வனத்துறைக்கும், சுகாதாரதுறைக்கும் ஒரு வேண்டுகோள்!!

இது தமிழ்நாட்டில் மட்டுமா அல்லது முழு இந்தியாவிலுமா என்று தெரியவில்லை,
வீட்டில் யாரும் சந்தன மரம் வளர்க்க கூடாது, அப்படியே வளர்த்தாலும் அதனை வெட்டும் உரிமை அரசாங்கத்திற்கு மட்டுமே உள்ளது.

சந்தனமரத்தை கஞ்சா செடிக்கு நிகராக வைத்திருக்கும் இந்த சட்டம் எனக்கு புரியவில்லை.
நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர்கள், தங்கள் குழந்தைகளின் மேற்படிப்பு மற்றும் திருமணத்திற்கு, கடுமையான போராட்டதிற்கிடையே சேமித்தும் அல்லது கடன் வாங்கியும் தான் தேவையை பூர்த்தி செய்ய வேண்டியிருக்கிறது.

வீட்டிற்கு முன் சிறு இடம் வைத்திருக்கும் நடுத்தர வர்க்கத்தினரை அரசாங்கமே ஊக்குவித்து இம்மாதிரியான மரங்கள் வளர்த்தால், அதன் பயன் கண்டிப்பாக அவர்களுக்கு பேருதவியாக இருக்கும்,

மனிதனுக்கு தேவையான பிராணவாயு அதிலிருந்து கிடைக்கும்.
நாட்டிற்கு அன்னிய செலவாணி அதிகரிக்கும்.
முக்கியமாக இன்னொரு வீரப்பன் உருவாகமாட்டான்

இந்த யோசனையை எனக்கு சொன்னது
முன்னால் ஊராட்சி மன்ற உறுப்பினரும்,
தற்போதைய உறுப்பினரின் கணவருமாகிய
திரு.ஜெகதீசன் அவர்கள்

**********************************************************************

இரவு நேரங்களில் பூட்டியிருக்கும் கடை வாசல்களில் சில சிறுவர்கள் சிகரெட் புகைத்து கொண்டும், மது போதையிலும் இருப்பதை கண்டேன். அவர்கள் அனைவரும் தெருவில் கிடக்கும் பழைய காகிதங்கள், கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் காகிதங்களை பொறுக்கி அதை விற்று பிழைப்பு நடத்தும் சிறுவர்கள்,

சிறுவர்கள் மட்டுமல்ல சேரி பகுதிகளில் வாழும் திருமணமானவர்கள் கூட இதை ஒரு தொழிலாக செய்கின்றனர், இன்றைய கால கட்டத்தில் முதல் இல்லாமல் செய்யக்கூடிய ஒரே தொழில் இது தான். அவருடைய ஒரு நாளைய வருமானம் இருநூறு ரூபாய்.
திருமணமானவர் ஒரு குவாட்டர் போட்டு விட்டு மீதியை வீட்டில் கொடுத்து விடுவார்.
ஆனால் சிறுவர்கள் போதை பழக்கத்திற்கு அடமையாகி வளர்ந்த பின் கத்தி காட்டி பணம் பறிக்கும் கும்பலாக மாறுகிறார்கள்,

சுகாதாரத்துறை அவர்களை தத்து எடுக்க வேண்டும்.
அவர்களுக்கு சீருடை வழங்கலாம்,
அவர்கள் எடுத்து வரும் பொருள்களுக்கு இவர்களே பணம் வழங்கலாம்.
அல்லது மட்கும் குப்பைகள் மறக்காத குட்பைகளை பிரிக்கும் வேலை குடுக்கலாம்.
ஒய்வு வேலைகளில் அவர்களுக்கு படிப்பு வழங்கலாம்.

எது எப்படியே வரும் இளைய தலைமுறையினரின் வாழ்க்கை அரசின் கையில் தான் இருக்கிறது என்பதை அரசு மறக்காமல் இருந்தால் சரி

19 வாங்கிகட்டி கொண்டது:

சின்னப் பையன் said...

ஏங்க... மரம் வைக்குமளவுக்கு வீட்டில் இடம் இருந்தால், மக்கள் அங்கு ஒரு சிறு அறை கட்டி வாடகைக்கு விட்டுடுவாங்களே... சரிதானே?

வால்பையன் said...

ஒரு அறை கட்டும் இடத்தில் ஆறு மரங்கள் நடலாம்.
ஒரு அறை கொடுக்கும் வருமானத்தை விட ஆயிரம் மடங்கு பலன் தரும்
மரங்கள்

வால்பையன்

Anonymous said...

ஏங்க... மரம் வைக்குமளவுக்கு வீட்டில் இடம் இருந்தால், மக்கள் அங்கு ஒரு சிறு அறை கட்டி வாடகைக்கு விட்டுடுவாங்களே... சரிதானே?

நகரங்களில்தான் இந்த நிலை. கிராமங்களில் அப்படி இல்லை.

வால்பையன் said...

//நகரங்களில்தான் இந்த நிலை. கிராமங்களில் அப்படி இல்லை.//

நரகம் ஆகி கொண்டிருக்கும் நகரத்திற்கு மரம் வளர்ப்பு மிக அவசியம்

வால்பையன்

Unknown said...

மரம் வளர்ப்போம்
மனிதம் காப்போம்
உங்கள் பதிவு அற்புதம்.
ஆனால் இது நடக்குமா?
நடந்தால் நாட்டுக்கு நல்லது.

வால்பையன் said...

//மரம் வளர்ப்போம்
மனிதம் காப்போம்//

மனிதம் காக்க மரம் வேண்டும் என்ற சரியான புரிதலுக்கு நன்றி
இது நடந்தால் நாட்டு நல்லது என்பதை விட ஒவ்வொரு மனிதனுக்கும் நல்லது என்பதே உண்மை. ஒவ்வொரு மனிதனும் ஆரோக்கியமாக இருந்தால் தான் இந்த நாடு நன்றாக இருக்கும்.

இன்றே ஒரு செடி நடுவீர்

வால்பையன்

வின்சென்ட். said...

உங்கள் பதிவிலுள்ள நடைமுறை சிக்கல் என்னவென்றால் வளர்ப்பவர்கள் தான் மரத்தை வெட்டுவார்கள் என்ற உத்திரவாதம் இல்லை.கோவை பகுதியில் இரவு நேரங்களில் மரத்தை வெட்டிவிடுகிறார்கள். அதற்கு பயந்தே நிறைய மக்கள் சந்தன மரத்தை வளர்ப்பதில்லை.

வால்பையன் said...

//வளர்ப்பவர்கள் தான் மரத்தை வெட்டுவார்கள் என்ற உத்திரவாதம் இல்லை.கோவை பகுதியில் இரவு நேரங்களில் மரத்தை வெட்டிவிடுகிறார்கள். அதற்கு பயந்தே நிறைய மக்கள் சந்தன மரத்தை வளர்ப்பதில்லை.//

திருடுபவர்கள் பொழுதுபோக்குக்காக திருடுவதில்லை,
அவர்களின் தேவையை பூர்த்தி செய்யவே திருடுகிறார்கள்
எல்லாருக்கும் எல்லாம் கிடக்கும் பொழுது திருட்டு இந்தியாவை விட்டே ஒளிந்து விடும்

மேலும் சந்தனமரம் தங்கத்திற்கு சமானம் அதற்குரிய பாதுகாப்பு கொடுத்து தான் ஆகவேண்டும்

வருகைக்கு நன்றி
வால்பையன்

Indian said...

யாரோ 'திப்பு சுல்தான்' என்பவர் சந்தன மரம் அரசனுக்கு மட்டுமே சொந்தம் என்று இட்ட சட்டத்தை இக்கால மாநில அரசாங்கங்களும் கடைபிடிப்பதால் சந்தன மரத்தை தனியார் வளர்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் ஒரு மூளையில்லாத கழுதை என்பதற்கு இந்த சந்தன மரம் சார்ந்த சட்டம் ஒரு காட்டு. இந்த கட்டுப்பாட்டால் என்ன பயன் என்று யாருக்கும் தெரியாது. ஒரு கடத்தல்கார வீரப்பனை உருவாக்கியது மற்றும் சந்த மரம் சார்ந்த கைவினைத் தொழில்களை முடக்கியதைத் தவிர.


அப்புறம் சந்தன மரம் ஏன் திருட்டுத்தனமாக கடத்தப்படுகிறது தெரியுமா? இந்தத் தடை தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் மட்டும்தான். கேரளாவில் கிடையாது. சந்தன எண்ணை ஆலைகள் உள்ள அளவிற்கு அங்கு சந்தன மரம் சப்ளை இல்லாததால் மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படுகிறது.

சந்தன மரம் சார்ந்த பொருட்கள் உற்பத்தியில் தென்னக மாநிலங்கள் உலகளவில் பிரசித்தி பெற்றவை. இதனை முன்னிறுத்தி ஸ்காட்ச் விஸ்கி, பாசுமதி அரிசி ஆகியவற்றுக்கு உள்ளது போன்று geographical indication என்னும் அங்கீகாரத்தை தந்தால் சந்தன மரம் சார்ந்த தொழில் வளர்ச்சி அடையும். ஆயிரக்கணக்கானோர்க்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும். அரசாங்கம் யோசிக்குமா?

பார்க்க: http://www.hinduonnet.com/2002/04/26/stories/2002042601981000.htm

வால்பையன் said...

நன்கு விரிவான மற்றும் பயனுள்ள தகவல்கள் தந்துள்ளீர்கள் இந்தியன் அவர்களே!!
குரு இறந்த பிறகும் பூனையை தூணில் கட்டும் கதையாக தான் இருக்கிறது நமது அரசின் செயல்கள்,

இந்த விசயத்தை அரசுக்கு கொண்டுபோகும் மீடியாவின் கையில் தான் இருக்கிறது,
தமிழகத்தின் மேற்படி பொருளாதாரம்.

அதுசரி சுகாதாரதுரைக்கும் ஒரு வேண்டுகோள் வைதிருந்தனே அது யாருக்கும் தெரியவில்லையா!
அல்லது அன்புமணி மேல் பயங்கர மரியாதையா

வால்பையன்

புகழன் said...

என்ன வால் பையா...
வர்ர தேர்தல்ல எம்.பி. சீட்டுக்கு நிக்க இப்பவே திட்டம் போட்டாச்சு போல தெரியுது....

புகழன் said...

Indian said...
//யாரோ 'திப்பு சுல்தான்' என்பவர் சந்தன மரம் அரசனுக்கு மட்டுமே சொந்தம் என்று இட்ட சட்டத்தை இக்கால மாநில அரசாங்கங்களும் கடைபிடிப்பதால் சந்தன மரத்தை தனியார் வளர்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. //
ஹலோ இந்தியன் உங்களிடம் சில கேள்விகள்.
1. என்னமோ நீங்கதான் இந்தியன் மத்தவங்க அந்நியர்களா?
2. //யாரோ 'திப்பு சுல்தான்' என்பவர் சந்தன மரம் அரசனுக்கு மட்டுமே சொந்தம் என்று இட்ட சட்டத்தை //
எந்த ஆதாரத்துல இதை எழுதியிருக்கீங்க?
இதுக்கு கண்டிப்பாக நீங்க பதில் சொல்லியே ஆக வேண்டும்.
கொஞ்சம் என்னோட ப்ளாக்குக்கு வாங்க உங்கள்ட நிறைய பேசனும்.

http://manthodumanathai.blogspot.com/

இப்படிக்கு புகழன்

வால்பையன் said...

//வர்ர தேர்தல்ல எம்.பி. சீட்டுக்கு நிக்க இப்பவே திட்டம் போட்டாச்சு போல தெரியுது....//

அரசியலா ஆள விடுங்க சாமி!!
அம்மண உலகில் கோவணம் கட்டி திரிந்தால் பைத்தியம் என்பார்கள்.
நமக்கு வேண்டாம் அந்த விளையாட்டெல்லாம்

வால்பையன்

வால்பையன் said...

நண்பர் புகழுக்கு!

