பிழைகள் வராமல் பார்த்து கொள்கிறேன்.

வால்பையன் said...

//ஆ! இதழ்கள் said...

"அன்றும்" ஆனந்தவிகடன் புண்ணியத்தில் குளிக்கவில்லை!//

என்னையா இது.... ப்ளாக்ஸ்பாட்டுக்கு வந்த சோதனை.//

ஹி ஹி
இது என் கூட வேலை செய்பவர்களுக்கு வந்த சோதனை

வால்பையன் said...

நன்றி தமிழ் நெஞ்சம்

கருத்துகள் ஒத்து போகிறது!

//-ஹார்டு காப்பி புத்தகங்களை விற்கும் ஒரு வாரப்பத்திரிகையிடம் அதையெல்லாம் எதிர்பார்க்க இயலாது.//

இது தான் புரியவில்லை, நான் எதை வித்தேன்!

வால்பையன் said...

//கிரி said...

அருண்..பத்திரிகைகளின் தரம் குறைந்து எவ்வளோ வருடங்களாகி விட்டது. தற்போது அனைவரின் கவனமும் வசூலில் தான்..தரத்தில் இல்லை..//

நீங்கள் சொல்வது உண்மை தான் ஆனால் வாசகன் முழித்து கொண்டால் என்னாவது?

அக்னி பார்வை said...

///நான் கொடுக்கும் 15 ரூபாயும் அவர்களின் பொக்கிஷமாக வரும், சிறு புத்தகத்திற்கே. இன்றைய பிரச்சனைகளுக்கு அன்றைய தலைவர்களின் தீர்வு என்னவாக இருந்தது, சிறிதும் குணத்தை மாற்றி கொள்ளாத இயற்கை பேரழிவில் அதேபோல் குணத்தை மாற்றி கொள்ளாத அரசியல்வாதிகளின் மெத்தனம் போன்றவை என்னை போல் அரசியலின் புதிய பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவம்.
///

சரி ஒரு 15 வருடம் கழித்து இந்த மாதிரி ‘Flash Back' புத்த்கம் போட்டால்.. இப்பொழுது வரும் ஆனந்த விகடனில் இருந்து எந்த கட்டுரையை எடுத்து போடுவார்கள்?

இப்பொழுது வரும் பெரும்பாலான கட்டுரைகள் குப்பை!!

:))))

வால்பையன் said...

//கார்க்கி said...

அய்யோ அய்யோ... பாவங்க நீங்க‌//

உங்களுக்காவது என் கஷ்டம் புரியுதே!

வால்பையன் said...

//Ravee (இரவீ ) said...

நீங்க வாலு பய்யனா... லூசு பய்யனா?
கோபபடாதீங்க, //

இதில கோபப்படுறதுக்கு என்ன இருக்கு!
எல்லோருமே மதில் மேல் பூனைகள் தான். கொஞ்சமாவது இருக்கும் விளிப்பு நிலையே பாதுகாக்கிறது மனம் பிறழாமல்

//அவங்களே - பதிவுகளை பிரதியாக்கி பணம் பண்ணுறாங்க,
நீங்க - பதிவும் எழுதி பணமும் கொடுக்கறீங்க.//

இங்கே எந்த இடத்திலும் ஆனந்த விகடனுக்கு விளம்பரம் கொடுத்திருக்கிறேனா?

வால்பையன் said...

//கணேஷ் said...
மருதைல ஒரு பழமொழி சொல்லுவாய்ங்க... "பட்ட காலிலேயே படும் கெட்ட குடியே கெடும்னு" விகடன்ல இருந்து நீங்க இலவசமா எதையும் வாங்க கூடாதுன்னு யாரும் செய்வினை வச்சிருப்பாய்ங்களோ???... பாத்து சூதனமா இருந்துக்கோ தல........

ஆமா நீங்க இதுக்கு முன்னாடி போட்ட பதிவுக்கும் இந்த பதிவுக்கும் எதுவும் சம்மந்தம் இல்ல தான ???//


ஹா ஹா ஹா
எனக்கு சூன்யத்தில நம்பிக்கை இல்லை! இது அக்மார்க் கவன குறைவே!

போன பதிவுக்கும் என் வாழ்க்கைக்குமே சம்பந்தம் இருக்கும் போது, இந்த பதிவு எம்மாத்திரம்

வால்பையன் said...

//கும்க்கி said...

ஒரு வேளை இந்த சாம்ப்பு..சீப்பெல்லாம் ஒயுங்கா குடுத்தாங்கன்னா....அப்ப என்னா சொல்வீங்க..?
//

ஆனந்தவிகடன் புண்ணியத்துல இன்னைக்கு குளிச்சேன்னு சொல்லுவேன்

வால்பையன் said...

நன்றி நிஜமா நல்லவன்!
நீங்க நிஜமாவே நல்லவருன்னு அந்த ஸ்மைலி சொல்லுது!

//VIKNESHWARAN said...
என்னா ஒரு வில்லத்தனம்
பண்றாங்க...//

அவுங்க வில்லத்தனம் பண்றாங்க, ஆனா என்னை காமெடி பண்ண வச்சிடாங்களே!

வால்பையன் said...

//அதிரை ஜமால் said...

\\நான் பேப்பரின் தரத்தை விட கட்டுரைகளின் தரத்தை மட்டும் பார்ப்பதால் அது வேண்டாம்!\\

நல்ல குமறல் நண்பா.

இத தொடர் பதிவாக்கவேண்டியதுதானே
//

இந்த தொடரில்லை நண்பா!
வரிசையா பகிரங்க கடிதம் வரும் பாருங்க!

வால்பையன் said...

//இளைய பல்லவன் said...

பத்து ரூபா ஆக்கினப்பவே எப்பவாவது ஒருதரம் தான் வாங்குவேன்.

பதினஞ்சு ரூவாய்க்கப்பறம் அந்தப் பக்கமே போறதில்ல. ஓசியில படிக்கக் கூட முடியல. அவ்வளவு தரம் குறஞ்சி போச்சி. உண்மையிலேயே ஆ.வி.யார் இதை சுய பரிசோதனை செய்ய வேண்டும்.

இல்லையென்றால் காலப்போக்கில் மறைந்துவிடும்.
//

நீங்கள் சொல்வதிலும் உண்மை இருக்கிறது, இரண்டு புத்தகமாக்கி 15 ருபாய் ஆக்கினார்கள், இப்போது மீண்டும் ஒரு புத்தகம் தானாம்!

மக்களின் பெருந்தன்மையை அவர்கள் தவறாக பயன்படுத்துகிறார்களோ என சந்தேகம் எனக்கு

வால்பையன் said...

//கார்த்திக் said...

கடைக்காரங்க புத்தகத்த வெச்சுகிட்டு
சிம் கார்டு பட்டும் தனியா ஒரு விலைக்கு வித்திருக்காங்க.

இது அவங்கலுக்கு எங்க தெரியப்போகுது.//

ஆம் , நிறைய இடங்களில் இது நடந்திருக்கிறது. இது வரை தெரியாமல் இருக்கலாம், இப்போது தெரிந்து விடும் என நம்பலாம்

வால்பையன் said...

// Faizal said...

தேவையான பதிவு... நம்மிடம் காசு வங்கிகொண்டு இலவசம் என்று கூறுவது தவறு...அதுவும் தேவையில்லாத விசயத்தை...//

உண்மை தான் நான் உபயோகிப்பது, ஏர்டெல் தான் வீட்டிலும், அலுவலகத்திலும். இந்த சிம் கிடைத்திருந்தாலும் யாராவது நண்பர்களுக்கு கொடுத்திருப்பேன்!

வால்பையன் said...

//அக்னி பார்வை said...
சரி ஒரு 15 வருடம் கழித்து இந்த மாதிரி ‘Flash Back' புத்த்கம் போட்டால்.. இப்பொழுது வரும் ஆனந்த விகடனில் இருந்து எந்த கட்டுரையை எடுத்து போடுவார்கள்?

இப்பொழுது வரும் பெரும்பாலான கட்டுரைகள் குப்பை!!//

ஆம், தற்காலிக அரசியலில் பெரும் கவனம் செலுத்துகிறது, அதுவும் ஒரு தலை பட்சமாக!

வாசகர்களுக்கு உண்மையை கண்டு பிடுத்து சொல்லும் பொறுப்பு பத்திரிக்கைகளுக்கு இருக்கிறது.

ஸ்பெக்ட்ரம் பிரச்சனையை ஆ.வி. கையில் எடுக்க வேண்டும்

Mahesh said...

வாஸ்தவந்தங்க... எப்பிடீருந்த பத்திரிக்கை இப்பிடி ஆயிடுச்சு? ஆசிரியர் சீனிவாசனுக்கே தெரியும்னு நினைக்கிறேன்.. இப்ப வர ரெண்டு புத்தகத்துல எதுக்கு வேல்யூ அதிகம்னு. ஃபார்மட்லயும் புதுசா ஒண்ணும் இல்ல.. எல்லாம் இந்தியா டுடே, தி வீக் மாதிரி இருக்கு...

விகடனாருக்கு ஜீன்ஸ் பேண்ட், டீ ஷர்ட் போட்டா ஆச்சா? எலி பேண்ட் போட்டா எலிபெண்ட் ஆயிடுமா? விகடனுக்கு வந்த சோதனை. :(

சிம்பா said...

நீங்கெல்லாம் பெரியவுஹ, நாலு எழுத்து படிசவுஹ.. ஆனாலும் குங்குமம் புத்தகத்தோட நிலைமை விகடனனுக்கும் வந்திருச்சா...

என்ன கொடுமை இது வால்'s. அப்படி இலவசங்கள் மூலமாத்தான் புத்தகங்களை விற்ப்பனை செய்யனுமா..


சந்தடி சாக்குல Aircel டிமாண்டு இருக்குன்னு இப்படி பொய் சொல்லிடீங்களே..

சின்னப் பையன் said...

அச்சச்சோ.. மறுபடி எப்போ விகடன் சோப்பு குடுக்கறது - நீங்க எப்போ குளிக்கறது????

Muthu said...

"மன்னிக்கனும், எனக்கு எது எது தவறென்றே தெரியவில்லை, எப்படி திருத்துவது. யாராவது சுட்டி காட்டினால் இனி அந்த பிழைகள் வராமல் பார்த்து கொள்கிறேன்."

கேட்டதால் இவை, பிழையெனில் பொறுத்தருள்வீராக :)

"ஆனால் இந்த விசயத்தில்தான் அவர்கது தரம் அவர்களது பேப்பர் தரத்தை விட கீழே போனது வருத்தம் தரும் செய்தி"

"இன்பாக்ஸ் என்ற பெயரில் கிசு கிசு போன்ற செய்திகளை தருவதிலும், புதிய எலக்ட்ரானிக் பொருள்களை அறிமுகப்படுத்துகிறேன் என்ற பெயரில் என்னை போன்ற நடுத்தரத்துக்கும் கீழே இருப்பவர்களின் வயிற்றில் அடுப்பு பற்றவைப்பதிலும் அப்படி என்ன ஆசையோ!"

"இந்த பதிவிற்கு இவை மட்டுமே காரணமல்ல!"

"நிறைய கேள்விகள் இருக்கின்றன?" (ஏன் கேள்விக்குறி ?)

Poornima Saravana kumar said...

//ஆ! இதழ்கள் said...

"அன்றும்" ஆனந்தவிகடன் புண்ணியத்தில் குளிக்கவில்லை!//

என்னையா இது.... ப்ளாக்ஸ்பாட்டுக்கு வந்த சோதனை
//

ரிப்பிட்டேய்.........

அர டிக்கெட்டு ! said...

என்ன ஒரு சமூஉஉஉஉஉஉஉஉக அக்கறை!!!!!!!
தனியொரு மனிதனுக்கு சோப்பில்லையெனில்
ஆநொந்தவிகடனை கொளுத்திடுவோம்!!!

புதியவன் said...

\\அன்றும் ஆனந்தவிகடன் புண்ணியத்தில் குளிக்கவில்லை!\\

இதெல்லாம் ஒரு காரணமா அண்ணா...?

Cable சங்கர் said...

ஆனந்தவிகடன் வியாவாரம் குறைந்துவிட்டது. என்பது நிதர்சன உண்மை அதையே அவர்கள் இன்னமும் ஏற்க மறுக்கிறார்கள். விகடனின் தரம் கீழ் இற்ங்கி ரொம்ப நாளாகிவிட்டது. அதை என்னுடய பதிவுகளில் சர்வேயிலேயே தெரிந்தது அதை அப்படியே விகடனுக்கும் மெயில் அனுப்பி ரொம்ப நாளாச்சு.. நோ.. feedback.

அன்புடன் அருணா said...

ம்ம்ம்....எங்களுக்கு இந்த இலவச சேவை உங்கள் பதிவு படித்துதான் தெரியும் வால்....சந்தாதாரர்கள் நாங்கள்...
அன்புடன் அருணா

பட்டாம்பூச்சி said...

நாங்கெல்லாம் எப்பவோ விகடனின் கருத்துக்களை ஒத்துக்கற வாசிப்பாளரா இருந்து ஒதுக்கற வாசிப்பாளரா மாறிட்டோம்ல....
இன்னுமா அத வாங்கி படிக்கனும்னு தோணுது உங்களுக்கு?ஹையோ ஹையோ...

மின்னல்ப்ரியன் said...

நான் கூட யூத் அட்வைஸ் பகுதில ஒரு அட்வைஸ் எழுதி இருந்தன்.
அதுக்கு ஒரு சோனி எரிக்சன் w350i மொபைல் குடுத்தாங்க..6500 ரூபா
மொபைல் ஒழுங்கா குடுக்கறாங்க.. 50 ரூபா டாக்டைம் குடுக்கமாட்டங்கறாங்க...
உங்களுக்கு அதிர்ஷ்டம் இல்ல போல ,,,,,,,,,,,,,

பாபு said...

தினமலர்ல ஒரு ringtone-க்கு sms அனுப்பினேன்
code சரியில்லை என்று வந்துவிட்டது,ஆனால் ஏழு ரூபாய் அம்பேல்.
இதெல்லாம் ரொம்ப நாளா நடக்குது,

கடந்த இரண்டு மாதமா ஆவி வாங்கறதை நிறுத்தியாச்சு

Unknown said...

unga blog ku evlo comments! vitta antiaanandha vikatan group aarambichuduveenga pola.please join me too in that group. am reading this for the past twenty years. but for the past 2 to 3 months book quality has gone down. even the paper quality they are not able to maintain.

வால்பையன் said...

//Mahesh said...

வாஸ்தவந்தங்க... எப்பிடீருந்த பத்திரிக்கை இப்பிடி ஆயிடுச்சு? ஆசிரியர் சீனிவாசனுக்கே தெரியும்னு நினைக்கிறேன்.. இப்ப வர ரெண்டு புத்தகத்துல எதுக்கு வேல்யூ அதிகம்னு. ஃபார்மட்லயும் புதுசா ஒண்ணும் இல்ல.. எல்லாம் இந்தியா டுடே, தி வீக் மாதிரி இருக்கு...

விகடனாருக்கு ஜீன்ஸ் பேண்ட், டீ ஷர்ட் போட்டா ஆச்சா? எலி பேண்ட் போட்டா எலிபெண்ட் ஆயிடுமா? விகடனுக்கு வந்த சோதனை. :(
//

உண்மை தாங்க மகேஷ்,
இரண்டாவதா நீங்க சொன்ன பாயிண்ட் நச்!!

வால்பையன் said...

//சிம்பா said...
சந்தடி சாக்குல Aircel டிமாண்டு இருக்குன்னு இப்படி பொய் சொல்லிடீங்களே..//

தமிழகத்தில் ஏர்செல் எந்த அளவுக்கு ஆதிக்க நிறைந்ததோ அந்த அளவுக்கு தரம் குறைந்தது! என்பது மறுக்க முடியாத உண்மை,

மாலை ஆறு மணிக்கு மேல் ஏர்செல் வைத்திருப்பவர் போன் பண்ணவும் முடியாது, இன்கம்மிங்கும் வராது

வால்பையன் said...

//ச்சின்னப் பையன் said...
அச்சச்சோ.. மறுபடி எப்போ விகடன் சோப்பு குடுக்கறது - நீங்க எப்போ குளிக்கறது????//

விடாது அடித்த மழை அந்த புண்ணியத்தை கட்டி கொண்டது

வால்பையன் said...

//ஆனால் இந்த விசயத்தில்தான் அவர்களது தரம் அவர்களது பேப்பர் தரத்தை விட கீழே போனது வருத்தம் தரும் செய்தி"//

”அவர்கள்” என்று வர வேண்டுமா?

//இன்பாக்ஸ் என்ற பெயரில் கிசு கிசு போன்ற செய்திகளை தருவதிலும், புதிய எலக்ட்ரானிக் பொருள்களை அறிமுகப்படுத்துகிறேன் என்ற பெயரில் என்னை போன்ற நடுத்தரத்துக்கும் கீழே இருப்பவர்களின் வயிற்றில் அடுப்பு பற்றவைப்பதிலும் அப்படி என்ன ஆசையோ!"//

இரண்டு செய்கைகளையும் ஒருவரே செய்வது போல் வருவதால் தருவதிலும், வைப்பதிலும் என்று எழுதினேன், தவறு பன்மை பயன்பாட்டிலா இல்லை ”லு” விலா?

இருப்பவர்களின் என்று வருவதால் வயிற்றில் என்று பன்மையில் எழுதினேன், ஒருவேளை அது வயிறில் என்று வர வேண்டுமா?

//"இந்த பதிவிற்கு இவை மட்டுமே காரணமல்ல//

இவைகள் என்று வர வேண்டுமோ?

அந்த கேள்வி குறி தவறாக வந்தது தான்.

வால்பையன் said...

நன்றி பூர்ணிமாசரண்

//அர டிக்கெட்டு ! said...

என்ன ஒரு சமூஉஉஉஉஉஉஉஉக அக்கறை!!!!!!!
தனியொரு மனிதனுக்கு சோப்பில்லையெனில்
ஆநொந்தவிகடனை கொளுத்திடுவோம்!!!
//

ஐய்யோ இதுகெல்லாம் போய் கொழுத்துவாங்களா?

வால்பையன் said...

//புதியவன் said...

\\அன்றும் ஆனந்தவிகடன் புண்ணியத்தில் குளிக்கவில்லை!\\

இதெல்லாம் ஒரு காரணமா அண்ணா...?//


சரி இதுவும் ஒரு காரணம் என்று வைத்து கொள்ளலாமே!

வால்பையன் said...

//Cable Sankar said...

ஆனந்தவிகடன் வியாவாரம் குறைந்துவிட்டது. என்பது நிதர்சன உண்மை அதையே அவர்கள் இன்னமும் ஏற்க மறுக்கிறார்கள். விகடனின் தரம் கீழ் இற்ங்கி ரொம்ப நாளாகிவிட்டது. அதை என்னுடய பதிவுகளில் சர்வேயிலேயே தெரிந்தது அதை அப்படியே விகடனுக்கும் மெயில் அனுப்பி ரொம்ப நாளாச்சு.. நோ.. feedback.//


உண்மை தான் இம்மாதிரியான மெயில்கள் தலைமைக்கு போய் சேருவதில்லை போலும்

வால்பையன் said...

//அன்புடன் அருணா said...

ம்ம்ம்....எங்களுக்கு இந்த இலவச சேவை உங்கள் பதிவு படித்துதான் தெரியும் வால்....சந்தாதாரர்கள் நாங்கள்...
அன்புடன் அருணா//


அதனால் தான் உங்களுக்கான கேள்வியும் அங்கே சேர்த்து விட்டேன்.

வால்பையன் said...

/Pattaampoochi said...

நாங்கெல்லாம் எப்பவோ விகடனின் கருத்துக்களை ஒத்துக்கற வாசிப்பாளரா இருந்து ஒதுக்கற வாசிப்பாளரா மாறிட்டோம்ல....//

வார்த்தைகள் விளையாடுது,

//இன்னுமா அத வாங்கி படிக்கனும்னு தோணுது உங்களுக்கு?ஹையோ ஹையோ...//

குமுததுக்கு எவ்வளவோ பெட்டர்ன்னு நினைச்சேன், அது தப்பு போல

வால்பையன் said...

//சந்துரு.k said...

நான் கூட யூத் அட்வைஸ் பகுதில ஒரு அட்வைஸ் எழுதி இருந்தன்.
அதுக்கு ஒரு சோனி எரிக்சன் w350i மொபைல் குடுத்தாங்க..6500 ரூபா
மொபைல் ஒழுங்கா குடுக்கறாங்க.. 50 ரூபா டாக்டைம் குடுக்கமாட்டங்கறாங்க...
உங்களுக்கு அதிர்ஷ்டம் இல்ல போல ,,,,,,,,,,,,,//

அதிர்ஷ்டம் யாருக்கு வேணும்!
போட்டியில் பங்கெடுப்பது வேறு! எல்லொருக்கும் தரும் இணைப்புகள் வேறு. நான் அனுப்பிய குறுந்தகவலுக்கு எந்த பதிலும் வராமல் இருந்தால், நான் அந்த போட்டியில் வெற்றி பெறவில்லை என்று தானே நினைத்திருப்பேன்

வால்பையன் said...

//பாபு said...

தினமலர்ல ஒரு ringtone-க்கு sms அனுப்பினேன்
code சரியில்லை என்று வந்துவிட்டது,ஆனால் ஏழு ரூபாய் அம்பேல்.
இதெல்லாம் ரொம்ப நாளா நடக்குது,

கடந்த இரண்டு மாதமா ஆவி வாங்கறதை நிறுத்தியாச்சு//


ஆம், இந்த குறுந்தகவல் கொள்ளைகள் இப்போது எல்லா பக்கமும் பரவி விட்டது

வால்பையன் said...

//anu said...

unga blog ku evlo comments! vitta antiaanandha vikatan group aarambichuduveenga pola.please join me too in that group. am reading this for the past twenty years. but for the past 2 to 3 months book quality has gone down. even the paper quality they are not able to maintain.//


எல்லோருமே ஒரே மனநிலையில் தான் இருக்கிறோம்.
அவர்கள் உடனே கவனிக்க வேண்டியது தரத்தை

RAMYA said...

//
இலவசம் என்ற வார்த்தையே மனிதனை அடிமைப்படுத்தும் ஒரு கருவி என நினைப்பவன் நான். ஆனால் இந்த விசயத்தில் தான் அவர்களுது தரம் அவர்களின் பேப்பர் தரத்தை விட கீழே போனது வருத்தம் தரும் செய்தி.
//

இப்படி ப்ரீ கொடுத்து
மக்களை ஏமாற்றி
அவர்கள் விற்பனையை
அதிகப்படுத்துகிறார்கள்
ஏமாறுபவர்கள் யார் நண்பா
நாமதான் விழித்துக்கொள்ளவேண்டும்

RAMYA said...

விகடன் பைத்தியமா இருந்தேன்
இப்போ எல்லாம்
அதே பார்க்கறதே இல்லை
இது போல் பப்ளிசிட்டி
ஒரே கோபமாக வருகிறது

அது சரி(18185106603874041862) said...

//
நான் பேப்பரின் தரத்தை விட கட்டுரைகளின் தரத்தை மட்டும் பார்ப்பதால் அது வேண்டாம்!
//

தயவு செய்து கட்டுரைகளின் தற்போதைய தரத்தை பற்றி எழுத ஆரம்பித்து விடாதீர்கள்....அதற்கு பேப்பரின் தரமே மேல் என்பது என் கருத்து...

ஜீவா said...

வால் பையா,நன்றாக உள்ளது

Sanjai Gandhi said...

