2ஜி வழக்கு!

2ஜி வழக்கு மிகைபடுத்தப்பட்ட ஒன்று ஒத்துகிறேன், ஆனால் அதில் தவறே நடக்கவில்லை என்பது முட்டு கொடுக்கும் தன்மை.

முதல் விசயம்
முதல் அலைகற்றை துறைக்கு சம்பந்தமே இல்லாத துறை ஒன்று பங்கெடுத்தது, சேவை பெற்ற சில நாட்களில் பல மடங்கு லாபத்துக்கு இந்திய நிறுவத்தினற்கு விற்றது

சம்பந்தமில்லாத துறை அப்ளை பண்ணிருக்குன்னா அதில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருக்காதா? ஏன் குறைந்த விலைக்கு கொடுத்திங்கன்னு கேட்கும் போது அப்ப தான் குறைந்த விலையில் மக்களுக்கு சேவை கிடைக்கும்னு சொன்னிங்க. ஆனால் வெளிநாட்டி கம்பெனி பல கோடி பாலம் பார்த்தானே. பின் எப்படி குறைந்த விலைக்கு சேவை கிடைக்கும்.இரண்டாவது விசயம்
முறையான தேதி அறீவிக்கப்படாமல் அவசரம் அவசரமாக பிரித்து கொடுக்கப்பட்டது. இந்த வாதம் நீதிமன்றத்தில் வரும்பொழுது அது உள்துறை அமைச்சருக்கும்(ப.சிதம்பரம்) பிரதமருக்கும் (மன்மோகன்சிங்) தெரியும் என்றார் ராசா. அன்று வழங்கப்பட்ட அலைகற்றை யாவையும் நீதிமன்றம் கேன்சல் செய்தது தெரிந்தே தான் தப்பு பண்ணேன் என்ற அவரது வாதம் தான்

இது போக
நீரா ராடியா போன் விவகாரம், சொன்னா உதைப்பிங்க ஜாபர்சேட் போன் விவகாரம் அனைத்தும் இந்த வழக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட ஒன்று. மேலும் 2ஜி வழக்கில் சம்பந்தபட்ட ஒரு நிறுவனம் தான் கலைஞர் டீவிக்கு 200 கோடி வழங்கியது. வழங்கு விழந்தவுடன் அது கடனாக மாற்றப்பட்டு திரும்ப செலுத்தப்பட்டது.அதிமுகவா இருந்தாலும் சரி, திமுகவா இருந்தாலும் சரி, இப்பல்லாம் யார் தான் தப்பு பண்ணல என்பது மோசமான மனநிலை. கனிழொழி கருணாநிதியின் மகள் என்பதாலும், ஆ.ராசா, கனிமொழிக்கு நெருக்கமான நண்பர் என்பதாலும் இருவரும் கட்சியை விட்டு விலக்கப்பட வில்லை. தனி மனித துதியும் புனித படுத்தலும் கேள்விகளை வெறுக்கும், உண்மைகள் கண்ணுக்கு தெரியாது

#திமுக
#வால்பையன்

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin