GST அடுத்து என்ன நடக்கும்?

நான் ஒரு தேசியம் சார்ந்த அரசியல்வாதி என்றால் ஜி.எஸ்.டி வரி நல்லதே என்பேன். மன்னராட்சியிலும் சரி மக்களாட்சியிலும் சரி அரசு இயந்திரம் இயங்குவது மக்களின் வரி பணத்தில் தான். ஆடம்பர பொருள்களுக்கு வரி உயர்த்தப்படுவதும், மக்களின் வாழ்வாதார பொருள்களுக்கு வரி குறைக்கப்படுவதும், மாறி மாறி நடப்பது தான்.

அதே நேரம் வரி வருவாய் எப்படி செலவாகிறது என்பதும் முக்கியம். முதல் செலவு அரசு அதிகாரிகள் சம்பளம், அதில் எம்,பிக்களுடம் அடக்கம். பட்ஜெட்டில் ராணுவத்திற்கு அதிக பணம் ஒதுக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. போக கல்வி சுகாதாரம் என்று மீதி பணம் செலவாகும்.

பெரும் மக்கள் சக்தி கொண்ட இந்தியா உலக அரங்கில் இன்னும் பின்  தங்கியிருப்பதற்கு காரணம் ஊழல் பெரும் கொடும் நோய். இந்த ஆட்சியில் ஊழல் இல்லையா என்றால் காங்கிரஸ் அளவுக்கு இல்லை என்று ஒத்துக்கொள்ள தான் வேண்டும். ஆனால் மாநில அரசு தன் கொள்ளையை செய்துக்கொண்டு தான் இருக்கிறது.  மாநில அரசின் தயவு தேவையால் மத்திய அரசு அதை கண்டுகொள்ளாமல் இருக்கிறது. குற்றத்தை வேடிக்கை பார்ப்பவனும் குற்றவாளி தான்



தீப்பெட்டிக்கு 18% வரி. பிச்சை எடுத்து பிழைப்பவன் ஒரு தீப்பெட்டி வாங்கினாலும் அவனும் அரசுக்கு வரி கட்றான் என்பதே உண்மை. ஆக அரசு அந்த வரி பணத்தை ஆக்கப்பூர்வமாக மக்களுக்கு செலவு செய்வதே நியாயம். உலகில் உள்ள பல நாடுகளை விட இந்தியாவில் ஜி.எஸ்.டி அதிகம் என்பதை படித்திருப்பீர்கள் ஆனால் உலகில் ஜி.எஸ்.டி உள்ள நாடுகள் மக்களுக்கு தரும் உரிமைகளை படித்ததுண்டா?

வேலை இல்லாதவர்களுக்கு உதவி தொகை. வயதானவர்களுக்கு பென்சன் அங்கே கட்டாயம். தரமான கல்வியும், மருத்துவமும் அங்கே இலவசம். ஒவ்வொரு குடிமகனின் உரிமைகளும் பாதுகாக்கப்படும். அதே போல் நம் நாட்டில் மாறுமா என்றால் இந்த அரசு ஏன் எந்த உத்தரவாதமும் கொடுக்கவில்லை?

ஜி.எஸ்.டி கண்டு பொங்குபவர்கள் வரி செலுத்தாத ஏமாற்றுகாரர்கள் எனும் பாஜகவினரின் வாதம் தட்டையானது. மேலும் பக்தாஸ்க்கு அவ்ளோ தான் தெரியும் என்பதும் உண்மை. இங்கே தொழில் செய்யும் ஒரு மளிகைகடை காரனோ, ஹோட்டல்கடை காரனோ அந்த லாபத்தை இங்கேயே தான் முதலீடு செய்வான். கோடி கணக்கில் லாபம் பார்த்தும் அரசு சலுகை பெறும் கார்ப்ரேட்டுகள் அந்த பணத்தை வெளிநாட்டில் முதலீடு பண்ணுவான்.

நான் இன்னும் வரி கட்டும் அளவுக்கு சம்பளம் வாங்கல. ஆனால் ஜி.எஸ்.டியால் 5 லட்சம் வரை வருடம் சம்பளம் வாங்குபவர்கள் வரி சலுகை பெற வாய்ப்புள்ளது. இது வாங்கும் சக்தியை அதிகரிக்கும். அதே நேரம் முறைசாரா தொழில்கள் நசியாமலும், அவர்கள் தினசரி வரிமானத்திற்கு உத்தரவாதமும் அரசு கொடுக்க வேண்டும்.

மக்கள் வரி பணம் மக்களுக்கு செலவு செய்யபடுவதே மக்களாட்சி. அதை விடுத்து வரி பணத்தால் மதம் வளர்த்தால் மக்கள் நாசமாய் போவார்கள். மக்கள் நாசமாய் போவதும் நாடு நாசமாய் போவதும் ஒன்று தான்

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin