காங்கிரஸின் அலட்சியமும் ஆபத்தே!

2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற காரணம் கடைசி நேரத்தில் தமிழகத்தில் நிகழ்ந்த இரண்டு மணி நேர மின்வெட்டு அதுக்கு முன்னாடி நடந்த அமைச்சர் பதவி பேரம், உண்ணாவிரத நாடகம் இதெல்லாம் மக்கள் வழக்கம் போல் மறந்திருப்பாங்க. சோ மின்வெட்டு மட்டுமே
ஆனால் 2006/2011 திமுக ஆட்சி காலத்தில் அதிமுக தன் இருப்பதை தக்கவைத்து கொண்டது. உண்மையில் 2011 தேர்தல் தான் தேமுதிக என்ற கட்சிக்கே உயிர் கொடுத்தது. அதே நேரம் 2011 திலிருந்து பார்த்தால் மின் கட்டண உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, பால் விலை உயர்வு இது மட்டுமில்லாது எல்லா துறையிலும் ஊழல்
இருப்பினும் ஏன் 2016 தேர்தலில் திமுக தேற்றது. அடுத்த தேர்தலில் எப்படியும் நாம தான் வருவோம் என்ற அலட்சியமும் தன் இருப்பை தக்கவைத்து கொள்ளாததும் தான்.
சரி விசயத்துக்கு வருவோம்.
அதிமுகவிற்கென்று எப்படி ஒரு வாக்கு வங்கி இருக்குதோ அது எப்படி அதிமுக எல்லா கொடுமைகளும் பண்ணாலும் அதிமுகவிற்கே ஓட்டு போடுதோ அதே மாதிரி கிறுக்கு கூட்டம் பாஜகவிலும் இருக்கு. மதம் ஒன்றே பிரதானம் அவர்களுக்கு.
2011-2016 திமுக அலட்சிய்த்திலும் இறுமாப்பிலும் இருந்தது போலவே தற்போது காங்கிரஸ் இருந்து வருகிறது. இதுக்கு காங்கிரஸ் ஆட்சியே பரவாயில்லன்னு என்னை போல் ஆட்கள் தான் சொல்லிட்டு இருக்கோம். காங்கிரஸ் யார் விரலை சூப்பிகிட்டு இருக்காங்கன்னு தெரியல

தமிழகத்தில் திமுக ஓரளவுக்கு வலுவா இருந்தாலும் தேசிய அரசியலில் வலுவான எதிர்கட்சி இருப்பதா கண்ணுக்கே தெரியல. இடதுசாரிகள் என்ன பண்றாங்க. அட்லீஸ்ட் இந்த மதவாத கிறுக்கு கூட்டங்களை வீட்டுக்கு அனுப்பவாவது கூட்டணி அமைத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டாமா?
இப்படியே இருந்தாலும் தொங்கு பாராளுமன்றம் அமையும் தான். ஆனா கிறுக்கு தனமா போட்ட திட்டங்களை மாற்றி அமைத்து சட்ட திருத்தம் செய்ய, பெரும்பான்மை வேணுமே
இந்தியாவுக்கு என்ன தான் ஆச்சு?

2 வாங்கிகட்டி கொண்டது:

Unknown said...

ராகுல் காங்கிரஸ் சார்பில் பிரதமர் வேட்பாளரானா மோடி மீண்டும் பிரதமராவதை தடுக்கவே முடியாது.

Unknown said...

எல்லாம் சரிதான்.
ஆனால் காங்கிரஸ் சார்பில் மன்மோகன்சிசிங் போல் துறை சார்ந்த நிபுணர் ஒருவர் பிரதமர் வேட்பாளரானால் அல்லது இடதுசாரிகளுடன் மாநில கட்சிகளின் வலுவான மூன்றாவது அணி அமைத்து மம்தாவோ சந்திரபாபு நாயுடுவோ அல்லது வேறு யாராவது ஒரு மாநில தலைவரோ பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் மோடி தோல்வியும் அதிகளவில் வாய்ப்புண்டு.
ஆனால் பிரதமர் வேட்பாளராக ராகுல் நிறுத்தப்பட்டால் மோடி மீண்டும் பிரதமராவதை அந்த ஆண்டவனாலும் தடுக்க முடியாது.

!

Blog Widget by LinkWithin