ஈரோட்டில் ஒரு மாபெரும் பதிவர் சந்திப்பு

கடந்த வாரம் சென்னை பதிவர்கள் தலைமையில் ஒரு மாபெரும் பதிவர் சந்திப்பு நடந்தது அனைவரும் அறிந்ததே! அதை நமது பரிசலும் பதிவு மேல் பதிவாக போட்டு கலக்குவதும், மொத்த பதிவுலகமும் அறியும். அதை போலவே ஈரோட்டில் ஒரு சந்திப்பு நடத்துவது என்று ஈரோட்டு இலக்கியசிங்கம் நந்து அவர்கள் தலைமையில் முடிவு செய்யப்பட்டது.

அங்கிருந்து ஒரு ரிப்போர்ட்
கலந்து கொண்டவர்கள்:
நந்து f/o நிலா
கார்த்திக்(வால்பையன் பாஸ்)
வால்பையன்
கூடுதுறை
ஆர்.கே.சதீஸ்குமார்

ஈரோடு வ.உ.சி. பூங்காவில் கூட்டம் ஆரம்பிக்கிறது

கார்த்திக்: அண்ணா நீங்க உக்காந்து பேசுங்க நான் போட்டோ எடுத்துகிறேன்

நந்து: நீயும் உட்காரு கார்த்திக் அப்புறம் எடுத்துக்கலாம்

கார்த்திக்: இல்லணா, போட்டோ எடுக்குறது எனக்கு பிடிக்கும் ஆனா போட்டோ எடுக்குறது நானா இருக்கனும்.

வாலு: இந்த இடம் சரியில்லை, எதாவது நல்ல ஒயின்ஷாப்பா உட்காந்து பேசுவோமா

கூடுதுறை: ஆரம்பிச்சிடியா, கொஞ்சம் நேரம் சும்மா இரேன்யா!

சதீஷ்: உங்க ராசிக்கு நீங்க புஷ்பராக கல்லு போட்டா குடிக்காம இருப்பிங்க வால்.

வாலு: மத்த குடிகாரங்களையும் நிறுத்த சொல்லுங்க நானும் நிறுத்துறேன்.

வாலின் போன் அடிக்கிறது(போனில் சஞ்சய்)
சஞ்சய்: கூட்டம் எப்படி போகுது

வாலு: எங்கே போகுது, பஜனை மாதிரி இருக்குது, ஒரு சரக்கில்ல, சைடிஷ் இல்ல

சஞ்சய்: ஆரம்பிச்சிடியா, சரி நான் சொல்றது கேளு, நந்து என்ன பேசுராரோ, அதை அப்படியே எனக்கு அனுப்பீறு

வாலு: ஏன்?

சஞ்சய்: அப்போ தான்யா, அவர காலாய்ச்சி பதிவு போட முடியும்

வாலு: அது சரி, உங்க போதைக்கு நாங்க ஊறுகாயா!

புது பொண்ணு காயத்திரி ஆஜர்.

நந்து: வாம்மா காயத்திரி, என்ன விஷேசம்,

காயத்திரி: வணக்கம், வரும் டிசம்பர் நான்காம் தேதி

நந்து: நிறுத்து நிறுத்து என்ன இங்கே வந்து செய்தி வாசிக்கிற

காயத்திரி: இல்லைனா, பழக்க தோஷம் அப்படியே வந்துருச்சு

நந்து: சரி எல்லாத்துக்கும் பத்திரிக்கை கொடுத்துரு, நாங்க வந்துருர்ரோம்

பத்திரிக்கை கொடுத்துவிட்டு காயத்திரி கிளம்புகிறார்.

கார்த்திக்கின் போன் அடிக்கிறது(போனில் பரிசல்)

பரிசல்:என்ன கார்த்திக் சந்திப்பு நல்லா போகுதா?

கார்த்திக்: நடக்குது நடக்குது

பரிசல்: நந்து எதாவது பொன்மொழி சொல்லியிருப்பாரே!

கார்த்திக்: போன தடவை என்ன சொன்னாருன்னு ஞாபகம் இருக்கா?

பரிசல்: தினம் வரும் போன் அழைப்புகளில் முப்பது சதவிகத்திற்க்கு மேல் பதிவுலக அழைப்புகள் இருந்தால் தொழிலை விட்டு விலகுகிறோம் என்று அர்த்தம்னு சொன்னாரு

கார்த்திக்: தினம் வரும் அழைப்புகளில் ஒரு அழைப்பு கூட பதிவுலகதிலிருந்து வரலைனா நாம பதிவுலகத்த விட்டு விலகி போகிறோம்னு அர்த்தம்ன்னு இப்போ சொன்னாரு!

பரிசல்: ஐயய்யோ இன்னைக்கு ஒரு போனும் வரலையே! சரி வையுங்க, முதல்ல இந்த மேட்டர பதிவா போடனும்.

போனை வைக்கிறார்.

நந்து: என்ன கார்த்தி என்ன வச்சிக்கிட்டே கலாய்கிற.

கார்த்திக்: அத விடுங்கண்ணா, என்ன போட்டோ எடுத்திங்க

நந்து: சொல்ல மறந்துட்டேன், ஆஸ்திரேலியாவுலருந்து பறவைகள் வெள்ளோடு சரனாலயம் வந்துருக்காமாம்.

வாலு: பறவைகள், ஆஸ்திரேலியாவுல கிளம்பும் போதே உங்களுக்கு தந்தி அடிச்சிருமா,

நந்து: இந்த ஆளுக்கு ஊத்தி விட்டு மட்டையாக்குங்கய்யா!

கார்த்திக்: சரிண்ணா நாம நாளைக்கே வெள்ளோடு கொளம்புவோம்,

கூடுதுறை: அப்போ ஆபிஸு

கார்த்திக்: அதல்லாம் வாலு பாத்துகுவாரு

கூடுதுறை:(மெதுவாக) பாத்துகோ சதிஷு, ஓனரு போட்டொ எடுக்க போயிடுராரு, வாலு ஒரு ப்ளாக் விடாம கும்மி அடிக்கிறாரு.

வாலு:சரிங்க வெயிலு அதிகமா இருக்கு, ஒரு பீராவது அடிச்சிகிட்டே பேசலாமே

எல்லாரும்: உங்கூட சேர்த்தா எங்களையும் வீட்டுகுள்ள விடமாட்டாங்க, நீ வேணா கிளம்பு

வாலு கிளம்ப, அதன் பிறகு கூட்டத்தில் என்ன நடந்ததுன்னு வேற யாராவது எழுதுவாங்க!


110 வாங்கிகட்டி கொண்டது:

புதியவன் said...

//பறவைகள், ஆஸ்திரேலியாவுல கிளம்பும் போதே உங்களுக்கு தந்தி அடிச்சிருமா//

ரசித்தேன். நல்லா தான் எழுதுறீங்க...

rapp said...

me the 2nd:):):)

rapp said...

:):):)

Kumky said...

அம்மம்மா...
தம்பி என்று நம்பி...
அவன் என்னைக் கெடுத்தான்..
(அதுக்கு மேல தெரியல)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

பார்த்துக் கொள் தம்பி.. நீ குடிக்கலாம், ஆனால் குடி உன்னைக் குடித்து விடாமல் பார்த்துக் கொள்!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அதர் ஆப்ஷன் இல்லாததால் போன பின்னூட்டத்தை வைரமுத்து பெயரில் போட முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் :)

அருண் said...

சந்திப்ப பத்தி ஒரு 10 ஃபோட்டோவாவது போடுங்க.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நீங்க ஏன் பதிவர் சந்திப்புக்கெல்லாம் போறீங்க.. பேசாம குவார்டர் அடிச்சுட்டு மட்டையாக வேண்டியதுதானே... அவங்க எல்லாம் கெட்டப்பசங்க, சேராதீங்க :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

வெயிலுக்கு பீர்தான் அடிக்கணுமா என்ன? நான் மோர்தான் குடிப்பேன்...

அருண் said...

சந்திப்ப பத்தி ஒரு பயணக்கட்டுரை அவசியம் எழுதுங்க.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இந்தப் பூனையும் பால் குடிக்குமாங்கற மாதிரி கும்க்கி பின்னூட்டம் போட்டிருக்காரு :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நீங்க பாட்டுக்குப் பதிவெழுதிட்டீங்க.. கற்பனையான பதிவர் சந்திப்பில் எடுக்கப்பட்ட கற்பனையான புகைப்படங்களும் வெளிவராத விஷயங்களும் அப்படின்னு நாளைக்குப் பரிசல் ஒரு பதிவு போடப் போறாரு பாத்துக்குங்க.

அருண் said...

நீங்க RKV roadல இருந்து வ.உ.சி. பூங்கா போனக்கூட பயணக் கட்டுரை அவசியம். :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஏங்க ஈரோட்டுல 5 பேர்தான் தேறுவீங்களா..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அப்புறமும் நர்சிம் மாதிரி வேற யாராவது வால் சந்திப்பு அப்படின்னு இன்னொரு பதிவு எழுதுவாங்க :)

அருண் said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
ஏங்க ஈரோட்டுல 5 பேர்தான் தேறுவீங்களா..//

ஈரோட்டுல 4 லட்சம் பேரு இருக்காங்க. ஆனா, அவங்க யாரும் Blog எழுதரதில்லை.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இன்னைக்கு ராத்திரி என்ன சரக்கடிக்கலாம்னு கொஞ்சம் சொல்லுங்களேன் வால்!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அஞ்சு பேர் சந்திப்புக்கு எதுக்கய்யா அவ்வளவு பெரிய பூங்காவுக்கெல்லாம் போனீங்க.. கற்பனைன்னா எங்க வேணா போவதா? ஒரு பஸ் ஸீட்டு போதாது நீங்க அஞ்சு பேரு உக்காந்து பேச :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

என் ராசிக்கு என்ன கல்லு போட்டா குடிக்காம இருப்பேன் வால்? கொஞ்சம் கேட்டுச் சொல்றீங்களா?

விஜய் ஆனந்த் said...

:-)))...

வால்பையன் said...

ஆகா எதிப்பார்த்ததை விட கும்மி பட்டய கிளப்புதே!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஐயையோ எனக்கு ஒரு ஃபோன் கால்கூட வர்ரதில்ல. அப்ப நான் பதிவு தொழில் ரெண்டிலேயும் வேஸ்டா?? :(

விஜய் ஆனந்த் said...

வாலுக்கே 'வால்'-த்தனமா கமெண்ட்ஸா சுந்தர்ஜி!!!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அப்புறம்தாம் யோசிச்சேன் எனக்கு ஏன் காலே வர்ரதில்லைன்னு. அப்பத்தான் தெரிஞ்சுது என்கிட்ட ஃபோனே இல்லைன்னு :)

வால்பையன் said...

//இன்னைக்கு ராத்திரி என்ன சரக்கடிக்கலாம்னு கொஞ்சம் சொல்லுங்களேன் வால்!//

மழை அதிகமாக இருப்பதால்,
ரம்மும், கலந்து கொள்ள பெப்சியும் நலம்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இந்த மாச பட்ஜெட்ல ஒரு நல்ல காமெரா ஃபோனா வாங்கிடனும். காமெரான்னதும் கார்த்திக் & நந்து f/o நிலா கிட்ட கேக்கலாமான்னு ஒரு ஐடியா.. என்ன சொல்றீங்க வால்?

ஜே கே | J K said...

வந்துட்டேன்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அட என்னோட சரக்க ஞாபகம் வச்சிருக்கீங்க! வால் நீங்க சரக்கடிக்கறதுல பெரிய ஆளுதான் போல :)

வால்பையன் said...

//இந்த மாச பட்ஜெட்ல ஒரு நல்ல காமெரா ஃபோனா வாங்கிடனும். காமெரான்னதும் கார்த்திக் & நந்து f/o நிலா கிட்ட கேக்கலாமான்னு ஒரு ஐடியா.. என்ன சொல்றீங்க வால்? //

அவர்களே இலவ்ச டியூசனும் எடுப்பாங்க

குசும்பன் said...

//நந்து: நிறுத்து நிறுத்து என்ன இங்கே வந்து செய்தி வாசிக்கிற
//

ஹா ஹா செம கலக்கல்:)

விஜய் ஆனந்த் said...

// வால்பையன் said...

மழை அதிகமாக இருப்பதால்,
ரம்மும், கலந்து கொள்ள பெப்சியும் நலம். //

போன வாரம் மழை பேஞ்சா என்ன வெந்நீர் கலந்து அடிக்க சொன்னீங்க???

குசும்பன் said...

சுந்தர் அவர்கள் உங்கள் பதிவில் மட்டும் கும்முவதன் மர்மம் என்ன?

narsim said...

கலக்கல்!! சுந்தர்ஜி.. அடுத்தடுத்து சரவெடி மாதிரி சூப்பர்..

குசும்பன் said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
என் ராசிக்கு என்ன கல்லு போட்டா குடிக்காம இருப்பேன் வால்? கொஞ்சம் கேட்டுச் சொல்றீங்களா?//

உங்க மேல அம்மி கல்லை போட்டா குடிக்காம இருப்பீங்க!!!

வால்பையன் said...

//சுந்தர் அவர்கள் உங்கள் பதிவில் மட்டும் கும்முவதன் மர்மம் என்ன?//

ஓ அதுவா! அது வந்து, வந்து
அதுகெல்லாம் ஒரு இது வேணும்பா

விஜய் ஆனந்த் said...

// குசும்பன் said...
சுந்தர் அவர்கள் உங்கள் பதிவில் மட்டும் கும்முவதன் மர்மம் என்ன? //

ஒருவேள ரெண்டு பேரும் 'க்ளாஸ்'மேட்ஸா இருப்பாங்களோ???

வால்பையன் said...

//உங்க மேல அம்மி கல்லை போட்டா குடிக்காம இருப்பீங்க!!!//

உங்க மேல போட்டதாலத் தான் நீங்க குடிக்கிறதில்லையா?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

/உங்க மேல அம்மி கல்லை போட்டா குடிக்காம இருப்பீங்க!!!/

அப்ப, குடிக்காமயா, ஏங்க, நானே இருக்க மாட்டேன் :(

தல, நாம தனியாப் பேசித் தீத்துக்கலாம் இந்த விஷயத்தை

வால்பையன் said...

//ஒருவேள ரெண்டு பேரும் 'க்ளாஸ்'மேட்ஸா இருப்பாங்களோ??? //

அப்படியும் சொல்லலாம்

ஜே கே | J K said...

//வணக்கம், வரும் டிசம்பர் நான்காம் தேதி//

வணக்கம், அழைப்பது காயத்ரி, வரும் டிசம்பர் நான்காம் தேதி...

வால்பையன் said...

//வால் நீங்க சரக்கடிக்கறதுல பெரிய ஆளுதான் போல :)//

வஷிஷ்டர் கையால் பிரம்ம ரிஷி பட்டம்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

என்ன வால், இன்னைக்கும் கும்மி அடிச்சுகிட்டிருக்கீங்க.. கார்த்திக் எங்கயாவது ஃபோட்டோ எடுக்கப் போயிட்டாரா??

வால்பையன் said...

//வணக்கம், அழைப்பது காயத்ரி, வரும் டிசம்பர் நான்காம் தேதி..//

கட் கட்
சொன்னத மட்டும் செய்தியில சொல்லுமா
இந்த ரெண்டு செகண்டுல ஒரு விளம்பரம் போடுவோம்ல

குசும்பன் said...

//விஜய் ஆனந்த் said...
// குசும்பன் said...
சுந்தர் அவர்கள் உங்கள் பதிவில் மட்டும் கும்முவதன் மர்மம் என்ன? //

ஒருவேள ரெண்டு பேரும் 'க்ளாஸ்'மேட்ஸா இருப்பாங்களோ???//

இல்லை ஒருவேளை சுந்தர்தான் வால்பையனாக இருப்பாரோ!!!

வால்பையன் said...

//என்ன வால், இன்னைக்கும் கும்மி அடிச்சுகிட்டிருக்கீங்க.. கார்த்திக் எங்கயாவது ஃபோட்டோ எடுக்கப் போயிட்டாரா??//

சரியா சொன்னிங்க
பாஸ் காலையிலேயே போயிட்டார்.
அதான் இன்னைக்கு புது பதிவு

விஜய் ஆனந்த் said...

அந்த பூனை ஃபோட்டோ சூப்பரா இருக்கு!!!

சந்திப்புல கலந்துகிட்டவங்க யாராவது எடுத்ததா?? அந்த பூனை என் நாலஞ்சா தெரியுது??? குடிச்சிருக்கா???

வால்பையன் said...

//இல்லை ஒருவேளை சுந்தர்தான் வால்பையனாக இருப்பாரோ!!!//

திரும்பவும் முதல்ல இருந்தா

இப்பவே கண்ண கட்டுதே

குசும்பன் said...

வால்பையன் said...
//வால் நீங்க சரக்கடிக்கறதுல பெரிய ஆளுதான் போல :)//

வஷிஷ்டர் கையால் பிரம்ம ரிஷி பட்டம்
//

ஒரு சின்ன திருத்தம் வாஸ்த்யாயனர் கையால் பிரம்ம ரிஷி பட்டம்!!!

வால்பையன் said...

//அந்த பூனை என் நாலஞ்சா தெரியுது??? குடிச்சிருக்கா??? //

ஆமா, அந்த போட்டோவை பாக்குற பூனை குடிச்சிருக்கு

வால்பையன் said...

//ஒரு சின்ன திருத்தம் வாஸ்த்யாயனர் கையால் பிரம்ம ரிஷி பட்டம்!!! //

அதுக்கு தான் அதீதன் இருக்காருல்ல

தமிழ் அமுதன் said...

கடைசி வரை ''பாருக்கே'' போகலையா ?
என்ன வாலு? அடுத்தமுறை
வலைப்பதிவர் சந்திப்பு ஒன்ன
ஏதாவது ஏசி பார்ல தான் நடத்தனும் !

வால்பையன் said...

//அடுத்தமுறை
வலைப்பதிவர் சந்திப்பு ஒன்ன
ஏதாவது ஏசி பார்ல தான் நடத்தனும் !//

கண்டிப்பா
எல்லொரும் டிசம்பர் 3 ஆம் தேதியே ஈரோடு வந்துடுங்க,
சஞ்சய் டிரீட் இருக்கு

வால்பையன் said...

சற்றும் எதிர்பாராமல் தல சுந்தர் கும்மி அடித்து திக்கு முக்காட வைத்துவிட்டார்.
ரொம்ப நன்றி.

Anonymous said...

//வாலு: இந்த இடம் சரியில்லை, எதாவது நல்ல ஒயின்ஷாப்பா உட்காந்து பேசுவோமா//

//வாலு: மத்த குடிகாரங்களையும் நிறுத்த சொல்லுங்க நானும் நிறுத்துறேன்.//

//வாலு: எங்கே போகுது, பஜனை மாதிரி இருக்குது, ஒரு சரக்கில்ல, சைடிஷ் இல்ல//

//வாலு: அது சரி, உங்க போதைக்கு நாங்க ஊறுகாயா!//

//வாலு:சரிங்க வெயிலு அதிகமா இருக்கு, ஒரு பீராவது அடிச்சிகிட்டே பேசலாமே//

சிந்திக்க வைக்கும் கருத்துக்கள். நீங்க ஒருத்தர்தான் விஷயஞானத்தோட பேசியிருக்கீங்க.

உங்களுக்காக்வே அதிஷா ஒரு பீர் பதிவு போட்டுருக்கார் பாருங்க

நாமக்கல் சிபி said...

//என்ன வாலு? அடுத்தமுறை
வலைப்பதிவர் சந்திப்பு ஒன்ன
ஏதாவது ஏசி பார்ல தான் நடத்தனும் !
//

ஆமா! அப்பத்தான் நாங்களும் வருவோம்!

Sanjai Gandhi said...

//காயத்திரி: வணக்கம், வரும் டிசம்பர் நான்காம் தேதி

நந்து: நிறுத்து நிறுத்து என்ன இங்கே வந்து செய்தி வாசிக்கிற

காயத்திரி: இல்லைனா, பழக்க தோஷம் அப்படியே வந்துருச்சு//

ங்கொக்க மக்கா.. இதான் செம கலக்கல் :))

இதெல்லாம் பதிவா போட்டா சொல்றதில்லையா? :))

வால்பையன் said...

மின்சாரம் இல்லாம கஷ்டபட்டிங்க
அதான் அப்புறம் சொல்லிகலாம்னு இருந்துட்டேன்.
வந்துட்டிங்கள்ள
கும்மிய ஸ்டார்ட் பண்ணுங்க

நந்து f/o நிலா said...

பரவாயில்ல டேமேஜ் கொஞ்சம் கும்மிதான்

நந்து f/o நிலா said...

என்னாதிது? ஜ்யோவ்ராம் சுந்தர் கும்மிலயா? என்ன கொடுமைய்யா இதெல்லாம்?

வால்பையன் said...

// நந்து f/o நிலா said...
பரவாயில்ல டேமேஜ் கொஞ்சம் கும்மிதான்//

என்ன பெருந்தன்மை!
தெரிஞ்சிருந்தா இன்னும் கொஞ்சம்....

நந்து f/o நிலா said...

சாரி சுந்தர் நீங்க கும்மி ஜோதில சேரனும்னா இலக்கியவாதி ஆகறத விட கஷ்டப்படனும்.

நல்லா இன்னும் முயற்சி பண்ணுங்க. வேற வேற பதிவுகளிலும் கும்மியடிங்க.

இன்னும் me the 1st லாம் கத்துக்கொள்ளனும்.

பேமசான கும்மியர்கள் எப்படி கும்மராங்கன்னு கவனியுங்க.

கும்மி என்ற பெயர் எங்கு தென்பட்டாலும் உடனே பாய்ந்து சென்று 50 பின்னூட்டமாவது இடவேண்டும்.

முக்கியமான தகுதியாக சீரியஸ் பதிவுகள் இடுவதை நிறுத்தவேண்டும். இல்லாவிட்டால் அவை கும்மி பதிவாக புரிந்துகொள்ளப்படும்.
கும்மி பற்றி என்ன சந்தேகம் இருப்பினும் கமெண்டிலோ,தனி மடலிலோ அல்லது போனிலோ என்னை தொடர்பு கொள்ளலாம். கண்டிப்பாக உதவி செய்வேன் ஏனேனில்

இது என் கடமை


விரைவில் நல்ல கும்மியராக வாழ்த்துக்கள்.

நந்து f/o நிலா said...

யப்போய் மக்கா எல்லா ஓடிவாங்க கும்மில சேர ஒரு அப்ளிகேஷன் வந்திருக்கு. ஒரு அப்ரசண்டி மாட்டி இருக்காரு. கொஞ்சம் கவனிங்கப்போய்.

முடிஞ்ச அளவு கும்மி இலக்கனம் சொல்லியாச்சும்.

இனி அதில் நம்பர்கும்மி அதர் ஆப்சன் கும்மி,பி.ந கும்மி பத்தில்லாம் அவருக்கு சொல்லிகொடுங்கப்போய்ய்ய்

வா வா குசும்பா வா வா

கார்க்கிபவா said...

அதிரடிக்கார மச்சான் மச்சானே..

ஒவ்வரு அடியும் சரவெடி சகா.. பின்னிட்டிங்க‌

நல்லதந்தி said...

பதிவர் சந்திப்பில நான் எட்டிப் பாத்ததை எழுதாம பேயிட்டீங்களே!.

Unknown said...

// ஈரோட்டில் ஒரு சந்திப்பு //

ஓஒ!! அப்படியா .....!! மேல சொல்லுங்க ........


// வாலு: இந்த இடம் சரியில்லை, எதாவது நல்ல ஒயின்ஷாப்பா உட்காந்து பேசுவோமா //

பாஸ் .. உங்களுக்கு .. location தேவையா? " சிங்கத்துக்கே சீட்டா " , " பானிபூரிக்கே பானியா " " பேல்பூரிக்கே ....... "

// வாலு: மத்த குடிகாரங்களையும் நிறுத்த சொல்லுங்க நானும் நிறுத்துறேன். //

பாஸ் வாலு.. நீயே பெத்த குடிகாரன் ... நீ மத்த குடிகாரங்கள பத்தி பேசுறியா .....

// வாலு: எங்கே போகுது, பஜனை மாதிரி இருக்குது, ஒரு சரக்கில்ல, சைடிஷ் இல்ல //

உனக்கு எதுக்கு பாஸ் சைடு டிஷு ..... உன் சைடே டிஷுதான் ..... ஒரு ஊருகா பாகிட்ட வாங்கி மேட்டர முடிக்கலாமுள்ள......


//வாலு: அது சரி, உங்க போதைக்கு நாங்க ஊறுகாயா! //

யோவ் .. பாஸ் .. உனக்கு வேற dialog 'கே தெரியாதா.. சிக்குன ரெக்காடு மாதிரி .....


// வாலு: பறவைகள், ஆஸ்திரேலியாவுல கிளம்பும் போதே உங்களுக்கு தந்தி அடிச்சிருமா, //

ஏன் !? உங்களுக்கு E-mail பண்ணுமா?


// வாலு:சரிங்க வெயிலு அதிகமா இருக்கு, ஒரு பீராவது அடிச்சிகிட்டே பேசலாமே / /

இது மழைக்காலம் பாஸ்... hot 'ஆ எறக்குங்க... ஒடம்புக்கு நல்லது.....


// வாலு கிளம்ப, அதன் பிறகு கூட்டத்தில் என்ன நடந்ததுன்னு வேற யாராவது எழுதுவாங்க! //


போங்க பாஸ் ... சப்பையா முடுச்சுடின்களே.........

குப்பன்.யாஹூ said...

நல்ல பதிவு. ஆனால் பதிவர் சந்திப்பு ஏற்பாடுகள், அழைப்புகள் , தமிழ் திரைப் பட பூஜை மாதிரி பிரமாதமாக தான் இருக்கிறது.

வடிவேலு சொல்வது போல, opening எல்லாம் நல்லாதான் இருக்கு.

குப்பன்_யாஹூ

காயத்ரி சித்தார்த் said...

குசும்பன் said...

//நந்து: நிறுத்து நிறுத்து என்ன இங்கே வந்து செய்தி வாசிக்கிற
//

ஹா ஹா செம கலக்கல்:)


கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... கண்ணாலத்துக்கு வாங்க.. ஸ்பெஷல் டீ குடுக்க சொல்றேன். :)

நந்து f/o நிலா said...

அய்யோ காயத்ரி போடும் டீயா?

அதத்தானே ஈரோடு ஃபுல்லா எலிமருந்தா யூஸ் பண்றாங்க?

வால்பையன் said...

//அதத்தானே ஈரோடு ஃபுல்லா எலிமருந்தா யூஸ் பண்றாங்க? //

அந்த ஸ்பெஷல் டீய நந்தண்னண் (ரவியண்ணண் வீட்டுக்கு இல்லை)வீட்டுக்கு அனுப்புங்க!

குப்பன்.யாஹூ said...

காயத்ரி (பாலைத்திணை) வாங்க,. நல்வரவு.

குப்பன்_யாஹூ

நந்து f/o நிலா said...

ஜ்யோவ்ராம் சுந்தருக்கு கும்மி க்ளாஸ் எடுக்க வேற யாருமே வரலியா? :(

அவர் நம்ம கும்மி க்ரூப்ப என்ன நெனைப்பார்?

கம்பெனி சீக்ரெட்ட வெளில சொல்ல வேணாம்ன்னு யாரும் நெனைக்க வேனாம்னு கேட்டுக்கறேன்.

அவரயும் நம்ம வூட்டு கும்மி புள்ளயா நெனச்சு சேத்துகுங்க ப்ளீஸ்.

Arun Kumar said...

தலைவா கலக்குறீங்க :)

KARTHIK said...

// கார்த்திக்கின் போன் அடிக்கிறது(போனில் பரிசல்)//

அடப்பாவி எனக்கேதுங்க போனெல்லாம்.

கலக்கலா இருக்கு.

கபீஷ் said...

nandhu sema kalakkal...

பரிசல்காரன் said...

// தினம் வரும் அழைப்புகளில் ஒரு அழைப்பு கூட பதிவுலகதிலிருந்து வரலைனா நாம பதிவுலகத்த விட்டு விலகி போகிறோம்னு அர்த்தம்ன்னு இப்போ சொன்னாரு!//

கலக்கல்!!!!!!!!!

பரிசல்காரன் said...

//அருண் said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
ஏங்க ஈரோட்டுல 5 பேர்தான் தேறுவீங்களா..//

ஈரோட்டுல 4 லட்சம் பேரு இருக்காங்க. ஆனா, அவங்க யாரும் Blog எழுதரதில்லை.//

சூப்பரப்பூ!

நந்து f/o நிலா said...

யோவ் பரிசல் உன்ன போய் 12 மணிகுல்லாம் அவர தொந்தரவு பண்ணகூடாதுன்னு சொன்னேன் பாரு என்ன.....

பரிசல்காரன் said...

//குசும்பன் said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
என் ராசிக்கு என்ன கல்லு போட்டா குடிக்காம இருப்பேன் வால்? கொஞ்சம் கேட்டுச் சொல்றீங்களா?//

உங்க மேல அம்மி கல்லை போட்டா குடிக்காம இருப்பீங்க!!!//

குசும்பா... எப்படிப்பா இப்படி மானாங்காணியா அடிக்கற,,

(சரக்கில்ல, கமெண்ட்..)

பரிசல்காரன் said...

// நந்து f/o நிலா said...

யோவ் பரிசல் உன்ன போய் 12 மணிகுல்லாம் அவர தொந்தரவு பண்ணகூடாதுன்னு சொன்னேன் பாரு என்ன.//

ரொம்பநாளாச்சு இப்படி 12 மணிக்கு மேல உட்கார்ந்து. விடுவீங்களா....

எல்லாம் பழக்கதோஷம்!

Natty said...

தினம் வரும் அழைப்புகளில் ஒரு அழைப்பு கூட பதிவுலகதிலிருந்து வரலைனா நாம பதிவுலகத்த விட்டு விலகி போகிறோம்னு அர்த்தம்ன்னு இப்போ சொன்னாரு!

:(( நிஜமாவா? நான் பதிவுலகத்தை ரொம்ப விலகி போயிட்டேன் ;(

Natty said...
This comment has been removed by the author.
Natty said...

ஒவ்வொரு பேரையும் ஒரு கலர் கோட் போட்டு, யூசபிலிட்டி ஸ்டாண்டர்ட் எல்லாம் பதிவுல போடர அளவுக்கு தல வெட்டியா...

Natty said...

கலக்கல் பதிவு வால்... அஞ்சு பேர் வந்ததா நினைக்கும் சந்திப்பை மாபெரும் சந்திப்புன்னு சொல்ற நீங்க, எதிர்காலத்துல முதல்வரா வர வாய்ப்பு இருக்கு....

Natty said...

முதல் முறையாக கும்மி முயற்ச்சி... இப்பத்தான் புரிது கும்மி அடிப்பது எவ்ளோ கஷ்டம்னு... பதிவெழுதுறதே சுலபம் போல...

Natty said...

மீ த 84

Kumky said...

அ ...

நட்புடன் ஜமால் said...

கந்தனுக்கு புத்தி கவட்டுக்குள்ளேன்னு சொல்லுவாங்க

வாலுக்கு புத்தி பீருக்குள்ளே ... ஹி ஹி ஹி

வால்பையன் said...

நன்றி புதியவன்

நன்றி ராப்

நன்றி கும்க்கி
யார யார் கெடுக்குறது.

நன்றி அருண்
போட்டோ எடுத்தவர் கண்டிப்பா போடுவாரு


நன்றி விஜய் ஆனந்த்

வால்பையன் said...

நன்றி நர்சிம்

நன்றி ஜே கே

நன்றி ஜீவன்

நன்றி வடகரை வேலன்

நன்றி நாமக்கல் சிபி

நன்றி சஞ்சய்/பொடியன்

நன்றி கார்க்கி

நன்றி நல்லதந்தி


முதல் வருகைக்கு நன்றி காயத்ரி

நன்றி அருண்குமார்

நன்றி பரிசல்

நன்றி அதிரை ஜமால்

நன்றி குப்பன்_யாஹூ

வால்பையன் said...

சிறப்பு நன்றிகள் கும்மி நண்பர்களுக்காக

நன்றி குசும்பன்

நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர்

நன்றி நந்து f/o நிலா

நன்றி நட்டி

நன்றி கபீஷ்

வால்பையன் said...

நண்பர் மாதேஷ்

உங்கள் பின்னூட்டம் எனக்கு பிடிக்கவில்லை என்று சொன்னால் எனக்கு என்னையையே பிடிக்கவில்லை என்று அர்த்தம்.

ஒவ்வொரு நண்பர்களின் ப்ளாக்கிலும் கும்மி என்ற பெயரில் வகை தொகையில்லாமல் கேலி கிண்டலுமாக இப்படி தான் எஆனும் பின்னூட்டி கொண்டிருக்கிறேன்.

விமர்சனதிற்கு தயாராக இல்லாதவன் பொதுவில் தனது கருத்துகளை வைக்க கூடாது என்பது தான் எனது கருத்தும்.

நான் சொல்வது சரிதானே நண்பர்களே!

வால்பையன் said...

இன்னும் எட்டு போட்டா நூறு!
யாரு வர போறிங்க

நந்து f/o நிலா said...

8

நந்து f/o நிலா said...

8 போட்டுட்டேன் 100 வரல?

வால்பையன் said...

ஆனாலும் ரொம்ப தான் குசும்பு

வால்பையன் said...

// கார்த்திக் said...
// கார்த்திக்கின் போன் அடிக்கிறது(போனில் பரிசல்)//
அடப்பாவி எனக்கேதுங்க போனெல்லாம்.//

போட்டோ எடுக்குற மாதிரி போன் இருக்கும் போது, போன் பேசுற மாதிரி கேமரா இருக்ககூடாதா?

Sanjai Gandhi said...

வால் தூள்..

Sanjai Gandhi said...

நெசமா நல்லவரு இப்போ எங்கூட்டுக்கு வந்துகினு கீறாரு

Sanjai Gandhi said...

குடும்பத்தோட

Sanjai Gandhi said...

100 அடிச்சாச்சி..
வர்ட்டா வாலு :)

இப்படிக்கு
மறைஞ்சிருந்து 100 அடிப்போர் சங்கம்
கோவை தலைமையகம்.

வால்பையன் said...

நன்றி சஞ்சய்
நிஜமா நல்லவரு அதனாலத்தான் கொஞ்ச நாளா ஆன்லைன் பக்கம் காணோமா

நந்து f/o நிலா said...

//இப்படிக்கு
மறைஞ்சிருந்து 100 அடிப்போர் சங்கம்
கோவை தலைமையகம்//

நல்லவேளையா ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாமா எழுதிட்டான்.

g said...

ம்ம்ம்... உங்க ...தில நான் இருக்கேனா? அப்போ ஏன் எனக்கு முன்கூட்டியே தகவல் சொல்லவில்லை? நடக்கட்டும் நடக்கட்டும்... ஆகட்டும் பார்க்கலாம்...

லிங்காபுரம் சிவா said...

லேபில்: பகுதிவாரியாக: 100%மொக்கை, கற்பனை, நகைசுவை, நண்பர்கள்.

லேபில்: கற்பனை னு சொல்லுதே, அப்பொ இது உண்மை இல்லயா?

நீங்க பேசாம 100%மொக்கை னெ போஸ்ட் போட்ருக்கலாம்.. தாங்க முடியல

நல்ல வேல யவதுயாவது சொல்லி இருக்கிஙளே 100%மொக்கைனு

Maximum India said...

அன்புள்ள வால்பையன்

உங்களுக்கு நல்ல கற்பனை வளம் இருக்கு. என்ஜாய் பண்ணும்படியான பதிவு.

Sakthi said...

inimel saraku adikanumna avangala koopidatheenga just one call sakthi wil appear...k..... kandippa intha posttuku maddy kalaiparu...

கூடுதுறை said...

எனக்கு இரண்டே இரண்டு டயலாக் கொடுத்த வாலைக் கண்டிக்கிறேன்....

hayyram said...

http://maniyinpakkam.blogspot.com/2010/01/blog-post_16.html

சுமஜ்லா என்பவர் பேசுவதை வீடியோவில் காட்டவே இல்லை. அவர் யாரென்று முகம் தெரியவில்லை. பிறகு தான் அறிந்து கொண்டேன் அவர் தமது முகத்தைக் காட்ட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாக. பெயர் போடாத அனானி பின்னூட்டத்தையே வேண்டாம் என்று சொல்லும் நீங்கள் முகத்தைக் கூட காட்டத் தயங்கும் ஒரு பெண் பேசுவதை வீடியோ எடுக்க வேண்டிய அவசியம் என்ன? தான் யாரென்று முகம் காட்ட மறுக்கும் சுமஜ்லாவும் ஒரு அனானி தானே! அந்த அனானியை ஏன் நீக்கவில்லை. சக மனிதர்களிடம் முகத்தைக் காட்டினால் நீங்கள் எல்லாம் பாய்ந்து போய் கற்பழித்துவிடுவீர்களா என்ன?

சக மனிதர்களிடம் ஒளிந்து பழகுவது தான் நாகரீகமா? அதைக் கூட அங்கேயே விவாதித்திருக்கலாமே!

பித்தனின் வாக்கு said...

இதுக்கு மேல பதிவர் சந்திப்பு நான் சொல்றேன். வால்சை கழட்டி விட்டு விட்டு மெதுவா நடந்து பஸ் ஸ்டாண்டுக்குள்ள போய் ஆவின் பால் நிலையம் அருகில் இருக்கும் பெரிய பழக்கடையில் ஆளுக்கு ஒரு ஜீஸ் குடித்து விட்டு, அங்கன பிச்சைக்காரனையும் விடாமல் போட்டா எடுக்கும் கார்த்திய கழட்டி விட்டுட்டு, பொடி நடையா நடந்து வளையக்கரா வீதிக்கு வந்து ஆளுக்கு ஒரு கடலை மசாலாவும் தயிர் மிக்சரும் சாப்பிட்டு விட்டு, கூடவே வீட்டுக்கு என்று சொல்லி நந்து காசுல ஒரு க்டலை மசாலாவை பார்சல் பண்ணிக் கொண்டு, நைசா எல்லாரையும் கழட்டி விட்டு, ஆட்டோ பிடிச்சு மறுபடியும் வால்ஸை பிக்க அப் பண்ணி நெப்போலியனுடன் மீட்டிங்க வைத்து சொன்னேன்.
" வால்ஸ் இனி இது போல குழந்தை பசங்க கூட எல்லாம் மீத்திங்க போதக் கூதாதுன்னு" , சாரி பாஸ் அதுக்குள்ள மப்பு ஏறிப் போச்சு.

பித்தனின் வாக்கு said...

என்ன ஆச்சு வால்ஸ் இப்ப எல்லாம் நம்ம கடப் பக்கம் வருவது இல்லை.

!

Blog Widget by LinkWithin