தமிழ் தேசியம்!

தமிழ்நாட்டை தமிழன் ஆளவேண்டும் என்பது ஒரு ஐடியாலஜி, கட்சியின் கொள்கை.
இந்தி, இந்து, இந்தியா போன்ற கேவலமான கொள்கையுள்ள கட்சியே இந்தியாவை ஆளும் போது தமிழன் ஆள வேண்டும் என்ற கொள்கை மோசமில்லை

ஆனால் அதற்கு ஒரு தமிழனா உங்களுக்கு தமிழ்நாட்டின் மீது இருக்கும் அக்கறையையும், செயல்முறை திட்டங்களையும் தான் காட்டி ஓட்ட வாங்க முடியும். திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பது மொன்னை வாதம் மட்டுமல்ல, அயோக்கியதனமும் கூடஇந்தியாவின் பிற மாநிலங்களை ஒப்பிடும் பொழுது தமிழகம் முன்னேறியேயுள்ளது. பல மாநிலங்களை விட இங்கே சாதி கலவரம் குறைவு, பாமக போன்ற சாதியவாதம் பேசும் கட்சிகள் தங்கள் கொள்கைகளை மாத்திகிட்டா அந்த குறைவும் இல்லாமல் போகும்.

நீங்க என்னடான்னா நீ தமிழனான்னு தெரிஞ்சிக்க அவன் என்ன சாதின்னு டி.என்.ஏ டெஸ்ட் எடுத்து பார்த்துகிட்டு இருக்கிங்க. உங்களை மாதிரி பிற்போக்குவாதிகளிடம் இருந்து காப்பாற்றியதே திராவிடம் தான்.

திராவிட கட்சிகளின் ஊழலை சொல்லி ஓட்டு கேளுங்க. அதே திராவிட கட்சியில் இருந்து ஆண்ட ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் கையாலாகதனத்தை சுட்டி காட்டி ஓட்டு கேளுங்க. நீர்மேலான்மை, விவசாயத்தில் உங்களுக்கு இருக்கும் திட்டங்களை சொல்லி ஓட்டு கேளுங்க.

அதை விட்டு கேனதனமா நரம்பு புடைக்க வந்தேறி வந்தேறின்னு கத்திகிட்டு இருந்தா கடைசி வரைக்கும் ஒரு கவுன்சிலர் சீட்டு கூட வாங்க முடியாது. உங்கள் அரசியலை அடிமட்டத்தில் இருந்து ஆரம்பிப்பதே நல்லது. உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகுங்க

1 வாங்கிகட்டி கொண்டது:

Unknown said...

இவர் சரக்கு மற்றும் சேவை வரியை எதிர்க்கிறார், சரக்கு(சாராயம்)க்கு GSTல இருந்து விலக்கு ஏன்னு கேக்கறார்.சாராயத்துக்கு அதிக வரி உள்ளது தெரியாதா இல்லை மக்களை ஏமாற்றுகிறாரா?

!

Blog Widget by LinkWithin