உங்கள் வீடும் எரியும்போது தான் குரல் கொடுப்பீர்களா?

பணமதிப்பை திரும்ப பெறுதல் கருப்பை பணத்தை ஒழிக்க உலக நாடுகள் பலவும் மேற்கொள்ளும் முறைகளில் ஒன்று. மோடியின் அறிவிப்பு நல்ல செயல்முறை என்று ஆரம்பத்தில் பாராட்டியவர்களில் நானும் ஒருவன், ஏன்னா எங்கிட்ட வெள்ளைபணமே இல்ல, கருப்பு பணத்திற்கு நான் எங்க போக.
ஆனால் நடந்ததோ வேறு, அரசு எதிர்பார்த்ததில் 10% கருப்பு பணம் பிடிப்படிருக்குமா என்பதே சந்தேகம் தான். அந்த திட்டம் தோல்வி என்பதற்கு சான்று இன்று வரை திரும்ப பெறப்பட்ட பணத்தின் மதிப்பை அரசு வெளியிடமறுக்கிறது. இருக்கும் ஓட்டைகளை அடைத்து மீண்டும் 2000 ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிப்பு வருமா என எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்
அனைத்தையும் ஆதாரில் இணைப்பதும் நல்ல திட்டம் தான் உலக நாடுகள் பல செய்துள்ளன. ஆனால் ஆதார் இணைப்பை நாம் வாங்கும் சொத்துடன் இணைத்தால் மட்டுமே பினாமி சொத்து குவிப்பு கட்டுப்படுத்தப்படும், வங்கியில் வரும் போகும் பணம் ஏற்கனவே பான்கார்டு கொண்டு கண்காணிக்கப்படுகிறது. ஆதாரின் பயன் முழுமையடைய அரசு என்ன செயல்திட்டம் வைத்துள்ளது என்பதையும் அறிய காத்திருக்கிறேன்
ஒரே நாடு ஒரே வரி என்பது வளரும்/வளர்ந்த நாடுகளில் உள்ள வரி முறை தான். ஆனால் இந்தியாவில் மட்டும் தான் அதிகபட்ச வரியும், சாராயத்திற்கும், பெட்ரோலுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டியை ஆதரிக்கும் பலர் சொல்வது பின்னாளில் அவைகளும் ஜி.எஸ்.டியின் கீழ் கொண்டு வரப்படும். அதற்காகவும் காத்திருக்கிறேன்.


மேல்சொன்னவற்றில் பணமதிப்பை திரும்ப பெற்றதை தவிர அனைத்தும் நேற்று அறிவிக்கப்பட்ட மானிய விலக்கு உட்பட அனைத்தும் காங்கிரஸ் அரசில் கையெழுத்தானவை, திட்டமிடபட்டவை. மேலே சொல்லவற்றில் நல்ல விசயங்களில் சொல்லிவிட்டேன். ஆனால் மானிய விலக்கு என்பது நடுத்தர.ஏழை மக்களின் மேல் சுமத்தப்படும் பெரும் பொருளாதார சுமை
மானியம் என்பதை பிச்சையுடன் ஒப்பிட்டு சிலர் எழுதி வருகிறனர்.அவர்கள் சிறப்பு தரிசனத்தில் சாமி பார்ப்பவர்கள். அவர்களுக்கு மானிய்ம் என்பதை பிச்சையாக தான் தெரியும். இந்த நாட்டில் பிறந்த விட்டோமே என்று ஒருவேளை உணவுக்கு ஏக்கும் மக்களுக்கு மானியம் என்பது நாடு அவர்களுக்கு அளிக்கும் உத்திரவாதம், தன் நாட்டு மக்கள் மேல் அவர்களுக்கு இருக்கும் கடமை. அதில் இருந்து பின்வாங்குவது நாடும், அரசும் மக்களுக்கு செய்யும் துரோகம்
உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ இந்தியாவின் அனைத்து தொழில்களும் வெறும் 100 பெருமுதலாளிக்காக உழைக்கப்படுபவை. லாபம் ஈட்டிக்கொடுக்கப்படுபவை. நாம் அனைவரும் மறைமுகமாக அவர்களுக்காக தான் வேலை செய்துக்கொண்டிருக்கிறோம். அல்லது நிர்பந்திக்கப்படுகிறோம். அதற்கு அரசும் உடந்தை. எளிமையாக உதாரணம் கடந்த மூன்று வருடத்தில் மட்டும் கார்ப்ரேட் நிறுவனங்கள் பெற்ற வரிசலுகை, கடன் ரத்து மற்றும் 15 லட்சம் கோடியை தாண்டும். வரா கடனில் தான் உள்ளது. வசூல் செய்யப்படும் என்பது என்னாகும்னு உங்களுக்கு தெரியும்.
எனக்கு பாதிப்பில்லை அதனால் நான் ஏன் கவலைபடவேண்டும் என்பது பக்கத்து வீடு தானே எரியுது, என் வீடு எரியும் போது பார்த்துக்கலாம் என்ற மனநிலை. நாளை உங்கள் பாக்கெட்டில் இருந்தும் பிடிக்கப்படும் பணம். இது உங்களின் வாக்கு என்ற ஆயுதத்தை கூர் தீட்ட வேண்டிய நேரம். மக்கள் விரோத அரசை மக்கள் நினைத்தால் தண்டிப்பார்கள் என்று காட்ட வேண்டிய நேரம். நீங்கள் பிறக்கும் போது மனிதனாக தான் பிறந்தீர்கள். உங்களுக்கு போர்த்தப்பட்ட சாதி, மத அடையாள போர்வையை துரந்து மனிதர்களாக ஒன்றியனைய வேண்டிய நேரம்.
ஒரு எறும்பு கூட தன்னை காப்பாற்றிக்கொள்ள போராடும். நீங்கள் அதை விட கேவலமா என்ன?

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin