எங்கே நட்டம்?

போக்குவரத்து துறை வேலை நிறுத்தத்தை எதிர்க்கும் எல்லாரும் பொது துறை வேண்டாம்னு தனியார்மயத்தை ஆதரிக்கும் காவி வலதுசாரிகளா இருக்காங்க. அதான் நஷ்டம்னு சொல்றாங்கல்ல, கொடு, கொடுன்னா எங்கிருந்து கொடுப்பான் என்பது அவர்கள் கேள்வி. இதுக்கு தான் எஸ்மா, டெஸ்மா வேண்டும் என்பது அவர்கள் தீர்ப்பு.

அந்த கனவான்களிடம் சில சந்தேகம்.

தமிழக அரசு கட்டுபாட்டில் இருக்கும் துறைகளில் டாஸ்மாக் மற்றும் அறநிலைய துறை தவிர எல்லாமே நட்டத்தில் தான் இயங்குது. இந்தியாவில் மாநில அரசு கட்டுபாட்டில் இருக்கும் துறையில் மிக அதிக நட்டத்தில் இயங்குவது தமிழக மின்சார துறை தான்.

இங்கே தான் திமுகவும், அதிமுகவும் ஒன்னு, அதை அறியாதவன் வாயில மண்ணுன்னு மக்களுக்கு புரியவைக்க வேண்டியிருக்கு. மின்சாரம் தட்டுபாடு வந்தப்ப தனியாரிடம் அதிக விலைக்கு வாங்க முதல் ஒப்பந்தம் போட்டது திமுக தான். அதிமுக அதை கெட்டியா பிடிச்சிகிட்டு கொள்கை லாபம் பார்த்தது. போன மாதம் தனியார் நிறுவனங்களுக்கு தர வேண்டிய நிலுவை தொகையை தராமல் மின்சாரம் தர மாட்டோம்னு சொல்லிட்டாங்க. 200 கோடி இப்போதைக்கு கொடுத்து மின்சாரம் வாங்கி தருது அரசு.

2011-2016 அதிமுக ஆட்சியின் பொழுது தமிழக காங்கிரஸ் தலைவராக இ.வி.கே.எஸ். இளங்கோவன் இருந்தார். அவர் தலைமையில் அதிமுகவின் மெகா ஊழல்கள் என ஒரு புத்தகம் ஆளுனரிடன் கொடுக்கப்பட்டது. அது போன இடமே தெரியல. செயல் தலைவர் விவசாயிகளுக்கு பந்த அறிவித்தார். அது மற்றொரு ஞாயிறு ஆனது. ஒரு மாநிலத்தில் ஆளும் கட்சியும் சரியில்ல, எதிர்கட்சியும் சரியில்லைன்னா இதை விட 100 மடங்கு பிரச்சனைகளை நாம் சந்திக்கவேண்டி இருக்கும்.

வெளியே 3 ரூபாய்க்கு விற்கும் முட்டை தமிழக அரசு சத்துணவு திட்டத்திற்கு 4.25 ரூபாய்க்கு வாங்க்ப்படுகிறது. இது ஒரு சாம்பிள் தான். அப்ப மத்த துறைகள் எப்படி இருக்கும்னு பாருங்கள்.

தொழிளாலர் பணத்தை ஆட்டைய போட்டுட்டு நட்டகணக்கு காட்டும் அரசை உனடியாக கலைத்து மறு தேர்தலுக்கு உத்தரவிடலாம். ஆனால் ஜனாதிபதி தேர்தலுக்கு அதிமுக ஆதரவு வேண்டும் என்பதால் பாஜக இதெல்லாம் கண்டுக்காம இருக்கு.
ரெண்டு பேருமே திருட்டு கூட்டம் என்பதற்கு வேறெதும் உதாரணம் வேண்டுமா என்ன?

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin