லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா - விமர்சனம்

முதலாளி - தொழிலாளி, பணக்காரன் - ஏழை, படித்தவன் - படிக்காதவன், மேல் சாதி - தாழ்ந்த சாதி இந்த வர்க்கபேதங்களுக்கு ஆதாரபுள்ளியே ஆண் - பெண் என்ற வர்க்கபேதம் தான். ஆம் பொருள்முதல்வாத சிந்தனையின் ஆரம்பத்தில் ஆண், பெண்ணை உடையாக பாவித்ததே பெண்ணடிமைதனத்தின் ஆரம்ப கட்டம்

பதின்மத்தின் கனவுகளை தனது பர்தாவுக்குள் மறைத்து வைத்திருக்கும் ஒரு பெண். கட்டுபாடான இஸ்லாமிய குடும்பம். வெளிய அவள் சிகரெட் பிடிப்பாள், தண்ணி அடிப்பாள், தன் தேவைகளுக்காக திருடுவாள். ஜீன்ஸ் அணிவது என் உரிமை என போராடி சிறை செல்வாள். காதல் கொள்வாள். திருடிய குற்றத்திற்காக கைது செய்யப்படும் பொழுது அந்த ஆணால் நீ யார் என கேட்டு அவமானபடுவாள்..

அந்த ஆண் இவளிடம் விருப்பது எதை? அழகையா? நடத்தையா? அலங்காரத்தையா? ஏன் அவளை விட்டு சென்றான். do you know why i am preganant? என்ற அவளின் கேள்வி எதை சொல்ல வருகிறது. என் தேவைகளுக்காக நான் கொடுத்த விலை என் கற்பு என்றா?

வெளிய நிச்சயதார்த்தம், உள்ளே காதலுடனும் உறவு கொள்கிறாள். அதை விடியோ எடுத்தும் வைக்கிறாள். பிற்பாடு தனக்கு திருமணம் வேண்டாம் என்றும் அம்மாவிடம் சொல்கிறாள். தனது வண்டியை விற்று எங்கேயாவது போய் விடலாம் என காதலனை கேட்கிறாள். வரமறுக்கும் காதலனிடம் கடைசியாக உறவு கொள்வோம் என கேட்டு அவமான படுகிறாள். வருங்கால கணவன் திருமணத்திற்கு முன் உறவுக்கு மறுப்பதை சிரிப்புடன் ஏற்றுக்கொள்கிறாள். நிச்சயத்தின் போது எடுத்த விடியோவை பார்த்த அவன் இவளை நிராகரிக்கிறான். என் போனை ஏன் எடுத்த எங்கிறாள்.உங்கள் அனைவருக்குமான ஒரு கேள்வி என்னிடம் உள்ளது. உங்கள் துணைக்கும் உங்களுக்குமான உறவின் இணைப்பு சங்கிலி எது? செக்ஸில் வந்து நிக்கிறதா?

வா.மு.கோமுவின் மங்கலத்து தேவதைகள் என்ற நாவல். நாயகன் பழனிசாமி வழக்கமாக செல்லும் ஒயின்ஷாப்பில் ஒரு நண்பனை பிடிக்கிறான். அவன் வீட்டுக்கு செல்கிறான். பழனிசாமிக்கும் நண்பனின் மனைவிக்கும் உறவு ஆரம்பிக்கிறது. ஒரு மனகசப்பில் அவள் வீட்டுக்கு போகாமல் இருக்கிறான். பழனிசாமியை தேடிவருகிறான் நண்பன். பழனிசாமியோ குற்ற உணர்வில் இருக்கிறான். அட, எல்லாம் தெரியுமுங்க. அதென்ன தேய்ச்சா போக போகுது. இம்புட்டு ஒன்னாமன்னா பழகிட்டு வராம இருந்தா நல்லாருக்கும்கலான்னு கேக்குறான்

மேலோட்டமாக பார்த்தால் அவன் ஆண்மையற்றவனாகவோ, மனைவியை திருப்தி படுத்த இயலாதவனாகவோ, மனநோயாளியாகவோ பார்க்கப்படலாம். ஆனால் அவனுக்கும் அவன் மனைவிக்கும் இருக்கும் உறவின் இணைப்பு சங்கிலி செக்ஸ் அல்ல. அவன் அதை கடந்துவிட்டான். தன் மனைவி சோகமாக இருப்பதை ஆணாதிக்க சிந்தனையுடன் பார்க்காமல் குடும்ப சோகமாக ஏன் அவன் பார்க்கிறான்.

வெளிநாட்டில் இருந்து திரும்பி வேலையில்லாமல் இருக்கும் கணவன், மூன்று குழந்தைகள், பெஸ்ட் சேல்ஸ் கேர்ள் என அவார்டு வாங்கினாலும் கணவனின் செக்ஸ் தேவைக்கு மட்டுமே பயன்படும் மனைவி. கணவனை ஒரு பெண்ணுடன் பார்த்து அவள் வீட்டை கண்டுபிடித்து ஒரு பொருள் விற்க செல்கிறாள். லாலிபாப் எக்ஸர்ஸைஸ் என்ற பெயரில் நிப்பிளை வாயில் வைத்து ஊத சொல்கிறாள். இவள் வாயில் வைத்திருந்ததை கொடுக்கும் போது அந்த பெண் மறுக்கிறாள். “ஓ, நீங்க அடுத்தவங்க வாயில் வைத்ததை உங்க வாயில் வைக்க மாட்டிங்களோ”(நிஜமாவே அப்படி தான் வருது டயலாக்) நான் இன்னாரின்  மனைவி எங்கிறாள்.

ஒரு பெண், உனக்கு எவ்வளவு தைரியம். வேலைக்கு போற. அவ வீட்டுக்கு போற. இனிமே எங்கேயும் போககூடாது. வீட்டிலயே இரு என மனைவியின் வாயை கூட திறக்கவிடாமல் பொத்திக்கொண்டு வலுக்கட்டாயமாக உறவுக்கொள்ளப்படுகிறாள். இங்கே செக்ஸ் ஏன் அவளுக்கு அளிக்கப்பட்ட தண்டனையாக மாறுகிறது? செக்ஸ் ஏன் ஒரு பெண்ணிற்கு எல்லாமாமுகவும் இருக்கிறது?50 வயதை கடந்த விதவை பெண். நீச்சல் பயிற்சியாளர் மீது காதல் கொள்கிறாள். ரேஸி என்ற புனைபெயரில் அவனுடன் போனில் உரையாடுகிறாள். போனிலே எல்லாமும் செய்கிறாள். ரேஸி என்பவள் இளவயது மங்கை இல்லை. 50 வயதான பெண் என தெரியவரும் போது ஒட்டுமொத்த குடும்பதாராளும் சேர்த்து அவமானபடுத்தப்படுகிறாள். தன் இடத்தை வாங்க வந்தவர்களை,. அரசு பெயரில் ஆக்கிரமிக்க வந்தவர்களை தன் ஆளுமையால் விரட்டியடிக்கும் ஒரு பெண் 50 வயதான காரணத்தால் காதலிக்க தகுதியில்லாதவள் ஆகிறாள்

நால்வரும் ஒரு அறையில் புகைப்பதாக படம் முடிகிறது ஆனால் 
ஒரு ஆணுக்கு பெண்ணிடம் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கிறது என்ற கேள்விகளுடன் முடிவதாக எனக்குள் கேள்விகள் துளைத்துக்கொண்டு இருக்கிறது..

#வால்பையன்
#சினிமா

3 வாங்கிகட்டி கொண்டது:

தருமி said...

பார்க்கணும் போல் இருக்கே ..... பதில் தெரியாத கேள்விகள் பல இருக்கும் போலும்......

க கந்தசாமி said...

வித்தியாசமான படம் 👍

சேக்காளி said...

//எதாவது சொல்லிட்டு போங்க //
முடியாது.

!

Blog Widget by LinkWithin