கேள்வி - பதில் (தற்கொலை)

//நீங்க தற்கொலைமுயற்சி பன்னிருக்கீங்களா?//

இல்லை

ஆனால் அந்த மனநிலையில் இருந்தபொழுது சில்வியா ப்ளாத் ஆத்மநாம் போன்ற கருத்துமுதல்வாத சிந்தனை கொண்ட ஆளுமைகள் ஏன் தற்கொலை பண்ணிகிறாங்கன்னு தீவிரமா யோசிச்சிருக்கேன். கடைசியா இறந்த பிரபாகர் பதிவுகள் கூட இந்த சின்ன வயதில் இவ்வளவு முற்போக்கு சிந்தனையான்னு யோசிக்கவச்சது

ஆதியில் மனிதனின் சராசரி ஆயுட்காலம் 18 வயசு தான். நிலபிரபுத்துவ சமூகத்தில் நாடுபிடி சண்டை நடந்தபோது அதுவும் சோழர்கள் ஆட்சி காலம் வரை பார்த்தா 36 வயசு தான் சராசரி ஆயுட்காலம். இன்னைக்கு நாம நாகரீகத்தில் வளர்ச்சி அடைந்து 70 வயசு வரைக்கும் கொண்டு வந்துட்டோம்....ஆனால் அந்த வயது வாழ்கிறோமா என்றால்..
இயந்திர உலகில் 30 வயதிலேயே காதல், கல்யாணம், குடும்பம், குழந்தைகள், பணம், பாசம், துரோகம், வலி எல்லாத்தையும் பார்த்திருவோம். அடுத்து என்ன? என்று மிகபெரிய கேள்விக்குறி தூக்குகயிறு போல் நம் முன் நிற்கும். மதமும், ஆன்மீகமும் வேகமாக வளர காரணமும் அதுதான்

இன்று ஒரு பதிவு படித்தேன். பிறரை வெல்வதில் என்ன சுவாரஸ்யம் இருக்கப்போகுது, அதை யார் வேண்டுமானாலும் செய்வார்கள். உங்களை நீங்கள் வெல்லுங்கள். அது உங்களால் மட்டுமே முடியும்

மனித சிக்கலுக்கான சூத்திரங்கள் சிலநேரங்களில் போகிற போக்கில் காணக்கிடையும்., நான் தான் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கவேண்டும்.

இந்த பூமியில் 1000 கோடி மனிதர்களாவது பிறந்து இறந்திருப்பார்கள். அவர்களில் வெகுசிலரை மட்டுமே நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். காரணம் அவர்கள் எதோ ஒரு வகையில் மனிதத்தை நேசித்தவர்கள்.தற்கொலை எண்ணத்தில் இருந்து வெளியே வர படிப்பது, எழுதுவது என்று டைவர்ட் பண்ணலாம். நீங்க இந்த சமூகத்துக்கு வேணும் வால்னு அழைத்து என்னை ஊக்கப்படுத்திய நண்பர்கள் மிக முக்கியமானவர்கள். இருந்தும் சில பொழுதுகளில் வெறுமையை சந்திக்கநேரும். அம்மாதிரி நேரங்களில் போதையின் பிடியில் நம்மை ஒப்புக்கொடுக்கும் அவலம் நடக்குறது

இதையெல்லாம் விட ஒரு மனிதனுக்கு அங்கிகாரம் அளித்து நம் இருத்தலை உணரசெய்யும் சக்தி ஒரு விசயத்திற்கு உண்டு

அதனை காதல் என்று அழைப்பார்கள்

valpaiyan.Sarahah.com

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin