ஆப் கி பார் பிராடு சர்க்கார்...

எழுபதுகளின் ஆரம்பத்தில் ஜெனரல் மோட்டார் நிறுவனத்திற்கும், அமெரிக்க அரசாங்கத்திற்கும் மறைமுகமாக ஒரு ஒப்பத்தம் போடப்பட்டது. பொது போக்குவரத்தை படிப்படியாக குறைத்துக்கொள்வது தான் அது.
வெளிப்படையாக அறிவித்துக்கொண்ட வலதுசாரி சிந்தனை கொண்ட அமெரிக்கா பொது போக்குவரத்தை குறைத்தது. அந்த நேரம் ஜெனரல் மோட்டார் 90% கடனுக்கு கார் வழங்கியது. ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு கார். வாருங்கள் கனவை நினைவாக்குவோம் என அழைத்தது. எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா? கார்ப்ரேட்காரன் கூவும் போதெல்லாம் கனவை நினைவாக்குவோம்னு தான் கூவுவாம்
அப்பொழுது ஆரம்பித்த ஆடம்பரம் 2008/2009 ல் பேரடியாக அமெரிக்காவை தாக்கியது. 90% கடனில் வாங்கிய வீட்டு கடனை கட்ட முடியாமல் மக்கள் காரில் குடியிருக்க ஆரம்பத்தார்கள். ரியல் எஸ்டேட் பெரும் சரிவை சந்தித்தது. வங்கிகள் திவாலாகின. அமெரிக்காவை தாக்கிய பொருளாதார சரிவு உலகெங்கும் எதிரொலித்தது. பலர் வேலை இழந்தனர். இப்பவும் அமெரிக்காவில் வீடில்லாமல் எத்தனை குடும்பங்கள் ரோட்டில் தங்குகிறார்களோ அதே அள்வு வீடுகள் ஆளில்லாமல் காலியா இருக்கு.

அந்த நேரத்தில் இந்தியா பேரடியை சந்திக்காத காரணம். நம் மக்களின் சிக்கனமும், சுயசார்பும் தான். மேலும் விழிம்பு நிலை மக்களுக்கு அரசின் மானியகொள்கை குறைந்தபட்ச உணவிற்கு உத்திரவாதம் அளித்தது. அது எல்லாத்துக்கும் மொத்தமா மோடி அரசு வைக்கும் ஆப்பு தான் நிதி ஆயோக் என்ற திட்டம்
பொது மருத்துவமனைகளில் இருக்கும் படுக்கையை தனியாருக்கு வாடகைக்கு விடுவது. உலகிலே பெரிய பொது அமைப்பு கட்டுமானம் என பெயரெடுத்த இந்திய ரயில்வேவை தனியாருக்கு தாரை வார்ப்பது. அரசு கல்வி கூடங்களை தனியாருக்கு விற்பது அனைத்துமே நமது அடிப்படை உரிமைகளை கூட இனி காசு கொடுத்து தான் வாங்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளுவது


ஆயிரத்தில் ஒருவன் வரி கட்டலைன்னு மீதி 999 பேரையும் வங்கி வாசலில் நிற்க வைத்து கொல்வது. நூறில் ஒருவன் ரேசன் வாங்கவில்லை என்று மீதி 99 பேரையும் பட்டினி போட்டு கொல்வது தான் ஒரு அரசு வறுமையை ஒழிக்கும் முறையாக இருக்குமாயின் அதை விட கேவலம் வேறு எதுவும் இருக்க முடியாது. எல்லாம் நாட்டின் நன்மைக்கே எனும் பக்தாஸ் காலை எட்டு மணிக்கு அரசு மருத்துவமனைக்கு போனால் விழிம்புநிலை மனிதர்கள் எத்தனை கோடி என தெரிந்துகொள்ளலாம்
ஆனாலும் மதம் என்று நிறுவனத்தை கட்டமைக்க பக்தாஸ் பலி கொடுக்கவும் தயங்குவதில்லை. நிறைய வரலாற்றில் நிறைய ஆதாரங்கள் உள்ளன

1 வாங்கிகட்டி கொண்டது:

'பரிவை' சே.குமார் said...

நல்ல கட்டுரை....
வாழ்த்துக்கள்.

!

Blog Widget by LinkWithin