இந்தியனுக்கு கேட்ட கேள்விகளுக்கு
குறிக்கிடுவதற்கு மன்னிக்கவும்.
யாரோ திப்பு சுல்தான் என்று சொல்லிய காரணம் அவர் திப்பு சுல்தானை நேரில் பார்த்ததில்லை, அவர் திப்பு சுல்தான் இந்தியன் இல்லை என்று சொல்லவில்லை

சந்தனமரம் அரசாங்க சொத்து என்று என்னிடம் சொன்னவர் ஒரு சமூக முன்னேற எண்ணமுடைய அரசியல் வாதியே,

தடை உண்மை அது யார் போட்ட சட்டம் என்று தெரியாது

வால்பையன்

புகழன் said...

//நண்பர் புகழுக்கு!

இந்தியனுக்கு கேட்ட கேள்விகளுக்கு
குறிக்கிடுவதற்கு மன்னிக்கவும்//
பதிலுக்கு மிகவும் நன்றி
ஆனால் ஒரு சிறு வருத்தம் இந்தியன் பதில் சொல்லவில்லையே என்று...
அப்புறம் ஒரு விஷயம்
//பார்க்க: http://www.hinduonnet.com/2002/04/26/stories/2002042601981000//
என்று கொடுத்துள்ளார் இந்த லிங்க் மட்டும் ஹிந்துவில் ஓப்பன் ஆக வில்லை ஏனோ?
(ஸாரி இதுவும் இந்தியனிடம் கேட்க வேண்டிய கேள்விதான். ஆனாலும் உங்களுக்கும் தெரிந்திருந்தால் சொல்வீர்களே அதனால்தான் கேட்டேன்.)

வால்பையன் said...

//இந்த லிங்க் மட்டும் ஹிந்துவில் ஓப்பன் ஆக வில்லை ஏனோ?//

உங்களை ரிஜிஸ்டர் ஆக சொல்லி கேட்கும், அதில் மெம்பர் ஆகிவிட்டால் எல்லாவற்றையும் பார்க்கலாம்

வால்பையன்

குமரன் (Kumaran) said...

தனியார் சந்தன மரம் வளர்க்கக் கூடாது என்பது எனக்குப் புதிய செய்தி வால்பையரே.

நீங்கள் சொன்னது போல் அரசு சிறுவர்களை நல்வழியில் கொண்டு செல்லத் திட்டங்கள் தீட்டிச் செயல்படுத்தினால் வெகு நன்றாகத் தான் இருக்கும். அது வரை காத்திருக்காமல் அரசு சாரா நிறுவனங்களும் (தன்னார்வலர்கள்) இந்த சிறுவர்களுக்கு நல்வழி காட்டும் முயற்சியில் ஈடுபடுவது நல்லது. கணித்துறையில் இருக்கும் என் நண்பர்கள் இந்திய நகரங்களில் 'இந்தியக் கனவு' என்ற இயக்கத்தில் இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்கள். மேல் விவரங்களுக்கு: http://abtdreamindia2020.blogspot.com/

வால்பையன் said...

வருகைக்கு நன்றி குமரன்!
தெருவோர சிறுவர்களை பார்க்கும் பொழுது மனம் பதறுகிறது
வளர்ந்த நாடுகளில் இம்மாதிரியான இடத்தில் இருந்துதான் வன்முறையாளர்கள் உருவாகிறார்கள் என்று ரிபோர்ட் சொல்கிறது.
உங்கள் நண்பர்களின் இந்தியகனவு திட்டத்தில் என்னையும் இணைத்துக்கொள்ள ஆசை தான்

வால்பையன்

புருனோ Bruno said...

//மனிதனுக்கு தேவையான பிராணவாயு அதிலிருந்து கிடைக்கும்.//

அப்படியா,

வேப்ப மரமும் சந்தன மரமும் ஒன்றா. யாராவது தாவரவியல் படித்தவர்கள் கூறினால் நலம்

--

பின் குறிப்பு

கோழியை கொல்ல அரசு அனுமதி தேவையில்லை

புலியை கொல்லக்க்கூடாது

ஏன் என்று யோசித்தீர்களா

--

அது போல் மாமரத்தை வெட்ட அரசு அனுமதி தேவையில்லை

சந்தன மரத்தை வெட்ட அனுமதி தேவை

!

Blog Widget by LinkWithin