சபிக்கப்பட்டவர்கள்!

//மீண்டும் காதலிபீர் தெரியும் காதலிக்கபடுவீர் என நம்புகிறீறா..//
கடந்தகாலத்தை நினைவுபடுத்த தெரியாதவர்கள் மீண்டும் அதே வாழ்வை வாழ சபிக்கப்பட்டவர்கள்
-ஜார்ஜ் சாந்தாயன் என்ற புகழ்பெற்ற தத்துவஞானி எழுதியது


இயற்கையிலயே எச்சரிக்கை உணர்வு அதிகம் என்பதால் பெண்கள் காதல் விசயத்தில் பயங்கர உஷார். முன்னால் எதுவெல்லாம் பிரச்சனை கொடுத்ததே அதை தவிர்த்து விடுவார்கள். தெரியாதனமா பண்ணிட்டா கூட எதும் பிரச்சனை வந்துருமோன்னு பதட்டப்படுவார்கள்
இந்த விசயத்தில் பெரும்பாலான ஆண்கள் கூமுட்டைகள். திரும்ப திரும்ப காதலிச்சு பல்பு வாங்கும் வரம் பெற்றவர்கள், ஆனாலும் காதல் என்பது பிரதிபலிக்கப்பட்டால் தான் முழுமையடையும். உணரபடாமலே இருந்தால் அங்கேயே தேங்க மாட்டார்கள்.
காதலை முழுமையாக உணரக்கூடிய வயதில் தலையணை சைஸ் புத்தகத்தோடு உறவாடிக்கொண்டிருந்தேன். சுண்டல் பேப்பர், தெருவில் கிடக்கும் பேப்பரை பொறுக்கி கொண்டுருந்தேன். இப்ப காதலிக்க ஆள் தேடினா விளங்குமா
எதோ ஒரு வலியில் வரும் தோழர்களுக்கு உளவியல் ஆற்றுபடுத்துனரா இருப்பது பிடிச்சிருக்கு.
நான் காதலிக்கபடுவேனா என்பதை விட என் காதலை தாங்கும் சக்தி இங்கே யாருக்கும் இருப்பதா எனக்கு தெரியல
பின் சேர்ப்பு
சொல்ல மறந்துட்டேன். ஜார்ஜ் சொன்ன அந்த சாபம் பெற்ற ஒரு கூட்டம் எனக்கு தெரியும். அவர்களை தமிழக வாக்காளர்கள் என்று அழைப்பார்கள் 😂😂😂😂😂😂 

4 வாங்கிகட்டி கொண்டது:

ஆதி said...

Arumai

இறை அடிமை said...

எனது கேள்வி
இஸ்லாமையும் புனித திருக்குர்ஆனையும் பல இடங்களில் விமர்சித்து வந்துள்ளாய்.உனக்கு விமர்சிக்க என்ன தகுதி உள்ளது?அரபி தெரியுமா?மதரஸாவில் முறைப்படி திருக்குர்ஆன் ஓதியதுண்டா?இதெல்லாம் இல்லாமல் சும்மா இங்கொன்றும் அங்கொன்றுமாக சில (தவறாக மொழிபெயர்க்கப்பட்ட) மறை வாசகங்களை மேற்கோள் காட்டி விமர்சிப்பது நியாயமா?

Vee said...

Hello Adimai, nothing is beyond criticism. I don't see anything wrong in that. It is our attitude that is the problem.

John said...

இந்த விசயத்தில் பெரும்பாலான ஆண்கள் கூமுட்டைகள். திரும்ப திரும்ப காதலிச்சு பல்பு வாங்கும் வரம் பெற்றவர்கள், ///
ஆமா வாலு :( அதுவும் பலமுறை மரணஅடி மனசளவில் வாங்கிட்டேன் �� உண்மைதான்.காதல் விஷயத்தில் ஆண்கள் இப்படிதான்

!

Blog Widget by LinkWithin