கடவுள் தேவை இல்லை!

பெருவெடிப்பை பற்றி பேசும் போது கடவுள் மறுப்பாளராக இருக்கும் நண்பர் ஒருவர், அதெப்படி ஒன்னுமில்லாததில் இருந்து உலகம் உருவாச்சு, எதாவது இருந்திருக்கும் என்றார். அந்த எதாவது எப்படி வந்ததுன்னு சொல்லுங்க என்றால் அவருக்கு சொல்ல தெரியல.

அடிப்படை அதான். எவ்ளோ சுத்தி சுத்தி வட்டம் போட்டாலும் ஒன்னுமில்லாததில் இருந்து தான் உலகம் உருவாச்சு. எல்லா மத நம்பிக்கையாளர்களும் இந்த புள்ளியில் இணைவாங்க. “அதெப்படி உலகம் தானா உருவாகியிருக்கும்” கண்டிப்பா கடவுள்னு ஒருத்தர் இருக்காரு



இவ்ளோ அகண்ட பிரபஞ்சம், மிகவும் சிக்கலான உயிர் இரண்டும் விபத்தால் ஏற்பட்டது என்பது ஜீரணிக்க முடியாத உண்மை. ஆனால் மனதில் இருக்கும் பயம் அதை நம்ப விடாது. நல்லா கவனிச்சு பாருங்க. விவாதம் எல்லாம் முடிஞ்ச பிறகு தோல்வியை ஒத்துக்க முடியாத கடவுள் நம்பிக்கையாளரகள் சொல்வாங்க., “ஒருவேளை கடவுள் இருந்துட்டா”

மனிதனுக்கு எப்போ பயம் ஆரம்பிச்சதோ அப்பவே கடவுளும் வந்துட்டான். மரண பயம் கடவுளை கெட்டியா பிடிச்சிக்க வச்சது. மனிதனுக்கு வாழ்க்கையை இழக்க விருப்பமில்லை. செத்துட்டா அவ்ளோ தானா என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இவனே கற்பனையா ஒரு உலகம் படைச்சு, அதுக்கு சொர்க்கம்னு பேரு வச்சு..... அப்படி தான் கடவுளும் கற்பனையால் உருவாச்சு.

சொர்க்கம், நரகம் நல்ல விசயம் தானே, தப்பு பண்ணா நரகம்னு தப்பு பண்ணாம இருப்பான்ல. ஆமா தான் ஆனா எது தப்புன்னு முடிவு பண்ண நீங்கள் யார்? ஒருத்தன் மாட்டுகறி சாப்பிடாதன்றான், ஒருத்தன் பன்னிகறி சாப்பிடாதன்றான்.

உலகம் மொத்தமும் ஒரே கடவுள், ஒரே மதம்னு இருந்தா கடவுள் மறுப்பாளன் உருவாகியிருக்க மாட்டான் தெரியுமா? அவனை சிந்திக்க வைத்ததே உங்களுக்குள் இருக்கும் முரண்பாடுகள் தான்.இந்த உலகம் கடவுள் இல்லாமல் தான் இயங்குது. அது உங்களுக்கு நல்லாவே தெரியும். அப்படியே தான் இந்த உலகம் உருவாகவும் கடவுள் தேவையில்லை

1 வாங்கிகட்டி கொண்டது:

Mohan said...

100% true sir
I appreciate your thinking

!

Blog Widget by LinkWithin