கேள்வி - பதில் (உடலியல்)

கேள்வி: மனிதர்களுக்கு மட்டும் தொப்பை வருதே, அதற்கு என்ன தான் தீர்வு?

பதில்: மனிதர்களுக்கு மட்டுமே தொப்பை வருகிறது என்பது தவறு, குரங்குகள், கரடி, ஏன் நாய்க்கு கூட தொப்பை வரும். தொப்பை என்பது நாம் குறிப்பிடும் பெயர். உடலியல் படி அது சேமிக்கப்படும் கொழுப்பு. நம் உடல் இயக்கத்திற்கு தேவைப்படும் சக்தியை நாம் உணவின் மூலம் பெறுகிறோம். புரதம் மற்றும் கொழுப்பு உடலுக்கு தேவையான சக்தியை கொடுக்கிறது. நாம் கார்போஹைட்ரேட் எடுத்துக்கொண்டாலும் அது கொழுப்பாக மாற்றப்பட்டே சக்தி பெறப்படுகிறது. அப்படி கொழுப்பாக மாற்ற இன்சிலின் அதிகமாக வேலை செய்வதால் தான் சர்க்கரை வியாதி வருகிறது. அதை வேற இடத்தில் விரிவாக பேசலாம்

நமக்கு ஒரு நாளைக்கு 1000 கலோரிஸ் தேவைபடுதுன்னு வச்சுகுவோம். அது ஒரு சட்டி சோறில் நமக்கு கிடைக்கும். ஆனால் அதே கலோரிஸ் 100 பாதாம் அல்லது கால்கிலோ மாமிசத்தில் கிடைக்கும். அது எப்படி வால் பத்தும்னு தானே கேக்குறிங்க. அங்க தான் பிரச்சனையே ஏன்னா நாம் உடலுக்கு சாப்பிடவில்லை. வயிற்றிற்கு சாப்பிட்டு பழகிவிட்டோம். அதை நிரப்பனும் என்பதில் குறியாக இருப்பதால் தேவை போக மீதி சக்தி கொழுப்பாக சேமிக்கப்படுகிறது. நம் உடலில் எல்லா பாகங்களும் இயங்கும். நடக்கும் போது கால்கள், எதையாவது தூக்கும் போது கைகள். நம் உடலில் குறைவான வேலை செய்வது எது என்றால் அது வயிறு தான். அதனால் தான் மீதி கொழுப்புகள் வயிற்றுபகுதியில் சேமிக்கப்படுகிறது

நம்ம தாத்தா, பாட்டியெல்லாம் இதை விட அதிகமா சாப்பிட்டாங்களே, அவங்களுக்கு தொப்பையே வரலையேன்னு தோணுதா? நம்ம தாத்தா குனிஞ்சு வாய்க்கா, வரப்பு வெட்டினாரு. நம்ம பாட்டி குனிஞ்சு சுள்ளி பொறுக்குனாங்க, நாத்து நட்டாங்க, களை எடுத்தாங்க. நாம குனிஞ்சு வீடு கூட்ட கஷ்டமா இருக்குன்னு வேக்குவம் கிளினர் வாங்கி வச்சிருக்கோம். பின்ன தொப்பை வராம என்ன செய்யும்.டயட் என்றால் சரிவிகித உணவு என்று அர்த்தம். யாராவது சாப்பிடலன்னு சொன்னா ட்யட்ல இருக்கியான்னு கேட்குறாங்க. பட்டினி கிடப்பது டயட் அல்ல. மேலும் அது பாதிப்பை தான் தரும். நாம்  ஒரு சூப்பர் பயோ கம்பியூட்டர். நம் உடலை எதாவது கிருமி தாக்கினால் அந்த கிருமி பற்றிய செய்திகள் உடனே மூளைக்கு அனுப்பப்படும். மூளை மற்ற பகுதிகளுக்கும் எச்சரிக்கை அனுப்பி கிருமியை கொல்லும். அந்த முறையில் தான் தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாம் பட்டினி கிடந்தால் உடலுக்கு தேவையான சக்தியை சேமிப்பில் இருந்து எடுக்கும். அந்த செய்தி மூளைக்கு செல்லும். இவன் சரியா சாப்பிட மாட்டான் போல எப்ப சாப்பிடுகிறானோ அப்ப அதிக பசியை தூண்டி நிறைய சாப்பிடவைக்கும் மூளை. இது பேலன்ஸ்டு மெண்டாபாலிசம்.

வாக்கிங் போனா தொப்பை குறையுமா? வாக்கிங் போனா வயிற்றுக்கு வேலையான்னு திருப்பி கேளுங்க. வயிற்றுக்கு சில உடல் பயிற்சிகள் இருக்கு. சமதள தரையில் படுத்துக்கொள்ளுங்கள். இரண்டு காலையில் மடக்காமல் ஒரு அடி மேலே தூக்குங்கள். இப்பொழுது உங்கள் காலின் எடையை தாங்குவது உங்கள் வயிற்றுபகுதி. அதை உங்களால் உணர முடியும். உங்களால் முடிந்த விநாடிகள் அப்படியே இருங்கள். பின் சற்று ஓய்வெடுங்கள். மீண்டும் செய்யுங்கள். கூடவே உங்கள் தலையையும் தூக்கி வயிற்றுக்கு வலு கூட்டலாம். இதை அப்டமன் எக்ஸர்ஸைஸ் என்பார்கள்.

இதை விட முக்கியம், பசிச்சா மட்டும் சாப்பிடுங்க. டைமுக்கு சாப்பிடனும்னு நினைக்காதிங்க. மென்னு சாப்பிடுங்க.

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin