பின் நவினத்துவம்

நிறைய இருக்கு இத பத்தி சொல்ல, முதலில் அப்படி என்றால் என்ன என்பதை என் கண்ணோட்டத்தில் சொல்கிறேன், புரிய வில்லை என்றால் என் பொறுப்பல்ல,
பின் நவினத்துவம் என்றாலே அதுதான்,
உதாரணத்திற்கு அய்யனாரின் கட்டுரைகளை படிக்கவும்
அய்யனார்
இது போகும் போக்கில் ஒரு தன் பெருக்கி கட்டுரையை போல் தோன்றலாம் அதுவும்
பின் நவினத்துவம் தான்,
தண்ணி அடிக்காமல் தலை சுற்ற வேண்டுமா,
ரமேஷ் பிரபா வின் "கனவில் பெய்த மழையை பற்றிய சில இசை குறிப்புகள்" படியுங்கள்,

ஆனால் சில சமயம் நல்ல கதைகளும் வரும், M.G.சுரேஷ் அவர்களின் "அலெக்சாண்டரும் ஒரு கோப்பை தேநீரும்" ஒரு நல்ல பின் நவினத்துவ நாவல்,
மிக்கியமாக பின் நவினதுவதை மற்றவர்கள் போலில்லாமல் மிக நன்றாக பயன்படுதிகிறார், மற்றவர்கள் பார்வையில் பின் நவினத்துவம் என்றால் என்ன என்பதை அவர்கள் கட்டுரையில் வரும் ஒரு வரியில்!? சொல்கிறேன்

"ஒரு நீண்ட வரிசையில் பத்தவதாக நிற்கும் நீல சட்டைகாரனின் காலுக்கு அடியில் சில சித்தேரும்ம்புகள் வரிசையாக அணிவெருத்து செல்வதை மிக முக்கியமாக சொல்வதற்கு காரணம் என்னவென்றால்"

எதாவது வித்தியாசம் தெரிகிறதா உங்களுக்கு,
மிக முக்கியம் அந்த வரிகளின் இடையில் கமாவோ, நிறுத்தர்குறிகளோ இல்லை,
இதை விட மிக நீண்டு செல்லும் மிக பெரிய வரிகளை படித்து பல முறை கலைப்படைந்து இருக்கிறேன்.

M.G.சுரேஷ் அவர்கள் இந்த வகை நாவல்களை மிகவும் அற்புதமாக படைத்திருக்கிறார்,
"அலெக்சாண்டரும் ஒரு கோப்பை தேநீரும்" நாவலில் இறுதியில் கம்யுனிசத்தை பற்றி அவரின் கண்ணோட்டம் மிகவும் யோசிக்க வேண்டிய விஷயம்,
மற்றபடி பல விசயங்களை ஒன்றாக இணைப்பதில், ஒரு திரை கதை அமைக்கும் தகுதி உடைய டைரக்டர் போல் தெரிகிறார்,

"அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்" என்ற கதையில் தத்துவுங்களை அவர் அலசியிருக்கும் விதம் அனைவருக்கும் பிடிக்கும்
தத்துவும் என்றவுடன் ஞாபகத்திற்கு வருகிறது, ஒரு முறை ஒஷோவிடம் கேட்டார்களாம்
மேலை நாட்டு தத்துவுங்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று, அவர் சொன்னாராம்
"உங்கள் தத்துவுமே பெரிய பேத்தல், இதில் மேலே என்ன கீழே என்ன என்று",
பார்த்திர்களா எங்கோ போய் விட்டோம், இதை தான் தன் பெருக்கி என்று சொன்னேன்.

புது புனல் பதிபகத்தை தொடர்பு கொண்டால் அவருடைய புத்தகங்கள் கிடைக்கும்,
நன்றி

4 வாங்கிகட்டி கொண்டது:

வால்பையன் said...
This comment has been removed by the author.
தருமி said...

நிறைய விஷயங்களை ஒரே இடத்தில எழுதணுமா என்ன?

வால்பையன் said...

சார், இது நிறையாவா, இது எல்லாம் சும்மா சார்,
என்னும் வரும் பாருங்க!

பின் நவினத்துவம்
பத்தி சொல்ல என்னும் நிறைய இருக்கு சார்!

வால்பையன்

cheena (சீனா) said...

பின்னவீனத்துவம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள பல நாட்களாக ஆசை. இன்னும் நேரம் கிடைக்க வில்லை. தண்ணி அடிக்காமலேயே தலை சுற்ற வைப்பது தான் பின்னவீனத்துவம் எனில் சீக்கிரமே அதை அடிப்படையாகக் கொண்டு எழுதப் பட்ட அய்யனார் சுரேஷ் போன்றவர்களின் பதிவுகளை சீக்கிரமே படித்து நமது தலையையும் சுற்ற வைக்க வேண்டும் என்ற அவா உள்ளத்தில் பொங்கி பீரிட்டுக் கிளம்பி வருகிறது.

அருண், ஒரு மாத காலத்திலேயே பல பதிவ்ர்களின் பதிவுகளைப் படித்து சில பதிவர்களின் பதிவுகளை மனதில் பதித்து அதன் அடிப்படையில் பதிவு போடும் திறனை வளர்த்துக் கொண்டது அருமை அருமை.

மேன்மேலும் வளர நல்வாழ்த்துகள்

!

Blog Widget by LinkWithin