:))

ஒருகாலத்தில் ஆனந்த விகடனும் குமுதமும் இந்தியாடுடேவும் படிக்காமல் இருக்கவே முடியாது. ஆனால் போகப் போக குமுதத்தில் சினிமாக்காரர்களும் கல்லூரிப் பெண்களுமே பக்கத்தை நிரப்பிக் கொண்டார்கள். அனந்த விகடனும் சர்குலேஷனுக்காக தன் தரத்திற்கு விடைகொடுத்துக் கொண்டிருந்தது. அவர்களும் சினிமாக்காரர்களையும் டீன் ஏஜ் பெண்களையுமே நம்பி “வியாபாரம்” பண்ண அரம்பித்தார்கள். எனவே சில வருடங்களாக்வே இவைகளை தவிர்த்துவிட்டேன்.


இப்போதெல்லாம் வாரம் தவறாமல் வாங்கிப் படிக்கும் ஒரே புத்தகம் இந்தியாடுடே மட்டுமெ. அதுவும் கல்லூரி மற்றும் சினிமா செய்த்கிகளை கவர் ஸ்டோரியாக போட்டு வந்தால் வாங்குவதில்லை. இந்த வாரமும் அவ்வாறே தவிர்த்துவிட்டேன். :)

வாங்கும் 15 ரூபாய்க்கு மண்டல , தேசிய மறும் உலக செய்திகளை ஓரளவுக்கு தருகிறார்கள். ஆனால் நிச்சயம் அது நடுநிலையான செய்தி இதழ் இல்லை.. :)

யார் குறைவான மொள்ளமாறி என்பது தானே இன்று தேர்வு செய்ய உதவுகிறது. :))

என்.இனியவன் said...

இந்த பதிவு வாசிக்கும் போது உங்களுடைய முன்னைய பதிவின் தலைப்பு தான் நினைவில் வருகிறது.
ஹி ஹி

விகடன் தரத்தை கவனிப்பதற்கு ஒருவருமே இல்லையா?
எப்படி இருந்த விகடன் இப்படி ஆகிட்டுதே.

selvi said...

///பிறகு ஒருமுறை ஒரு கூப்பன் உரசினால் ஒரு சின்ன சோப்பு இலவசம், கடைக்காரரிடம் கேட்டேன். புத்தகம் மட்டும் தான் வந்தது சோப்பு வரவில்லை என்றார். ///

இப்படியெல்லாம் சாக்குபோக்கு சொல்லிட்டு திரியக்கூடாது. ஆமாம்...!?

வால்பையன் said...

நன்றி ரம்யா
இலவசம் பற்றிய உங்கள் கருத்து ஏற்புடையதே!

உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி பென்ஷ்

நன்றி அதுசரி
தீதும் நன்றும் போன்ற சில கட்டுரைகள் இன்னும் ஆனந்தவிகடனை தாங்கி பிடிக்கின்றன

வால்பையன் said...

நன்றி ருத்ரன் சார்

நன்றி ஜீவன்

நன்றி சஞ்சய்
நீங்கள் சொல்வது ஏற்புடயதே!

நன்றி என்.இனியவன்
தற்செயலாக அமைந்த இரண்டு பதிவுகள்
அநியாயத்துக்கு என் டவுசரை அவுக்கிறது

நன்றி செல்வி
நான் எதுக்கு சாக்கு சொல்றேன், உண்மையே அதான்

Rumesh said...

விகடன் இப்பொழுது பணதிருக்கு மட்டுமே மதிப்பு கொடுக்க தொடைங்கி விட்டது. பரிசு மலை & இரண்டு புத்தகங்கள் நிருஇத்தி விட்டன. அதன் A4 அளவிலான பேப்பர் விளம்பரம் முலம் வருமானம் அதிகரித்தே தவிர புத்தககங்கள் விஷயம் அதே ரூ 10 விகடன் அளவே. காகித அளவு மாற்றிய காரணம் வாசகருக்கு அல்ல. விளம்பர வரவுகு மட்டுமே.

வால்பையன் said...

நீங்கள் சொல்வதும் உண்மை தான் ருமேஷ்!

லாப நோக்கில்லாமல் எந்த பத்திரிக்கையும் நடத்த முடியாது தான், அதற்க்காக தரத்தை குறைத்திருக்க வேண்டாம்!

!

Blog Widget by LinkWithin