சின்ன பெரியாரின் அனல் தெறித்த பேச்சு!!!

முதலில் இந்த உண்ணாவிரதம் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டதிர்காகவா?
அல்லது தமிழ் படம் ஓடிய திரையரங்குகள் தாக்கபட்டதற்க்கா?

இந்த சந்தேகம் நேரில் பார்த்த அனைவருக்கும் உண்டு.
அனைவர் பேசியதும் திரையரங்குகள் தாக்கப்பட்டதை குறித்தும் ஊறுகாய்க்கு தமிழர்கள் தாக்கப்பட்டதை குறித்தும் தான்.

விஜயகாந்த் பேச ஆரம்பித்தவுடன் அரசியல் ஆரம்பித்தது,
பின்னால் வந்த சந்திர சேகர் அதை இன்னும் கொஞ்சம் ஊதி விட்டார்.

விஜயகுமார் ரஜினி புகழ் பாடிவிட்டு போனார்

வாந்தார் பாருங்கள் நமது சின்ன பெரியார்!!ஆரம்பமே அனல் பறந்தது,

நான் பேச வந்திருப்பது என் சகோதரர்களின் கஷ்டத்திற்காக, இங்கு அரசியலை பற்றியோ சினிமாவை பற்றியோ பேச மாட்டேன்.

இங்கு எந்த நடிகர்கள் பெயர் சொன்னால் கைதட்டல் கிடைக்கும் என்று தெரியும்,
அது போல கைதட்டல் வாங்க இது ஒன்றும் சினிமாவின் நூறாவது நாள் விழா இல்லை.
அங்கே எனது சகோதரர்களை துன்புறுத்தி கொண்டிருக்கிறார்கள். இங்கே எனக்கு கைதட்டல் வேண்டுமா?

தமிழர்களை மனிதர்களாக அல்ல ஒரு மரமாக நினைத்துகொண்டிருக்கிறார்கள்,
போகும் வழியில் நாய் போல மூத்திரம் பெய்கிறார்கள். ஒருவன் அதையே வெட்டுகிறான், அதிலேயே நாற்காலி செய்து உட்கார்ந்து கொள்ளுவார்கள்.
(இதை சொல்லும் போது ரஜினி முகத்தில் ஈயாடவில்லை)

என் பொண்டாட்டி கூட நான் படுக்குறேன் உனக்கு ஏண்டா வலிக்குது.
உன் பொண்டாட்டி கூடவா படுகிறேன்.

குனியாதே உன்மேல் குதிரை ஏறுவார்கள்
உன்னை கேகூ என்பார்கள் என்று உணர்ச்சி மேலிட கத்தினார்.

இனிவரும் இளைய தலைமுறைக்கு இன்னொரு பெரியார் இருக்கிறார்
தமிழர்களே மனம் கலங்காதிர்கள்!!

48 வாங்கிகட்டி கொண்டது:

Unknown said...

இதனால் தான் தமிழன் அடிபடுகிறான், கண்ணை மூடிக் கொண்டு ஆதரியுங்கள் அதை விட்டு விட்டு நொட்டை சொல்லை சொல்லுவதை நிறுத்துங்கள்

தமிழன் said...

இப்படி தான் நாம் கெட்டு போகிறோம், உணர்ச்சி மேலிட உண்ணமையை பேசினால் கிண்டல் செய்வது தயவுச்செய்து இப்படி கிண்டல் செய்வதை நிறுத்துங்கள் தமிழன் முன்னேறுவான்.

வால்பையன் said...

அடபாவிகளா உண்மையில் அங்கு பேசிவர்களில் சத்யராஜின் பேச்சை மட்டுமே நான் ரசித்தேன்.

எதற்காக இந்த கூட்டம் என்று கூட தெரியாமல்,
இந்தியா ஒருநாள் வல்லரசாகும் என்றெல்லாம் பேசிய நடிகர்கள் மத்தியில்
என் ஒத்த கருத்துடைய இவரை ஆதரிக்காமல் வேறு யாருக்கு ஜால்ரா தட்ட போவேன் என்று நினைத்தீர்கள்

வால்பையன்

வந்தியத்தேவன் said...

இனமுரசு சத்யராஜியின் பேச்சுத்தான் இன்றைய உண்ணாவிரதத்தில் மிகவும் உணர்ச்சிபூர்வமான பேச்சு. கமலுக்கு எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் தகுதிகள் அனைத்தும் உண்டு. மிகவும் லாவகமாக மழுப்பலாக யாரையும் கண்டிக்காமல் பேசினார். அதிலும் அவர் அமெரிக்காவிலிருந்து இந்தப்பேச்சு பேச வந்தார் என்றால் நம்பமுடியவில்லை. சிலவேளைத் நண்பனுக்காக விட்டுக்கொடுத்திருக்கலாம். கவிப்பேரரசின் பேச்சும் உணர்ச்சியுடன் ஆதாரபூர்மாக ஓகேனக்கல் தமிழருக்குத்தான் சொந்தம் என நிருபித்தார்.

கோவை சிபி said...

பலர் நடிகர்களாக பேசிய இடத்தில் மனிதராக பேசிய இனமுரசு சத்யராசு
.

வால்பையன் said...

மனிதராக மட்டுமல்ல பச்சை தமிழராகவும் பேசியிருக்கிறார் கோவைசிபி

வால்பையன்

வால்பையன் said...

//அரசியலுக்கு வரும் தகுதிகள் அனைத்தும் உண்டு. மிகவும் லாவகமாக மழுப்பலாக யாரையும் கண்டிக்காமல் பேசினார்.//

நிறைய காரம் ஒருவேளை நமக்கு திகட்டலாம் என்று அப்படி பேசியிருக்கலாம்.
மலுப்பினாலும் யாருக்கும் முகஸ்துதி பாடவில்லை என்பது ஆறுதல்

வால்பையன்

Anonymous said...

(இதை சொல்லும் போது ரஜினி முகத்தில் ஈயாடவில்லை :):):):)

u see the whole day he look like a villan on his face he is more affraid our tamil people.

siva
pondicherry.

Anonymous said...

உங்களுக்கு பெரியார் மீது அப்படி என்ன கோபம்.பெரியார் எனும் சிந்தனாவாதிக்கு முன் படு மட்டமான படங்களில் நடித்து காசு பொறுக்கிய சத்தியராஜை போய் இணை வைப்பதா? ஒரு பெரியார் படத்தில் நடித்தால் அவர் நடத்த குப்பைகள் மறைந்துவிடுமா?

இத்துப்போன ரீல் said...

//உங்களுக்கு பெரியார் மீது அப்படி என்ன கோபம்.பெரியார் எனும் சிந்தனாவாதிக்கு முன் படு மட்டமான படங்களில் நடித்து காசு பொறுக்கிய சத்தியராஜை போய் இணை வைப்பதா? ஒரு பெரியார் படத்தில் நடித்தால் அவர் நடத்த குப்பைகள் மறைந்துவிடுமா?//

திரு அனானி சொல்வதை நான் அப்படியே ஒத்துக்கொள்கிறேன்.பெரியார் படத்தில் நடித்தவுடன் இனி கமர்சியல்
படங்களில் நடிக்க மாட்டேன் என்றார்.
பிறகு வந்த படங்களில் ஒன்பது ரூபாய் நோட்டைத் தவிர அனைத்தும்
குத்துப்பாட்டு படங்களே.அதை ஒரு பேட்டியில் சுட்டிகாட்டிய போது மழுப்பல் பதில்களையே தந்தார்.
மைக்கைக் கண்டால் ஆவேசமாக பேசும் வியாதி அவருக்கு.அதனால்
தமிழர்களுக்கு ஒரு நன்மையும் வந்து விடாது.அவருக்குதான் கைத்தட்டலும்,
பி.பி ஏறினால் டாக்டர் செலவும்.

வால்பையன் said...

//உங்களுக்கு பெரியார் மீது அப்படி என்ன கோபம்.பெரியார் எனும் சிந்தனாவாதிக்கு முன் படு மட்டமான படங்களில் நடித்து காசு பொறுக்கிய சத்தியராஜை போய் இணை வைப்பதா? ஒரு பெரியார் படத்தில் நடித்தால் அவர் நடத்த குப்பைகள் மறைந்துவிடுமா?//

நடிப்பது வேறு அவரது சிந்தனைகள் வேறு!
ஆரம்பத்தில் பல கஷ்டங்களுக்கு மத்தியில் தான் எல்லா நடிகர்களும்
சான்ஸ் பிடிக்கிறார்கள். (சிலர் அப்பன் தயவில் வருவார்கள்)
அம்மாதிரியான நேரங்களில் சிலயிடத்தில் குப்பை பொறுக்க நேரிடும்.

தொழிலில் நல்ல படங்கள், கெட்ட படங்கள் அவரது லாப நஷ்டங்களை சேருவது.
அவைகள் தான் அவரது குணாதிசியங்களை தீர்மானிப்பது என்று எப்படி கூற முடியும்

வால்பையன்

வால்பையன் said...

//அதனால்
தமிழர்களுக்கு ஒரு நன்மையும் வந்து விடாது.//

மற்ற நடிகர்களால் நிறைய நன்மை வந்து விட்டதோ

வால்பையன்

Anonymous said...

//நடிப்பது வேறு அவரது சிந்தனைகள் வேறு!
ஆரம்பத்தில் பல கஷ்டங்களுக்கு மத்தியில் தான் எல்லா நடிகர்களும்
சான்ஸ் பிடிக்கிறார்கள்.//

எம்.ஜி.ஆர் குடிப்பது போல நடிக்ககூட மாட்டார். எஸ்.எஸ்.ஆர் திராவிடக் கொள்கை மீது கொண்ட பற்று காரணமாக புராண கதாபாத்திரங்களில் நடிப்பதை நிறுத்தியதால் லட்சிய நடிகர் என அண்ணாவால் அழைக்கப்பட்டார்!

வால்பையன் said...

//எம்.ஜி.ஆர் குடிப்பது போல நடிக்ககூட மாட்டார். எஸ்.எஸ்.ஆர் திராவிடக் கொள்கை மீது கொண்ட பற்று காரணமாக புராண கதாபாத்திரங்களில் நடிப்பதை நிறுத்தியதால் லட்சிய நடிகர் என அண்ணாவால் அழைக்கப்பட்டார்!//

மன்னிக்கவும் இம்மாதிரியான அரசியல் ஸ்டாண்ட் பற்றி எனக்கு தெரியாது.
அவ்வளவு வயதும் எனக்கு ஆகவில்லை.
மற்ற நடிகர்களின் கொனாங்கி தனத்திற்கு சத்யராஜ் எவ்வளவோ பரவாயில்லை என்று நினைக்கிறேன்.

ஒருவேளை சத்யராஜ் அரசியலுக்கு வந்தால் இந்த மரியாதையும் எனக்கு போய்விடும்.
அரசியல் என்று வந்துவிட்டால் பொய், வெட்டி அறிக்கை எல்லோருக்கும் பொது

வால்பையன்

இத்துப்போன ரீல் said...

சத்தியராஜை தெரிந்து கொள்ள பெரியார் கண்ணாடியைக் கழற்றினால் போதும்.குதிரைக்கு பக்கவாட்டுகண்ணாடியைப்போல.பெரியாரைப் புகழ்ந்து பேசினால் அவருடைய தீட்டு நீங்குமா?.இவரெல்லாம் போலி ஆன்மீகவாதியைப்போல,போலிகள் ஆன்மீகவாதிகள் கடவுளைப்பற்றி பேசுவார்கள்.இந்த போலிகளுக்கு பெரியார்தான் கடவுள்.கருணாநிதியைப் போல!.இதைப்பற்றி நிறையப்பேசலாம் இது சமயமல்ல!

இத்துப்போன ரீல் said...

//அவ்வளவு வயதும் எனக்கு ஆகவில்லை.
மற்ற நடிகர்களின் கொனாங்கி தனத்திற்கு சத்யராஜ் எவ்வளவோ பரவாயில்லை என்று நினைக்கிறேன்.//

மற்றவர்களுக்கு சத்தியராஜ் பரவாயில்லை என்றால் மொத்த தமிழ் படங்கள் எல்லாமே அற்புதமானவை என்று அர்த்தம்.இதற்க்கு மேல் நாமெல்லாம் சத்தியராஜ் புராணம் பாடினால் சிவராத்திரிக்கு விடிய விடிய சிவபுராணம் படித்த மாதிரி ஆகிவிடும்.சிவராத்திரிக்குப் படித்தால் புண்ணியம்.சத்தியராஜுக்காக படித்தால்...........?

Anonymous said...

எனக்கு ஏதோ மீனா என்று நினைத்து ராஜமல்லிகாவிடம் இருட்டில் 'டிஸ்கசன்' செய்த சத்யராஜ் முகம் தான் நினைவுக்கு வருது
ஏலே காஸ்டியும்மிஸை அடிக்கடி மாத்த சொல்லாதே மக்களுக்கு குழப்பமா இருகுத்துல்ல என்ன நான் சொல்றது ?

வால்பையன் said...

//இந்த போலிகளுக்கு பெரியார்தான் கடவுள்.//

மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு தெரியாது,
இறை மறுப்புக்கு பெரியார் காப்பிரைட் வாங்கவில்லை.
என்னுடைய இந்த பதிவில் பெரியாரை பற்றி ஒரு வரி கூட பேசவில்லை
சின்ன பெரியார் என்று சத்யராஜை மட்டும் கூறினேன்.

பெரியார் என்ன கடவுளா பகுத்தறிவு என்ன வெங்காயமா
எனற இந்த பதிவை படிக்கவும்

வால்பையன்

வால்பையன் said...

//சத்தியராஜ் பரவாயில்லை என்றால் மொத்த தமிழ் படங்கள் எல்லாமே அற்புதமானவை என்று அர்த்தம்.//

பரவாயில்லை என்பதற்கும் சூப்பர் என்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு

//சிவராத்திரிக்கு விடிய விடிய சிவபுராணம் படித்த மாதிரி ஆகிவிடும்.சிவராத்திரிக்குப் படித்தால் புண்ணியம்.//

நான் இறைமறுப்பு கொள்கை உடையவன்,
உங்களுக்கு உண்டு என்று நினைக்கிறேன்,
அதனால் தான் புண்ணியம் என்று சொல்லியிருக்கிறீர்கள்.
இங்கே யார் சிவராத்திரிக்கு படிக்கிறார்கள்.
ஒரு டிக்கெட்டில் இரண்டு படம் பார்க்கிறார்கள்.
பெரிய புண்ணியம் தான் போங்கள்

வால்பையன்

வால்பையன் said...

//எனக்கு ஏதோ மீனா என்று நினைத்து ராஜமல்லிகாவிடம் இருட்டில் 'டிஸ்கசன்' செய்த சத்யராஜ் முகம் தான் நினைவுக்கு வருது//

நயனும் சிம்புவும் அரு அருகில் அமர்ந்திருந்ததை பார்த்தீர்களா?

வால்பையன்

Anonymous said...

//நயனும் சிம்புவும் அரு அருகில் அமர்ந்திருந்ததை பார்த்தீர்களா?//
யோவ் சிம்பு தான் சண்டை போட்டு நயந்தாரா பக்கத்துல இடம் போட்டாருன்னு கழுகார் சொல்றாரு

நயனு அப்படியே கொஞ்ச நேரத்துல சிம்பு பேச முயர்ச்சி செய்த போது ஓடி எஸ்கேப்பு ஆனதாக தகவல் :)

வால்பையன் said...

//நயனு அப்படியே கொஞ்ச நேரத்துல சிம்பு பேச முயர்ச்சி செய்த போது ஓடி எஸ்கேப்பு ஆனதாக தகவல் :)//

அப்படியா வேறு எதாவது அஜால் குஜால் செய்திகள் உண்டா

வால்பையன்

Anonymous said...

//அப்படியா வேறு எதாவது அஜால் குஜால் செய்திகள் உண்டா

வால்பையன்//

அஜீத்து வந்த சில நிமிடங்களில் அப்படியே கழண்டு கொண்ட போது நயந்தாரவும் மாயாமானதாக கழுகார் சொல்க்கிறார் இல்லை இல்லை கொல்கிறார்

அம்புட்டுதேன்

இத்துப்போன ரீல் said...

நம்ப(ஒற்றுமை வளர்ப்போம் நயனு..) நயனுக்கு கொஞ்ச நேரத்திலேயே,பாம்பு...சாரி பூரான் ஊர்ந்த மாதிரி இருந்து இருக்குமோ..
இருந்தாலும் ரொம்ப இம்சைங்க இந்த கற்புக்கரசர் விஜய ராஜே(சே தான்னு நம்ம தமிழ் செம்மல் போடனும்)ந்தர், பெற்ற (ஊர்வம்பு)சிம்பு!.இருந்தாலும் அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையா!.இந்த சிலம்பையா!

வால்பையன் said...

அஜீத்து வந்த சில நிமிடங்களில் அப்படியே கழண்டு கொண்ட போது நயந்தாரவும் மாயாமானதாக கழுகார் சொல்க்கிறார் இல்லை இல்லை கொல்கிறார்

ஹா ஹா ஹா
இருக்கும் இருக்கும்!!

பிந்துகொஸ் மாறி ஆகிப்போன வினிதாவை பார்த்திர்களா?
எனக்கு அந்த கேஸ் ஞாபகம் வந்துவிட்டது.

நமிதா கூட பாய் பிரண்ட் வரலயாமே உண்மையா?
வேற எதாவது கமிட்மேண்டோ என்னவோ

வால்பையன்

வால்பையன் said...

//ரொம்ப இம்சைங்க இந்த கற்புக்கரசர் விஜய ராஜே(சே தான்னு நம்ம தமிழ் செம்மல் போடனும்)ந்தர், //

வந்ததிலிருந்தே லொட லொடன்னு பேசிக்கிட்டு இருந்தத பார்த்திங்களா!!
பாவம் பக்கத்துல உட்காந்தவங்க!!

வடிவேலு பேசிக்கொண்டிருக்கும் பொது உள்ளே வந்த விஜயகாந்த்
"இவனெல்லாம் ஏன் பேச விட்டிங்க" என்று சொல்லுவார்
கூர்ந்தது கவனியுங்கள் மீண்டும் பார்க்க நேர்ந்தால்

வால்பையன்

வால்பையன் said...

யப்பா நான் போட்ட பதிவுலேயே இது தான் அதிக பின்னூட்டம் வாங்கியிருக்கு!
மனம் தளர்ந்து விடாதிர்கள் தோழர்களே தொடர்ந்து பின்னூட்டுங்கள்

வால்பையன்

இத்துப்போன ரீல் said...

//நடிப்பது வேறு அவரது சிந்தனைகள் வேறு!
ஆரம்பத்தில் பல கஷ்டங்களுக்கு மத்தியில் தான் எல்லா நடிகர்களும்
சான்ஸ் பிடிக்கிறார்கள்.//

ஆரம்ப கால சத்தியராஜை நான் சொல்ல வில்லை. பெரியார் படத்தில் நடித்த பிறகு அவர் பல பேட்டிகளில் பெருமையாய் அதைப்பற்றி பேசின பிறகு அல்லது பெனாத்திய பிறகு குத்தாட்டம் போட்ட படங்களைப் பற்றித்தான் சொல்கிறேன்.பணத்துக்காக அதைச் செய்கிறேன் என்றால் அப்புறம் எதற்கு இந்த கடமை உணர்ச்சி!.நீங்கள் பணத்திற்க்காக கஞ்சா விற்பீர்கள்.பிறகு விற்ற பணத்தில் போதை தவறு என்று வகுப்பு எடுப்பீர்கள் என்றால்....யார் தவறு!
இறை மறுப்புக் கொள்கை உங்கள் வழியாக இருக்கலாம்.அது உங்கள் விருப்பம்.ஆனால் அதை வைத்து புகழையும், பணமும் அள்ளாதீர்கள்!

வால்பையன் said...

//பெரியார் படத்தில் நடித்த பிறகு அவர் பல பேட்டிகளில் பெருமையாய் அதைப்பற்றி பேசின பிறகு அல்லது பெனாத்திய பிறகு குத்தாட்டம் போட்ட படங்களைப் பற்றித்தான் சொல்கிறேன்.//

இது ஒரு பெரிய குறையா, அறிக்கை விடுவதும், பிறகு அதை மீறுவதும்
நடிகர்கள் பண்பாடு தானே,
எனக்கு சத்யராஜிடம் பிடித்தது அவரது முற்போக்கு சிந்தனை மட்டுமே
ஒன்பது ரூபாய் நோட்டு படம் கூட நான் பார்க்கவில்லை

//இறை மறுப்புக் கொள்கை உங்கள் வழியாக இருக்கலாம்.அது உங்கள் விருப்பம்.ஆனால் அதை வைத்து புகழையும், பணமும் அள்ளாதீர்கள்!//

ஆமாம் சார் ஒரு பத்து லட்சம் பங்கில இருக்கு, நேத்து என்ன பத்தி B.B.C. நியுசுல சொன்னாங்க கேக்கலையா,
அட போங்க சார் பணமாவது புகழாவது

வால்பையன்

இத்துப்போன ரீல் said...

//இறை மறுப்புக் கொள்கை உங்கள் வழியாக இருக்கலாம்.அது உங்கள் விருப்பம்.ஆனால் அதை வைத்து புகழையும், பணமும் அள்ளாதீர்கள்!//

இந்த பெரியார் ஆ(சாமி) களிடமே இதுதான் பிரச்சனை.உலகத்தில் எதாவது ஒரு கெட்டது நடந்தால் அது தங்களால் தான் நடந்தது என்றுதானே முடிவுசெய்து கொள்வது.அது தப்புங்க உங்களத் தவிரவும் வேற ஆட்களே இல்லையா?.கெட்டது செய்யறதுக்கு.

ஆனால் மேல் கோடிட்ட விஷயத்தில் உங்கள் சத்தியராஜை,மன்னிக்க உங்கள் சின்ன பெரியாரைத்தான் சொன்னேன்.(ஆனாலும் பெரியாருடைய நீராவி (உங்களுக்குத்தான் ஆவி இல்லையே?).கூட உங்களை மன்னிக்காது!)

புகழன் said...

வால்பையனாக இருந்தாலும் சமர்த்தா நல்ல கருத்து சொன்னதுக்கு முதலில் நன்றி.
உண்மையை சொல்லப்போனால் இந்தப் பிரச்சினையின் மூலம், ஆணி வேர் யார் என்பதைப் பற்றி யாரும் பேசவே இல்லை.
ஆனால் சின்ன பெரியார் (பெயர் தேர்ந்தெடுப்பு சூப்பர்) பேசியது கொஞ்சம் ஆறுதல்தான்.

Anonymous said...

http://selventhiran.blogspot.com/2008/04/blog-post.html

ezhil arasu said...

இனமான முரசு (சின்னப்பெரியார்) சத்யராஜ் அவர்கள் தனது உணர்ச்சிப்பேச்சில் அவர் தன்னை மறந்து முழு தமிழ் உணர்வுடன் (கவிப்பேரரசு வைரமுத்துவின் பேச்சுக்கு அடுத்து) உண்மைகளை உணர்வுபூர்வமாக பேசியதை தங்கள் பதிவு படம் பிடித்து காட்டுகிறது.( ஒரு சில வார்த்தை களை தவிர்த்திருக்கலாம்)

bala said...

வால்பையன் அய்யா,

கண்மூடித்தனமாக நீங்கள் இந்த பொறிக்கி நடிகனின் பேச்சை சிலாகித்து பேசியது வேதனை.மேலும் இந்த மூஞ்சியை சின்னப் பெரியார் என்று சொன்னது இன்னும் வேதனை அளித்தது.இந்த மூஞ்சி பேசுகிற பேச்சைப் பாத்தால் பெரிய தமிழர் மாமா தாடிக்கார பெரியாரை விட கேவலமாக பேசுவதில் இந்த ஆள் படே கில்லடி தான்.

பாலா

வால்பையன் said...

வருகைக்கு நன்றி அனைவருக்கும்

முதலில் ஒன்றை கூறிக்கொள்ள ஆசைபடுகிறேன்
நான் எந்த நடிகருக்கும் ரசிகன் அல்ல.
கமல், சத்யராஜ் போன்ற நடிகர்களின் முற்போக்கு சிந்தனைகள் என்ன கவர்ந்தன என்பதை அப்பட்டமாக ஒத்துக்கொள்கிறேன்.

இந்த பதிவின் காரணம் எதற்காக இந்த கண்டன கூட்டம் என்பதை தெரியாமல் நிறைய பேர் பேசியதால் தான்.
மற்றபடி எந்த அரசியல் உள்நோக்கமும் அல்ல.
சத்யராஜ் அரசியலுக்கு வந்தால் இருக்கும் கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய்விடும் என்பதையும் மேலே பின்னூட்டத்தில் கூறியுள்ளேன்

இத்துப்போன ரீல் said...

கண்டன கூட்டத்தில் பேசியதை விமர்சனம் செய்தததில் எந்த ஒரு குழ்ப்பமும் இல்லா!.பக்ஷே ஆயாளை நீங்கள் எந்தினானு உயர்தி பிடிச்சது!.அது தப்பல்லே!

வால்பையன் said...

இது உயர்த்தி பிடிக்கும் செயல் அல்ல!
மற்ற நடிகர்கள் தங்கள் சுயநலத்துக்காக
சினிமா தியேட்டர் உடைக்கப்பட்டதையும்,
தமிழ் படங்களை திரையிட விடாமல் தடுப்பதற்கும் பேசும் பொழுது
உண்மையில் தமிழனுக்காக பேசும் செயலை ஊக்க படுத்தும் செயல்

வால்பையன்

bala said...

வால்பையன் அய்யா,

ரஜனியை திட்டுவதும்,பேட்டை ரெளடி,அரை டிக்கட் போல் மார் தட்டி பேசுவதும்,பாமர மக்களை உசுப்பி விடுவதும் தமிழனுக்காக குரல் கொடுப்பது என்று கருதப்படவேண்டுமா?
இந்த சின்னப் பொறிக்கியார் சிங்கப்பூரில் நடந்த கூட்டத்தில் பாரதி பாஸ்கர் அம்மாவை எவ்வளவு கேவலமாக பேசியது என்று அனைவரும் அறிவர்.இதோட லெவல் அவ்வளவு தான்;டிபிகல் கேவலமான கருப்பு சட்டை பொறிக்கி குஞ்சு;அவ்வளவு தான்.

பாலா

வால்பையன் said...

வருகைக்கு நன்றி பாலா!

நீங்கள் சத்யராஜின் மேல் வைத்திருக்கும் மரியாதை(சின்ன பொறுக்கியார்)
உங்களை சார்ந்தது, அவர் சிங்கப்பூரில் யாரை ,ஏன் திட்டினார் என்றும் எனக்கு தெரியாது.
அந்த சண்டையை அவர்கள் போட்டுகொள்ளட்டும்.

இந்த பதிவில் சத்யராஜ், ரஜினியை தாக்கியதை கூட ஒரு நகைசுவையாக தான் கூறியுள்ளேன், அது பற்றி சண்டை போட கூட அவர்களின் ரசிகர் மன்றங்கள் இருக்கிறது.

வேடிக்கை பார்க்கும் நாம் ஏன் அதை பற்றி சண்டை போட வேண்டும்

நான் சின்ன பெரியார் என்று சத்யராஜை அழைத்ததற்கு காரணம் அவருடைய கருத்துகளுக்கு

நான் பெரியாருக்கே ரசிகனில்லை, பிறகு எப்படி சத்யராஜுக்கு ரசிகனாவேன்

பார்க்க இந்த பதிவு

வால்பையன்

tamizh said...

என் தங்கை, அழைத்ததால் அந்த தொலைக்காட்சி தொகுப்பை ஒரு 45 நிமிடங்கள் நானும் பார்த்தேன்.

சில நடிகர்கள் பேசும்போது, பாவம் என்ன பேசுவதென்று தெரியவில்லை போலும், என்று அவர்களுக்காக வருத்தப்பட்டேன். சிலர் அந்த இடத்தை தங்கள் புகழ் பரவ உபயோகித்தபோது, வேறு வழிஇல்லை போலும் என்று நினைத்து கொண்டேன்.

சிலர் தம் வாய்க்குல்லேயே styleaaga பேசிக்கொண்டபோது அரையலாம் போலிருந்தது.

சதியராஜ் பேசியபோதுதான் என் ஆதங்கம் தீர்ந்தது! ஒருத்தனாவது உறுப்படியா பேசினானேனு நிம்மதியா இருந்துச்சு!

எவன் நல்லவன் எவன் கெட்டவன்ணு, எனக்கு தெரியாது. நான் சிலர் பேசியதை மட்டும் தான் பார்த்தேன், எனக்கு சதியராஜ், வைரமுத்து பேசியது பிடிச்சது. வைரமுத்து பேசியது ரொம்ப ரொம்ப பிடிச்சது!

ஆனா ரஜினியை எதுக்கு இப்படியெல்லாம் சொல்றீங்க? அவன் முகமே அப்படிதான். மனசுல பதியற மாதிரி ரஜினி பேசவில்லை என்றாலும், மத்தவங்கல மாதிரி சொதப்பல! நம்ம மனசுல இருந்து வேற்றுமைய எடுத்திருவோமே..

இந்த தமிழ் நாட்டில பிறந்த சில நரிகள் லாவகமா பேசிவிட்டு போகிறத
பார்த்தும், தேவையான அளவுக்கு பேசின ரஜினிய, இந்த வேற்றுமயால நாம இப்படித்தான் பார்க்கணுமா என்ன? (just my opinion, sandaiku izhukaadheenga)

வால்பையன் said...

//just my opinion, sandaiku இழுகாதீங்க//

உங்க கூட எதுக்கு நான் சண்டை போடுறேன்.
நமக்காக சண்டை போட ஆள் இருக்காங்க என்பதை பற்றி தானே இங்கே பேச்சு!
இங்கே நம்மாலே சண்டை போட்டால் என்ன ஆகுறது

வால்பையன்

Beemboy-Erode said...

நம் மக்கள் தொழில்/நிஜ வாழ்க்கை போட்டு குழப்பிகொள்கிறார்கள்.
சத்யராஜ் யாரும் நடிக்க தயங்கிய வேடங்களிள் நடிதுள்ளார்.(வேதம் புதிது/பெரியார்/கடமை கண்ணியம் கட்டுப்பாடு/முத்ல் மரியாதை) இங்குஅவரின் நடிப்பு மட்டும் பார்க்கவேன்டும், பெரியாரில் நடித்துவிட்டு நமிதாவுடன் கூத்தடிக்க கூடாது என்றால் என்ன எதிர்பார்ப்பு? அது ஒரு நடிப்பு
இன்றுபொறுக்கியாகவும், நாளை காவல் அதிகாரியாகவும்,பிறகு பூ வாகவும் நடிக்க வேன்டிவரும் அத்தனையும் போட்டு குழப்பிகொள்லகூடாது..நடிகனை அந்த படத்தில் நடிக்கும் நடிகனாக மட்டும் பார்க்க வேன்டும்.நிஜ வாழ்க்கை/நடிப்பு வாழ்க்கை 2ம் போட்டு குழப்பி கொள்ளகூடாது.

அது அவர் தொழில் பலதரப்பட்ட வேடங்களில் நடிப்பதுதான் அவருக்கு பிழைப்பு.(உங்களில் எத்தனை பேரு ஜாவவில் வேலை இல்லை என்று டாட் நெட்டுக்கு வேலை பார்க்க போனீங்க? அது மதிரிதான் இதுவும். (கோடு எழுதுரது உங்க தொழில்)

பெரியாரில் நடித்தாதால் அவர் பெரியாராக முடியாது. அவர் ஒரு சாதாரன மனிதர் அவருக்கு தெரிந்த வகையில் பெசியுள்ளார்.இதில் குறை கான என்ன இருக்கிறது? வக்கிரபேச்சு என்றால் ஏன் பெரியார் கூடதான் வக்கிறாமக பெசியுள்ளார். தனக்கு தெரிந்த மொழியில், தனக்கு தெரிந்த இனத்தை கொடுமை படுத்துவதை பார்த்து அதை தனது ஆதங்கமாக வெளிப்ப்டுத்தியுள்ளார்.இதில் என்ன தவறு இருக்கிறது?

எல்லாம் சரி பிளாகர்களே உங்களில் எத்தனை பேருக்கு ஹொக்னேகல் பிரச்சனை பற்றி தெரிய வந்த போது ரவுடி வாட்டாளை வெட்டவேன்டும் அல்லது இவனுங்களுக்கு வேற வேலையே இல்லை என்று நினத்தீர்கள். அது போலத்தான் இதுவும்.

வால்பையன் said...

வருகைக்கும், கருத்து பகிர்தலுக்கும் நன்றி பீம்பாய் அவர்களே

வால்பையன்

தறுதலை said...

சத்யராஜின் பேச்சு. புரட்சி தமிழனின் பேச்சு. பம்பர அணி கேப்டனின் மூச்சு. இப்படி எப்படி வேணும்னாலும் தலைப்பு வச்சுக்கோங்க.

பெரியாரை பிடிக்கலைன்னா திட்டி தனிப் பதிவே போடுங்க. ஆனா அந்த கிழவன இப்படியெல்லாம் கேவலப்படுத்தாதீங்க.

------------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)

வால்பையன் said...

//சத்யராஜின் பேச்சு. புரட்சி தமிழனின் பேச்சு. பம்பர அணி கேப்டனின் மூச்சு. இப்படி எப்படி வேணும்னாலும் தலைப்பு வச்சுக்கோங்க.

பெரியாரை பிடிக்கலைன்னா திட்டி தனிப் பதிவே போடுங்க. ஆனா அந்த கிழவன இப்படியெல்லாம் கேவலப்படுத்தாதீங்க.//

தறுதலையின் எதிர்கருத்து என்று உங்கள் ஆலோசனைக்கு ஒரு பதிவு போடலாம், உங்களுக்கு தான் வலைபூவே இல்லையே!

பெரியாரை பற்றி திட்டி எழுத என்ன இருக்கிறது!
அதுவும் உயிரோடு இல்லாதவர்களை திட்டுவதால் யாருக்கு என்ன லாபம்
மற்றும் உயிரோடு இல்லாதவர்களை திட்டி பதிவு போடும் அளவுக்கு கோமாளி அல்ல நான்

வால்பையன்

முத்து said...

//நான் பேச வந்திருப்பது என் சகோதரர்களின் கஷ்டத்திற்காக, இங்கு அரசியலை பற்றியோ சினிமாவை பற்றியோ பேச மாட்டேன்//

ஆனால் உண்மையில் பேசியது என்ன ? இந்த பதிவை படித்தவர்கள் திரும்ப படித்து புரிந்து கொள்ளட்டும்

வால்பையன் said...

//-//நான் பேச வந்திருப்பது என் சகோதரர்களின் கஷ்டத்திற்காக, இங்கு அரசியலை பற்றியோ சினிமாவை பற்றியோ பேச மாட்டேன்//

ஆனால் உண்மையில் பேசியது என்ன ? இந்த பதிவை படித்தவர்கள் திரும்ப படித்து புரிந்து கொள்ளட்டும்//

தவறான புரிதல் என்று நினைக்கிறேன்.
அந்த கூட்டத்தில் விஜயகாந்த் மற்றும் சரத்குமார் தமிழகத்தில் கட்சி நடத்தும் அரசியல்வாதிகள், அவர்களை போல் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை குறை சொல்லி பேசமாட்டேன் என்று புரிந்துகொள்ள வேண்டும்,
சினிமா பேசமாட்டேன் என்று சொன்னது, சத்யராஜ் கர்நாடக தமிழர்கள் பற்றி மட்டும் பேசவில்லை மலேசியா மற்றும் இலங்கை தமிழர்கள் பற்றியும் பேசினார்.
மற்ற நடிகர் என்ன பேசினார்கள் என்று சொல்லவேண்டியதில்லை

வால்பையன்

Anonymous said...

ஒரேய், இத்துப்போன ரீல், நோர் முயிரே. சத்தியராஜு பேசினதுல பேசுனதுல என்ன லே தப்பு.

எவனோ ஒருத்தன் கன்னடன் வேனாம், கன்னடத்துப் பெரியார் மட்டும் வேனுமான்னு கேக்கான். கூப்பிடுலா அந்த முட்டாள. எவன் சொன்னான் பெரியார் கன்னடன்னு. அவரு தெலுங்கு பேசுற இனத்தைச் சேர்ந்தவரு லா. அவரு பொறந்தப்போ தமிழ்நாடுன்னு ஒன்னு இல்லை. ஏன் இந்தியாவே இல்ல லே. கேரளா, கர்னாடகா, ஆந்திரா தமிழ்நாடு எல்லாம் சேர்ந்து இருந்தப்போ பொறந்தவருலே அவரு. வந்துட்டான் பேசுறதுக்கு.

!

Blog Widget by LinkWithin