கடவுள் நம்பிக்கையும்! நானும், தமிழச்சியும்!

தமிழச்சியின் லேட்டஸ்ட் பதிவு சிந்தியுங்கள்
என் பங்கிற்கு நான் சிந்தித்ததில் கிடைத்தவை



நான் சொன்னேன் என்று கேட்க வேண்டாம், என்று சொல்லி இருக்கிறீர்கள், அதோடு இது சொல்லி ஐம்பது வருடம் ஆயிற்று, அதனால் ஏதேனும் மாற்று கருத்து இருந்தால் சொல்லுங்கள் என்றால் இந்த இடத்தில் ஒரு கருத்து விவாதத்தை ஆரம்பித்து இருக்கலாம்

//சாதாரணமாக ஒரு 100, 105 வருஷத்திலே உலகம் எவ்வளவு மாறியிருக்கிறது.//

<குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான், ஆனால் 2000 வருடங்களுக்கு மேலாக மனிதன் இதே போல் தான் இருக்கிறான், ஏன் இப்பொழுது எந்த மாற்றமும் இல்லை, என்று கேட்கும் மதவாதிகளுக்கு நான் சொல்லும் பதில்>
பரிணாம வளர்ச்சி என்பது உடல் வளர்ச்சியை மட்டுமே கொண்டதல்ல, தேவைக்கு ஏற்ப தகவமைப்பை உருவாக்கி கொள்வது, கடந்த நூறு வருடமாக பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை நாம் பார்த்து கொண்டிருக்கிறோம்,

//நெருப்புக் குச்சிகூட வெள்ளைக்காரன் வாரதிருந்தால் நமக்கு வந்திருக்குமா?//

இது சரியல்ல! நெருப்பு குச்சிக்கு சொந்தக்காரன் "வெள்ளைக்காரன்" கிடையாது!
அவனும் மதவாதி தான்! ஆனால் முட நம்பிக்கைகள் குறைவு, அடுத்தவன் கருத்துக்கு மரியாதை குடுக்கிறார்கள், அறிவியல் வளர, மதத்தில் உள்ள தடையை உடைத்தார்கள்,

//இது பெரிய காட்டுமிராண்டி நாடு, நாம் அப்படியே இருக்கிறோம். இதுதான் சொல்ல முடியும்.//

தன்னை விட உருவத்தில் பெரிய யானையை கூட அடக்கி ஆள தெரிந்தவன் மனிதன்,
அனைத்து தகுதிகளும் உள்ளவன் மனிதன், ஆனால் சிறு வயதிலிருந்தே யாருக்காவது அடிமையாக தான் இருக்க வேண்டும் என்று சொல்லி குடுக்கிறார்கள்,

வாழ்க கோசமும் ஒரு வகையான நம்பிக்கை தான், இந்த நம்பிக்கையும் மனிதனின் பகுத்தறிவை மொண்ணை ஆக்கும் என்பது என் தாழ்மையான கருத்து

//காங்கிரசினுடைய கொள்கை காந்தியைக் காப்பாத்ணும், //

காந்தியை மட்டுமல்ல, காந்தி பெயர் தாங்கியுள்ள அனைவரையும்

இறுதியாக என் வாதம் என்னவென்றால்:,

மத நம்பிக்கை ஒரு வகையான உளவியல் ரீதியை சார்ந்தது, மனதளவில் பலகீனமான மனிதன், ஏதேனும் வாய்ப்பு கிடைக்குமா என்று தேடும் பொழுது, அடுத்தவன் வீடு எரியும் பொழுது குளிர் காயும் சிலரால் ஏற்படுதபட்டதே மதம், இது இந்த நாட்டில் தான் தோன்றியது என்று சொல்ல முடியாது, எல்லா நாட்டிலும் மதங்கள் இருக்கிறது,
கடவுள் மறுப்பாளர்களும் எல்லா நாட்டிலும் இருக்கிறார்கள்,

மற்றொரு வேண்டுகோள்;
பெரியாரின் சிஸ்யை என்று சொல்கிறீர்கள்,
பெரியாரும் , ராஜாஜியும் சிறந்த நண்பர்கள் என்று தெரியாதா உங்களுக்கு,
நாம் மூட நம்பிக்கைக்கு எதிரியாக இருப்போம், பிராமணர்களுக்கு அல்ல

8 வாங்கிகட்டி கொண்டது:

Unknown said...

//.. பிராமணர்களுக்கு அல்ல//

வால் பையன்,
பிராமணர்கள் என்றால் யார்? (மனிதர்களா அவர்கள்? இல்லை ஏதேனும் பொருளா?)

அவர்கள் மனிதர்கள் என்றால் , எப்படி பிராமணர் ஆனார்கள்?

பிராமணர் என்பவருக்கும் மற்ற மனிதர்களுக்கும் என்ன வேறுபாடு?

அப்படி ஏதாவது வேறுபாடுகள் இருந்தால் , அந்த வேறுபாடுகளைக் களைந்து அவர்களையும் மனிதர்களாக்க முடியுமா?

அல்லது பிராமணம் என்பது ஏதேனும் தொழிலா?

பிராமணம்/பிராமணரை விளக்கினால் நல்லது.

வால்பையன் said...

கடவுள் மறுப்பு கொள்கைக்காக நேரடியாக பார்பனியத்தை மட்டும் சாடுவதை தான் மறுபரீசீளிக்க சொன்னேன்,
நான் பிராமணர் என்று குறிப்பிட்டது பார்பான் என்று தமிழச்சி குறிபிட்டவர்களை தான்.
சரி பார்பான் என்றால் யார் மனிதர்களா? மனிதர்கள் என்றால் அவர்களை ஏன் பாப்பான் என்று அழைக்க வேண்டும்?

வால்பையன்

Unknown said...

//பார்பான் என்றால் யார் மனிதர்களா? மனிதர்கள் என்றால் அவர்களை ஏன் பாப்பான் என்று அழைக்க வேண்டும்?//

***

பிறப்பின் அடிப்படையில் தன்னை உயர்வாகவும் ஒரு சிலரைத் தாழ்வாகவும் நினைப்பவர்கள் அதன் அடிப்படையில் வாழ்பவர்கள் அனைவரும் பார்ப்பனீயர்களே.

நிறம் அடிப்படையில் Discriminate செய்வது Racism.

பிறப்பின் அடிப்படையில் Discriminate செய்வது Parpanisam.

மனு அடுக்கு முறையில் 1-2-3-4... என்பதில் எந்த அடுக்கில் இருந்தாலும் Parpanisam - கடைபிடிப்பவர்கள் அனைவரும் பார்ப்பனரே.

வால்பையன் said...

மன்னிக்கவும், விவரம் தெரியாமல் எழுதி விட்டேன் ,
பார்ப்பனீயம் என்பது நாஜியிஷம் போல் ஒரு இஷமா ?
நான் சிறு வயதில் பிராமணர்களை பாப்பான் என்று கூற கேள்வி பட்டிருக்கிறேன்.
அதனால் தான் அப்படி எழுதி விட்டேன்

வால்பையன்

Unknown said...

வால்பையன்,
இதில் மன்னிக்க என்று சொல்லவேண்டாம்.பதிவுகளில் பலர், பல கருத்துகளை கொண்டுள்ளனர். நான் சொன்னது எனது புரிதலின் அடைப்படையில்.

நான் சொல்வது மற்ற ஒருவரால் மறுக்கப்படலாம்.

ஆனால் நன்றாக ஆராய்ந்து பார்த்தால் இந்த பார்ப்பனீயம் என்பது நாஜியிஷம் போல் ஒரு இசம் என்பது புரியும். நான் பல பதிவுகளில் இட்ட ஒரு பின்னூட்டம் உங்களின் பார்வைக்காக.

****
மனு அடுக்கு முறையில் 1-2-3-4... என்பதில் 3 என்பது 4 க்கு உயர்சாதியாகவும் 1 என்பது 3 க்கு உயர்சாதியாகவும் உள்ளது.

எந்த அடுக்கில் இருந்தாலும் ,கீழ் அடுக்கில் இருக்கும் ஒருவன் இன்னும் "மனு" வை நம்புவதாலேயே, மனு ஏணியில் மற்றவர்கள் உயர இருப்பதாக நினைக்கிறான்.

உயர இருப்பவர்களை மற்றவர்கள் அண்ணாந்து பார்க்கும் மாயையே உயர இருப்பவர்களை இன்னும் ஆளுமை செய்ய வைக்கிறது.

யானை அதன் பாகனை பாஸாக நினைத்து பிச்சை எடுப்பது போல.

பார்ப்பனீயத்தை பின்பற்றுபவர்கள் (மனுவின் அடுக்கில் 1-2-3-4.. ) யாராக இருந்தாலும் தீண்டத்தகாதவர்கள் என்று நீங்களும் நானும் ஒதுக்க ஆரம்பித்தாலே இவர்களின் மாய தோற்றம் விலகி ஆளுமை அடையாளங்கள் சிதைக்கப்படும்.பெரியார் சிதைக்க விரும்பியதும் இதுதான். அவர் அடையாளம் 1 -ல் இருந்தும் மூல காரணமான "இந்து-சனாதன-பார்ப்பனீய" மதத்தில் இருந்தும் ஆரம்பித்தார். அது சொல்லும் எல்லா புனிதத்தையும் உடைத்தார்.

ஆனால் முழுமையான அடையாள அழிப்பு இன்னும் நடக்கவில்லை.

இன்று அடையாளம் 2 ல் இருப்பவன் 4 இல் இருப்பவன் வாயில் பீயை ஊற்ற, 1 ம் 3 ம் வேடிக்கை பார்க்கிறது.

2-ல் இருப்பவன் 1-ல் இருப்பவனை இன்னும் அண்ணாந்து பார்த்துக் கொண்டுள்ளான். மேலும் சில அடையாளங்கலை வரிந்து கொள்வதன்மூலம் 1 -க்கு பிரதியாய் இருக்கவே முயல்கிறான்

***

வால்பையன் said...

விளக்கத்திற்கு நன்றி

//எந்த அடுக்கில் இருந்தாலும் ,கீழ் அடுக்கில் இருக்கும் ஒருவன் இன்னும் "மனு" வை நம்புவதாலேயே, மனு ஏணியில் மற்றவர்கள் உயர இருப்பதாக நினைக்கிறான்.//

நம்ப வைத்திருக்கிறீர்கள் பாருங்கள்!
ஆனால் இன்னும் அதை பிடித்து தொங்கி கொண்டிருந்தால் அவர்களே முட்டாளாக்க படுவார்கள்.

//ஆனால் முழுமையான அடையாள அழிப்பு இன்னும் நடக்கவில்லை.//

இல்லை. காதல் திருமணங்களும், மனிதனின் சுய முன்னேற்றமும்- ஜாதியையும், மதத்தையும் அழித்து கொண்டிருக்கிறது என்று நான் நம்புகிறேன்

வால்பையன்

Anonymous said...

"மற்றொரு வேண்டுகோள்;
பெரியாரின் சிஸ்யை என்று சொல்கிறீர்கள்,
பெரியாரும் , ராஜாஜியும் சிறந்த நண்பர்கள் என்று தெரியாதா உங்களுக்கு,
நாம் மூட நம்பிக்கைக்கு எதிரியாக இருப்போம், பிராமணர்களுக்கு அல்ல "



தமிழச்சி 1000 தடவை படிக்கவேண்டிய வரிகள்

Anonymous said...

////மனு அடுக்கு முறையில் 1-2-3-4... என்பதில் எந்த அடுக்கில் இருந்தாலும் Parpanisam - கடைபிடிப்பவர்கள் அனைவரும் பார்ப்பனரே.////

Balloon Maams...I am in 1st Adukku. what can i do ?

!

Blog Widget by LinkWithin