வால்பையனும், வாசிப்பும் பின்னே ஞானும்!!

உனக்கு என்ன தெரியும்னு எழுதுற!

ஒண்ணும் தெரியாதுங்க!

ஒண்ணும் புரியாம தெரியாம எழுதி எங்களையும் முட்டாள் ஆக்கக்கூடாது புரியுதா

சரிங்க

இனிமே எதுவும் எழுதக்கூடாது

சரிங்க, ஐயா ஒரு சந்தேகம்

என்ன

என் சம்சாரந்தான் வீட்ல சமைக்கிறாங்க

சரி

அவுங்க கேட்டரிங் காலேஜெல்லாம் போனதில்லை

அதுக்கு

ஒண்ணும் புரியாம, தெரியாம சமைக்ககூடாதுன்னு நிறுத்த சொல்லிருட்டுமா

**********************************

இணையத்தினால் நாம் பெற்றது என்னவென்றால் சொல்லோரும் சொல்வது நல்ல நண்பர்கள். ஆனால் இழப்பு,அனைவராலும் ஒத்து கொள்ளபடுவது புத்தக வாசிப்பு.
நிறைய நண்பர்கள் புத்தகம் வாசிக்க என்னை ஊக்குவிக்கிறார்கள். பின்னூட்டநாயகன் கும்கி ஒரு பை நிறைய புத்தகங்கள் எடுத்து கொண்டு என்னை தேடியே வந்துவிட்டார்.

ஆனாலும் இயற்கையின் அமைப்பில் நிறைய குறைபாடுகளும் இருக்கிறது. அது ஒருவருக்கு பிடித்தது மற்றவர்களுக்கு பிடிக்காமல் போவது. ஒருவருக்கு ரஜினி பிடித்தால் ஒருவருக்குய் கமல் பிடிக்கிறது, ஒருவருக்கு குச்சி ஐஸ் பிடித்தால் ஒருவருக்கு கப் ஐஸ் பிடிக்கிறது. எல்லோருடனும் ஒத்து போகும் இயந்திரமாக பிறக்கவில்லையே என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது.

குறுநாவல், சில பயணக்குறிப்புகள் தவிர்த்து வாழ்வியல் சார்ந்த கதைதொகுப்புகளை படிக்கும் போது, பாசமலர், பாவமன்னிப்பு படம்பார்க்கும் போது கண்ணீர் தாரை தாரையாக கொட்டுமே அது போல் எனக்கும் வருக்கிறது. தனிமையில் இருந்தாலும் அது எனக்கு பெருத்த வெட்கத்தை வரவழைக்கிறது என்று வெக்கப்படாமல் சொல்லிக்கொள்கிறேன்.

நல்ல கதை நடைகள், நிகழ்வுகளில் தொகுப்புகள் படிப்பது நல்ல அனுபவமே! ஆனால் மனநிறைவு என்பது ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது. ஒரு சிறு ஜனரஞ்சக கதை தொகுப்புகளில் திருப்பி அடைந்து விடுகிறேன். இது நுனிப்புல் மேயும் வேலை தான்.கண்டிப்பாக நண்பர்கள் சிபாரிசு செய்யும் கதைகளை படிப்பேன். ஏனென்றால் அரைகுறை தெளிவுகள் வேறொரு மாய பிம்பத்தை உருவாக்கிவிடும்.

நான் எழுதுகிறேன் என்பதை விட கிறுக்குகிறேன், உளறுகிறேன், புலம்புகிறேன் என்பதே சரியாக இருக்கும். எழுதுவதற்கு முன் நான் எந்த ஒத்திகையும் பார்ப்பதில்லை. ஒத்திகை பார்த்து நண்பர்களிடம் சொன்னதில் ஒன்று கூட எழுத முடியவில்லை. கணினியில் அமர்ந்தவுடன் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே பதிவு செய்வது தான் என் வழக்கம். அது மாபெரும் அபந்தமாக இருந்தாலும் அது என் அறியாமையின் சுவடுகளாக இருக்கட்டும் என்று விட்டுவிடுவேன்.

இம்மாதிரியான எழுத்துகளில் பெரும் ஆபத்து இருக்கிறது. சில உணர்பூர்வமான எழுத்துகள் உண்மை என்று நம்பப்படும் வாய்ப்புகள் அதிகம். அது மாபெரும் தவறு என்று நான் உணர்கிறேன். நண்பன் தியாகு கூட ஒவ்வொரு பதிவிற்கும் "ஏன் இப்படி உளறி கொட்டுகிறாய்" என்று அலைப்பேசியில் அழைத்து திட்டுவான்

ஆனாலும் இது வகையில் எனக்கு நன்மையே! தெரிந்தவர்களிடம் தெரியாதவர்கள் கேட்டு தெரிந்து கொள்வார்கள். நான் அதையையே வேறு மாதிரி சொல்லி நீங்கள் தரும் சரியான கருத்துகளை புரிந்து கொள்கிறேன். என்னுடைய பதிவுகள் பல அம்மாதிரி எனக்கு சொல்லிகொடுத்தவையே. ஆனாலும் புரியாமல் எழுவது தவறு என்று குற்றம் சாட்டுபவர்களுக்கு என்ன சொல்லலாம்.

இயேசு சொன்னாராம், எவனொருவன் எந்த குற்றமும் செய்யவில்லையோ அவன் அவள் மீது கல்லெறியுங்கள் என்று. நான் இயேசு அல்ல, குற்றவாளி கூண்டில் நிற்கிறேன். ஆனாலும் இந்தய அரசியல் சட்டப்படி ஒரு குற்றவாளி தனக்காக வாதாட உரிமை இருக்கிறது. அதன்படி யாரொருவர் ஒன்றை முழுமையாக புரிந்து கொண்டவர்கள் என்று நம்புகிறீர்களோ, அதனை தர்க்க ரீதியாக பின்வாங்காமல் வாதம் செய்யமுடியும் என்று சொல்கிறீர்களோ அவர்களுக்கு

வாயில் சிகரெட் பிடித்து காதில் புகைவிடும் கலையை கற்று தருவேன்.

30 வாங்கிகட்டி கொண்டது:

கூடுதுறை said...

me the first...

கூடுதுறை said...

என்ன ஆச்சர்யம்...?

வால்பையனிடமிருந்து ஞாயிற்றுக்கிழமை பதிவு?

இன்று காலை சூரியன் மேற்கே உதித்ததா?

கார்க்கிபவா said...

//என்ன ஆச்சர்யம்...?

வால்பையனிடமிருந்து ஞாயிற்றுக்கிழமை பதிவு?
//

ரிப்பீட்டேய்

கூடுதுறை said...

அதுதானே பார்த்தேன் பதிவைப்படித்த பிறகு தான் புரிகிறது...


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....


பின் நவினத்துவ பதிவென்று

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

வால், காதில் புகைவிடும் டெக்னிக் எனக்கும் தெரியுமே :)

நீங்கள் பி.ந. பற்றிச் சொன்னது கொஞ்சம் அதிகப்படியான உளறல்தான் :))

சிம்பா said...

//அவுங்க கேட்டரிங் காலேஜெல்லாம் போனதில்லை

அதுக்கு

ஒண்ணும் புரியாம, தெரியாம சமைக்ககூடாதுன்னு நிறுத்த சொல்லிருட்டுமா//

யார சாமி இப்படி வாரறீங்க.. ஆனாலும் இந்த பின்நவீனம் பற்றிய அறிவு நமக்கு(எனக்கு) ரொம்ப கம்மி...

உங்க பதிவ படுச்சாலே காதுல புகை விடற வித்தை கை வந்த கலை ஆகிடும் போல...

தொடரட்டும் உங்கள் சேவை....

கூடுதுறை said...

//யார சாமி இப்படி வாரறீங்க.. ஆனாலும் இந்த பின்நவீனம் பற்றிய அறிவு நமக்கு(எனக்கு) ரொம்ப கம்மி...

உங்க பதிவ படுச்சாலே காதுல புகை விடற வித்தை கை வந்த கலை ஆகிடும் போல...//


ரீப்ப்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேய்....

புகழன் said...

உங்க பதிவப் படிக்கும் போதே காதில் புகை வருகிறது.
பிறகு தனியாக வேறு கற்றுக் கொள்ள வேண்டுமா?

புகழன் said...

//"வால்பையனும், வாசிப்பும் பின்னே ஞானும்!!"
//

யார் அந்த ஞானும்?

பரிசல்காரன் said...

வால்பையன்..

ஏசுபிரான் பத்தி..

என்னய்யா நடக்குது ஈரோட்ல?

புகழன் said...

//
இனிமே எதுவும் எழுதக்கூடாது

சரிங்க,

//

ஆஹா......
எங்களுக்கு இநத் சந்தோஷம் வெகுநேரம் நீடிக்கவில்லையே!

வெண்பூ said...

முதல் பார்ட் கலக்கல்.. :)

ரெண்டாவது பார்ட் சத்தியமா புரியல..(புரிஞ்சிக்கவும் வேணாம்னு நெனக்கிறேன்..) :(

g said...

இதோ வந்துட்டேன். ஏம்பா நல்லாயிருக்குப்பா பதிவு. எப்படி இப்படி தத்துவமெல்லாம் சொல்லவருது உங்களுக்கு?

george said...

//
என் சம்சாரந்தான் வீட்ல சமைக்கிறாங்க //
அப்ப நீங்க ???.......

சின்னப் பையன் said...

ஸ்கூல்லே எனக்கு பின்னூட்டம் போட கற்றுக்கொடுக்கவில்லை.
அதனால் நான் பின்னூட்டம் போடத் தகுதியில்லாதவனா?????

நல்லதந்தி said...

:) ஏன்? எப்படி? எதற்கு?.பின்நவீனத்தைப் பற்றி ட்யூசன் எடுக்க ஆள் இருக்காங்களா?.ஒரே ஒருவரைத் தவிர மற்றவர்கள்.அணுகலாம்! :)

புதுகை.அப்துல்லா said...

ஜிம்ஷா said...
இதோ வந்துட்டேன். ஏம்பா நல்லாயிருக்குப்பா பதிவு. எப்படி இப்படி தத்துவமெல்லாம் சொல்லவருது உங்களுக்கு?

//

எல்லாம் அந்த நைன்டி ஆண்டரின் துணை :)

MADURAI NETBIRD said...

//
இனிமே எதுவும் எழுதக்கூடாது

சரிங்க,

//

ஆஹா......
எங்களுக்கு இநத் சந்தோஷம் வெகுநேரம் நீடிக்கவில்லையே!

MADURAI NETBIRD said...

ஆஹா......
துங்கும் போது நம்மாளு பதிவ எழுதினாரு போல.

MADURAI NETBIRD said...

அட சபாசு சூப்பர்
எப்படி இருக்கு
அட்டகாசம் போங்க
என்னமா எழுதிருக்கிங்க
என்னனு சொல்ல
எப்படி சொல்ல
பெரிய கூட்டமே இருக்கு தல பஸுல ஆமா தல பஸுல ஒரே கூட்டம் தல

MADURAI NETBIRD said...

நண்பரே ஒரு சிறந்த நூலகத்திற்கு விளம்பரம் தேவை இல்லை.
நண்பரே தொடருங்கள்
இப்படிக்கு
உங்கள் நூலக வாசகன்
மதுரைநண்பன்

வால்பையன் said...

நன்றி கூடுதுறை

நன்றி கார்க்கி

நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர்
அது உளறல் என்பது எனக்கே தெரியுமே!
தெரியாதவர்களுக்கு தெரிந்தவர்கள் என்ன செய்யவேண்டும்

சொல்லிகொடுக்க வேண்டும்!

அது மூத்த பதிவர்களின் கடமை

அத விட்டுட்டு.............

வால்பையன் said...

நன்றி சிம்பா
நான் யாரையும் வாரல
இதுனால யாராவது கீழே விழுந்தா நான் பொறுப்பல்ல


நன்றி புகழன்

நன்றி பரிசல்
இயேசு தன்னை கடவுள் என்று ஒரு போதும் சொல்லிகொண்டதில்லை!
நமக்கு தேவைப்பட்டதால் கடவுள் ஆக்கி கொண்டோம்.
நான் சொல்ல வந்த கருத்து.
பொய் சொன்ன காரணத்திக்காக உங்கள் மகளை கண்டிக்கும் போது
நீங்கள் சொன்ன பொய் உங்களுக்கு ஞாபகம் வரவேண்டும்

வால்பையன் said...

நன்றி வெண்பூ

நன்றி ஜிம்ஷா

நன்றி பனையேறி
எனக்கு சாப்பிடுறது மட்டும் தான் வேலை

நன்றி ச்சின்னப்பையன்

நன்றி நல்லதந்தி
யார் அந்த ஒருவர்
எல்லாம் தெரிந்தவரா

நன்றி புதுகை அப்துல்லா
எழுதும் போது சரக்கடிக்கவில்லை

நன்றி மதுரை நண்பன்

//இப்படிக்கு
உங்கள் நூலக வாசகன்
மதுரைநண்பன்//

என்ன இது சின்னபுள்ள தனமா
நீங்கள் மதுரையில் இருக்குரிங்க்களா
என்னை தொடர்பு கொள்ள முடியுமா

arunero@gmail.com
or
9994500540

rapp said...

me the 25th:):):)

rapp said...

//ஸ்கூல்லே எனக்கு பின்னூட்டம் போட கற்றுக்கொடுக்கவில்லை.
அதனால் நான் பின்னூட்டம் போடத் தகுதியில்லாதவனா?????//

:):):)

rapp said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், பின்நவீனத்துவப் பதிவா, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

வால்பையன் said...

நன்றி ராப்
இது பின்நவீனத்துவ பதிவல்ல
விளக்க பதிவு

ஆ! இதழ்கள் said...

Good posting...

வால்பையன் said...

நன்றி
ஆ இதழ்கள்

!

Blog Widget by LinkWithin