யார் சாமான்யம்?

 குழந்தைகள் வளர வளர அவர்களுக்கான கல்வி, உணவு, உடை என்ற வாழ்வாதார செலவுகள் அதிகரித்துக்கொண்டே போகும் என்பது எல்லோருக்கும் தெரியும். வருடத்திற்கு நாம் பெறும் வருமான உயர்வை விட இது அதிகம் என்பதும் தெரியும்

மாதம் ஒரு முறை குடும்பத்தோடு சினிமாவிற்கு போகும் நபர் இனி யோசிப்பார். ஹோட்டலுக்கு போகும் நபர் இனி யோசிப்பார். அட்லீஸ்ட் என்னை மாதிரி வாரம் ஒருக்கா பைக்ல ரவுண்டிங் போய் ஐஸ்கிரீம் சாப்பிடும் ஆளும் யோசிப்பான்.

ஆடம்பரம் என்பது பணக்காரர்களுக்கானது என்பது போய் இன்று பொழுது போக்கு என்பதே பணக்காரர்களுக்கானது என்ற நிலை உருவாகிவிட்டது

தொலைகாட்சி விவாதங்களிலும், இணைய பதிவுகளும் காண கிடைக்கும் சாமான்யக்கு நல்லது ஜி.எஸ்.டி என்ற பதிவுகளில் அந்த சாமான்யம் யார் என நானும் பூதக்கண்ணாடி வச்சு தேடி பார்த்துட்டேன்

முதல் முரண், அப்படி எழுதுபவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள். ஜி.எஸ்.டி நல்லது என்ற ஒரு வார்த்தை இருந்தாலும்,மீதி முழுக்க”இந்த பதிவை ஷேர் செய்பவன் தேவிடியாளுக்கு பிறந்தவன்”என்று இருந்தாலும் சிறிதும் கவலை இன்றி ஷேர் செய்கிறார்கள்

தொலைகாட்சி விவாதங்களில் பேசப்படும் சாமான்யர்கள் இந்தியாவில் வருமான வரி கட்டும் 7% பேர். அவர்களுக்கு கிடைக்கப்போகும் வரிசலுகை என்பதை பற்றி தான். அவர்களுக்கான உரிமை கொடுக்கப்பட வேண்டும் தான். அதற்காக மீதி 93% மக்களை கழுவிலா ஏற்ற வேண்டும்.



குழந்தைகளை பொறுத்தவரை அவர்கள் வேலை படிப்பது, நம் வேலை அவர்கள் கேட்பதை வாங்கி கொடுப்பது, காசில்லை, விலை ஏறிபோச்சு என்பது பற்றியெல்லாம் அவர்களுக்கு தெரியாது.

அட்லீஸ்ட் பயோ டீசலை ஊக்கப்படுத்தி விவாசயத்தை காப்பாற்றினாலும் கூலி வேலைக்கு போய் பொழச்சிக்கலாம்னு பார்த்தா நம்ம நாட்டில் அவர்களே கோவணத்துடன் சுத்துறாங்க.

போரே இல்லாமல் ஒரு நாட்டில் அகதிகள் உருவாவது இந்தியாவில் தானா இருக்கும்

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin