நேத்து பில்லா படத்துக்கு போயிருந்தேன்

எல்லோரும் ஓடுராங்கன்னு ஆமை atidos ஷூ வாங்க ஓடுச்சாமா, அந்த மாதிரி என் கதையும் ஆகிருச்சு,எல்லோரும் நல்ல எழுதுராங்கலேன்னு நானும் எழுத வந்தேன்,
வந்த பிறகு தான் தெரியுது, அது எவ்வளவு கஷ்டம்னு,

அதனால நான் என் style-ஐ மாத்திகிலாம்னு இருக்கேன், யாரும் படிகிறின்களோ இல்லையோ, இதை நான் மாத்த போறதில்லை,
வந்துட்டேன் எதாவது எழுதனும்ம்ல நேத்து பில்லா படத்துக்கு போயிருந்தேன்,
பில்லா படம் என் வாழ்கையில மறக்க முடியாத ஒன்னு, நான் நாலாவது படிக்கும் போது ஸ்கூல் கட்டு அடிச்சி பார்த்த முதல் படம்(நாங்கல்லாம் பிஞ்சிலேயே பழுத்துடம்ல!),
அப்பா நான் மதுரை பசுமலயில படிச்சிகிட்டு இருந்தேன்,
எங்க வீடு மேஜுரா காலேஜ் பக்கத்துல, அங்க இருந்து ஜெகதா தியேட்டேர் (இப்ப ஹரி விக்னேஷ் ) காலையில 11 மணி காட்சி,
பிளாஷ் பேக் முடிஞ்சது,
இப்ப நான் ஈரோடுல இருக்கேன், பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல அபிராமி தியேட்டர், பசங்க முன்னாடியே டிக்கெட் ரெடி பண்ணிடாங்கா, ஐயா ஒரு கஷ்டமும் படாம படம் பார்த்தேன்,
இப்ப படத்துக்கு வருவோம், தமிழ் சினிமாவின் சாபக்கேடு பாட்டு, இங்கேயும் அது நிரூபிக்க பட்டது,ஏற்கனவே நான் பழைய பில்லா பார்த்துட்டதால சஸ்பென்ஸ் கொஞ்சம் கூட இல்ல, மேஜர் கேரக்டர் மட்டும் கொஞ்சம் சஸ்பென்ஸ் அப்புறம் அதுவும் தெரிந்து விட்டது, ஆங்கில பட ரேஞ்சுக்கு முயற்சி செய்திருக்கிறார்கள், வழக்கம் போல சுய தம்பட்டம் (தல மேட்டர் ), தம் அடிக்க ஞாபக படுத்தும் பாட்டு, தமிழ் படம் தான் பார்க்கிறோம் என்று ஞாபக படுத்துகிறது, ஆனாலும் படம் எப்படியும் 100 நாள் ஓடும் அஜித் ரசிகர்கள் கவலை பட வேண்டாம்,
இந்த படத்தோட டைரக்டர் விஷ்ணு வின் "பட்டியல்" எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது, மேலும் வேறு நல்ல படங்கள் குடுப்பார்னு நம்புவோம்,
star movies-ல roland emmrich எடுத்த independence day படம் ஓடுது,

1 வாங்கிகட்டி கொண்டது:

cheena (சீனா) said...

படத்தைப் பற்றி எழுதாமலேயே பட விமர்சனம் செய்ய அருணால் மட்டுமே முடியும். ஆமா 4ம் கிளாஸ்லே ( 9 / 10 வயசிலே ) கட்டடிச்சிட்டு பில்லா ? ம்ம்ம்ம்ம் - பழுத்துட்டே அப்பவே

நான் காலேஜ் கட்டடிச்சுட்டு சிந்தாமணிலே தில்லானா மோகனாம்பாள் பாத்தேனே !!

!

Blog Widget by LinkWithin