ஆசிரியர் தினம்!

என்னோட அப்பத்தா எனக்கு முதல் ஆசிரியர். மதுரையில் மரக்கடை வச்சிருந்தாங்க. ஒரு சிலேட்டுல கணக்கா போட்டு தருவாங்க அதுக்கு விடை எழுதனும். அப்ப எனக்கு வயசு 3

படிப்பதில் நான் மட்டமான மாணவன். கடைசி பெஞ்சு தான் என் ஜாகை. ஆனால் ஃபர்ஸ்ட் ரேங்க்.
சிம்பிளான லாஜிக் தான். அவனை விட, இவனை விட அதிக மார்க் வாங்கனும்னு நான் படிக்கல. பாஸ் பண்ணனும்னு கூட நினைச்சுகூட படிக்கல. இதில் எதோ இருக்கு. அது என்னானு தெரிஞ்சிக்கனும் என்பது தான் நான் படிக்க காரணமா இருந்தது. எல்லா புத்தகத்தை பாடம் நடத்தும் முன்னரே படிச்சிருவேன்.

கிளாஸ் கட் அடிச்சிட்டு சினிமாவுக்கு போறது. மீன் பிடிக்கபோறது. தம் அடிக்கிறது போன்ற அனைத்து வகையான சேட்டைகளும் ஒரு பக்கம் நடக்கும். ஆனாலும் அது என்னான்னு தெரிஞ்சிக்க இருக்கும் ஆர்வம் கவனத்துடன் படிக்க வைக்கும். எப்படி நீங்க ஒரு சினிமா பாட்டை ஞாபகம் வச்சிகிறிங்களோ அது மாதிரி நான் படிச்சிதெல்லாம் என் ஞாபகத்தில் இருந்தது. திரும்ப படிக்க வேண்டிய அவசியம் கூட இல்லாமல்ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் தடுமாறினாலும் ஐந்தாவது படிக்கும் போது ஆங்கில உயிர் எழுத்துகளின்(வவ்வல்ஸ்) முக்கியத்துவம் தெரிந்தது. அதன் பிறகு உச்சரிப்பு வந்துருக்கு. புரியாத வார்த்தைகளை கூட வாக்கிய அமைப்பை வச்சு யூகிக்கும் தன்மை வந்தது. தலையில் அடிப்பட்டதால் ஆங்கில வார்த்தைகள் பேச முடியலையே தவிர. படிக்க, எழுத முடியும்

என் பெஞ்ச் பசங்க ஸ்பெயிலா போறது. ஏன் படிக்கிறோம்னு தெரியாமையே எதை எதையோ படிக்கிறது ஒரு மாதிரி சலிப்பா இருந்தது. என் கேள்விகளுக்கு பாடபுத்தகத்தில் பதில் இல்ல. ஆசிரியரிடமும் பதில் இல்ல. இந்த பாடத்திட்டத்தின் மேல் வெறுப்பாகி ஒன்பாதவதற்கு மேல் ஸ்கூலுக்கு போக மாட்டேன்னு சொல்லிட்டேன்

நான் என்னை அப்டேட் பண்ணிக்காம எங்க நிறுத்துறனோ அங்கேயே தேங்கிய குட்டை ஆகிருவேன். வாசிப்பை நிறுத்தியவன் பிணம் என் புரிதலில். ஆசிரியர்களும், இந்த உலகமும் நம் ஆர்வத்தை தூண்டி அதில் நாட்டம் ஏற்படுத்த வைக்கும் தூண்டுகோல்கள். என் ஆர்வமெல்லாம் ரொம்ப பெருசா இருந்தது. ஆனாலும் இன்னும் குறையாம இருக்கு


0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin