என் கேள்விக்கு என்ன பதில்?

சமீபத்தில் செய்திதாள்களிலும், தொலை காட்சிகளிலும் வந்த செய்தி,
சிம்பன்சி குரங்கு ஒன்று, மனிதனின் நினைவு திறனை மிஞ்சி விட்டது,
அதை படித்தவுடன் எனக்கு ஒன்று நினைவுக்கு வந்தது, அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்,
எனது பால்ய கால நண்பன் முருகன், பின் நாளில் தன் செய்த தவறை சரி என்று நினைத்து கொண்டு அடுத்தவர்களையும் தவறு செய்ய தூண்டும் கும்பலின் உதவியுடன் கிறிஸ்டோபர் என்று தனது பெயரை மாற்றி வைத்து கொண்டான்,
அவனுடன் நடந்த உரையாடல் இங்கே!

இது நான் காதால் கேட்டது மட்டுமே, படித்து தெரிந்தது அல்ல

ஆதியில் இறைவன் ஆதம் மற்றும் ஏவலை படைத்தார் அதுவல்ல விஷயம் இங்கே
அவர் தின்ன கூடாது என்று சொன்ன ஒரு கனியை ஏவாள் தின்றதால் அவர்களுக்கு வெட்கம் (அறிவு) வந்ததாக கூறினான், அதை தின்ன சொன்னது ஒரு சர்ப்பம் என்றும் கூறினான்,
அதில் அவனுடைய கண்டுபிடிப்பு என்னவென்றால், அவர்களது இறை புத்தகத்தில் அந்த ஜந்துவிற்கு கால்கள் இருந்ததாக சொல்லி இருக்கிறதாம், அதை அவன் ஒரு குரங்கென்று வாதிடுகிறான்,
இன்று மனிதனுக்கும், சிம்பன்சி வகை குரங்கிற்கும் 99% ஒற்றுமை இருப்பதாக அறிவியல் சொல்கிறது, ஆனால் மனிதன் தனியாக படைக்க பட்டான் என்று மதம் சொல்கிறது,
என்னுடைய கேள்வி
விலங்குகளின் வாழும் தகுதிக்கும் மனிதனின் வாழும் தகுதிக்கும உள்ள ஒற்றுமைகளை சொல்லுங்கள் கீழே clue உள்ளது

விலங்குகளின் வாழும் தகுதி:
உணவிற்காக வேட்டையாடுதல்
மறைந்திருந்து தாக்குதல்
எதிரிகளிடமிருந்து தன்னை காப்பாற்றி கொள்ளுதல்
தன் இனத்திற்கு பாதுகாப்பு அளிப்பது

மனிதனின் வாழும் தகுதி:
உணவிற்காக வேட்டையாடுதல்
மறைந்திருந்து தாக்குதல்
எதிரிகளிடமிருந்து தன்னை காப்பாற்றி கொள்ளுதல்
என்று இவை தானே இருந்திருக்க வேண்டும்
ஆனால் ஏன் தகுதி இவ்வாறாக மாறியது

பொய் சொல்வது
ஏமாற்றுவது
திருடுவது
நம்பிக்கை துரோகம் செய்வது
காக்க வேண்டிய தன் இனத்தையே அழிப்பது

தயவு செய்து என் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்

5 வாங்கிகட்டி கொண்டது:

நிலா said...

அட நம்ம ஊரா மாமா நீங்க? வலையுலகிற்கு குட்டிப்பாப்பா உங்களை வரவேற்கிராள்.

அப்புறம் உங்கள் கேள்விக்கு குட்டிப்பாப்பாவின் குட்டி அறிவுக்கு தெரிந்த பதில் சர்வைவல் ஆப் த பிட்ட்டஸ்ட் தான்.

மிருகங்களுக்கு நீங்கள் கடைசியாக சொன்னவை தேவையில்லை. ஆறாவது அறிவு வந்ததால் இதெல்லாம் மனுசப்பயலுக்கு அத்தியாவசியம் ஆகிப்போச்சு

வால்பையன் said...

நன்றி நிலா அவர்களே,
நான் சொல்ல வந்ததும் அதுவே தான்
சர்வைவல் ஆப் த பிட்டஸ்ட் என்ற வார்த்தை எதையும் செய்ய துணிவு தருமா?
முறையாக பயன்படுத்த வேண்டிய ஆறாவது அறிவை மற்றவர்களை அழிக்க பயன்படுத்தலாமா?
பரிணாம வளர்ச்சியில் நம்மோடு போட்டி போடும் சிம்பன்சிக்கு
நம் வரவேற்ப்பு எவ்வாறு இருக்கும் ?
பரிணாம வளர்ச்சியின் நன்மையும் , தீமையும் என்ற தலைப்பில் இத பற்றி விரிவாக எழுத உள்ளேன்
நன்றி
வால்பையன

Anonymous said...

//பின் நாளில் தன் செய்த தவறை சரி என்று நினைத்து கொண்டு அடுத்தவர்களையும் தவறு செய்ய தூண்டும்//

என்ன தவறு புரியலை, தயவு செய்து விளக்க முடியுமா?

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
cheena (சீனா) said...

நிலாக்குட்டி பதில் சொல்லிடுச்சா - அது புத்திசாலி ஆச்சே ! என் செல்லப் பேத்தி அவ

!

Blog Widget by LinkWithin