பரிணாமம் - கோரை பல்

குறிப்பு - பரிணாமம் பற்றிய தொடர் முழுக்க முழுக்க எனது புரிதல் மட்டுமே, நான் பார்த்தவற்றை, உணர்ந்தவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன், அதிலுள்ள அதிகபட்ச சாத்தியகூறுகளை நமது உரையாடல் தீர்மானம் செய்யும்!

பரிணாமம் உண்மை என்பதற்கு சமகாலத்தில் நம் கண் முன் இருக்கும் முக்கியான ஆதாரம் கோரை பற்கள். அவைகள் வேட்டையாடும் பாலூட்டி வகைகளில் காணப்படும். மனிதனுக்கு மறைந்து விட்டாலும் அசைவ விரும்பிகள் கோரை பல் இருந்தற்கான தடயத்தை காட்டுவார்கள். அவர்களே மதம் தொடர்ப்பான கேள்விகளுக்கு பரிணாமம் பொய். உலகம் கடவுளால் படைக்கப்பட்டது என்பார்கள்.

விலங்குகளில் இரண்டு வரை உள்ளன, ஒன்று வேட்டையாடுபவை, இன்னொன்று வேட்டையாடப்படுபவை. வேட்டையாடும் விலங்குகளுக்கு கோரை பற்கள் ஒரு ஆதாரம் என்றால் இன்னொரு ஆதாரம் இரண்டு கண்களிலும் ஒரே காட்சியை பார்க்கும் தன்மை. இது வேட்டையாடும் விலங்குகளுக்கு இரை இருக்கும் தூரத்தை சரியாக கணக்கிட உதவுகிறது. அப்படி வேட்டையாடும் விலங்குகளில் மனிதனும் ஒருவன். அவனுக்கும் இரண்டு கண்களில் ஒரு காட்சியை தான் பார்க்க முடியும்.



நமக்கு பல் வரிசையில் மேல் நடுவில் இருக்கும் இரண்டு பல் எலி பல் போன்று இருக்கும். அதற்கு இரு புறமும் ஒவ்வொரு பல். அதற்கு அடுத்து இருப்பது தான் கோரைபல். வேட்டையாடும் விலங்குகள் இரையை குத்தி கிழிக்க கோரைபல் உதவுகிறது. பரிணாம வளர்ச்சி பெற்ற மனிதன் ஹோமோ எரக்ஸ்டஸ் காலத்தில் இருந்தே கல், கம்பு போன்ற ஆயுதங்கள் பயன்படுத்த ஆரம்பித்து விட்டான்.

பல ஆயிரம் வருடங்களாக நாயும், பூனையும் வீட்டு விலங்குகளாக வளர்க்கப்பட்டாலும் தன் எதிர்ப்பை காட்ட தனக்கு பெரிய பல் இருப்பதாக உறுமி காட்டுகிறது. மறைந்து தாக்க பழகிய மனிதனுக்கு அந்த தேவையும் இல்லை. இரையை குத்தி கிழிக்க ஆயுதங்கள் செய்துகொண்டான். மெல்வதற்கு மட்டுமே பற்கள் போதும் என்ற நிலை வந்த பிறகு அவனது கோரை சிறிது சிறிதாக மறையதொடக்கியது. அதாவது அதன் நீளம் குறைய தொடங்கியது. ஹோமோ எரக்டஸ் காலத்து மண்டையோடுகளில் அந்த பற்கள் தற்பொழுது இருக்கும் அளவை விட பெரிதாக இருந்தது பரிணாமத்திற்கு முக்கிய .சாட்சி.


நாய், பூனைகள் வேட்டையாடுவதை நிறுத்திவிட்டால், அதற்கு உணவு இருக்கும் இடத்திலே கிடைக்கும் பட்சத்தில் அதற்கும் கோரை பற்கள் மறைய தொடங்கலாம். அதற்கு ஆகும் காலத்தை விட நம் கண் முன் இன்னொரு விலங்கு அதன் கோரை பற்களை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க தொடங்கியிருக்கிறது. கரடி இனத்தை சேர்ந்த கோலோ கரடி தான் அது.

கரடி வகைகள் அனைத்தும் வேட்டையாடும் விலங்கு தான். அதன் கண் அமைப்பு மற்றும் கோரை பல் அதை உறுதி செய்கிறது. ஆனால் சீனா பகுதிகளில் வாழ்ந்த கோலா கரடி தன்னை காப்பாற்றிக்கொள்ள மூங்கில் மரத்தில் தஞ்சம் புகுந்தது. உயிரை காப்பாற்றிக்கொள்ள அதன் மூங்கில் குருத்துகளை உணவாக எடுத்துக்கொண்டது. தற்சமயம் கோலா கரடி முழுக்க முழுக்க மூங்கில் குருத்துகளை மட்டுமே சாப்பிடும் சைவ பட்சிணி. ஆனாலும் கோலோ கரடிக்கு கோரை பற்கள் உள்ளன. கோலா கரடி சைவமாக மாறி சில நூறு அல்லது ஆயிரம் வருடங்கள் இருக்கும் எங்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். மேலும் கண்டெடுக்கப்பட்ட கோலா கரடி படிமங்கள் தற்பொழுது இருப்பதை விட கோரை பற்கள் பெரிய அளவில் உள்ளன. இன்னும் சில ஆயிரம் வருடங்களில் கோலா கரடி மனிதனை போலவே தன் கோரை பற்களை இழந்து விடும்.



மனிதனுக்கு கோரை பற்கள் இல்லை. அவனது உணவு சைவமே என்பது சைவ பிரியர்கள் செய்யும் தற்காப்பு வாதம். மனிதன் தன் அறிவு திறனால் வேலையை சுலமாக்கிக்கொள்ளவும், தனக்கு காயம் ஏற்படாமல் காத்துக்கொள்ளவும் தான் ஆயுதம் செய்தான். கோரைபற்களின் தேவையின்மை அதை மறைய வைத்தது. இது பரிணாமத்திற்கு ஒரு சான்றே ஒழிய மனிதர்கள் சைவ பிராணிகள் என்று அர்த்தமல்ல.

மனிதர்களின் இந்த அறிவு வளர்ச்சிக்கு காரணம், சைவம், அசைவம் இரண்டையும் சரி விகிதத்தில் எடுத்துக்கொண்டதே. ஆராய்ச்சி குறிப்புகள் விவசாயம் கண்டுபிடுத்து 12000 வருடங்கள் தான் இருக்கும் எங்கிறது. மனிதனின் மொழி மற்றும் பண்பாட்டு வளர்ச்சியும் அந்த காலகட்டத்தில் தான் ஆரம்பிக்கிறது. இந்த உலகத்தை சுற்றி நன்றாக பாருங்கள். சைவம் மட்டுமே சாப்பிடும் விலங்கு அப்படியே இருக்கிறது. அசைவம் மட்டுமே சாப்பிடும் விலங்கும் அப்படியே இருக்கிறது. மனிதன் தவிர்த்து அசைவமும், சைவமும் சரிவிகிதத்தில் எடுத்துக்கொள்ளும் விலங்குகள் குரங்கு, நாய், பூனை மனிதனின் பழக்கத்தை எளிதல் புரிந்துக்கொள்ளும் அவளுக்கு அறிவு பெற்றுள்ளது. குரங்குகள் ஆயுதங்கள் பயன்படுத்துகின்றன, தமக்குள் மொழியை உருவாக்கிக்கொண்டன

கோரை பற்களை இழந்தாலும் நம் மூளை வளர்ச்சிக்கு தேவையான புரதம் மாமிசத்தில் உள்ளது என்பது நம் கண் முன்னால் காண்கிறோம். அசைவம் தவிர்ப்பது நம்மை நாமே அறிவுபூர்வமாக மந்தமாக்கிக்கொள்வது. அசைவம்னா மாமிசம் தான் சாப்பிடமும்னு இல்ல. முட்டை எடுத்துக்கொள்ளுங்கள். மீன் எடுத்துக்கொள்ளுங்கள். இயற்கையை மாற்றி அமைத்து உங்களை நீங்களே பலவீனம் ஆக்கிக்கொள்ளாதீர்கள்

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin