ஏணி பிடித்து ஏறும் சிந்தனையை கயிறு கட்டி இழுப்பது எப்படி ?

மனிதனின் அத்யாவிசைய தேவைகளான உணவு ,நீர் போலவே தூக்கமும் ஒரு முக்கியமான தேவை. பல நாட்களல்ல சில நாட்கள் தூங்காமல் இருந்தாலே மன நோயால் பாதிக்கப்பட்ட வாய்புண்டு என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

எனக்கு தொடர்ச்சியான தூக்கம் இல்லை, படுத்தவுடன் தூங்குபவர்களை பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கும், என்ன தான் காரணம் என்று பகலில் யோசிக்கும் போது தெரிந்தது, இரவில் தூங்க முடியாததற்கு காரணமும் இந்த யோசனைகள் தான் என்று.

எனது அந்த சுய சோதனை சிந்தனைகள் எனக்கு எதாவது ஒரு வகையில் பயனுள்ளதாக இருக்கிறதா என்று பார்த்தால், பதில் இல்லை என்பதே,என்னால் அதை எள்ளளவும் கட்டுபடுத்த முடியவில்லை,



இரவு நேர சிந்தனைகள் மிக கொடுமையானது, நடு கடலில் மாட்டிகொண்ட படகு கூட எதாவது ஒரு திசையில் கரையை கண்டுபிடிக்கும், ஆனால் இந்த சிந்தனை கடல் அப்படியல்ல, பயணிக்க ஆரம்பித்தவுடன் நாலா திசையில் துடுப்பு வேலை செய்வது திகைப்பூட்டும், சில நேரங்களில் ஆரம்ப நிலைக்கே திரும்பி வந்து விடுவேன், சில நேரங்களில் ஆரம்ப நிலை மறந்தே போய்விடும், சில நேரங்களில் எங்கே இருக்கிறேன் என்பதே தெரியாது.

என் சிந்தனையை கட்டுபடுத்தி என் சோதனை சிந்தனைகளாக அதை மாற்ற நினைப்பேன், மறு நொடியே அது 360 பாகை கோணங்க்களாக பிரிந்து, அதில் எதாவது ஒரு கோணத்தில் பயணித்து கொண்டிருக்கும், என் ஆரம்ப நிலை சிந்தனையை மறுபடியும் நினைவூட்டுவதர்க்குள் எனக்கு தாவு தீர்ந்து விடும்,

ஒரு முறை ஒரு பேரை ஞாபக படுத்தவேண்டி ஒரு சிகரெட் பத்தவைதேன், ராஜாராம் என்ற பெயர், ராமராஜன் என்ற பெயரெல்லாம் வந்து போகிறது, அது மட்டும் வரவில்லை. ஐந்தாவது சிகரெட்டின் கடைசி இழுப்பில் அந்த பெயர் எனக்கு ஞாபகம் வந்தது, (அதற்காக ஐந்தாவது சிகரெட்டின் கடைசி இழுப்பில் எல்லா சிந்தனைக்கும் பதில் உண்டு என்று அர்த்தம் கொள்ளாதிர்கள்!)அந்த மாதிரியான பழைய மாடல் கம்யூட்டர் நான்,
எனது பிராசசர் அப்டேட் செய்யமுடியாத அரத பழசாக உள்ளது

எப்போதெல்லாம் நன்றாக தூங்க நான் முயற்சிக்கின்றேனோ அப்பொழுதெல்லாம்
சிந்தனை ஒரு பெரிய கத்தியுடன் என்னிடம் சண்டைக்கு வருகிறது, அதனிடம் சண்டையிட்டு களைப்பில் எப்போது தூங்கினேன் என்று ஞாபகம் இல்லை!!


உதவி வேண்டி:நல்ல தூக்கத்திற்கு பதிவர்களின் ஆலோசனைகள் வரவேற்க்கபடுகிறது.

14 வாங்கிகட்டி கொண்டது:

நையாண்டி நைனா said...

ஷ்ஸ்...ய ப் பா..... ஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்..........
யப்பா.. என்னம்மா.... தூக்கம் வருது.........

கூடுதுறை said...

தூக்கம் வர ஒரே நல்ல வழி தியானம் தான். சுமார் 15 நிமிடம் மனதை ஒரு நிலைப்படுத்தி தியானம் செய்யுங்கள். பிறகு தூங்கி பாருங்கள்... கனவு எதுவும் இல்லாமல் ஒரே சூப்பர் தூக்கம்தான்...

வால்பையன் said...

//யப்பா.. என்னம்மா.... தூக்கம் வருது.........//

இப்படில்லாம் வயிதெரிச்சலை கிளப்பாதிங்க நைனா

வால்பையன்

வால்பையன் said...

//தூக்கம் வர ஒரே நல்ல வழி தியானம் தான்.//

அது சரிதான், சிந்தனை குரங்கை எந்த கூண்டில் அடைப்பது

வால்பையன்

தியாகு said...

with out physical activities u can't expect sleep . try to walk half an hour per day u will get peace full sleep . other try to night watchmen duty u can earn more money .thereafter it's not a problem one of the way to get money

வால்பையன் said...

தியாகு நீ சொல்றது தான் சரி!
என்னால நைட் பனிரண்டு மணிக்கெல்லாம் நடக்க முடியாது
அதனால வாட்ச் மென் வேலைதான் கரைக்ட்

வால்பையன்

Anonymous said...

Ask Congress Leaders.

வால்பையன் said...

அனானி,
கமெண்ட ஏதும் மாத்தி போட்டுடிங்க்களா?
தூங்க வழி கெட்ட காங்கரஸ் காரங்கள கேட்க சொல்றிங்களே
அவனுங்களே அடுத்தவன எப்படா கவுக்கலாம்னு
கொட்ட கொட்ட முழிச்சிகிட்டு இருக்கிறதா தகவல்

வால்பையன்

ezhil arasu said...

நல ஆரோக்கிய மனநிலைக்கு வாழும் மனிதருக்கு 6 மணி முதல் 8 மணி நேர ஆழ்ந்த தூக்கம் தேவை.

தூக்கம் சார்ந்த மருத்துவ நிபுணரின் ஆலோசனைகள் - ஒரு கருத்தரங்கில் கேட்டது.

1.இரவு உணவை அளவாக இரவு 8 மணிக்குள் முடித்துவிட வேண்டும்
2.படுப்பதற்கு 2 மணி நேரம் முன்பாக தொலைகாட்சி,கணனி (வலைப்பதிவு உட்பட)உபயோகிப்பதை நிறுத்துதல் நலம்.
3.ஏதாவது ஒரு யோக வகுப்பில் (ஈசா,வாழும்கலை,கயத்திரி யோகா,வாழ்க வழமுடன்....)சேர்ந்து பயிற்சி பெற்று,முறைப்படி பயிற்சிகளை
தொடர்ந்து செய்தல்.
4.உங்கள் குடும்ப மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுதல்
5.ஆன்மிக கூட்டங்களில் கலந்து பெரியவர்களின் (உண்மையான)அருளுரைகளை கேட்பது (இறைவன் மீது நம்பிக்கை இருந்தால் மட்டும்-இறை மறுப்பு கொள்கை இருக்காத பட்சத்தில் )

நல்ல தூக்கம் கண்ணை சொக்குமே!!!!!!

Anonymous said...

ஓய்வு அவசியம்

மன ஆரோக்கியத்திற்கான தேசீயக் கழகத்தின் தலைவர் டாக்டர் ஜார்ஜ் ஸ்டீவன்சன், "ஒரு மனிதனுக்குக் குறைந்த பட்சம் ஆறு மணி நேரத் தூக்கம் தேவை" என்கிறார். ராபர்ட் ஓ. பிரையன் ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழில் எழுதிய கட்டுரை ஒன்றில் தூக்கம் பற்றிய ஆராய்ச்சி முடிவுகளைத் தெரியப்படுத்தி இருக்கிறார். வாஷிங்டன் நகரின் வால்டர் ரீட் ஆர்மி இன்ஸ்டிடியூட் ஆப் ரிசர்ச் மேற்கொண்ட சோதனை ஒன்றில் நூற்றுக்கும் மேற்பட்ட படைவீரர்கள் மற்றும் குடிமக்கள் நான்கு நாட்கள் தொடர்ந்து விழித்திருக்குமாறு செய்யப்பட்டார்கள். ஆயிரக்கணக்கான சோதனைகள் அவர்கள் மேல் நடத்தப்பட்டன. இதன் முடிவுகள் தூக்கம் பற்றிய மர்மத்தை விஞ்ஞானிகளுக்கு வெளிப்படுத்தின. மனிதனின் மூளை தூக்கத்திற்காக ஏங்குவதோடு மட்டுமல்லாது அதைப் பெற என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராகி விடுகிறது. தொடர்ந்து விழித்திருப்போரை மூளை, "மைக்ரோ தூக்கம்" என்று சொல்லும் ஒரு இமைப்பொழுது நேரம் அயர வைக்கிறதாம். மேலும், தொடர்ந்து தூக்கம் இழந்தால் ஞாபகசக்தி இழப்பில் ஆரம்பித்து, எந்த நிலைமையையும் சமாளிக்க இயலாமல் அணுகுமுறையே மாறி நடக்க ஆரம்பிக்கும் நிலைக்குக் கொண்டு விடுகிறதாம்!
(தொகுத்தது-)

வால்பையன் said...

வருகைக்கு நன்றி எழில்!

உங்களுடைய தகவல்களில் மூன்று மற்றும் ஐந்தாம் யோசனைகளில் எனக்கு உடன்பாடில்லை,
மூன்றாம் தகவல் ஆன்மிகம். அதில் மதத்திற்கு வேலையில்லை என்றாலும் அதிலும் அவர்கள் புது மதத்தை உருவாக்குவார்கள்.

ஐந்தாவது நீங்களே சொல்லிவிட்டீர்கள் இறைநம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும்
அதனால் அது எனக்கு இல்லை.

வால்பையன்

வால்பையன் said...

வருகைக்கு நன்றி அனானி!!

உங்களுடைய செய்தியில் மூளை தூக்கத்திர்க்காக ஏங்கும் என்று சொல்லியிருக்கிறீர்கள்.
நான் இதில் விதிவிலக்காக உள்ளேன்.

எனக்கு சிந்தனை பிடித்திருக்கிறது, சிந்தனைக்கு என்னை பிடித்திருக்கிறது.

உண்மையில் ஒவ்வொரு நாளும் எதாவது பதிவு எழுதுவதற்கு நிறைய கருக்கள் கிடைக்கிறது, ஆனால் அதையெல்லாம் எழுதினால் சிலரின் கருத்து நம்பிக்கை ஆட்டம் கண்டுவிடும் என்பதால் யோசிக்கிறேன்

வால்பையன்

tamizh said...

meditation is the only way! u wont get the control to your thoughts immediately when u start meditating, but as a process, after 3weeks, or a month you'll surely get the control over your thoughts. Its not an easy job..

Play something, if you do a lot of physical activity, surely you'll get sleep.

Finala onu solatuma, pray to God telling "kadavule enaku nalla thookam varanum". Just try once, apram, nalla thookam varum. :)))))))))

வால்பையன் said...

//pray to God telling "kadavule enaku nalla thookam varanum". Just try once, apram, nalla thookam varum. :)))))))))//

இந்த குசும்பு தானே வேணாம்கிறது,
விட்ட தாலாட்டு பாட சொல்விங்க போலருக்கு கடவுள

வால்பையன்

!

Blog Widget by LinkWithin