சக வலைப்பதிவர் லிவிங் ஸ்மைல் வித்யா- விஜய் டிவீயில்!!

ஒரு சக வலைப்பதிவரை பார்க்க செல்லும் போது என்ன ஆர்வத்தில் இருப்பேனோ
அதே ஆர்வத்துடன் ஆணி பிடுங்கும் வேலைகளை ஒத்தி வைத்து விட்டு காத்திருந்தேன்
அந்த பத்து மணிக்காக!

நிகழ்ச்சி தொடங்கும் முன்னரே பார்வையாளர்களிடம் திருநங்கை பற்றிய கண்ணோட்டத்தை கேட்டறிந்தார் ரோஸ், கடைசியில் அவர்களின் எண்ணம் மாறபோவது தெரியாமல் அவர்களும் பதிலளித்தனர்.

"நான் வித்யா" புத்தக அறிமுகத்துடன் நமது லிவிங் ஸ்மைலின் அறிமுகம்.
வித்யா M.Sc computer science படித்திருக்கிறார். தான் ஒரு திருநங்கையாக அறியபட்டவுடன் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

அவற்றில் சில:
ரயில் பயணங்களில் எனக்கு கூட அந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. நான் கூட நினைப்பேன். இவர்கள் ஏன் பிட்சை எடுக்க வேண்டும் என்று.
ஆனால் அதற்கான வித்யாவின் விளக்கம் அருமையானது.
உங்களை போலவே பிறந்து,உங்களை போலவே வளர்ந்து,உங்களை போலவே படித்து,
உங்களை போலவே வாழ வேண்டிய என்னை ஒதிக்கி வைக்கும் நீங்கள் எனக்கு தரும் தண்ட பணம் என்று போட்டார் ஒரு போடு.
உண்மை தான் வித்யா போன்ற படித்த திருநங்கைகள் கண்டிப்பாக நாம் செய்யும் வேலையை செய்யமுடியும் தானே

அந்த காலகட்டத்தில் அவருக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம், கண்டிப்பாக பார்த்தவர் கண்களை நனைத்திருக்கும், உண்மையில் கண்ணீர் விட வேண்டியது திருநங்கைகளை சக மனிதர்களாக பார்க்காத மூட மிருகங்கள் தான்.

ஆனால் அதை கூட வித்யா, அவர்களை குறை சொல்ல முடியாது, நம் சமுகத்தில் புரிதல் இல்லை என்று பெருந்தன்மையுடன் சொன்னது, திருநங்கைகளை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் மனிதர்களுக்கு சவுக்கடி.

சக பேட்டியளரான ஹேமா உண்மையில் ஒரு இன்ப அதிர்ச்சி.
மனம் முடித்து ஒரு குழந்தையை தத்து எடுத்து தன் கணவருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இதை போலவே நமது சக பதிவர் வித்யாவும் திருமணம் செய்து கொண்டு நம்மை போலவே இந்த சமுதாயத்தில் வாழ வேண்டும். மற்றவர்கள் வாழ விடவேண்டும்
என்பது எனது ஆசை

இடையில் ரோஸ் சொன்னதை கடைசியில் சொல்கிறேன்.
திருமணம் முடிந்த ஹேமாவை you are blessed by god என்று சொல்லுவார்.
என்னை கேட்டால் ஹேமாவை திருமணம் செய்து கொண்ட கார்த்திக்கும், வித்யாவை திருமணம் செய்ய போகும் அவரது காதலரும் தான்

கடவுள்கள்லிவிங் ஸ்மைல் வித்யாவின் வலை

19 வாங்கிகட்டி கொண்டது:

Unknown said...

சமூகத்தில் திருமங்கைகளும் ஒரு அங்கம் எனப் புரிதல் வரும்வரை, அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் தொடரத்தான் செய்யும்.

வாழ்த்துக்கள் லிவிங் ஸ்மைல் வித்யா!

பகிர்தலுக்கு நன்றி, வால் பையன். எந்த நேரத்தில் ஒளி பரப்பப்படுகிறது என சொல்ல முடியுமா? 'அன்புடன் ரோஸ்' நிகழ்ச்சிதானே? கொஞ்ச நாளைக்கு முன்னேயே விளம்பரப்படுத்தினார்கள்.

செல்வம் said...

வால்பையன் நானும் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தேன்.மிக நன்றாக இருந்தது.நிச்சயம் இது போன்ற நிகழ்ச்சிகள் நம் சமூகத்தில் ஒரு மாற்றம் கொண்டு வரும் என நம்புவோம்.

ILA (a) இளா said...

//ஹேமாவை திருமணம் செய்து கொண்ட கார்த்திக்கும், வித்யாவை திருமணம் செய்ய போகும் அவரது காதலரும் தான்

கடவுள்கள்
//
அன்பே சிவம்!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அந்த நிகழ்ச்சியை இணையத்தில் பார்க்க முடியுமா??
'நான் வித்யா' படித்தேன்.
விடாமுயற்சியுடைய பெண், ஒரு சக பதிவர் என்ற வகையில் எனக்கும் பெருமையே!
திருநங்கைகள் பற்றி பார்வை நம் சமூகத்தில் மாற வேண்டிய காலம் வந்துவிட்டது.

வால்பையன் said...

வருகைக்கு நன்றி தஞ்சாவூரான் அவர்களே!

நீங்கள் ஆசைபடுவது போல் அந்த புரிதல் வேர் விட ஆரம்பித்துவிட்டது
நேற்று(வியாழன்)இரவு ஒளிபரப்ப பட்டது. மறு ஒளிபரப்பு கண்டிப்பாக உண்டு.
கேட்டு சொல்கிறேன்

வால்பையன்

வால்பையன் said...

வருகைக்கு நன்றி செல்வம் அவர்களே!

வால்பையன்

வால்பையன் said...

வருகைக்கு நன்றி இளா அவர்களே அவர்களே!
அன்பே சிவம் என்பதை புரிந்து கொண்டால்
நம்மிடம் ஏது சண்டை!

வால்பையன்

வால்பையன் said...

வருகைக்கு நன்றி யோகன் பாரிஸ் அவர்களே!
இணையத்தில் பார்க்க முடியும் என்று நினைக்கிறேன்.
யாரவது அதை சேமித்து வைத்திருப்பார்கள்.

//ஒரு சக பதிவர் என்ற வகையில் எனக்கும் பெருமையே!//
உங்கள் பெருமையில் நானும் பங்கெடுத்து கொள்கிறேன்

வால்பையன்

தருமி said...

காத்திருந்து பார்த்தேன்.

நல்ல ஒரு நிகழ்ச்சி.

வந்திருந்த மூவருமே சரியான எடுத்துக்காட்டுக்கள் - ஒருவர் அனேகமாக வாழ்க்கையைத் தொலைத்தவர், அடுத்தவர் (வித்யா) எதிர்காலத்தை ஆவலோடு எதிர்பார்த்திருப்பவர், மூன்றாமவர் இளம் வயதிலேயே தாயால் புரிந்து கொள்ளப்பட்டு, பின் திருமணம் ஆனது மட்டுமல்லாது சமுதாயத்தால் முழுமையாக ஏற்றுக் கொள்ளப் பட்டவர்.

இந்த நிகழ்ச்சிக்காக விஜய் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும், நிகழ்ச்சித் தயாரிப்பாளருக்கும் என் வாழ்த்துக்களும், நன்றியும்.

சாலிசம்பர் said...

வால்,நானும் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தேன்.அரவாணியரை திருநங்கை என்று அழைக்க வைத்த பெருமை லிவிங் ஸ்மைலுக்குக்கே சேரும்.
ஹேமா என்ற திருநங்கைக்கு தன்னுடைய தாயின் பரிவு இருந்ததால் இன்று நன்கு படித்து கல்லூரியில் வேலை செய்கிறார்.அவருக்கு வாய்த்த பெற்றோர் எல்லா திருநங்கைக்களுக்கும் வாய்க்க வேண்டும் என்பதே லிவிங்ஸ்மைலின் ஆசையாக இருந்தது.

கருப்பன் (A) Sundar said...

ஓ... அவங்க, இவங்க தானா??? நிகழ்ச்சியை பார்த்திருக்கிறேன். ஆனால் நிகழ்ச்சியில் வருவது லிவ்விங் ஸ்மைல் என்பது எனக்கு தெரியாது!!!!

மணியன் said...

மனதை நெகிழச்செய்த ஒரு நிகழ்ச்சி.

//இந்த நிகழ்ச்சிக்காக விஜய் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும், நிகழ்ச்சித் தயாரிப்பாளருக்கும் என் வாழ்த்துக்களும், நன்றியும்.//
மறுமொழிகிறேன்.. அதுதான் ரிபீட்டேய்ய்...

வால்பையன் said...

வருகை புரிந்த தருமி, ஜாலிஜம்பர் ,மணியன், கருப்பன் ஆகியோருக்கு நன்றி

கருப்பன் இந்த பதிவிலேயே வித்யாவின் வலைக்கு லிங்க் கொடுத்திருக்கிறேன்.
அதில் அவர் புகைப்படமும் இருக்கும்

வால்பையன்

Unknown said...

மிகவும் நெகிழ்ச்சியான நிகழ்ச்சி. கோவை வலைப்பதிவர் சந்திப்பில் அவரை சந்தித்திருந்ததால் மிகவும் ஒன்றிப்போய் பார்க்கமுடிந்தது.

வால்பையன் said...

//மிகவும் நெகிழ்ச்சியான நிகழ்ச்சி. கோவை வலைப்பதிவர் சந்திப்பில் அவரை சந்தித்திருந்ததால் மிகவும் ஒன்றிப்போய் பார்க்கமுடிந்தது.//

நீங்கள் எனக்கு முதன் முதல் போட்ட பின்னூட்டத்தில் நீங்கள் தான் வால்பையனா
என்று ஏற்கனவே தெரிந்தது போல் கேட்டு இருந்தீர்கள்.

நீங்கள் யார் என்று எனக்கு குழப்பமாக இருக்கிறது கொஞ்சம் தெளிவு படுத்தவும்

வால்பையன்

சதங்கா (Sathanga) said...

usertube.com இணையத்தில பார்க்களாம்

tamizh said...

//ஹேமாவை திருமணம் செய்து கொண்ட கார்த்திக்கும், வித்யாவை திருமணம் செய்ய போகும் அவரது காதலரும் தான்

கடவுள்கள்
//
உண்மை, இந்த அன்பு தான் எல்லோரையும் மீறின சக்தி!
(அன்பே சிவம்!)

வால்பையன் said...

//உண்மை, இந்த அன்பு தான் எல்லோரையும் மீறின சக்தி!
(அன்பே சிவம்!)//

எப்படியோ நம்ம வழிக்கு வந்திங்கனா சரி!
அன்பே சிவம் என்பதை உலகுக்கு நிருபிபோம்

வால்பையன்

வால்பையன் said...

//usertube.com இணையத்தில பார்க்களாம்//

அப்படியா! பயனுள்ள தகவல், உதவிக்கு நன்றி

வால்பையன்

!

Blog Widget by LinkWithin