ஆப் கி பார் பிராடு சர்க்கார்!

நண்பர்களே,

எனக்கும் மோடிக்கும் வாய்க்கா தகராறு எதுவும் இல்லை. இந்தியா நல்லாயிருந்தா நான் நல்லாயிருக்கும் மாதிரி தான். ஆனால் புனிதபடுத்துதல் கேள்வி கேட்க விடாது, பொய் சொல்ல வைக்கும். அதுவே ஆக்கபூர்வமான விவாதம் என்றால் குறை, நிறைகளை சரியாக வரிசை படுத்த முடியும். பண மதிப்பை திரும்ப பெறுதல் கருப்பு பணத்தை ஒழிக்க எடுத்த சரியான முயற்சி தான். ஆனால் அதை எப்படி பண்ணனும்னு தெரியாம பல்பு வாங்கியது தான் மிச்சம், ஆதார், ஜி.எஸ்.டி காங்கிரஸ் கொண்டு வந்த பொழுது தீவிரமாக எதிர்த்த பாஜக இப்போ அதை அவங்களே கொண்டு வந்த மாதிரி மார் தட்டுது., காங்கிரஸ் காலத்தில் தவறா இருந்த ஒரு விசயம்., இப்போ எப்படி சரியாகும்? அப்போ இவ்ளோ நாளா முட்டாளா இருந்தவன் இப்போ புத்திசாலி, புத்திசாலியா இருந்தவன் முட்டாளா?

பெட்ரோல் வரிக்கு நியாயமான காரணம் கேட்டா வண்டி அதிகமாயிருச்சு, பெட்ரோல் விலை கம்மியானா சூழல் மாசு கெடும்னு சொல்றிங்க, இதெல்லாம் எவ்ளோ கேவலமான விளக்கம்னு உங்களுக்கு புரியலையா? அந்த லாப பணம் அம்பானிக்கு போவது குறீத்து உங்களுக்கு எந்த கவலையும் இல்லையா?

காவீரி மேலான்மை வாரியம் அமைக்க மாட்றான். காவிரி காய்த்து போன பிறகு அடியில் பெட்ரோல் இருக்குன்னு மொத்தமா ஆறு இருந்த சுவடையே அழிச்சிருவான். தமிழ்நாடு பாலைவனம் ஆகும். நீட் தேர்வு பற்றி பேசல. நியாயமா கிடைக்க வேண்டிய காவிரி நீர் பற்றி தான் பேசுறேன். எது கேட்டாலும் காங்கிரஸை கேட்டியான்னு வர்றிங்க, காங்கிரஸ்காரன் செய்யலைன்னு தானே உங்களுக்கு ஓட்டு போட்டேன். கேள்விக்கு பதில் சொல்லாமல் அவனை கேட்டியா என்பது பதில் ஆகும்? அப்ப அடுத்த தேர்தலில் அவனுக்கு ஓட்டு போட்டு கேக்குறதா? அவ்ளோ தானா உங்கள் திறமை?தமிழ் பெயரில் ஒரு குழுமம், அனைவரும் தமிழர்கள், பேசுவதும் தமிழில். ஆனால் இந்திக்கு ஆதரவாக பேசுகிறீர்கள். படிப்பது அவரவர் இஷ்டம் என்பது சரியா? படித்தே ஆகனும் என்பது சரியா? ஒருவர் என்ன சாப்பிட வேண்டும் என்பது அரசு முடிவு செய்வது சரியா? ஒவ்வொரு தனி மனிதனின் உரிமைக்கு உத்திரவாதம் அளிக்கவேண்டியது அரசா?

ஒரு அரசை, ஒரு கட்சியை ஆதரிக்க ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உரிமை உள்ளது. அதற்காக மாற்று கருத்து உள்ளவர்களை பாகிஸ்தான் போ. கடல்ல விழு என்பதெல்லாம் ஜனநாயக நாட்டிற்கு அழகா? உங்களுது இந்த செயல் நீங்கள் சார்ந்த அரசுக்கும், கட்சிக்கும் சேர்த்து அவபெயர் ஏற்படுத்தி தருகிறது என்பது புரியவில்லையா?

இனி மேல் எப்போதும் நீங்கள் தான் ஆட்சியில் இருப்பீர்கள் என்ற மமதையில் இதெல்லாம் செய்றிங்களா? அப்படி காங்கிரஸ் போட்ட ஆட்டத்தால் தான் 33 எம்.பி மட்டுமே ஜெயிச்சான். நீங்க வந்த உடனே பல்பு வாங்குவிங்க போலயே

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin