கேள்வி-பதில் (முதலாளித்துவம்)

கேள்வி:
உலகமயமாக்கலில் பெரும்பான்மை முதலாளித்துவத்தை ஏற்றுக்கொண்டு விட்டது, நீங்கள் எதிர்க்க காரணம் என்ன?

பதில்:
முதலாளித்துவத்தை எதிர்ப்பவன் நிச்சயம் பொதுவுடமைவாதியாக இருப்பான். அவன் அடிப்படை குணத்தை வைத்து அவனை தெரிந்து கொள்ளலாம். ஒரு நடிகரை கொண்டாடுவதோ, ஒரு அரசியல் தலைவரை கொண்டாடுவதோ, ஒரு கடவுளை கொண்டாடுவதோ அவனுக்கு பழக்கம் இருக்காது.

கேள்விக்கும் பதிலுக்கும் சம்பந்தம் இல்லாதது போல் தெரியுதா? உங்களுக்கு எளிமையாக புரியவைக்க சில உதாரணங்கள் சொல்லவேண்டியுள்ளதே. முதலாளி என்ற தனிநபரை கொண்டாடுபவன் முதலாளித்துவ ஆதரவாளன். லட்சகணக்கான தொழிலாளர்களுக்காக பேசுபவன் பொதுவுடமைவாதி. மேலே சொன்ன உதாரணம் இங்கே பொருந்தி வருதா

முதலாளித்துவத்தை எதிர்ப்பவர்கள் தனிநபர் வருமானத்தை எதிர்ப்பவர்கள் அல்ல, அந்த வருமானத்திற்காக அவர்கள் பலர் உரிமைகளையும், உடைமைகளையும் கொள்ளையடிப்பதை எதிர்ப்பவர்கள். அவ்ளோ ஏன் நீங்கள் சொல்லும் உலகமயமாக்களில் தொழிலாளிக்கு வேலை உத்தரவாதம் இருக்கா இல்லைன்னு கொஞ்சம் சிந்தியுங்கள்

முதலாளித்துவம் லஞ்சம், ஊழலின் ஊற்றுக்கண். 100 சிறு தொழில் நிறுவனங்கள் செய்யவேண்டிய ஒரு வேலையை ஒரே கார்ப்ரேட் நிறுவனம் கையப்படுத்த அவர்கள் லஞ்சம், ஊழலின் மூலமே கால் வைக்கிறார்கள். there no free lunch in the world என்று ஒரு பழமொழி உண்டு. உங்களுக்கு அன்பளிப்பாக கொடுத்தாலும் சரி, லஞ்சமாக கொடுத்தாலும் சரி, அவனுக்கு அது முதலீடு தான். அதற்காக லாபபணத்தை பொருள் தான் திணிப்பான்.

உலகில் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவை எடுத்துக்கொள்வோம். நாம் நுகரும்(பயன்படுத்தும்) பொருள்கள் அனைத்தும் அதன் நியாயமான விலையில் கிடைக்கின்றன என நம்புகிறீர்களா? 5000 கொடுத்து வாங்கிய அலைபேசி தீடிரென 500க்கு கிடைக்கிறது என்றால் அது சலுகை அல்ல, இவ்வளவு நாள் ஏமாற்றப்பட்டோம் என்று அர்த்தம். 6 மாசத்திற்கு முன்பு வரை 1ஜிபி 250க்கு கிடைத்த இண்டர்நெட் இன்று தினம் 1ஜிபி கிடைக்கிறது என்றால் அது சலுகை அல்ல. இவ்வளவு நாள் ஏமாற்றப்பட்டோம் என்று அர்த்தம்.

ஒரு பொருளின் நியாயமான விலையை நிச்சயமாக கார்ப்ரேட் நிறுவனம் நிர்னயிக்காது. கார்ப்ரேட் நிறுவனமே அரசை இயக்குவதால் அவர்களும் அதை கேள்வி கேட்க போவதில்லை. கடந்த ஆண்டு மட்டும் கார்ப்ரேட் நிறுவனங்கள் வரி தொகை 6.50 லட்சம் கோடி வராதொகையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆளும் அரசு அதை தனியாரிடம் வசூலிக்க சொல்லியுள்ளோம் என்பார்கள். அப்படியானால் கடந்த மூன்று வருடங்களில் மட்டும் கடன் மற்றும் வரி தள்ளுபடியாக இழந்த 25 லட்சம் கோடி பணம் ஏன் வசூல் செய்யப்படவில்லை?



அமெரிக்காவின்  ஜெனரல் மோட்டார் நிறுவனம் அரசிடம் மறைமுகமாக ஒரு கோரிக்கை வைத்தது. பொது போக்குவரத்தை படிபடியாக குறையுங்கள் என்று. பொதுபோக்குவரத்து இல்லாமலும் அதே நேரம் கார் கம்பெனி 90% கடனில் கார் அளிக்க முன்வந்ததும் தற்செயல் நிகழ்வல்ல. ஆளும் அரசு அதானிக்கும், அம்பானிக்கும் ஒப்பந்தங்கள் கொடுப்பதில் குறியாக உள்ளது. அந்த வேலையில் நிரந்தர பணியாளார்கள் அமர்த்தப்பட மாட்டார்கள். அனைவரும் ஒப்பந்த பணியாளர்கள் சொற்ப சம்பளத்தில். இதை தான் ரிச் கெட் ரிச்சர், புவர் கெட் புவரர் என்று சொன்னார்கள்.

எந்த ஒரு நாடு மக்களுக்கு கிடைக்கவேண்டிய அடிப்படை தேவைகளான கல்வி, சுகாதாரம், உணவு உறுதியை தனியார் வசம் கொடுக்கிறதோ அந்த நாடு கார்ப்ரேட்களால் இயக்கப்படுகிறது என்று அர்த்தம். பொது நிறுவனங்கள் நிச்சயமாக நல்ல தரமான பொருளும், சேவையும் தர முடியும். ஆனால் அவர்களின் மெத்தன போக்கிற்கு காரணம் அரசின் கார்ப்ரேட் அடிமைதனம் தான். அரசு மருத்துவமனையில் அனைத்து மருந்துகளும் கிடைத்தால் நீங்கள் ஏன் தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்?

முதலாளித்துவ ஆதரவு, வலதுசாரி சிந்தனை, உலகமயமாக்கல் என்பதெல்லாம் உங்களை பகட்டாக காட்டிக்கொள்ள மட்டுமே. உங்களுக்கு அடுத்த தலைமுறைக்கு நீங்களே எழுதிக்கொடுக்கும் அடிமைசாசனம் தான். சீனா முதலாளித்துவத்தில் நுழைகிறது என்பது கார்ப்ரேட் உங்களுக்கு செய்யும் மூளை சலவை. ஏற்கனவே முதலாளித்துவ நாடான அமெரிக்காவில் வீடில்லாமல், உணவில்லாமல் உலகிலே அதிக குற்றங்கள் நடக்கும் நாடாக உள்ளது என்பதை பேசவே மாட்டார்கள்.

முதலாளித்துவ ஆதரவு என்பது மொத்த தொழிலாளருகளும் போராட்டத்தில் ஈடுபடும் பொழுது ஒரு அடிமை மட்டும் முதலாளியுடன் பெட்டி வாங்கி, உங்களுக்குள் பிரிவினை ஏற்படுத்தி உங்களுக்காக போராடுபவனை கெட்டவன் ஆக்குவானே அவன் தான். உன் உரிமை மறுக்கப்படும் பொழுது கேள்வி கேட்கக்கூட உனக்கு திராணியில்லை என்றால் நீ மனிதனே அல்ல!

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin